Sunday, 19 June 2011

மனதை பாதித்த சாலை விபத்துக்கள்




நன்றி A.R.ராஜகோபாலன் 


                                இன்று வளர்ந்து வரும் வாகன பெருக்கத்திலும் நமது அவசர போக்குவரத்திலும் , தகுதி இல்லாத வாகன ஓட்டிகளாலும், குடி போதைகளாலும் , கவனக் குறைவுகளாலும் , முறையற்ற பாதுகாப்பற்ற போக்குவரத்தாலும், அவசியமே இல்லாத அவசரங்களாலும் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?????
ஒரு லட்சத்து முப்பத்தையிந்தாயிரம் பேர் (1,35,000), இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

         தமிழகத்தில் 2006​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர். 2007 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006​ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013​ஆம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010​லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.  

            உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள்,என் மனதை என்னவோ செய்கிறது.ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர்.இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; பூகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை. ஒவ்வொரு விபத்திலும் உயிர்களை இழப்பவர்களது குடும்பங்கள், வேதனையில் துடிக்கின்றன. அவர்களது எதிர்கால வாழ்வு இருண்டு போகிறது.அவர்களிப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கிறோமா நாம் , எதற்கடுத்தாலும் அவசரம் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் புகுந்து வெளியே வர அவசரம், நாம் இல்லாது போனால் நம் குடும்பத்திற்கு யார் துணை என எண்ணிப்பார்த்தால் இப்படி கவனக்குறைவாக நடந்து கொள்வோமா??



    இந்த விஷயத்தில் போக்குவரத்து காவலர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் , வேலையில் கவனமும் தேவை சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளை இவர்கள் கண்டு கொள்ளுவதே இல்லை , நேற்று தி.நகரில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த  நான் எனக்கான சிக்னல் விழுந்ததும் என் வண்டியை செலுத்திய வேளையிலே எதிர்புறத்தில் இருந்து வந்த ஒரு பைக் என்னை மின்னலென கடந்து சென்றது , நான் கொஞ்ச வேகமாக எடுத்திருந்தாலோ  இல்லை அவன் சற்றுமெதுவாக வந்திருந்தாலோ ஒரு விபத்து நடந்திருக்கும் என்பது நிச்சயம், அவனின் அஜாக்கரதைக்கு அவன் விழட்டும் சாலை விதிகளை பின்பற்றும் நான் ஏன் பாதிக்க படவேண்டும்.இதை தேமே என்று பார்த்து கொண்டிருந்த அந்த போக்குவரத்து காவலரை என்ன செய்வது, தவறு செய்தால் தண்டிக்க படுவோம் என்ற எண்ணம் எந்த வாகன ஓட்டிகளுக்குமே இல்லை, அப்படியே அவர்கள் பிடிப்பட்டாலும் ஐம்பதோ  நூறோ கொடுத்து சரிக்கட்டிவிடலாம் என்ற எண்ணம் தான் அவர்களை இப்படி பொறுப்பின்றி செயல்படச் செய்கிறது, அந்த பணம் அவர்களுக்கோ அல்லது ஏதோ ஒரு அப்பாவிக்கோ போடும் வாய்க்கரிசி என்பதை அவர்கள் உணர்ந்தால் தான் மாற்றம் வரும்.

        இது ஒருமாதிரியான கொடுமை என்றால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் இன்னும் மோசமானது, அதுவும் இரவு நேரப்பயணம் மிகவும் ஆபத்தானது , முன்னே செல்லும் வாகனம் கண்களுக்கு தெரியவேண்டி, எரிய விடவேண்டிய சிவப்பு விளக்குகள் எந்த லாரியிலுமே எரிவதில்லை , சில பஸ்களிலும் இருப்பதில்லை இதையெல்லாம் எந்த போக்குவரத்து காவலரும் கவனிப்பது இல்லை , நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் பணமே கண்ணாக இருப்பதால் இது மாதிரியான கொடுமைகள் நிகழ்கின்றன , அதுவும் சாலை திருப்பங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் தான் மிக அதிகமான விபத்துகள் நடக்கின்றன.



இதற்கல்லாம் என்ன தீர்வு என்பது நாம் அறியாத தெரியாத விஷயம் எல்லாம் அல்ல , தனி மனித ஒழுக்கமும் , மற்றவர்களின் உயிரின்மீதும் உடமையின்மீதும் இருக்க வேண்டிய மதிப்பும் மிக அவசியம்.நம்முடைய பொறுப்பற்ற செயலாலும் நமக்கும் மற்றவருக்கும் ஏற்ப்படும் இழப்பை என்ன செய்தாலும் திருப்பி தர முடியாது என்பதை மக்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும், அரசாங்கமும் அதன் பொறுப்பை உணர்ந்து சட்ட திட்டங்களை சீர்ப்படுத்தி கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்தினால் இது மாதிரியான தேவை இல்லாத இழப்புகளை தடுக்கலாம், இது போன்ற சாலை விபத்தில் தன அமைச்சரவை சகாவையே இழந்த நம் முதல்வர் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் , அதே போல் நாம் நல்ல முறையில் வாகனத்தை ஓட்டினால் மட்டும் போதாது எதிரே , அருகே வருபவரும் எப்படி ஓட்டுகிறார் என்பதை பார்த்து யூகித்து வாகனத்தை செலுத்தி சாலை விபத்துக்களை தடுக்கவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்



     இந்த ஒரு படமே சாலை விபத்தின் கோரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் , ஆயிரம் வார்த்தைகள் சாதிக்காததை ஒரு படம் கொண்டு சேர்க்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இதை இணைத்துள்ளேன். இதை படித்த ஒருவராவது இனி நமக்கும் நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு வாகனம் ஓட்டுவேன் என முடிவு செய்தீர்களேயானால் அதுவே இந்த பதிவின் வெற்றி
நன்றி

நேற்று வரை இல்லாத காதல்...!




      னது இளமை காலம் பெரும் பகுதி மருத்துவமனையிலேயே கழிந்தது பெரிய குற்றங்களை செய்துவிட்டு சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தையைப் பொருத்து அவர்களை சில காலம் பெயிலில் வெளியே விடுவார்களாம் அதே போலத்தான் என்னையும் மருத்துவமனையில் இருந்து சில மாதங்களோ அல்லது சில நாட்களோ வீட்டிற்கு கூட்டி வருவார்கள்

அப்படி கூட்டி வரும் நாட்களில் தான் நான் பள்ளிக்கூடம் போவது நண்பர்களோடு விளையாடுவது என்று நடக்கும் நான் வீட்டில் இருக்கும் காலங்களில் எனது தந்தையாரும் கூட இருந்துவிட்டால் சைக்கிளில் வைத்து என்னை கோயில் அரசியல் கூட்டம் இலக்கியம் மேடைகளுக்கு கூட்டி போவார் அப்படி போக நேர்ந்தால் தூக்கம் தூக்கம் மாக வரும் எப்போதடா கூட்டம் முடியும் என்று பல நாள் விழிப்பிதுங்க காத்திருப்பேன்



  அதற்கு காரணம் இலக்கியவாதிகள் பேசுவது எதுவுமே எனக்கு புரியாது தமிழ் வார்த்தைகளைத் தான் அவர்கள் பயன்படுத்துவார்கள் ஆனாலும் எனக்கு அது வேறு ஏதோ பாஷை போல் இருக்கும் புரியாத விசயத்தை எப்படி இத்தனைபேர் ரசித்து கேட்கிறார்களே  என்றும் தோன்றும்

      இதனாலேயே தமிழ் இலக்கியங்கள் என்றவுடன் எனக்கு வெகுநாள் ஒரு பயம் இருந்தது புதியதாக ஒருவன் ஆங்கிலம் கற்க முற்படும் போது அவனுக்குள் எழும்பும் இதை நம்மால் கற்றுக் கொள்ள முடியுமா என்பது போன்ற இயல்பான பயம் அல்ல அது கஷ்டப்பட்டு புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எதவுமே அதில் இல்லை மனிதனின் அழகை இயற்கையின் வனப்பை வீரத்தின் செரிவை மிகைப்படுத்தி காட்டும் சாதாரண சங்கதியான தமிழ் இலக்கியத்தை கஷ்டப்பட்டு கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற அலட்சியத்தில் உருவான அல்லது நிஜமான சோம்பேறித்தனத்தில் உருவான போலியான பயம் அது


      இந்த பயத்தால் நான் இழந்தது அளவிட முடியாதவைகள் என்று அப்போது எனக்கு புரியவில்லை எல்லோரும் புதுக்கவிதை எழுதுகிறார்கள் நாமும் அதையே எழுதினால் என்ன மரியாதை இருக்கிறது? கடினமானது என்றாலும் மரபுக் கவிதை தான் எழுதி பழக வேண்டும்மென ஒரு எண்ணம் மனதில் தோன்றிய போது செயல்படுத்த முனைந்த போது நான் இழந்தவைகளில் உள்ள மதிப்பு தெரிய ஆரம்பித்தது

      தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தவுடன் தமிழாசிரியர் புலவர் சு.கண்ணன் அவர்களை நாடினேன் அவர் கவிஞன் பெண்ணை வளவன் என்ற பெயரில் பல மரபுக் கவிதைகளை எழுதி தமிழுக்கு தந்தவர் குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா போல குழந்தைகளும் தமிழிலக்கணத்தை மிக சுலபமாகவும் . சுகமாகவும் கற்றுக் கொள்ள பாட்டு வடிவில் பைந்தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் ஆங்கில மொழியே கலக்காமல் சுத்தமான தமிழில்தான் எப்போது உரையாடுவார் 


அவரிடம் சென்று இலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டார் வாரத்தில் ஒரு நாள் வகுப்பிற்கு வரச் சொன்னார் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை 5 மணிக்கு அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தமிழ் இலக்கணம் கற்ற அந்த நாளை மறக்கவே முடியாது

 ஒருநாள் அவர் உனக்கு சங்க பாடல் ஏதாவது தெரியுமா என்று கேட்டபோது பழந்தமிழ் இலக்கியத்தில் அவ்வளவாக எனக்கு நாட்டம் இல்லை அந்த தமிழ் நடையை புரிந்து கொள்வது கடினம் என்று பதில் சொன்னேன் அப்போது அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொன்னார் அப்பனும் பாட்டனும் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியாமல் வாழ நினைப்பவன் கண்களை முடிக்கொண்டு நெருப்புக் குண்டத்தில் விழுந்தவன் ஆவான் என்றார்

 இதை என்னால் எப்போதுமே மறக்க முடியாது எனது முன்னோர்கள் முட்டாள்களாக முழுமடையர்களாக வாழந்தார்கள் என்றால் நான் மட்டும் எப்படி அவர்களிடம் இல்லாத அறிவை பெற்றவன் ஆவேன்? எப்படி என்னால் மட்டும் தனியாக அறிவை பெற முடியும்? என் பாட்டனார் குதிரை சவாரி செய்து மெய்க்காப்பாளர்களோடு பயணம் செய்தவர் அவருடைய பேரனான நான் அப்படி போக முடியவில்லை என்றாலும் கூட சாராயம் குடித்துவிட்டு சாக்கடையில் புரளாமல் இருந்தாலே போதும் அவர் மரியாதையை காப்பற்றியவன் ஆவேன்  


   பழந்தமிழ் சங்க பாடல்களை படிப்பதனால் இலக்கிய சுவை கிடைக்கும் புதியதாக கற்பனை செய்ய வழி கிடைக்கும் முன்னோர்கள்களை பற்றிய அறிவுமாக கிடைக்கும் என்று எனக்கு தோன்றவே அவரிடம் அப்போதே சரித்திரம் படித்தால் கிடைக்கக் கூடிய அறிவு இலக்கியம் படித்தால் கிடைக்குமா? என பளிச் என்று கேட்டும் விட்டேன் மெலிதாக சிரித்த அவர் சரித்திரத்தில் எழுதப்பட்டவைகள் வெறும் விவரக் குறிப்புக்கள் தான்  அதில் உணர்வு இருக்காது காட்சிகள் இருக்காது இலக்கியம் அப்படி அல்ல அக்கால  சூழலை நமக்கு உள்ளப்படி காட்டுவது போலவே மனிதர்களின் உணவுர்களையும் அதையும் தாண்டி நிற்கும் உண்மைகளையும் நமக்கு காட்டும் என்றார்.

      அந்த நாள் முதற்கொண்டு சங்கப் பாடல்களில் மீதியிருந்த அலட்சியத்தையும் அச்சத்தையும் விலக்கி இதற்குள்ளும் ஏதோ ஒரு புதையல் இருக்கும் என்ற ஆர்வத்தில் தேடிப் பார்க்கலானேன் ஆரம்பத்தில் பழம் தமிழ் பாடல்களை உச்சரிக்க முடியாமல் நாக்கு தள்ளாடியது வார்த்தைகளை வாய்விட்டு சொல்லும்போது பற்கள் தந்தி அடித்தன ஒன்றுமே புரியாத ஆப்பிரிக்காவில் மாட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது

  சுருக்கமாக சொல்வது என்றால் ஒரு மண்ணாங்கட்டியும் புரியவில்லை. தெரியவில்லை என்று எந்த விஷயத்தையும் விட்டுவிடும் சுபாவம் எனக்கு எப்போதுமே கிடையாது புரியும் வரை போராடுவேன் வெற்றி பெறும்வரை போராட்டத்தை நிறுத்தவே மாட்டேன் நீயா நானா பார்த்து விடலாம் என சங்கப்பாடலோடு மல்லு கட்ட ஆரம்பித்தேன் கடைசியில் பாடல்கள் என்னை பார்த்து பரிதாபப்பட்டன இந்த மரமண்டைக்கு விளங்கிதான் தொலைப்போமே என்ற இரக்கத்தில் இரங்கி வந்தன

       பலாப்பழத்தைப் பிளந்து எண்ணைய் தேய்த்த குச்சியில் பலாப்பாலை உருட்டி எடுத்து சுளைக்குள் இருக்கும் கொட்டையை எடுத்து எறிந்து விட்டு மொய்க்க வரும் ஈயையும் துரத்தியடித்து சுளையை சுவைக்கும் போது கிடைக்கும் ஒரு சந்தோஷம் பழைய பாடல்கள் புரிய ஆரம்பித்தவுடன் கிடைத்தது முதல் முதலில் நான் படித்து புரிந்து கொள்ள முயற்சித்தது திருக்குறளில் உள்ள காமத்துப் பாலே ஆகும்

குறளை நான் தொட்ட போது என் வயது 22 அது விடலைப் பருவம் கவர்ச்சியை மட்டுமே அந்த பருவத்துக் கண்கள் பார்க்கும் எதில் ஆர்வம் இருக்கிறதோ அதிலிருந்து உனது முயற்சியை துவங்கினால் தான் சுலபமாக வெற்றியடைய முடியும் என நண்பர்கள் சொன்னதனால்அந்தப் பகுதியை படிக்கலானேன் இதை இங்கு சொல்லுகிறோம் என்ற வெட்கம் எனக்கில்லை உண்மையை சொல்கிறோம் என்ற திருப்திதான் வருகிறது காமம் .களவு. கோபம் இப்படி எல்லா அசுத்தங்களையும் கடந்து வந்தால் தானே அமைதி மரத்தில் சாந்தி பழத்தை பறித்து சுவைக்கலாம்.


     மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான ஆசைகள் வருகின்றது. தொட்டிலில் கிடக்கும் போது அம்மாவின் தாலாட்டை கேட்க ஆசைப்படுகிறோம் தொட்டிலை விட்டிறங்கி தளர் நடை பயிலும் போது விதவிதமான பொம்மைகள் மீது ஆசைப் பிறக்கிறது. அதன் பிறகு பம்பரம் .கோலி. கபடி என்ற தாண்டி மீசை முளைக்கும் பருவத்தில் ஆசையின் நிறம் மாறுகிறது

அந்த மாற்றமே பணத்தாசை. பதவியாசை என விரிந்து கடைசியில் உயிரின் மீது ஆசையாக முடிவடைகிறது ஆசைகள் பிறப்பதும் மாறுவதும் தவறல்ல அது இயற்கையின் விளையாட்டு ஆனால் சிலபேருருடைய ஆசை எதாவது ஒரிடத்திலேயே நிலைத்து நின்றுவிடுகிறது அப்போது தான் மனிதன் முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு அடிமையாகி புறப்பட்ட இடத்திலேயே நின்று விடுகிறான்.

 பம்பரம் விளையாடும் ஆசை பல் போன பிறகும் தொடர்ந்தால் எப்படி தவறோ அதே போலவே இளமைப் பருவத்தில் அறுப்பும் காதல் உணர்விற்கு தலை நரைத்து போன பிறகும் அடிமையாக கிடப்பது தவறுதல் ஆகும்   அந்த பருவத்தில் படித்த காமத்துப்பால் திருக்குறள் மனதை செம்மைப்  படுத்தியதே தவிர சஞ்சலப்படுத்தவில்லை


இரு நோக்கு அவளின் கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு மற்றொன்று அந்நோய்க்கு மருந்து என்ற குறட்பா பெண்மையின் விழியசையில் உள்ள நளினத்தை மட்டும் கற்பிக்கவில்லை பெண் மோகத்தில் உள்ள கம்பீரத்தையும் தலைக்குனிவையும் கூட கற்பித்தது.

      இப்படி உணர்வுகளை மட்டும்மல்ல அக்காலத்திய சமூக சித்திரத்தையும். பழம்தமிழ் பாடல்கள் நமது கண் முன்னால் தூசி தட்டி விரித்து வைக்கிறது நற்றிணையில் உள்ள ஒரு அழகான சித்திரத்தை இந்த இடத்தில் காண்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

 இளம் காதலர்கள் இருவர் ஒரு தன்னந்தனி தோப்பிற்க்குள் நடந்து வருகிறார்கள் மாலை இளம் சூரியனின் இதமான வெப்பமும்.குளிர் மிகுந்த தென்றலும் இருவர் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது அந்த சோலையில் ஒரு புன்னை மரம் நிற்கிறது அதன் அடர்ந்த நிழலில் உட்கார்ந்து இன்பக் கதைகள் பேச ஆசைப்படுகிறான் காதலன் ஆனால் வெட்கத்தோடு மறுக்கிறாள் காதல் தலைவி

 காரணம் என்னவென்று அவன் கேட்க இந்த புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும் என்று அவள் வீணை குரலில் கிசுகிசுக்கிறாள் மங்கைக்கு சகோதரி பச்சை மரமா என்று அவன் கேள்வி கேட்க துணியும் போதே அவளிடம் இருந்து பதிலும் வந்து விடுகிறது என் அம்மா குழந்தைப் பருவத்தில் இந்த சோலைக்கு வந்து தான் விளையாடுவாளாம் அப்பொழுது கேட்பாரற்று கிடந்த புன்னை மரம் விதை ஒன்றை எடுத்து மணலில் ஊன்றி வைத்தாளாம்


அவள் வாலிப பருவத்தை தொட்டப் போது அன்று ஊன்றிய விதை துளிர்த்து நிற்பதை கண்டாளாம் . அதன் நிழலில் தான் தோழிகளோடு விளையாடுவாளாம். அன்னை வளர்த்த மரம் என்பதால் இவளுக்கு இது அக்காவாய் ஆனதாம் இது உன் தமக்கை என்று அம்மா தான் அறிமுகம் செய்து வைத்தாளாம் .அதன் காரணமாக அக்கா முன் அத்தான் நீ தொட்டால் பற்றிக் கொள்ளாதோ  வெட்கம் மென விளக்கம் சொன்னாளாம் பொருளை புரிந்த பிறகு இந்த நற்றிணை பாடலை படித்துப் பாருங்கள்
        விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
        மறந்தனம் துறந்த காழ்முலை அகைய  
        நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
        நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று
        அன்னை கூறினள் புன்னையது சிறப்பே 
        அம்ம நாணுதும் தும்மொடு நகையே!

     இதில் என்னப்பெரிய விஷயம் இருக்கிறது ஜன்னிநோய் கண்டவன் உளறுவதுபோல காதல் நோய் வந்தவர்கள் அர்த்தமற்ற வார்த்தைகளை கூறி பிதற்றுவது வழக்கம் தானே என்று சிலர் கேட்கலாம் நானும் அப்படித்தான் ஒரு காலத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன் நேற்று வரை இல்லாத காதல் இன்று காலையில் அறும்பியவுடன் காதலனின் கருவாட்டு வால் மீசை ராஜராஜ சோழனின் கத்தி போல்இருக்கும் அவன் நாயை போல் வாலை சுருட்டிக் கொண்டு ஒடுவது கூட புலியும் சிங்கமும் கம்பீரமாக நடப்பது போல் தெரியும் 


ஆண்கள் மட்டும் இழைத்தவர்களாக என்ன? அவள் காலுக்கு செருப்பு வாங்கி கொடுக்க காசு இருக்காது ஆனால் அதை வெளிக்காட்ட முடியுமா உடனே மலரே நீ நடக்க பாதையெல்லாம் பூவிரித்தேன் என்பான் குளிக்காமல் நாற்றம் அடிக்கும் அவள் வியர்வையை செந்தேன் துளி எனச் சொல்லி  நம்மை அறுவருப்பு அடைய வைப்பான் அப்படித்தான் இந்த நற்றிணை காதலியும் எதையோ சொல்ல வந்து சொல்லத் தெரியாமல் மரம் எனக்கு அக்கா என்று உளறுவதுபோல் தோன்றும்.

       காதல் என்பதே ஒரு வித பைத்தியம் தான் அப்படிப்பட்ட பைத்தியக்கார பேச்சாக இந்த பாடலை நாம் எடுத்துக் கொள்ள முடியாது இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளின் பின்னனியை ஆராய்ந்தால் நமக்கு மலைப்பு ஏற்படுகிறது முதலில் காதலர்கள் நடந்துவரும் சோலையை எடுத்துக் கொள்வோம். இந்த சோலை காதலியின் அம்மா காலத்திலும் சோலையாகத்தான் இருந்திருக்கிறது இப்போதும் அப்படித்தான் இருக்கிறது இதில் நமக்கு கிடைக்கும் உண்மை பண்டைய கால தமிழன் இயற்கையை சிதைக்க முயலவில்லை அதை வளர்க்கவே விரும்பியிருக்கிறான் அதனால்தான் நாடும் நகரமும் வளமையோடு இருந்திருக்கிறது

மேலும் இந்த பாடலில் அவள் விதையை ஊன்றினாள்  என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்தாள் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை தண்ணீர் இல்லாமல் ஒரு விதை எப்படி மரமாகும் இங்கே ஆகியிருக்கிறது அப்படி என்றால் மாதம் மும்மாரி மழை பெய்தது என்று சொல்வது கற்பனை அல்ல. அலங்கார வார்த்தையல்ல நிஜமான உண்மையென்பது தெரியவரும். 


மாதம் தோறும் மழை வராவிட்டால் நிச்சயம் விதை துளிந்தவுடன் கருகி போகுமே தவிர வளர்ந்து மரமாகாது இன்னொரு விஷயம் இந்த சோலைக்கு தாயும் குழந்தைப் பருவத்தில் வந்திருக்கிறாள் மகளும் வந்திருக்கிறாள் எனும் போது இந்த சோலை ஊரிலிருந்து வெகு தொலைவில் இல்லை ஊருக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது ஊரே சோலையாக இருக்க வேண்டும்

இதில் எது நிஜம் என்றாலும் இப்போது போல் அந்த காலத்து மனிதன் வீடுகளைக் கட்டி குடியிருப்பதற்காக மரங்களையும் வனங்களையும் தேவையில்லாமல் அழிக்கவில்லை என்பது தெளிவாகிறது இது நற்றிணை பாடல் காட்சியின் சுற்றுச்சூழல் சார்ந்த சித்திரமாகும் இனி இதனுள் மறைந்து கிடக்கும் சமுதாயச் சித்திரத்தை பார்வையிடுவோம்.

        அம்மா ஊன்றினாள் மகள் அதை சகோதிரியாக கருதினாள் என்பது தான் பாடலின் பிரதான கருத்து நமக்கு நன்றாக தெரியும் அந்தக் காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி நம் நாட்டு ஆண்களுக்கு மட்டும் தான் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே குடும்பம் சொந்தமாக இருக்கிறது ஆனால் பெண்கள் நிலை அப்படியல்ல திருமணம் முடியும் வரை பிறந்த வீட்டை தன் சொந்த வீடு என்கிறாள் திருமணத்திற்க்கு பிறகோ நேற்று வரை தன்ககு சம்பந்தமே இல்லாத புதிய வீட்டாரை தனது உரிமையாக கொள்ள வேண்டிய நிலை வருகிறது

 நகை கொடுத்து பெட்டி நிறைய சீதனம் கொடுத்து கட்டில். மெத்தை.பீரோ. என்று எல்லாமும் கொடுத்து ஒரே ஒரு மஞ்சள் கயிற்றை படுபாவி பயல் கட்டிவிட்டான் என்பதற்காக பெற்றவரை மறந்து. உற்றவரை துறந்து கற்ற காலத்தில் கதை பேசிய தோழியன் நடப்பை சிதைத்து எங்கோ கண் காணாத இடத்திற்கு அவனோடு போக வேண்டிய நிலை உருவாகி விடுகிறது.

  ஆனால் நற்றிணை காட்சி இப்படி ஒரு சோக சித்திரத்தை நமக்கு காட்டவில்லை அம்மா போட்ட விதை மரமாகி நிற்பதை மகள் காண்கிறாள் என்றால் அம்மாவுக்கு மணமுடிந்ததும் அந்த ஊர்தான் மகள் காதலனோடு அதே சோலையில் நடமாடுகிறாள் என்றால் அறிமுகம் இல்லா புதிய ஆடவன் ஊருக்குள் இருக்கும் சோலைக்குள் சுதந்திரமாக நடமாட அந்தகாலத்தில் முடியுமா? இப்போது கூட புதிய நபர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நடமாடினால் நம்மால் சந்தேகப்படாமல் இருக்க முடியுமா?

ஆகவே மகளின் காதலனும் அந்த ஊர் காரணாகவே இருக்க வேண்டும் அல்லது பக்கத்து ஊர்காரணகவோ இருக்கலாம் இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் ஆதிகால தமிழன் வியாபாரம் அரசியல் காரணங்கள் தவிர தனிப்பட்ட வாழ்க்கை தேவைகளுக்கு போக்குவரத்தை அதிக தூரத்திற்கு வைத்துக்கொள்ளவில்லை குறிப்பிட்ட தூரத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறான் அதனால்தான் அவனது சமுக சூழல் பரபரப்பு இல்லாமல் அமைதியாக ஒரு ஓடையின் தண்ணீரை போல அமைந்திருக்கிறது

இப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை நமது தேவைகளை குறைத்துக் கொண்டு பரபரப்பு இல்லாமல் வாழ்ந்தால் மனம் அமைதியாக இருக்கும் இரத்தக் கொதிப்பு இதயநோய் சர்க்கரை போன்ற சனியன்கள் எல்லாம் நம்மை தொட்டுக் கூட பார்க்காது இது சங்க இலக்கியம் தரும் ஒரு சின்ன தகவல் அவ்வளவுதான்

 இன்னும் ஏராளமான புதையல்கள் அதனுள் ஆழ்ந்தும் மறைந்தும் கிடக்கிறது அவைகளைப் பற்றி வேறு சில நேரத்தில் சிந்திப்போம்.          

Friday, 17 June 2011

ஊடகங்களிடயே ஏன் இந்த மெளனம்



நன்றி அவர்கள் உண்மைகள்

சேனல்-4 என்ற தொலைக்காட்சி அம்பலப்படுத்திய ஸ்ரீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர செய்தி உலகளவில் பரபரப்பை உண்டாக்கி, தமிழ் மக்களின் மனதில் மட்டுமில்லாமல் ஐரோப்பிய மற்றும் மேலை நாட்டு மக்களின் மனதிலும் ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழக்கம் . ஆனால் சேனல் 4 ல் இந்த காட்சிகள் வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.



தமிழகத் தலைவர்கள் யாரும் இதுவரை இதைப்பற்றி ஏதும் கூறாமல வாய்முடி மெளனம் காட்பது எதனால்? உண்மைகள் துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் உருவாகுகிறது.

சேனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த ஒருவரை விடுதலைபுலி என்பதால் புறந்தள்ள முடியாது.



அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்..? தமிழகத்தின் ஊடகங்களில் சேனல் 4 - ண் இந்த செய்தி ஒரு சுனாமி போல வந்து விழுந்த போதிலும் . அவர்கள் காக்கும் உறை நிலை மௌனம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது.

எல்லா ஊடகங்களும் மத்திய அரசால் கட்டுப்படுத்தப் படுகிறதா? ஏன் எந்த நிலமை? தமிழ் சகோதர சகோதரிகளின் உயிர் மதிப்பு இல்லாமல் போய்விட்டதா?



வெளியான சேனல் 4 தொலைக்காட்சி நடைபெற்றது மன்னிக்க முடியாத போர்க் குற்றமே என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. போரில் ஈடுபடாத கலைஞரான இசைப்பிரியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொன்று வீசப்பட்டிருக்கிறார். சரணடைந்த பெண் புலி உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு லாரிகளில் இழுத்து மிருகங்கள் போல எறியப்படும் காட்சிகள் வருகின்றன. மூன்று பெண்களை கைகளைக் கட்டிவிட்டு சுட்டுத்தள்ளுகிறார்கள். கைகளைக் கட்டி ஒருவரை சுடுவது போர்க்குற்றமாகும். காரணம் சரணடைந்துவிட்டார் என்பது கைகளை கட்டுவதன் அடையாளமாகும். அதன் பின்னர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட வேண்டுமே அல்லாது சுடுவதற்கு ஒரு படையினனுக்கு யாதொரு உரிமையும் கிடையாது.

இதை பார்த்த எனது மனம் துடிதுடிக்கிறது. தமிழ்க தலைவர்களே, தமிழக மக்களே இதை பார்த்த உங்கள் மனம் துடி துடிக்கவில்லையா?சூப்பர் ஸ்டார் உடல் நலமில்லை என்றதும் ஒடோடி சென்று பார்த்து கருத்து சொல்லிய தலைவர்களும் ஊடகங்களும் இப்போது எங்கே சென்றன அந்த நடிகர் தமிழக முதலைமச்சரிடம் பேசிய பேச்சை ஏதோ உலகில் நடக்காத அதிசியம் நடந்த்தை போல செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு இந்த செய்தி முக்கியமில்லையா? 

சமூகத்துக்குத் தேவைப்படும் பாலியல் பகுத்தறிவைப் பெற ஒரு கால் போதும் !





என்ன தான் இந்தியா பழம் பெரும் நாடு, புத்திஜீவிகள் பலர் வாழ்ந்த நாடு என பீற்றிக் கொண்டாலும். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த பகுத்தறிவுத் தனங்கள் கூட பிற்கால சமய எழுச்சிக் காலங்களுக்குப் பின் இல்லாமல் போனதே எதார்த்தம். குறிப்பாக இன்றையக் காலக் கட்டத்தில் பழைமையின் நன்மைகளையும், புதுமையின் நன்மைகளையும் உள்வாங்கி முன்னகரும் சமூகமாக நாம் இல்லாமல் இருக்கின்றோம். மாறாக பழைமையின் தீமைகளைத் தக்க வைத்துக் கொள்வதிலும், புதுமையின் தீமைகளையும் அயலகங்களில் இருந்து வாறி எடுத்து குழப்பமடைந்த சமூகமாக மாறிவருகின்றது. காரணம் சீரற்ற அரசுகளின் ஆட்சியில் இருப்பதாலே தான். அரசு என்பது வெறும் அரசு இயந்திரங்களை நடத்துவதற்கும், வரிகளை வசூலித்து சுவிஸ் வங்கிகளில் போடுவதற்கும் அல்ல. இது மக்களின் வாழ்வையும் சீராக மாற்றியமைக்க முனையவேண்டும். அதில் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இன்று சமூகத்தில் பாலியல் அறிவு என்பது மக்களில் பெரும்பாலானோருக்கு சுத்தமாக இல்லவே இல்லை எனலாம். பாலியல் அறிவு மட்டும் வந்துவிட்டால் போதாது, பாலியல் ஒழுக்கத்தையும், பாலியல் வரைவுகளையும் சீராகப் போதிக்கப்படல் வேண்டும். பாலியல் பகுத்தறிவு என்பது ஆணுறை விளம்பரங்களோடு நின்றுவிட்டன.

இருப்பினும் அரசு சிறிய முயற்சியாக ஜன்சாங்கிய ஸ்திரத கோஸ் என்றப் பெயரில் பாலியல் நலன், குடும்ப நலன், இனப்பெருக்கம் மற்றும் சிசுக்கள் நலன் தொடர்பாக ஒரு இலவச தொலைப்பேசி முனையத்தை நிறுவி உள்ளது. இந்த கால்-செண்டருக்கு அழைத்து குடும்ப மற்றும் பாலியல் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவி செய்கின்றார்கள். குறிப்பாக பதின்ம வயதில் இருப்போர், திருமணமானோர், திருமணமாகவிருப்போர் என அனைவருக்குமான ஒரு தகவல் மையம் இதுவாகும்.

அதற்கான தொலைப்பேசி இணைப்பு : 1800-11-6555 ( TOLL FREE )

இந்த நிலையத்தில் பணியாற்றுவோர் அனைவரும் தொழில்ரீதியாக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். புது தில்லியின் சென். ஸ்டீபன் மருத்துவமனை மருத்துவர்களின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டோரே இந்த கால் -செண்டரில் பணியாற்றுகின்றார்கள். அத்தோடு மட்டுமில்லாமல் கணனியின் பல்வேறுப்பட்ட தகவல்களையும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால் உங்களின் பாலியல் சந்தேகங்கள் பலவற்றையும் இது தீர்க்கவல்லது.

பொதுவாக பாலியல் விடயங்களை குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் பல நேரங்களில் பேசுவது இல்லை. அப்படி பேசினாலும் அவர்களுக்கும் போதிய அறிவு இருப்பதில்லை. பல சமயங்களில் மரபுசார் நம்பிக்கைகளை பல பழமைவாதிகள் போதிய அறிவியல் ஆதாரங்கள் இன்றியும், பல நேரங்களில் திரித்தும் தவறான தகவல்களை தந்துவிடுவது உண்டு. அதனால் மக்களுக்கு சரியான பாலியல் அறிவினையூட்ட இந்த கால் செண்டர் இயங்கி வருகின்றது. இது பல கிராமப்புற மற்றும் நகரவாசிகளுக்கும் கூட பயன்படும். உங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதனையும் அவர்கள் கோருவதில்லை. நீங்கள் உரையாடுவது அனைத்தும் பத்திரமாக பாதுக்காக்கப்படும் என்பதால் அச்சமில்லாமல் உங்களின் கேள்விகளை அவர்களிடம் எடுத்து வைக்கலாம். அனைத்து இந்திய அங்கீகாரிக்கப்பட்ட மொழிகளிலும் தகவல்கள் கிடைக்கும்.

இந்த கால் -செண்டரின் ஒரே பின்னடைவு, சில சமயங்களில் காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கின்றது. ஆரம்ப நிலையில் இருப்பதால் மேன்மேலும் இந்த சேவையை அரசு விரிவுப் படுத்த வேண்டும்.

குறிப்பாக அண்மையக் காலங்களில் வளரும் மக்கள் தொகையின் காரணமாக ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள், பாலியல் பிரச்சனைகள் எழுந்துவருகின்றன. குறிப்பாக பெண்கள் வீதம் வீழ்ச்சியடைந்த மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் இத்தகவல்களை உங்களது உற்றார், உறவினர் எனப் பலரிடமும் பகிர்ந்துக் கொள்வதால் பாலியல் பகுத்தறிவினைப் பெறுவதற்கான முதல் படியை அனைவரும் தொடலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

தலையும் இல்லை தலைவரும் இல்லை


  ராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் ஒருவனை சமீப காலத்தில் சந்திக்க நேரிட்டது

அவன் தனது தாய் மண்ணை பற்றி ஏராளமான விஷயங்களை ஆர்வமுடன் என்னிடம் கேட்டறிந்தான்

 அப்போது அவன் இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மாநிலம் சுகந்திர போராட்ட காலத்தில் அதிகமான பங்கு பணியை ஆற்ற வில்லையே ஏன் என்று என்னிடம் கேட்டான்

 அவன் கேள்வி எனக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது

வேலு நாச்சியார் காலம் துவங்கி வடலி விளை ஜம்புலிங்கம் காலம் வரை எண்ணற்ற தேசிய தியாகிகளை தந்தது நம் தமிழகம்


 கட்டபொம்மனின் வீரம் சிதம்பரனாரின் துணிவு உலகம் அறியாதது அல்ல

 இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு துரத்த போர் கொடி பிடித்தது முதலில் தமிழர்கள் தான்

 ஆனால் தமிழர்களின் தியாகம் தொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ளயே முடங்கி போனதற்கு யார் காரணம்?

 அல்லது தமிழர்களின் சிறப்புகளை மற்றவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்களா என்று பக்கம் சார்பில்லாமல் சிந்திக்கும் போது நமக்கு அதிர்ச்சி தான் மேலோங்கி நிற்கிறது

 உண்மையில் தமிழர் உலகம் என்பது மற்ற மக்கள் பலரால் இன்னும் கால் பங்கு கூட அறியாத நிலையிலேயே இருக்கிறது 

 நமது வள்ளுவரும் இளங்கோ அடிகளும் பாரதியும் இந்தியாவில் பலருக்கு அறிமுகம் இல்லாத பெயராகவே இருக்கிறது இதை முதலில் நாம் ஒத்துக் கொள்ள தயங்க கூடாது

 நமது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற தமிழ் பெருமைகள் எல்லாம் புகழ்ச்சிகள் எல்லாம் நம்மை போலியாக திருப்தி படுத்துவதாகவே இருக்கிறதே தவிர உண்மையை சொல்வதாக இல்லை

 இந்த குறைகளுக்கு ஒட்டு மொத்தமாக அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு

 தமிழ் அறிஞர்களும் தமிழ் குடிமக்களும் கூட காரணமாக இருக்கிறார்கள்

 நாம் நமது முதுகை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப் படுகிறோமே தவிர நமது புகழ் அண்டைய ஊர்க் காரனுக்கு தெரிந்திருக்கிறதா இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டி கொள்வது கிடையாது


 பூனை கண்ணை மூடி கொண்டியிருப்பது போல இருக்கிறோம்

 இதனால் தான் தேசத்திற்கான நமது உழைப்பு பலரும் அறியமுடியாத வண்ணம் உள்ளது

வெளி மாநிலங்களிலும் தேசங்களிலும் தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை

பெற்ற தாய்க்கு சோறு போடுகிறானோ இல்லையோ திரைப்பட நடிகர்களுக்காக கோஷம் போடுவான் காவடி தூக்குவான் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நிற்கிறது

தான் விரும்புகின்ற நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு


 இதனால் தான் நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்கிறது

காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் நம் தமிழ் நாட்டில் யாருமே இல்லை என்ற கவலையை அப்துல்கலாம் அவர்கள் ஓரளவு தீர்த்தாலும் மற்றவர்கள் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை

 மக்களிடம் தேசிய சிந்தனை இல்லாமல் போய் விட்டதனால் பெருந் தலைவர்கள் யாரும் உருவாக வில்லை அல்லது உருவாக விரும்ப வில்லை

 தமிழன் தமிழன் என்று மார்தட்டி கொள்வதனால் கண்ட பயன் யாதும் இல்லை

 தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பவர்கள் மேடை தோறும் முழங்குவதனால் தமிழன் வளர்ந்து விட்டதாக கருதிவிட முடியாது


 இலங்கையில் தமிழன் செத்து மடிகிறான் மலேசியா சிங்கப்பூரில் அடிமை வாழ்வு வாழ்கிறான் ஆனால் தமிழக தமிழன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து கொண்டு இருக்கிறான்

இது தான் தமிழருக்காக உழைக்கும் தலைவர்களின் தொண்டுகளால் கிடைத்த பலன்

தேசிய அளவில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் நிஜமாகவே இருந்தால் உலக தமிழர்களின் இன்னலுக்காக இந்திய தேசமே இறங்கி வந்திருக்கும்

 ஆனால் நம் தலைவர்கள் மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில் உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர வீறு கொண்டு எழுந்து உழைக்கிறார்கள் இல்லை

 நம்மை போன்றவர்களும் எழுதுவதிலும் பேசுவதிலும் படிப்பதிலும் காட்டுகின்ற சிறத்தையை செயலில் காட்டுவது இல்லை

  இதனால் தான் நமது முன்னோர்களின் உழைப்பும் புகழும் வரலாற்று பக்கங்களில் தூசி படிந்து கிடக்கிறது

 இந்த நிலையை மாற்ற நாம் தினசரி நமது குழைந்தைகளுக்கு தேச சேவையின் முக்கியத்துவத்தை போதிக்க வேண்டும்

  வாஞ்சி நாதன் திருப்பூர் குமரன் தில்லையாடி வள்ளியம்மை இன்னும் பலரின் தியாக வாழ்க்கையை உணரும் குழைந்தைகள் இந்தியாவின் தலைமையை நோக்கி வீர நடை போடுவார்கள்

 அப்போது தான் தமிழன் என்று சொல்லும் போதே தலை நிமிரும் அது வரை தமிழனுக்கு தலையும் இல்லை தலைவரும் இல்லை.

Friday, 10 June 2011

குடல் கழிவு நீக்கும் வாழைப்பழம்

கோவிலுக்குச் சென்று வழிபடும் போது கடவுளுக்கு படைக்கப்படும் பொருட்களில்வாழைப்பழம் முக்கியமானது. வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம்வாழைப்பழம் இருக்கும். நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பலமருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர்உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும்அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை உங்களிடம்பகிர்ந்து கொள்கிறேன்


வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்தியஅமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்குபோனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம்தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
கி.மு 327 ல்அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச்சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும்அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன்சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போதுவாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபியமொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போதுஎத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.

வாழைப்பழவகைகள்:

செவ்வாழை
ரஸ்தாளி
கற்பூரவல்லி
பேயன்
பச்சைநாடன்
பூவன்
மொந்தன்
கதலி
நவரன்

குணங்கள்:

வாழைஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம்அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்துவிடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள்கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின்விந்தை.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்குகூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும்.ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில்சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும்மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல்இருக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும்வைட்டமின் சி இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும்காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்புகாணப்படுவதில்லை.
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
இரசத்தாளி வாழைசுவையைக் கொடுக்கும்.
செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
மலைவாழை சோகையை நீக்கும்.
பேயன் வாழைகுடற்புண் தீர்க்கும்.
நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள்குறைகிறது.
“நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்தஅழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.உடல்நலனுக்கு எப்பொழுதும்முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாகவாழைப்பழம் உதவுகிறது.
வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.மூளைக்கு வலுவூட்டும்.
தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சைநீங்கும்

பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.
கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகைசாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டுஅவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய்சேர்ந்து விடும்.



தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச்சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம்ஏறும்.
தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழைசாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். 

முளையை வளப்படுத்த வேண்டுமா

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?

எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபடமுடியவில்லையா?

மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையானசத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம்.


காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோகெமிக்கல்கள் நிறைந் துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட்சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன்மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வுமுடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன்என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக்காரணம்

மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்புசத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்றகொழுப்பு அமிலமே தினமும் தேவை.

நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும்ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்திஎண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனைஉபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள்தேவை.

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ்என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ளஉணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரைஉதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்லமெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன்நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சிமற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.

மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்டநாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல்சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களைஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள்நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள்மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச்சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச்செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதைமட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைட்டமின்கள் குறையும் போதுதீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதனால்மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும்இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். 

வழுக்கையில் முடி வளர பாட்டிவைத்தியம்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:


கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக: 
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற: 
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.


முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:


நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும். 

உடல் சூட்டை தணிக்கும் சர்க்கரைப் பூசணி

பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல் கிறோம்.

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப் படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம்.

மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.

பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம் 

சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்



வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
 
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
 
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.
 
செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
 
சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள, செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
 
இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும். அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

சமச்சீர் கல்வி....! குறை நிறைகள் பற்றிய ஒரு பார்வை!



நன்றி கழுகு

புதிய அரசு பொறுப்பேற்ற கணம் முதல் இன்று வரை சமச்சீர் கல்வி பற்றிய பல் வேறு செய்திகளை நாம் வாசித்து விட்டோம். சமச்சீர் கல்வியில்  இருக்கும் சாதக பாதகங்களையும் சமச்சீ கல்வி பற்றிய ஒரு பார்வை வாசகர்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் தெளிவாக்குகிறது


சமச்சீர் கல்வி என்றால் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம். இது CBSE மற்றும் இண்டெர்நேசனல் சிலபஸ் etc… இவைகளுக்கு இது பொருந்தாது.

சமச்சீர் கல்வி திட்டத்தின் நிறைகளும் குறைகளுமாக கருதப்படுவது:

இதில் உள்ள நன்மைகள் என்னவெல்லாம், என்று பார்த்தோமானால் சமச்சீர் என்ற வார்த்தையிலே இனிமை இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனால் மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் இஸ்டம் போல் புத்தகங்களுக்கு கட்டணம்  வசூலிக்கமுடியாது. பாடத்திட்டத்தையும் ஒரே அடியாக குறை சொல்ல முடியாது என்பதும் உண்மை. கற்றலின் இனிமைஇதையே தாரக மந்திரமாகக் கொண்டு இப்பாடத்திட்டங்கள் பல்வேறு அறிஞர்கள் கருத்தரங்குகள் நடத்தியும், நேரடி ரிப்போர்ட்கள் செய்தும் தயாரிக்கப்பட்டதே… இதற்காகவும் அரசுப்பணம்(மக்கள் பணம்) செலவழிக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்க பின்னர் உதவும்.

இதன் குறைகளாக நம்மில் ஒரு பகுதியினர் சொல்வது என்னவென்று பார்த்தோமானால் சமச்சீர் என்று சொல்லி கல்வியின் தரத்தையும் பாடத்திட்டதின் தரத்தையும் குறைத்து விட்டார்கள் என்றும் சில அரசியல் உள்நோக்கமும், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதை இந்த வருடம் தடை செய்து இருக்கிறார்கள் என்று…

உண்மையான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஒரு நாட்டின் குடிகளுக்கு சிறந்த தரமான கல்வியை இலவசமாக அளித்தால் தானே ஒரு நல்ல தலைமுறை உருவாகும். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இதற்கும் தடையாக நம் நாட்டின் மக்கள் தொகை இருக்கிறது என்கிறார்கள். இருக்கட்டுமே…. எத்தனை கோடிகள் அநாவசியமான வழிகளில் எம் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. எங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதிகளே… அப்பொழுதெல்லாம் இந்த தரமான கல்வி வழங்குவது பற்றியும், அதற்குத் தேவைப்படும் பணம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.


முதலில் நம் நாட்டில் ஒரு முரண் கண்ணுக்குப் புலப்படாமல் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் கல்வியை நல்ல தரத்துடன் கொடுக்கப்படல் வேண்டும். அதிக நிதி உதவியும் ஆரம்பக் கல்விக்கும் செலவழிக்கப் பட வேண்டும். அதாவது, ஐஐடி, ஐஐம் போன்ற அரசின் உதவியுன் நல்ல தரத்தில் இயங்கும் உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கு செல்ல ஏதுவான வகையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த பள்ளிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசின் மூலமாக உருவாக்கப்பட்டால் ஏற்றத்தாழ்வுகள் குறையும். மாநில அரசு வைத்துள்ள பாடத்திட்டத்தின் மூலமாக படித்து வெளிவரும் எம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இது ஏன் இவ்வாறு எட்டாக்கனியாக இருக்க வேண்டும்.


அது எப்படி ஆரம்பக்கல்விக்கு குறைந்த அளவில் உதவித் தொகையும் உயர்கல்விக்கு மட்டும் ஒவ்வொரு ஐஐடிக்கும் ஆண்டுக்கு 100 கோடிகள் உதவித் தொகை. அதுவும் நன்றாகப் படித்து வெளிவரும் பிள்ளைகளுக்கு, இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை. இங்கு ஒரு ஏற்றத்தாழ்வு நிலையே உள்ளது. இல்லையெனில் சமச்சீர் கல்வி முறை வேண்டாம், என் பிள்ளையும் கார்ப்பரேசன் பிள்ளையும் ஒரே பாடத்திட்டத்தில் படிப்பதா என்று பொங்கும் பணக்காரர்களுக்கே இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கல்வி கிடைக்கும்.


காலங்காலமாகவும் இது அப்படித் தான் இருக்கிறது. கோடிக்கணக்கில் அரசின் உதவி(அனைத்து மக்களின் வரிப்பணம்) பெறும் இக்கல்வி நிறுவனங்களுக்கு எம் கிராமத்து பிள்ளைகள் செல்லவே கூடாதா? காரணம் ஒன்றும் மாணவர்களின் தரத்தில் இல்லை. அரசு இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கைகளே காரணமாக உள்ளது.

அத்தகைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்கும் வகையில் தரமான, அவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்கள் கொண்ட தரமான பள்ளிகளை அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் நிறுவ வேண்டும். மாநில அரசும் ஆரம்ப கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டங்களில் நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்து, ஆசிரியர்களின் கற்று கொடுக்கும் திறத்தையும் அதிகப் படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பண உதவித்தொகையை வழங்க வேண்டும்.


ஏன் அத்தகைய கல்லூரிகளுக்கு மட்டும் இத்தனை கோடிகளில் அரசு உதவித் தொகை?… அதிக பணம் வசூலிக்கப்படும் கோச்சிங் (2 laksh per annum) செண்டர்களில் இருந்து பயின்று IIT-JEE எழுதி செல்லும் குழந்தைகளுக்குத் தானே இத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கிறது. பெரும்பாலும் யாருடைய பிள்ளைகள் இத்தகைய முறைகளில் பயின்று கோடிகளில் அரசின் உதவி பெறும் ஐஐடிக்கு செல்கிறார்கள்… இந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டாமா?
ஏன் ஐஐடிகளுக்கு மட்டும் இத்தகைய உதவிகள் என்று கேட்டால் உலகக் கல்வித் தரத்திற்கு இணையாக நம் நாட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலாவது இத்தகைய கல்லூரிகள் இருக்க வேண்டாமா என்பார்கள்… இருக்கட்டும். நியாயமே… ஆனால் அரசின் எந்தவொரு திட்டமும் அனைத்து மக்களுக்கும் சமத்துவமான முறையில் பயன்பட வேண்டாமா?

மாநில அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை, அதன் குறைகள் களையப்பட்டு(அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் தவிர்த்து) CBSE பாடத்திட்டங்களுக்கு இணையான தரமான பாடத்திட்டங்களுடன் கொண்டுவரப்பட்டால் இந்நிலை மாறும். இது முடியவில்லை என்றால் குறைந்த பட்சமான எண்ணிக்கையிலாவது, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு செல்லத் தேவையான தகுதியுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் பணத்துக்கு எங்கே செல்வது போன்ற காரணங்களை சொல்வார்களேயானால் அது நகைப்புரியதாகவும், எம்மை ஏமாற்ற நீவிர் சொல்லும் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஏனெனில் ஏதோ சில காரணங்களுக்காக 1000 கோடிகளில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடம், 200 கோடி செலவில் உற்பத்தி செய்யப்பட்ட சமச்சீர் கல்விப் புத்தகங்கள், இத்திட்டத்தை உருவாக்க செலவழிக்கப்பட்ட பணமும்… பழைய பாடத்திட்டத்தின் படியே, இன்னும் 200 கோடி செலவாகும் பணமும் எங்களின் வியர்வைப் பணமே… என்பதையும் நினைவுறுத்தி எம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவீர்களா என்ற ஏக்கத்துடனே இக்கட்டுரையை யாம் முடிக்கிறோம்.

செல்போன்களால் கேன்சர் : WHO எச்சரிக்கை



நன்றி  cerdpsf.blogspot.com

செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் :செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.


செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

செல் போன் அறிவியல் தகவல்கள் இதோ: செல் போன்கள் ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தி இயங்குகிறது. இதை முறையே என்று அழைக்கலாம். அந்த வகையில் மிக குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அலைகளையே செல்போன் வெளியிடுகிறது. அந்த வகையில் இதை கதிர் வீச்சு என்று கூட அழைக்க முடியாது (காரணம் வெளிவரும் சக்தி மிக மிக குறைவு). மேலும்செல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சுகளயே நாம் காலம் காலமாக உபயோகபடுத்தி வந்த ரேடியோகளும் வெளியிடுகின்றன. ஆனால் ரேடியோகளுக்கும்செல் போன்களுக்கும் உள்ள வித்தியாசம் நாம் உபயோகபடுத்தும் விதத்தில்தான் உள்ளது. அதாவது

நாம் செல் போன்களை உபயோகபடுத்தும்போது நாம் நம் உடற்பகுதியுடன் ஒட்டி தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் ரேடியோகளை அவ்வாறாக பயன்படுத்தியதில்லை. எனவே இந்த சக்தி குறைந்த ரேடியோ அலைகள் நம் உடல் திசுகளுக்குள்ளே மிக எளிதாக ஊடுருவி விடுகிறது. இதைதான் என்று அழைக்கின்றோம். இந்த செல் போன் கம்பனிக்கு கம்பெனி மாடலுக்கு மாடல் வேறுபடுகிறது.

எனவே செல் போன்கள் வாங்கும்போது நல்ல தரமான கம்பனிகளை தேர்வு செய்து வாங்குங்கள். அதற்கு முன்னால் அந்த குறிப்பிட்ட மாடல் செல் போன்களின் SAR 1.6watt/kg இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே வாங்குங்கள். செல்போன்கள் அலைகள் உடனடியாக நம் உடம்பில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது அல்ல...ஆனால் காலப்போக்கில் கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வரும் என்பது சத்தியமே. இதை வியாபார நோக்கத்திற்காக கம்பனிகள் கூறுவதில்லை என்பதும் உண்மையே. சரிகாலப்போக்கில் என்னென்ன நோய்கள் செல் போன்களால் வர வாய்ப்பு உண்டு1. Headache 2. Alzheimer's disease மிக கொடிய வகை மறதி நோய் உயிரை குடிக்கும் வல்லமை இதற்கு உண்டு) நரம்புகளை முடக்கும் வியாதி) 4. Brain tumour மூளை புற்றுநோய்) உடற்தளர்ச்சி )ஆம். இவை அனைத்தும் சத்தியமான உண்மையே! ஆனால் உங்கள் உடற் எதிர்ப்பு சக்தியை பொருத்து இவை எதுவும் வராமலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பாதிப்புகளை உருவாக்கலாம்.

அல்லது மிக சீக்கிரமாகவும் பாதிப்புக்கு உள்ளாகலாம். கண்டிப்பாக நம்மால் செல்போன்களை இழந்து வாழ முடியாது.



இனி வரும் காலங்களில் வெளிவரும் செல்போன்களில் தகவல்கள் sticker ஒவ்வொரு செல்போன்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சட்டம் கொண்டு வர வேண்டியதுநம் அரசின் கடமை. அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!



எழுதியவர் கூடல்பலா


நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery  மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ்  கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .



இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .



மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை 

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .



Sunday, 5 June 2011

காங்கிரஸ் இப்படித்தான் அழியுமா?


  ழல் முறை கேடுகள் லஞ்ச லாவண்ய பேயாட்டம் என்பது எல்லாம் நமது நாட்டுக்கு ஒன்றும் புதியது அல்ல

சாணக்கியன் துவங்கி மன்மோகன் சிங் காலம் வரையில் இவைகள் புதிய பரிணாமம் பெற்று வளர்ந்து வருகிறது

ஒரு காலத்தில் பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பது பாவம் என்றும் அப்படி செய்பவர்கள் கேவலம் ஆன பிறவிகள் என்றும் மக்கள் பேசுவார்கள்

 இன்று கதை முற்றிலும் தலைகீழாக உள்ளது நேற்று வரை போலீஸ் நிலைய மதில் சுவற்றில் சாய்ந்து நின்று கட்டை பீடி அடித்தவன் இன்று எம்.எல்.ஏ ஆனவுடன் கோடி கோடியாக சம்பாதித்தால் அது அவன் திறமையாகவும் அறிவாகவும் பேசப்படுகிறதே தவிர அந்த பணம் எங்கே இருந்து வந்தது எப்படி வந்தது என்பதை பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை 


இன்னும் சொல்லப்போனால் அதை நினைத்து பார்ப்பது கூட கிடையாது ஊழல் செய்யாதே என்று யாராவது சொன்னால் அவரை மன நோயாளியாக பார்க்கும் கொடுமை நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது

ஊழலுக்கு எதிராக வாய் திறந்தால் அடி உதை கிடைப்பது இங்கு மட்டும் தான் பாபா ராம்தேவ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை இதை நமக்கு உறுதிப்படுத்துகிறது

 அப்படி என்ன தவறான விஷயத்தை ராம்தேவ் கேட்டு விட்டார்?

  குத்ரோச்சிக்கும் சோனியா காந்திக்கும் உள்ள பண உறவை பற்றி கேட்டாரா?

  காமன் வெல்த் போட்டியில் காங்கிரஸ் காரர்கள் சம்பாதித்த பணத்தில் பங்கு கேட்டாரா?


 அலைக்கற்றை ஊழலில் கட்டுக் கட்டாக சுருட்டியதை தன்னிடம் கொடுத்துவிடுங்கள் என அடம் பிடித்தாரா?

 எதுவும் இல்லையே! நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகளை அடையாளம் காட்டுங்கள் ஊழலுக்கு எதிராக எதையாவது உருப்படியாக செய்யுங்கள் என்றுதானே கேட்டார்

 மக்கள் நலனை விரும்புகின்ற ஒரு அரசு தானாக செய்ய வேண்டிய ஒரு காரியத்தை நாட்டு குடி மகன் ஒருவன் கேட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது

 ஒன்று செய்கிறோம் என உறுதி மொழி தரலாம் அல்லது செய்ய மாட்டோம் என அறிவிக்கலாம் இரண்டும் இல்லாமல் இரவோடு இரவாக உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்து அநாகரிகமான ஒரு செயலை இந்த அரசு செய்திருப்பது இதன் பெயரில் மக்களுக்கு உள்ள நம்பக தன்மையை அழித்து விட்டது எனலாம்


 மத்திய அரசு முழுக்க முழுக்க ஊழல் நிறைந்தது ஊழல் வாதிகளுக்கு ஊக்கம் தருவது என்பது இந்தசெயல் மூலம் உறுதியாகி விட்டது

 ராம்தேவின் உண்ணா விரதம் சட்ட பூர்வமானது அல்ல என்றால் கபில் சிபில் சொல்வது போல் அவர் மக்களை ஏமாற்றுகிறவர் என்றால் அவரிடம் மத்திய அமைச்சர்கள் ஏன் தூது போக வேண்டும்?

உண்ணா விரதம் இருக்காதிர்கள் என்று ஏன் மன்றாட வேண்டும்?

 ஒரு வேளை ஊழலுக்கு எதிராக ஒருவர் பேசிவிட்டால் அவர் மன்மோகன் அரசாங்கத்தின் பார்வையில் ஏமாற்று பேர்வழியா?

 ராம்தேவ் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் புற்று நோய்க்கு மருந்து அளித்து மக்களை எமற்றுகிறாராம்

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளாராம்


 தனது இருப்பிடத்தில் பல கோடி ரூபாய் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளாராம்

 இப்படி அரசாங்கம் சொல்கிறது சரி இதை ஒரு வாதத்திற்கு ஏற்று கொள்வோம்

ஏன் இதற்காக இத்தனை நாட்கள் பாபா ராம்தேவ் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை

 ஒரு வேளை ராம்தேவின் முறை அற்ற செயலுக்கு அரசாங்கம் இதுவரை துணை போனதா?

 அல்லது நாட்டில் நடப்பது என்ன என்பதை அறியாத மூடத்தனத்தில் இருந்ததா?

 ஊழலுக்கு எதிராக பாபா போர் கொடி தூக்கிய பின் இந்த குற்ற சாட்டுக்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

 


குறைகளை யாருமே கேட்க கூடாது என்பவன் ஜனநாயக வாதி அல்ல சர்வதிகாரி ஆவான்

 ஆங்கில அரசாங்கம் கூட காந்தியின் உண்ணா நோன்பை தைரியமாக எதிர் கொண்டதே தவிர காந்தியின் மீது புழுதி வாரி கொட்டியது கிடையாது

 ராம்தேவ் ஊழலுக்கு எதிராக குண்டு வைக்க வில்லை துப்பாக்கியை தூக்கி காட்டி மிரட்டவும் இல்லை தன்னை வருத்தியே போராட்டத்தை துவங்கினார்

 இதில் எந்த வகையிலும் வன்முறை இல்லை ஆனால் அரசாங்கத்தின் கோழைத்தனம் தேச நலம் விரும்பும் பலரின் மனதை கொதிப்படைய செய்திருக்கிறது

  ஒரு வேளை சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் திமுகவின் ஊழல் அரசுக்கு எதிராக தமிழக மக்கள் ஓட்டுப்போட்டதை கூட சட்ட விரோதம் என்பார்கள்

 காரணம் அலைக்கற்ற ஊழலின் கருணாநிதி குடும்பம் என்பது சிதறி விழுந்த சர்க்கரை துண்டுகளை சுவை பார்த்த எறும்புகளே ஆகும்

 பெரிய வெல்ல துண்டை பதுக்கி வைத்திருப்பது சோனியா குடும்பமே

 ராம்தேவ் அவர்கள் கேட்டப்படி கருப்பு பண வாதிகளை வெளியிட்டால் காங்கரஸின் பல மூத்த தலைவர்களின் உண்மை முகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்

 இதை தவிர்ப்பதற்காகதான் ஆரம்பத்தில் பாபாவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தார்கள் இப்போது காவல் துறையை ஏவி விட்டு துரத்தியும் அடிக்கிறார்கள்

 இவை எல்லாம் மக்கள் அறியாதது அல்ல புரியாததும் அல்ல

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு என்ற ஆயுதம் மக்கள் கையில் தான் உள்ளது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது

 அதை இப்போதாவது நினைத்து கொண்டால் திமுகவை போல் முற்றிலும் அழியாமல் தப்பிக்கலாம்

 இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் முற்று புள்ளி வைத்து விடுவார்கள்

Saturday, 4 June 2011

ஜெயலலிதா அரசு வரமா? சாபமா?



புதியதாக பொறுப்பிற்க்கு வந்துள்ள தமிழக அரசின் செயல் பாடு
   ட்ட ரீதியாகவும் அதிகார பூர்வமாகவும் வேண்டுமானால் இதை புதிய அரசு என்று சொல்லலாம் ஆனால் நம்மை பொறுத்தவரை இதை இதற்கு முன்பு 10  ஆண்டு காலம் பார்த்த அரசு என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் சென்ற காலத்திற்கும் தற்காலத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மக்களும் அரசாங்கமும் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

 முதல் முறையாக அம்மையார் முதல்வராக செயலாற்றிய ஐந்து வருட காலத்தில் நிச்சயம் நல்ல ஆட்சியை தர வில்லை தான்தோன்றி தனமான மக்கள் நலம் விரும்பாத அரசாகவே அது இருந்தது அதனால் தான் அவர் அடுத்த கட்ட தேர்தலில் தோற்றார்


 இரண்டாவது முறையாக முதல்வர் ஆன பிறகு பெரிய அளவில் குற்றம் குறைகள் இல்லை என்றாலும் சொல்லி கொள்கிற மாதிரி எந்த நன்மைகளையும் செய்து விட வில்லை இப்போது அவரை மக்கள் தேர்ந்து எடுத்து இருப்பது நல்ல ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையோடு அல்ல கலைஞரின் குடும்ப ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக தான் ஜெயலலிதா அம்மையார் மக்களால் தேர்வு செய்ய பட்டுள்ளார்

 இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்தார் என்றால் தமிழ் உலகமே அவரை கையெடுத்து கும்பிடும் முன்பு போலவே நடந்து கொண்டால் கலைஞரை விட அதிகமான தண்டனையே மக்களிடம் பெற வேண்டிய சூழல் ஏற்படும் அம்மையாரின் அரசு தமிழ் நாட்டிற்கு வரமா சாபமா என்பது போக போக தான் தெரியும்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ........

முதல் கட்டமாக தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை சரிவர ஏற்படுத்த போவதாக அறிவித்து இருப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது


  அதே நேரம் இரும்பு இதயம் கொண்ட மத்திய காங்கிரஸ் அரசை ஜெயலலிதாவால் மாற்ற முடியும் என்று நான் நினைக்க வில்லை காரணம் ராஜூவ் காந்தியின் காலத்திலிருந்தே மத்திய அரசின் செயல் பாடு இலங்கை தமிழருக்கு பயன் அளிக்க கூடிய விதத்தில் இல்லை

 அதை மாற்ற தமிழர்களின் உணர்வுகளை ஆத்ம பூர்வமாக தேசிய அளவில் ஜெயலலிதா எடுத்து சென்றால் நன்றாக இருக்கும் அவரிடம் இப்போது இருக்கும் கனிவு தொடர்ந்து இருந்தால் ஈழ தமிழருக்கு சிறிதாவது நன்மை ஏற்படும்

திமுக அரசின் பல திட்டங்களை முதல்வர் நிறுத்தி வைத்திருப்பதை பற்றி .

முந்தைய கலைஞர் அரசு கொண்டு வந்த நல திட்டங்கள் பல உருப்படாதவைகள் தான் உதாரனமாக மருத்துவ காப்பீடு திட்டம் விஞ்ஞான பூர்வமாக மக்களை ஏமாற்றுவது ஆகும்

 நாட்டில் அரசு மருத்துவ மனைகள் எதற்கு இருக்கிறது? தரமான நல்ல சிகிச்சையை மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு தானே! அரசு மருத்துவ மனைகளை செம்மை படுத்துவதை விட்டு விட்டு காப்பீடு திட்டம் அது இது என பேசியதே மோசடியாகும் இப்படி பட்ட திட்டங்களை நிறுத்துவது தவறு அல்ல 


 புதிய சட்ட சபை கட்டிடத்தை பயன்படுத்தாதது சரியா?

புதிய சட்டசபை கட்டிடம் கலைஞரின் குடும்ப வருமானத்தில் கட்டப்பட்டது அல்ல முழுக்க முழுக்க மக்களின் வரி பணத்தில் உருவானது அதை பயன்படுத்தாமல் விடுவது பெரிய தவறாகும்

 ஒரு அரசு கொண்டு வந்ததை இன்னொரு அரசு செயல் படுத்தினால் எதுவும் குறைந்து போகாது அந்த கட்டிட அமைப்பில் குறை இருந்தால் அதை சீர் செய்து பயன் படுத்துவது தான் முறையான செயல்

 அதை விட்டு விட்டு வீண் பிடிவாதத்தால் மக்கள் பணத்தை விரையம் செய்வது ஒரு நல்ல அரசிற்கு அழகு அல்ல

சமச்சீர் கல்வி கைவிடப்பட்டது சரியா? 


இந்த கல்வி திட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தால் அதை வரும் கல்வி ஆண்டில் சீர் படுத்தலாம் அதே செய்யாமல் அச்சடித்த நூல்களை விணாக்குவது தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்றது அல்ல இந்த நடவடிக்கை பழையப்படி கல்வியில் வியாபார மயமாக்குதலை ஊக்கு விக்கவே செய்யும் 


தமிழக நதிகள் இணைக்கப்பட போவதாக சொல்லி இருப்பது வரவேற்க தக்கதா?

நதிகள் இணைப்பு என்பது வரலாற்று நோக்கிலும் சுற்று சூழல் நோக்கிலும் இதுவரை எந்த நாட்டிலும் சரியானதாகவும் பின்விளைவு இல்லாததாகவும் இல்லை என்பதே உண்மை ஆகும்

 ரஷ்யாவில் இருந்த பல நதிகள் இணைக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் புவி அமைப்பிலேயே பல விரும்ப தகாத மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன

 கங்கை காவேரி இணைப்பு தமிழக நதிகள் இணைப்பு என்பவைகள் எல்லாம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும் செயல் படுத்தினால் பல பின் விளைவுகள் ஏற்படும் இதை ஏனோ நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது இல்லை

 உண்மையாக நீர் ஆதாரங்களை காப்பாற்ற வேண்டும் என்றால் முற்றிலுமாக ஆற்று படுகைகளில் மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும் நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்தி நீர் வரத்து வாய்க்கால்களை செம்மைப்படுத்த வேண்டும்

 விவசாய நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றுவதை தடுக்க வேண்டும் நதி இணைப்புக்காக செலவிடும் பணத்தை நாடு முழவதும் உள்ள வனங்களை பாதுகாக்கவும் புதிய வனங்களை உருவாக்கவும் செலவிட்டால் நல்ல பலன் நிரந்தரமான பலன் கிடைக்கும் இத்தகைய கவர்ச்சி திட்டத்தால் பூமி மேலும் கெடத்தான் செய்யும் 


சூர்ய மின்சார திட்டம் நடை முறைக்கு சாத்தியமா?

நிச்சயம் அது நல்ல திட்டம் நம் தமிழ் நாட்டில் வெயிலுக்கு பஞ்சம் இல்லை தெரு விளக்குகள் வீட்டு உபயோகத்திற்குகான மின்சார தேவைகள் போன்றவற்றிக்கு முதல் கட்டமாக சூரிய சக்தியை பயன் படுத்தலாம்

 சூரிய மின்சாரத்தை விரும்பியவர்கள் பெறுவதற்கான வழி எளிமையாக இருக்க வேண்டும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் மின்சார உபகரணங்கள் அடிக்கடி பழுது படாமலும் உடனுக்குடன் பரமாரிக்க கூடியதாகவும் இருந்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்று கொள்வார்கள்

தற்போதைய மின்சார வாரியத்தின் ஆமை வேக செயல் பாடுகளை மாற்றி கொண்டால் தான் இந்த திட்டம் பயன் தருமே அல்லாமல் இதே கட்டுமானத்தில் செயல் பட்டால் இது ஒரு கனவு திட்டமாகவே தொடரும்