Saturday, 13 August 2011

பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம் - அத்திவெட்டி வே.சிதம்பரம்


இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் பிராமணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வந்துள்ளது. தமிழக வரலாற்றில் இன்றுவரை பிராமணியம் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிராமணியத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பண்டைத் தமிழகத்தில் பிராமணியம் கால் கொள்ளத் தொடங்கியதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் பிராமணர்கள், அந்தணர், பார்ப்பனர், முனிவர், நான்மறையாளர், இரு பிறப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பிராமணர்களின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் ``ஆரிய வாழ்க்கை முறையைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காக ஒரு பேரியக்கம் தொடங்கியது.'' (தென்னிந்திய வரலாறு பக்கம்) என்று கூறி விட்டு மேலும் அவர் ``தென்னிந்தியா ஆரிய மயமாவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகள் ஆயின. அந்த நீண்ட காலத்தில் ஆரிய வாழ்க்கை முறை சிறிது சிறிதாக வேரூன்றியதன் பயனாகத் தென்னிந்தியாவில் ஒரு புதிய பண்பாடு தோன்றி வளர்ந்தது'' (பக். 127) என்று கூறுகிறார். இந்தப் புதிய பண்பாடு ஏன் தோன்றியது? தமிழ்ச்சமூகத்தில் அதற்கான தேவை என்ன? என்பவை ஆய்வுக்குரியவை.
தமிழக வரலாற்றினை ஆய்வு செய்த அறிஞர்கள் பிராமணர்களின் புதிய பண்பாடு பற்றி சில குறிப்புகளை கூறியுள்ளனர். பிரிட்டிஷ் ஆய்வாளர் J.R.Marr ``சங்கத் தொகை நூல்களில் பிராமணர்களின் வழக்கங்கள் புராணக் கடவுள்களின் கதைகள் குறிப்பிடப்படுவதிலிருந்து தமிழ்ச்சமூகத்தில் இந்தோ ஆரியரின் ஊடுருவல் எந்த அளவுக்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. (The Eight Anthologies பக். 457) என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்க பேராசிரியர் ழுநடிசபந.டு.ழயசவ ``பிராமணர்கள் நீண்ட காலத்திற்கு முன் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.'' (The Poems of Ancient Tamil 155) என்று கூறுகிறார். ஆனால் பேராசிரியர் கே.கே.பிள்ளை ``பிராமணர்கள் எல்லோரும் ஆரியர்கள் அல்ல, தமிழகத்தில் இருந்த ஒரு பிரிவினர் பிரமாணர்களாக மாறினர் என்பது பிராமணர்களில் `வடமா' என்ற பிரிவு இருப்பதிலிருந்து தெரிகிறது.'' (Aryan Influence in Tamilaham during sangam Ephoch) என்று மாறுபட்ட கருத்தைக் கூறியுள்ளார். ஆனால் George L.Hart பிரமாணர்கள் எல்லோரும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ளவர் பிராமணராக மாறினர் என்ற கருத்து தவறு என்று மறுக்கிறார். அதற்குக் காரணமாக அவர் கூறுவதாவது:- ``பிராமணர்கள் தமிழ்நாட்டின் பழமையான கருத்தான தெய்வீக புனிதம் (Sacred) என்பதுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொண்டனர். அதனால் தாங்கள் களங்கப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டனர்'' (பக். 55) இக்கருத்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.
தமிழக வரலாற்றில் சங்க காலம் என்று அறியப்படுகிற காலம் கி.மு. முதல் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அடிப்படையில், குல மரபுக்குழுச் சமூகமாக (Tribes) இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த குழுச் சமூகத்திலிருந்து அரசு (STATE) என்ற அமைப்பு உருவான காலகட்டத்தைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன என்று பேராசிரியர் க.கைலாசபதி ஒரு கருதுகோளை (HYPOTHESIS) முதலில் வெளியிட்டார். கைலாசபதி கூறுகிறார். ``சான்றோர் இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம் நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக்குழுக்கள் (Tribes) சிதறிக் கிடந்தன. நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப்போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலை தூக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது'' (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பக்கம் 24, 25) பேராசிரியர் கைலாசபதியின் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியை ரொமிலா தாப்பர் ``For the Tamils this was period of evolution from tribal chief tainships to kingdoms” (A History of India Pg-105).
பேராசிரியர் கைலாசபதி இந்த கருதுகோளை வெளியிட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விரிவான ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. குழுச்சமூகத்தில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பது ஏற்படவில்லை. குழுவில் எல்லோரும் சமம். தனிச்சொத்து என்ற எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. சமூகத்தில் தனிச்சொத்துடைமை என்பதும் அதன் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதும் அதன் உச்சமாக `அரசு' என்ற அமைப்பும் உருவானது வரலாற்றின் மிக முக்கிய ஒரு கட்டமாகும். தமிழக வரலாற்றிலும் குழு நிலையிலிருந்த சமூகம் சிதைவடைந்து அரசு அமைப்பு தோற்றம் கொள்ளும்பொழுது சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
தமிழக வரலாற்றில் தோன்றிய புதிய அரசும், அதன் அடிப்படையான உயர்குடிமக்களும் தங்களின் புதிய வாழ்க்கை முறையை அங்கீகாரம் செய்ய ஒரு புதிய கோட்பாட்டை எதிர்நோக்கினர். இந்தப் புதிய தேவையை நிறைவு செய்ய தமிழகத்தில் பிராமணர்கள் தங்களின் புதிய பண்பாட்டைப் புகுத்தினர். பிராமணிய பண்பாட்டின் தோற்றத்தை அரசின் தோற்றத்துடன் இணைத்து புதிய கருத்தை உருவாக்கியவர் பேராசிரியர் கோசாம்பி. ``பிராமணியத்தின் வளர்ச்சி என்பது குழு சமுதாயத்தில் அரசனை தலைமையாகக் கொண்ட வர்க்கங்களின் தோற்றத்தைக் குறிப்பதாகும்'' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். (An Introduction to the study of Indian History - 122).
கோசாம்பி பொதுவாக வரைவு செய்த இந்தக் கருத்து தமிழக வரலாற்றிற்கும் பொருந்தி வரும் ஒன்றாகும். தமிழ்ச் சமூகத்தில் அரசு தோன்றுவதற்கான சூழலை முதலில் பார்ப்போம். இது பற்றிய ஓர் அறிமுக ஆய்வினை பேராசிரியர் கா.சிவத்தம்பி செய்துள்ளார். தனது ``Organization of Political Authority in early Tamilnadu'' என்ற கட்டுரையில் தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றி அறிவதற்கு முதற்படியாக அது பற்றிய சொற்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அரசின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்வதற்கான ஒரு நுழைவுவாயிலை அமைத்துத் தந்துள்ளது.
பேராசிரியர் சிவத்தம்பி தனது மேற்கண்ட கட்டுரையில் அரசு உருவாவதற்கு அடிப்படையாக உள்ள காரணங்களைப் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் முக்கியமானவை. (1) உற்பத்திப் பெருக்கம்- அதன் மூலம் உபரி உருவாக்கம் (2) சமூகத்தில் ஏற்றத் தாழ்வான மக்கள் பிரிவினர் உருவாதல், (3) பண்ட மாற்றுக்குப் பதிலாக வணிகம் வளர்ச்சியடைதல், (4) தனிச்சொத்துடைமை - இவை அரசு உருவாவதற்கு அடிப்படை அமைவனவாகும்.
பேராசிரியர் சிவத்தம்பி தனது Drama in Ancient Tamil Society நூலில் தமிழ்நாட்டில் அரசு உருவாக்கம் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், தனிச்சொத்துடைமை அடிப்படையில் நிலவுடைமை சமுதாயம் (Fudalism) தோன்றியதால் அரசு தோன்றியது என்ற வாய்பாட்டைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவுடைமை சமுதாயம் தோன்றியது மிகப்பிந்திய காலத்தில் ஆகும். சங்க காலத்தில் நிலவுடைமைச் சமுதாயத்திற்கான சிறு தோற்றமே ஏற்பட்டிருந்ததாகவே கொள்ள முடியும். அரசு தோன்றுவதற்கான முக்கிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றான உபரி உற்பத்தி என்பதும் கூட பெருஅளவில் ஏற்பட்டு விடவில்லை. உள்நாட்டு வணிகத்தை விட வெளிநாட்டு வணிகத்தின் மூலமே அதிக செல்வம் சேர்ந்தது. இந்த செல்வம் நகரங்களில் புதிய மக்கள் பிரிவை உருவாக்கியது. பாசன வசதி பெற்ற நதிக்கரை பிரதேசங்களில் விவசாயத்தில் உபரிச் செல்வம் ஒரு சிலர் கைகளில் சேர்ந்தது.
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் நதிக்கரைகளிலேயே உருவாயின. உலகம் பூராவுக்கும் இந்த விதி பொதுவானது ஆகும். பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி முதலியவற்றில் நகரங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் வாழ்க்கை நிலைமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் மிக ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்தனர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தாழ்வு அரசு உருவாவதற்கான காரணத்தைத் தந்தது. குழு நிலையில் வாழ்ந்த சமுதாயத்தில் ரத்த உறவுடைய குழு உறுப்பினர் என்ற நிலைக்குப் பதிலாக அரசு உருவான பின் நில எல்லையில் வாழும் நாடு என்ற கருத்து உருவானது. மேலும் தனியான படை என்ற அமைப்பும் உருவானது. குழு சமூகத்தில் தனியான படை கிடையாது. குழு உறுப்பினர் அனைவரும் ஆயுதம் தாங்கிப் போரிட்டனர்.
சங்க இலக்கியத்தில் `படை' என்ற சொல் வரும் இடங்களைக் கூர்ந்து கவனித்தால் `படை' சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் மட்டுமே இருந்த உண்மை புலப்படும். மற்றக் குழுத் தலைவர்களான வேளிர், சீறூர் மன்னர்களிடம் படை இருந்ததாக அறிய முடியவில்லை. மேலும் `படைஞர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் (பதிற்றுப் பத்து 25) குறிப்பிடப்படுகிறது. `படைஞர்' என்ற சொல் நிரந்தரப் படையின் உறுப்பினர் என்று பொருள் கொண்டதாகக் காணப்படுகிறது. மேலும், குமரிப்படை தழீய கூற்று வினையாடவர் (புறநானூறு 294) என்றும் ``நின் படைகொள் மாக்கள்'' *(புறம் 29) என்றும் படைவீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட படை வீரர்கள் மூவேந்தரின் படை வீரர்களே. நிரந்தரப்படை என்பது அரசு என்ற அமைப்புடன் இணைந்த ஒன்று. இது சங்க காலத்தில் உருவாகத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது.
சங்க இலக்கியத்தில் `வேந்தர்' என்ற சொல் சேர, சோழ, பாண்டியர்களை மட்டுமே குறித்தது. மேலும் `வம்வேந்தர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. இது புதிய `வேந்தர்' என்ற பொருளைக் குறிக்கிறது. வேந்தர்கள் புதிதாக உருவானவர்கள் என்பதையே இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வேந்தர்களுக்கு மட்டும் குடை, முரசு, முடி உரியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
புதிதாக உருவான அரசு அதன் தலைமையில் உள்ள அரசன். இதன் நிலைபேற்றை உறுதிப்படுத்த சடங்குகள், வேள்விகள் செய்யப்பட்டன. இத்தகைய வேள்விகளை முன்னின்று நடத்தியவர்கள் பிராமணர்கள். குழுநிலைச் சமுதாயத்தில் பிராமணர்களுக்கு இடம் இல்லை. சங்க இலக்கியத்தில் குழுத் தலைவர்கள் வேள்வி செய்ததாகவோ அல்லது பிராமணர்களைக் கொண்டு வேறு சடங்குகள் செய்ததாகவோ ஒரு குறிப்பும் இல்லை. பெரும்பான்மையான மக்களுக்கும், பிராமணர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பெரும் அரசர்களாகக் குறிப்பிடப்பட்ட சேர, சோழ, பாண்டியர்களே வேள்வி செய்தனர். அவர்கள் அவைகளிலே பிராமணர்கள் இடம் பெற்றனர்.
பிராமணர்கள் பற்றி சங்க இலக்கியம் கூறுவனவற்றை தொகுத்து நோக்கலாம். சங்க இலக்கியத்தில் பிராமணர்கள் அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். பிராமணன் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. பிராமணர்கள் வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
``அறம்புரி கொள்கை நான்மறை முதல்வன்''- புறம் 93
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26
அந்தணர் வேதம் ஓதுதலை வண்டுகளின் ரீங்காரத்துடன் ஒப்பிட்டு,
``தாதுண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656
என்று கூறப்பட்டுள்ளது.
வேதம் அறிந்தமை பிராமணர்களின் தனிச்சிறப்பு. தமிழ்ச்சமூகத்தில் வேறு யாரும் வேதம் அறிந்திருந்ததற்கான குறிப்பு ஏதும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்'' - (பதிற்றுப்பத்து 24)
என்று குறிப்பிடப்படுகின்றனர். இதுவும் பிராமணர்களின் தனித்தன்மைச் செய்கைகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் `பிராமணர்கள் அந்திக்காலத்தே, தீயை வளர்ப்பர், தம் கடமையைச் செய்வர்.
``அந்தி அந்தணர் அயர'' - குறிஞ்சிப்பாட்டு 225
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீவிளக்கிற்றுஞ்சும் - புறம் 2
பிராமணர்கள் வேள்வி நடத்தி வைத்த செயல் சங்க இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
``நெய்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்
வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பவகொல்'' - புறம் 15
``வேத வேள்வி துறை முடித்தூ உம்'' - புறம் 224
``வேள்வி முற்றிய கேள்வி அந்தணர்க்கு
அருங்காலம் நீரோடு சிதறி''
``அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை'' - பட்டினப்பாலை 54, 55
வேள்வி செய்விக்கும் சிறப்பு பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாரும் வேள்வி செய்வித்தாகக் குறிப்பு இல்லை.
பிராமணர்கள் தனியாக வாழ்ந்தனர். அங்கு நாய், கோழி போன்றவை இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. கிளிகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்படுகிறது.
``பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்று
மறை காப்பாளர் உறை பதி'' - பெரும்பாணாற்றுப்படை 298-301
அந்தக் காலத்திலேயே அக்ரகாரங்கள் தமிழகத்தில் தோன்றி விட்டன என்பதை இது தெரிவிக்கிறது.
பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
``பார்ப்பார்க்கல்லாது பணி பறியலையே'' (பதிற்றுப்பத்து 63) என்று சேரவேந்தனை சிறப்பித்து கூறப்படுகிறது. பார்ப்பனருக்கு அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர் என்பது இதனால் விளங்கும். மேலும் சோழ அரசன் ஒருவன்,
``நின் முன்னோரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்'' - புறம் 43
என்று குறிப்பிடப்படுகிறான். பார்ப்பனருக்கு எந்த தீங்கும் அரசர்கள் செய்யமாட்டார்கள் என்ற செய்தி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாண்டிய அரசனுடைய அவையில் பிராமணர் இருந்தனர் என்பதை
``நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26
என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.
பிராமணர்கள் அரசனுக்கு அருகில் இருந்து ஆலோசனை கூறி அவனை வழி நடத்தும் இடத்தில் செல்வாக்குடன் இருந்தனர் என்பது சங்க இலக்கியத்தால் அறியப்படுகிறது. இதனை உறுதி செய்து பேராசிரியர் George L.Hart தனது The Poems of Ancient Tamil என்ற நூலில் ``Brahmins seem to have identified themselves closely with the Kings'' (ஞ-54) என்று கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிராமணர்களுக்கும் புதிதாக தமிழகத்தில் தோன்றிய அரசுக்குமான நெருங்கிய பிணைப்பை உறுதி செய்யும் ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. பிராமணர்களும் அவர்களின் புதிய பண்பாடும், அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர், சோழர் காலங்களில் தமிழ்ச் சமுதாயம் நிலவுடைமை சமுதாயமாக வளர்ச்சியடைந்த பின் அதன் தத்துவமாக பிராமணியம் முழுமை அடைந்து சமூக ஆதிக்கம் பெற்றதை அறிய முடிகிறது.
சங்க காலத்தில் தொடங்கிய பிராமணிய தத்துவ வளர்ச்சியுடன் சமஸ்கிருத மொழியும் தமிழ்ச்சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பல்லவ, சோழர் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழி கோவில்களில் தமிழைப் புறந்தள்ளி ஆதிக்கம் பெற்றது. தெய்வங்களின் பெயர்கள் சமஸ்கிருதமாயின. வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் நிலைபெற்றது. ஆனால் சாதாரண பொதுமக்கள் வழிபட்டு வந்த கிராமப்புறத் தெய்வ வழிபாட்டில் பிராமணர், சமஸ்கிருத ஆதிக்கம் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக ஆதிக்க நிறுவனமாக செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனை தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையாளர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்க்கங்களுக்கு பிராமணியம் தத்துவமாக விளங்கியது. சமூக ஆதிக்க சக்திகள் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்தனர்.
பிராமணிய தத்துவத்தின் ஆதிக்கம் இன்று வரை வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிந்ததே. பிராமணிய மதம் தான் இந்து மதம் என்று பெயர் பெற்றது. இந்து மதம் என்பது இஸ்லாம், கிறிஸ்தவம் போல் உருவாக்கப்பட்ட மதம் அல்ல. பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் கடவுள்கள் இணைத்த ஒரு கூட்டு உருவாக்கம் ஆகும். இதுபற்றிய ஆய்வு இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட வேண்டும்.

 அம்பேத்கர் சிந்தனைகள் பயிலரங்கம் - முன்னுக்கு வந்த விவாதங்கள் - திருப்பூர் மோகன்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இயங்கும் அம்பேத்கர் ஆய்வு மையமும் இணைந்து செப்டம்பர் 4,5,6,7 தேதிகளில் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்த பயிலரங்கை நடத்தினார்கள். தமிழகம் முழுவது மிருந்து 110 தோழர்கள் (தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகிகள் 10 பேர் உட்பட) இப்பயிலரங்கில் பங்கேற்றனர். அது குறித்த செய்தித்தொகுப்பாக அல்லாமல் அங்கு முன்னுக்கு வந்த விவாதப்புள்ளிகளை மட்டும் இங்கே தொட்டுக்காட்டுகிறோம்.
துவக்கவிழாவில் வரவேற்புரை ஆற்றிய அம்பேத்கர் ஆய்வு மைய இயக்குநர் முனைவர் டி. தர்மராஜ் இந்த மேடை வரலாற்றால் தீர்மானிக்கப்பட்ட மேடை என்று சரியாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தலித் மக்களின் விடுதலைக்கான (அது மதத்தின் வழியாக என்றாலும்) ஆரம்ப விதைகளை ஊன்றிய புனித சவேரியார் அவர்கள் பெயரில் அமைந்த கல்லூரியில் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது. தலித் என்ற வார்த்தையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவரும் கத்தோ லிக்கத் திருச்சபைக்குள்ளே தலித்துகளுக்கான உரிமைகளுக்காகப் போராடியவருமான அருட் தந்தை அந்தோனிராஜ் இம்மேடையில் இருக் கிறார். சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராகப் போர்முழக்கமிட்ட பாரம்பரியத்தோடு இன்று உத்தப்புரம் போராட்டம் வரை நடத்திக் கொண்டிருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர் பி. சம்பத் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார். முற்போக்கு எழுத்தாளர்கள் கூடியிருக்கிறார்கள். ஆகவேதான் இது வரலாற் றால் தீர்மானிக்கப்பட்ட மேடை என்றேன் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
19 தலைப்புகளில் அம்பேத்கரின் பன்முகப் பார்வைகள் அரங்கில் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் மதிய அமர்வுகளாக கள அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி தேர்தல் அனுபவங்கள், உத்தப்புரம், காங்கியனூர் மற்றும் பந்தப்புளி கோவில் நுழைவுப்போராட்ட அனுபவங்களை அந்தந்தப் போராட்டக் களங்களில் தலைமையேற்ற தோழர்களான தங்கராஜ், சு. வெங்கடேசன், ஜி. ஆனந்தன்,ஆர். கிருஷ்ணன்,பாஸ்கரன் போன்ற தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதன் மீதான விவாத நேரத்தில் இருவித மான கருத்துக்கள் மோதிக்கொண்டன. கோவில் நுழைவுப் போராட்டம் என்பது முக்கியமே இல்லை. வேறு பல பண்பாட்டு/ பொருளாதாரப் பிரச்னைகள் வெடிக்கும் புள்ளிதான் கோவில் நுழைவுப் பிரச்னை என்று அம்பேத்காரிய அறிஞர்கள் வாதிட்டனர். மார்க்சிய வாதிகளான பங்கேற்பாளர்கள் ‘ இதைத்தான் நாங்கள் காலம் காலமாகச் சொல்லி வருகிறோம் -பொருளியல் வாழ்க்கைதான் அடிப்படை என்று. ஆனால் கோவில் நுழைவுப் போராட்டம் ஒண்ணுக்கும் உதவாதது என்று புறந்தள்ளும் வாதத்தை ஏற்க முடியாது. ’ என்று வாதிட்டனர்.
உத்தப்புரத்தில் சுவர் உடைக்கப்பட்டு ஒரு கட்ட வெற்றி பெற்றாலும் அம்மக்களின் அடிமனதி லிருந்து எழும் கோரிக்கையாக இன்றும் அரசமர வழிபாட்டு உரிமை தொடர்கிறதே அதன் பொருள் என்ன? கோவில் நுழைவுப்போராட்டங்கள் நடந்த ஊர்களிலெல்லாம் மனரீதியான தங்கள் நெடுங்காலக்காயங்கள் இன்றுதான் ஆறுதலடை வதாக பெண்கள்,பெரியவர்கள் பேசினார்களே அது முக்கியமல்லவா என்று களத்திலிருந்து வந்த தோழர்கள் கேள்வி எழுப்பினர்.
ஒவ்வொரு நாளும் இரவு மம்மூட்டி நடித்த அம்பேத்கர் முழுநீளத்திரைப்படம் (மூன்று பாகங் களாக)திரையிடப்பட்டது. காலாராம் கோவில் நுழைவுப்போராட்டம் அதில் உணர்ச்சிகரமாக எடுக்கப்பட்டிருந்தது.
இடஒதுக்கீடும் அம்பேத்கரும் என்கிற தலைப்பில் பேசிய கருமாத்தூர் கல்லூரிப் பேராசிரியர் திரு. லூர்துநாதன் அவர்கள் இட ஒதுக்கீடு என்பதை ஒரு தலித் தனக்குக் கொடுக்கப் பட்ட ஒரு வாய்ப்பு எனக் கருதக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பான பிரதிநிதியாக நான் இவ்வொதுக்கீட்டைப் பெற்றுள்ளேன் என்றுதான் அவர் நினைக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் பார்வை என்று அவர் விளக்கியது எல்லோர் மனதிலும் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
தலித் என்றில்லை, ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சமூகத்தில் பிறந்து தேசிய வளர்ச்சியில் சிறு பங்கை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் தன்னை எவ்விதமாகப் புரிந்து கொள்வது என்கிற கேள்வி யை பங்கேற்பாளர்களின் மனதில் எழுப்பிய உரை யாக அது அமைந்தது.
ஆனால், அம்பேத் கருக்கு முன்னால் இந்திய வரலாற்றில் இந்து மதத்தை யாருமே கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்கிற அவரது கருத்துக்கு அரங்கிலிருந்து மறுப்பலை கிளம்பியது. சித்தர்கள், பௌத்தம், சமணம் என அவ்வக்காலங்களில் எழுந்த எதிர்ப்பின் வடிவங்களை அங்கீகரிக்க வேண்டாமா என்கிற வினா எழுந்தது. இரட்டை வாக்குரிமை பற்றிய டாக்டர் ஜெயராமனின் உரை காந்தியை வில்லனாகக் காட்டியது.
முனைவர் டி. தருமராஜின் அம்பேத்கரின் புத்த தம்மம் பற்றிய உரை மனக்கிளர்ச்சி யூட்டு வதாக இருந்தது. அம்பேத்கரையும் அவரோடு சேர்ந்து மதம் மாறிய 10 லட்சம் தலித்து களையும் உலகின் பெரிய பௌத்த மடங்கள் ஏதும் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை என்று குறிப் பிட்டார். ஏனெனில் அம்பேத்கர் செய்தது ஒரு மத நடவடிக்கையல்ல. அது இந்துத்வ அரசியலுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இருந்தது.
புத்தரை தன் வழிக்கு-தன் மக்களின் விடுதலைக்கான பாதைக்குத் தோதாக மறு வடிவமைப்பு செய்து- அந்த மறுவாசிப்புச் செய்யப்பட்ட பௌத்தத்துக்கே தன் மக்களை அழைத்துச் சென்றார் என்று தருமராஜ் ஆற்றிய உரை அரங்கில் பெரும் வரவேற்பைப்பெற்றது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம் பற்றிப் பேச வந்த தமிழக அரசின் முதன்மைச் செயலர் திரு. கிறிஸ்துதாஸ் காந்தி ஐ. ஏ. எஸ். அவர்கள் அரசின் எல்லா வறுமை ஒழிப்பு மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தையும் இழுத்து மூடிவிட வேண்டும் என அதிரடியாகக் கள மிறங் கினார். நலத்திட்டங்கள் யாவும் தலித்து களைப் பயனாளிகளாகவும் அரசிடம் கையேந்தும் பிச்சைக் காரர்களாவும் மாற்றுகின்றன.
சிறப்பு உட்கூறுத்திட்டத்தில் உள்ள நிதி யைக் கொண்டு ஆண்டுக்கு 100 லட்சாதிபதிகளை-முதலாளிகளை- தலித் மக்கள் மத்தியிலிருந்து உருவாக்க வேண்டும். தலித் விடுதலையைப் பின்னர் அந்த தலித் முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். விவசாயமே நலிந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தலித்து களுக்குப் புறம்போக்கு நிலத்தை அளந்து கொடுப் பதால் என்ன பயன்? விளையும் நிலங்களை அபகரித்து தலித்துகளுக்குக் கொடுத்தீர்களா? ரியல் எஸ்டேட் நடத்த தலித்துகளுக்கு இச்சிறப்பு உட்கூறு திட்டத்திலிருந்து பணம் கொடுக்கலாமே என்றார்.
எல்லாச் சாதிக்காரனும் முதலாளி ஆவது போல ஊழல் செய்து பணக்காரனாவதுபோல தலித்துகளும் ஆக வேண்டும் என்றார். இவ்வுரை யின் பின்னாலிருக்கும் உட்கிடக்கையை மனக் காயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தாலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் வெறும் கற்பனைக்குத்தான் தீனி போட முடியும். யதார்த் தத்தில் நலத்திட்டங்களே உருப்படியாக தலித் மக்களுக்கு ஒன்றுமே போய்ச்சேராத பின்னணியில் அதற்கான முயற்சிகளையும் போராட்டங்களையும் திசை திருப்புவதாகவே அவரது உரை அமைந்த தாகப் பங்கேற்பாளர்கள் கருத்துக் கூறினர்.
மார்க்சியமும் அம்பேத்கரும் என்கிற தலைப்பில் உரையாற்றிய தோழர் அருணன் இவ்வுரைக்கான பதிலாக அழுத்தமான பல வாதங்களைப் பக்குவமாக முன் வைத்தார். (கட்டுரை இவ்விதழில்)
அம்பேத்கரிடமிருந்து முற்போக்காளர்கள் பெற்றுக்கொள்ள ஏராளம் உண்டு என்கிற காத்திரமான உணர்வை இம்முகாம் ஏற்படுத்தியது. அம்பேத்காரியவாதிகள் முற்போக்காளர்கள் மீது என்னவிதமான பார்வையைக் கொண் டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் கூட இப்பயிலரங்கு ஒருவகையில் உதவியாக இருந்தது.

 சுதந்திரத்திற்கு பிறகும், சிறிதளவும் மாற்றமில்லை - தஞ்சை வெங்கட்ராஜ்


சென்னை மயிலாப்பூர் ஹாமில்டன் பாலம் அருகில் 05-12-2010 அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய  ப.சிதம்பரம் "இரட்டைக் குவளை முறை இன்னும் பல கடைகளில் இருக்கிறது. தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை ஒழிய தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார். இப்படிக் கூறியவர் இந்த நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

சுதந்திரம் பெற்றது முதல் ஆதிக்க சாதிகள் தவறாமல் செய்துவருவது தலித்துகளை தீண்டாமைக் கொடுமை மூலம் ஒடுக்குவதும், அவர்களது சமூக முன்னேற்றத்தை தடுப்பதும், அவர்களது அரசியல் வளர்ச்சியை எப்பாடு பட்டாவது கெடுப்பதுமே! இன்றும் கூட ஒரு சதவிகிதம் கூட தலித்துகளின் சமூக பாதிப்புகள் குறையவில்லை என்பதுதான் இந்த நாட்டின் தலையான பிரச்சினை. தலித் மக்கள் அனுபவித்து வரும் சமூக, அரசியல், பொருளாதாரக் கொடுமைகள் வெளிப்படையானவை! தீண்டாமைக் கொடுமைகள் நடக்காத பகுதி எதுவுமே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இது 'ஜனநாயக நாடா' அல்லது 'சாதி வெறி நாடா' என்று தலித் இளைஞர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் எந்த பதிலும் இல்லை.

"சமூக நீதி" பற்றி பேசும்போது "தலித் அல்லாதாருக்கான நீதி மட்டும்தான் இது" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டுப் போகலாம். அந்த அளவிற்கு தலித்துகள் அனைத்து வகைகளிலும் புறக்கணிக்கப் படுகின்றனர் அல்லது ஏமாற்றப் படுகின்றனர்!  "உங்களை நசுக்கவும், அழிக்கவும் வருபவர்கள் என் பெயரையும், படத்தையும் கூட பயன்படுத்துவார்கள்! உஷார்!" என்று பாபாசாஹேப் அம்பேத்கர் தலித் இளைஞர்களை எச்சரித்தார். எப்படிப்பட்ட மாமேதை அவர்? இந்த நிலையை அன்றே உணர்ந்திருக்கிறார். நூறு ஆண்டுகள் ஆனாலும் ஆதிக்க சாதிகள் தலித்துகளை எள்ளளவும் வளர அனுமதிக்க மாட்டார்கள் என்பது அவருக்கு அன்றே தெரிந்திருக்கிறது!

இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாளை மறுநாள்...என்று எந்த ஒரு தெளிவான நிலையும் தலித் இளைஞர்களின் எதிர்காலத்தில் இல்லை என்பது நம்மை கவலை கொள்ள வைக்கிறது. ஆனால், தலித் இளைஞர்களின் நுண்ணறிவும், கடின உழைப்பும், பரந்த மனமும், சாதிக்கத் துடிக்கும் சிந்தனையும் சமூகத்தால் சரியாக மதிக்கப் படுவதில்லை. நானறிந்த வரையில், தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர்களும், அதிகாரிகளும், டாக்டர்களும், பேராசிரியர்களும் புரிந்துவரும் சாதனைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. இது ஆதிக்க சாதிகளை மேலும் கோபமடைய வைக்கிறது. எந்த ஒரு துறையிலும், தலித்துகளை நுழைய விடாமல் இருப்பது எப்படி என்று ஆராய்ச்சியே நடக்கிறது! தீண்டாமை அவர்களுக்கு சாதியில் மட்டுமில்லை; அரசியலில், கல்வியில், அறிவுசார் துறைகளில், இலக்கியத்தில் நிரந்தரமாக நிலவுகிறது. இந்த இழி நிலை மாற தலித் இளைஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

"நான் தலித்துகளுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்திருக்கிறேன்" என்று சொல்லாத அரசியல் தலைவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கட்சியில், அமைப்புகளில் ஒரு சாதி இறுக்கமும், தீண்டாமையும் நிரந்தரமாக நிலவும் என்பது தெளிவாகத்தெரியும். டாக்டர் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற தலைவர்கள் அரசியலில் வளர்ந்தால், அவர்களை எப்படி தரம் தாழ்த்திப் பேசுவது, அவர்கள் பெயரை எப்படி கெடுப்பது, அவர்களை எப்படி மோசமாக சித்தரிப்பது என்பதெல்லாம் ஆதிக்க சாதியினருக்கு அத்துப்படியான விஷயம்!. நம்பிக்கையூட்டக்கூடிய தேசிய அளவிலான தலைவர் மாயாவதி. அவரை எதிர்க்க, பலவீனப் படுத்த "அனைத்து" கட்சியினரும் "இணைந்து" செயல்படுவது நம் தலித் தலைவர்களின் அரசியல் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்றும் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனை ஒரு ஆதிக்க சாதிப் பெண் காதலித்து அவர்கள் திருமணம் செய்யப் போனால், அது கடுமையாக எதிர்க்கப்படுகிறது. பொதுவாகவே, தலித் இளைஞர்கள் நேரடியாகப் பேசுபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், அறிவோடு சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, மற்ற சாதி பெண்கள் அவர்களை காதலிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக, பிள்ளைமார், முதலியார், அய்யர், அகமுடையார், செட்டியார், ரெட்டியார், நாயுடு போன்ற உயர் சாதிப் பெண்கள் அவர்களை விரும்பி, திருமணம் என்கிற நேரம் வரும்போது, தலித் இளைஞருக்கு பலத்த நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அந்த நேரங்களில், தலித் இளைஞர்கள் எந்த ஆதரவும் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
"நம் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கவும், நம்மை மேலும் பலவீனப்படுத்தவும்  ஆதிக்க சாதிகள் தயாராக இருக்கின்றன. தலித் அரசியல் இயக்கங்கள் அனைத்திலும் உள்ள சிந்தனையாளர்கள் இணைந்து கட்சி சார்பற்ற ஒரு சமூக பாதுகாப்பு அமைப்பை உருவாக்க முயற்சிகள் செய்து வருகிறேன். தலித்துகளின் இட ஒதுக்கீட்டை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதுவே உண்மையான சமூக நீதி" என்கிறார் தொழிற்சங்க தலைவரும், பத்திரிக்கையாளரும், அரசியல் அறிஞருமான கவிஞர் தா.மனோகரன். "ஒவ்வொரு தனியார் மற்றும் பொது ஆலயத்திலும் கண்டிப்பாக ஒரு தலித் அர்ச்சகர் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால், இந்த கோரிக்கையை தலித்துகள் தீவிரமாக வலியுறுத்த வேண்டும். இதற்காக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிப் போராட வேண்டும்" என்கிறார் ஒரு மூத்த சமூக ஆர்வலர்!

தலித்துகளுக்கு எதிரான ஜாதிய ஒடுக்குமுறையையும், வன் கொடுமையையும் கட்டுப்படுத்தவே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டம் தலித் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாக இல்லை என்பது கவலைக்கு உரியது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பு ஒன்றை டெல்லியிலுள்ள தலித் சமூக நீதி இயக்கம் உருவாக்கியுள்ளது. "இந்த சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படக்கூடியதாக திருத்தம் செய்யப் பட வேண்டி உள்ளது" என்று அந்த இயக்கம் பரிந்துரைத்துள்ளது.
"இச்சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்துக்குச் எடுத்துச் செல்வதற்கு கண்காணிப்புக் குழு அமைக்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள், இந்திய தண்டனை சட்டத்தில் அளிக்கப்படும் தண்டனைகளை விட அதிகமாக இருக்கும்விதமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிருந்தா காரத் கூறுகிறார். மேலும், மதம் மாறியவர்களுக்கும் இச்சட்டம் செல்லும் விதமாகவும், இதுதொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்போரைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பிருந்தா காரத் வலியுறுத்துகிறார். ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொண்டு போராடும் தலித் போராளிகளை "வன்முறையை கையாள்கிறார்கள்; சாதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்று ஏசுவது ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு. இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் ஆதிக்க சாதியினரின் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.

ஆராய்ச்சியாளராக, அறிஞராகபேராசிரியராகவழக்குரைஞராக,எழுத்தாளராக, உலகின் தலை சிறந்த கிளர்ச்சியாளராகஅரசியல் சட்ட மேதையாகபுத்தரின் அறிவார்ந்த சீடராகதாழ்த்தப்பட்டமக்களின் ஒப்பற்ற தலைவராக, சரித்திர நாயகனாக பல்வேறு பரிமாணங்களுடன் இந்த நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் தோன்றி மறைந்த பின்னரும் இந்தியாவில் தலித்துகளின் நிலை மாறாமல் இருப்பது ஜனநாயாக சிந்தனையாளர்களுக்கு கவலை அளிக்கிறது!

சமணர்களின் ரத்தம் காய்ந்து விடவில்லை: மதுரையில் தொடரும் சாதிவெறித்தாக்குதல்


எத்தனை ஆண்டுகள் மறைந்து போனாலும்மதுரை மாவட்டத்தில் குன்றுகளாக காட்சி தரும் மலைகளைப் பார்க்கும் போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வு மீண்டும்,மீண்டும் முளைத்தெழும். சைவர்களின் கொட்டத்திற்கு எதிராக பள்ளிகளைத் திறந்து அனைத்து தரப்பினரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்ட சமணர்கள்,அரசதிகாரத்தின் துணையோடு கொன்றுகுவிக்கப்பட்டு கொடுமைகளின் வடுக்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னமும் கறையாக காட்சித் தருகிறது.
படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அ.முருகன்
எண்ணாயிரம் பேரைக் கொன்ற கோபம் தீராது இன்னமும் அழித்தொழிக்க வேண்டும் என்ற சாதித்திமிர் கட்டவிழ்த்து விடப்பட்ட முரட்டுக்காளையென மதுரை மாவட்டத்தில் பலரைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது.
மதுரை என்றவுடன் பலருக்கும் மல்லிகைப்பூ ஞாபகத்திற்கு வருவதைப்போலஉத்தப்புரம் சுவர் கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். சாதிய ரீதியாக மனிதர்களைப் பிரிக்க கட்டப்பட்ட தீண்டாமைச்சுவரின் ஒருபகுதி இடிக்கப்பட்டு,வழிதிறந்தபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் நடத்திய கொடி எரிப்பின் கனப்பின் நெருப்பு இன்னமும் தணலாகக் கிளம்புகிறது. சட்டம்நீதி ஆகியவை தங்கள் வீடுகளின் வாசல்களில் கட்டப்பட்ட பிராணிகள் என்பதை போல நினைத்து சாதிமேலாதிக்கம் புரிவோர் நடத்தும் அட்டகாசங்கள் குறைந்தபாடில்லை. அதற்கு நல்ல உதாரணம் வடிவேல்கரை கிராமம்.
மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் தான் இந்த வடிவேல்கரை கிராமம் உள்ளது. சமணர்கள் பள்ளிகளை வைத்து பலருக்கு கல்வி புகட்டிய நினைவிடங்கள் உள்ள கீழக்குயில்குடியும்வடிவேல்கரையும் ஒரே பஞ்சாயத்திற்கு உட்பட்டதாகும். இங்கு உள்ள 600 குடும்பங்களில் 300 பிள்ளைமார் சமுதாயக்குடும்பங்களும், 200 கள்ளர் சமுதாயக்குடும்பங்களும் வசித்து வருகின்றனர். 86 அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களும், 11 பள்ளர் மற்றும் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களும், 3 ஆசாரிமார்களும் வசித்து வருகின்றனர்.
சுமார் 1500 ஏக்கர் நிலத்தில் இங்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிலரிடமே நிலம் உள்ளது. மற்றவர்கள் இங்குள்ள நிலத்தில் உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இங்குள்ள அருந்ததிய மக்களில் 86 குடும்பங்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை நினைத்தால் இத்தனை ஐந்தாண்டு திட்டம் போட்டவர்களின் சட்டையைப் பிடிக்கத் தோன்றும். இங்குள்ள 70 அருந்ததிய சமுதாயக் குழந்தைகளில் தற்போது 55 குழந்தைகள் நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களை நோக்கி கல்விபயிலச் செல்கின்றன. 5 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்கள். அதில் 2 பெண்கள் அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. பத்தாவது முடித்த இருவர் தற்போது +1 படித்து வருகிறார்கள். ஒருவர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்.
அருந்ததிய மக்களின் அடிப்படை வேலையாக உள்ளது தப்படிப்பது தான். உழவு வேலைகத்திரிக்காய் பறிப்பது என தோட்டவேலைகள் செய்தாலும்சாதிய ரீதியாக இவர்கள் தப்படிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் தான் பள்ளியில் படிக்கும் 8குழந்தைகள் தற்போது பள்ளிக்கு சென்று கொண்டேஇழவு வீடுகளில் தப்படித்து குலத்தொழில் செய்துவரும் கொடுமையும் வடிவேல்கரையில் அரங்கேறி வருகிறது. இவர்களில் பட்டப்படிப்பு பெற்ற ஒரே நபர் முருகன் என்பவர் தான். அவர் பட்டப்படிப்பு படித்தார் என்பதற்காக அவர்கள் குடும்பத்தின் மீது நடத்தப்படும் வர்ணாசிரமவாதிகளின் தாக்குதல்கள் கொலைவெறி அளவுக்குப்போய் உள்ளது.
வடிவேல்கரை காந்திநகரைச் சேர்ந்த அம்மாவாசி என்ற அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்தவரின் மகன் முருகன் (25) என்பவர் கடந்த2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-14 ந் தேதி நாகமலைப்புதுக்கோட்டையில் இருந்து வடிவேல்கரைக்கு வந்து கொண்டிருந்தபோது ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த ஆனந்த்,லெட்சுமணன்சிலம்பரசன் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர். அத்துடன் உடைகல்லை எடுத்து முருகனின் தலையில் போட்டு கொல்ல முயன்றுள்ளனர். அவர்களின் ஒரே கோபம் தோட்டி மகனுக்கு என்ன படிப்பு?“
இந்தக்கொடூரத்தாக்குதலில் முருகனின் மண்டை உடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைக்காயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 15தையல்கள் போடப்பட்டுள்ளது. ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் தாக்குதலுக்குள்ளான முருகன் மற்றும் அவரது தந்தை அம்மாவாசி ஆகியோர் மீதே கொலைமுயற்சி உள்ளிட்ட 4வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறை தாங்கள் எந்த சாதியத்திற்கு வேலியாக உள்ளோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
முருகன் தாக்குதலுக்குள்ளான அன்று வடிவேல்கரை ஊராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தோட்டி வேலை செய்து கொண்டிருந்தார் அவருடைய தந்தை அம்மாவாசிஅவர் மீதும் கொலைமுயற்சி வழக்கு. ஆனால்தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. அத்துடன் சாலைமறியல் போராட்டம் வேறு செய்துள்ளார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மகஜரும் அளித்துள்ளனர்.
ஆதிக்கச்சாதியினரால் தாக்குதலுக்குள்ளான முருகன் எம்.காம்.,படித்து முடித்து விட்டு தற்போது பி.எட் படித்து வருகிறார். இந்த நிலையில் காந்திநகர் பகுதியில் உள்ள அருந்ததிய குழந்தைகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை இலவசமாக டியூசன் எடுத்து வருகிறார். தெருவிளக்கில் இவர் பாடம் நடத்துவதைப் பொறுக்காமல் தெருவிளக்கை இரவு 7மணிக்கு மேல் தான் எரியவிடுகிறார்கள்.
வடிவேல்கரையைச் சேர்ந்த அருந்ததிய குழந்தைகள் செருப்பு போட்டு நடக்கமுடியாது. அதனால் காந்திநகரில் இருந்து வடிவேல்கரை கண்மாய் வழியாக நாகமலைப்புதுக்கோட்டைக்கு நடந்தே பள்ளிக்குச் செல்கிறார்கள்வானம் இருட்டியவுடன்,இங்குள்ள பள்ளிக்குழந்தைகள்மழை வரக்கூடாது என வருணபகவானிடம் வரம் கேட்கிறார்கள். மழை நீர் பெருக்கடுத்தால் கண்மாய் வழியாகப் பள்ளி செல்லமுடியாது என்பதால் இவர்கள் வானைப் பார்த்து வணங்கி அழும் கொடுமை என்னவென்பது?
தோட்டி மகன் பட்டப்படிப்பு படிப்பதா என்ற ஆத்திரத்தில் முருகன் மீது தாக்குதல் நடத்திய வர்ணத்தின் புத்திரர்கள்இதற்கு முன்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு முருகனின் தம்பி அழகுப்பாண்டியையும் தாக்கினர். அவர் செய்த தவறு என்ன தெரியுமாசாலையை மறைத்து நின்று கொண்டிருந்த மூன்று பேரை, “ அண்ணே,விலகிக்கொள்ளுங்க“ எனச் சொன்னது தான்.
சக்கிலிச்சிக்காடா நாங்க பிறந்தோம் எனச்சொல்லி அவரை மூன்று பேர் கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக அந்த மூன்று பேர் மீதும் வன்கொடுமைப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்குப் பின் தான் அவர்களுக்கு பெயில் கிடைத்தது. அந்த வழக்கு இன்னமும் நடைபெற்று வருகிறது.
முருகன் தாக்கப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டு காவல்துறை மூலம் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் செல்வாக்கு படைத்தோரின் ஆதரவோடு சாதியச்சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் முருகனைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடத்தப்படும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களம் இறங்கியுள்ளது. உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட சக்திகளின் அருளாசியோடு தான் இந்த தாக்குதல் சம்பவங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.
சாதி ஆணவம் படைத்தோரின் பகடைக்காயாக இல்லாமல்,அழுத்தப்பட்ட மக்களில் நொறுக்கப்பட்டுள்ள மக்களாய் உள்ள அருந்ததிய மக்கள் மீது மதுரை வடிவேல்கரையில் வன்மத்தோடு நடத்தப்படும் தாக்குதல்காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியரும்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இதயச்சுத்தியோடு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதற்கான போராட்டத்தை ஜனநாயக இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.
- ப.கவிதா குமார் ( kavithamukil@rediffmail.com)

ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரன் - கு.ஜக்கையன்


இந்திய விடுதலைப் போராட்டம் அல்லது பிரித்தானிய எதிர்ப்புக்கான போராட்டக் களத்தில் முன்னிலை வகித்தது தமிழ்ச் சமூகம்தான். இந்த உண்மை நிலையை எடுத்துச் சொல்ல எனக்குக் கிடைத்த ஒரு பெருஞ் சான்று மாவீரன் ஒண்டிவீரனின் வரலாறு.
கி.பி. 1857இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் அல்லது அச்சமயத்தில் வட இந்தியாவில் எழுந்த கிளர்ச்சிகளையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போராட்டம் என வர்ணிக்கிறார். எனினும் பிரித்தானிய அரசு நிர்வாகம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்திலிருந்தே, அதாவது சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகவே பிரித்தானிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி விட்டது.
தென் தமிழகத்தில் பாளையக்காரர்களாக விளங்கி பிரித்தானிய எதிர்ப்பால் தம் உயிரை ஈந்த மாவீரர்களும் உண்டு. புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களின் பங்கு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே.
ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக மாபெரும் போராளிகளின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. அதை மீட்டெடுக்கின்ற மாபெரும் பணியில் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவான சனநாயகச் சக்திகளும் எடுத்துள்ள முயற்சியின் வெளிப்பாடே ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் போன்றோரின் வரலாற்றுப் பதிவுகள். அந்த வரிசையில் வரலாற்றில் தனித்து நிற்கின்ற ஒப்பில்லா விடுதலைப் போராளி ஒண்டிவீரனின் வரலாற்றை நாம்தான் அறியச் செய்ய வேண்;டும்.
இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கே அமைந்துள்ள 'நெற்கட்டும் செவ்வல் கிராமமும்' அதனைச் சுற்றி 20 கி;.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமங்களுமே 'நெற்கட்டும் செவ்வயல் பாளையமாகும்'. கி.பி.1750 காலகட்டத்தில் விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் தமிழகம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றுதான் நெற்கட்டும் செவ்வயல் பாளையம். அக்காலகட்டத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்புள்ளது.
விசயநகரப் பேரரசின் நிர்வாகக் கட்டமைப்பில் நெற்கட்டும் செவ்வயலிலிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முகலாய மன்னர்கள் பெற்றிருந்தனர். தங்களது ஆடம்பரமான செலவினங்களாலும், சூழ்ச் சியாலும் முகலாய மன்னர்கள், வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களின் கிழக் கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். வணிகம் செய்து பிழைக்க வந்த பிரித்தானியர்கள் மிகக் கடுமையான வரிகளை உருவாக்கிச் சுரண்டலின் உச்சகட்டத்தை அடைந்தனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்; மாவீரர் புலித்தேவன.; அவருக்குத் தலைமைப் படைத் தளபதியாய் ஒப்பில்லா வீரனாகக் களத்தில் நின்றவர்தான் ஒண்டிவீரன்.
வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியாரும் இணைந்து கி.பி.1755இல் முதல் போரைத் தொடுத்தனர். இப்போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் ஒண்டிவீரன். தொடர்ந்து கங்கை கொண்டார் போர், ஆழ்வார் குறிச்சிப் போர், வாசுதேவ நல்லூர்ப் போர் என மூன்று தாக்குதல்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போதும் மண்டியிடவில்லை மானமிகு ஒண்டிவீரனும், புலித்தேவனும்.
எனினும் தொடர்ந்து அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆங்கிலேயரின் நவீன பீரங்கிகள், துப்பாக்கிகளுக்கு முன்னால் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குத் தமிழர் படையின் வாளும் ஈட்டியும் தாக்குப்பிடித்ததே மாபெரும் வெற்றியாகும். மூன்று முறை தோற்று ஒடிய ஆங்கிலேயத் தளபதிகள் ஹெரான், ய+சுப்கான், மாப+ஸ்கான் போன்றோர் மிகப் பெரிய படைபலத்தோடு கி.பி.1767இல் நெற்கட்டும் செவ்வயலைத் தாக்கிய போது புலித்தேவன், சங்கரன்கோவிலில் உள்ள ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்தார். ஒண்டிவீரன் தன் மக்களோடும், புலித்தேவனின் வாரிசுகளோடும் பாளையத்தி லிருந்து வெளியேறி அடுத்த கட்டத் தாக்குதலுக்குத் தயாரானார். இந்நிலையில் ஆவுடை நாச்சியார் கோவிலில் தஞ்சம் புகுந்த புலித்தேவன் அங்கேயே சோதியில் அய்க் கியமானதாகச் சொல்லப்படுகிறது. வழக்கமாகத் துரோகத்தால் அல்லது சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்களைத்தான் சோதியானதாகக் குறிப்பிடுவார்கள். (உதாரணமாக நந்தனார் வரலாறு)
தலைவனை இழந்த பாளையத்து மக்களுக்குத் தலைவனாகப் பொறுப்பேற்று அடுத்த கட்டத் தாக்குதலுக்கு நேரம் பார்த்துக் காத்திருந்தார் ஒண்டிவீரன். அப்போது ஆங்கிலேயர் இப்படிச் சவால் விடுத்தனர்: “உங்களில் எவனாவது வீரனாயிருந்தால், எங்கள் முகாமிற்குள் ஊடுருவிப் பட்டத்துக் குதிரையையும் பட்டத்து வாளையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கின்ற வெங்கல நகராவை ஒலிக்க வைத்து விட்டால் நாங்கள் நெற்கட்டும் செவ்வயல் பாளையத்தை உங்களிடமே தந்து விடுகிறோம்.”
இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த ஒண்டிவீரன், தன்னந்தனியாக, ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியைப் போல் ஆங்கிலேயர் முகாமிற்குள் ஊடுருவினார்.
யாரென வினவிய ஆங்கிலேயருக்கு, குதிரைக்கு வார்த்தைக்கக் கூடியவன், போர்வீரர்களின் காலணிகளை (ப+ட்ஸ்களை) செப்பனிடக் கூடியவன் என்று பதில் கூறி ஒண்டிவீரன் உள்ளே புகுந்தார்;. சில நாட்கள் அந்த முகாமில் தங்கிப் பட்டத்துக் குதிரை மற்றும் வாள் போன்றவை வைக்கப்பட்டிருந்த இடத்தை முதலில் அறிந்தார். வெங்கல நகரா கட்டி விட்டிருப்பதையும், மணி ஒலித்தவுடன் எதிரிகளைத் தாக்கக் கூடிய பீரங்கிகள் தயார் நிலையில் இருப்பதையும் கண்டுணர்ந்த ஒண்டிவீரன் சவாலில் வெல்ல அமாவாசைக் கும்மிருட்டைத் தேர்வு செய்தார்.
முதலில் முகாமின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கிலேயர் பக்கமே திருப்பி அமைத்தார் ஒண்டிவீரன். தடுக்க முயன்ற காவலர்களைக் குத்திக் கொன்றார். பட்டத்து வாளை எடுத்துத் தனது இடுப்பில் செருகிக்கொண்டு, குதிரையைக் கிளப்ப முயன்;ற போது குதிரை ஒத்துழைக்க மறுத்துக் கனைத்து ஓடியது. குதிரை வீரர்;கள் என்னவென்று காண ஓடி வந்தனர். ஒண்டிவீரன் குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் படுத்துப் புற்களைத் தன்மேல் பரப்பி ஒளிந்து கொண்டார். இருட்டில் யாரெனக் கண்டறிய முடியாத சூழலில் குதிரையை மீண்டும் காடிக்குப் பக்கத்திலேயே ஒரு ஈட்டியை அறைந்து, அதில் குதிரையைக் கட்டி விட்டுச் சென்றனர் குதிரை வீரர்கள்.
ஈட்டி தரையில் அறையப்படும் போது ஒண்டிவீரனின் கையும் சேர்த்து அறையப்பட்டது. ஒண்டிவீரன் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு காடியிலேயே படுத்துக் கிடந்தார் என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன் கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. மீண்டும் குதிரை கணைத்து விட்டால் ஆபத்து என்பதை உணர்ந்து தான் இடுப்பில் செருகியிருந்த பட்டத்து வாளால் தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு மேலெழுகிறார்.
குதிரையைக் கிளப்பிக்கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புயலெனப் புறப்பட்டார் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வீரர்கள். பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடிப்பதைக் கண்டு அதிர்ந்தது ஆங்கிலேயர் படை. அழிந்தது வெள்ளையர் முகாம். ஆயிரக் கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.
விடுதலைப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களும் உண்டு. அதே நேரத்தில் பகைவர்களை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அழித்தொழித்த வீரர்களும் உண்டு. இதில் இரண்டாவது வகையின் முன்னோடியாக ஒப்பில்லாப் போராளியாக விளங்கியவர் ஒண்டிவீரன்.
கையை இழந்து விட்டாயே என்று கதறிய குடும்பத்தினரிடமும் பாளையத்து மக்களிடமும் - 'இந்தக் கை போனால் என்ன? எனக்குத் தங்கக் கை கொடுப்பீர்கள் நீங்கள்" என நம்பிக்கை ஊட்டியவர் ஒண்டிவீரன். தாய் மண்ணை மீட்டெடுக்கக் கை மட்டுமல்ல உயிரையும் கொடுப்பேன் என சூளுரைத்தார் ஒண்டிவீரன்.
புலித்தேவன் கி.பி. 1767இல் மறைந்த பிறகும் 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்ததாகச் சொல்லப் படுகிறது.
 அண்ணன்... எப்போது சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என்பது ஒரு தமிழ் வழக்காறு. புலித்தேவன் தேவர் சமூகத்தில் பிறந்தவர்! ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் வல்லாதிக்க எதிர்ப்புப் போரில் புலித் தேவன் மறைந்த பிறகும் எதிரிகளுக்கு விலை போகாமல் மீண்டும்............ போராட்டத்தைத்.............; தொடர்ந்த நேர்மையான தமிழன் ஒண்டிவீரன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை புலித்தேவனின் மக்களை, குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தவர் ஒண்டிவீரன். அதனால்தான் இன்றும் தேவர் சமூகம் ஒண்டிவீரனைக் காவல் தெய்வமாகவும், ஒண்டிவீரனின் சமூகம் புலித் தேவனை நன்றியுணர்வோடும் வழிபட்டு வருகிறார்கள்.
 தேவர் சமூகத்தில் பிறந்த முனைவர் இராசய்யாவும், இறைப்பணி செய்து வரும் அருட்தந்தை மார்கு அவர்களும் அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வரலாற்றாசிரியர் எழில் இளங்கோவனும் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்து ஒண்டிவீரனின் வீரஞ் செறிந்த வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தனர்.
தமிழர்களின் வீரம் -
தமிழர்களின் விவேகம்
தமிழர்களின் போர்த் தந்திரம்
ஒண்டிவீரனின் வரலாற்றின் மூலமாகவும் இனி முன்னெடுத்துச் செல்லப்படும்.

Friday, 12 August 2011

இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை



நன்றி cnn


திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.

பார்சிலோனா பல்கலைகழகம் மற்றும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கொவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க திராட்சையில் உள் ப்ளேவனாய்ட் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வின் இயக்குனரும் பார்சிலோனா பல்கலைகழக உயிரி வேதியியல் நிபுணருமான மார்டா காஸ்கன்டே கூறுகையில்,"சூரிய ஒளியின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என இந்த புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றில் திராட்சை கூட்டுப் பொருள்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் அவை தோல் செல்களை பாதுகாப்பதில் உரிய முறையில் செயல்படவில்லை. சூரிய கதிர்வீச்சால் தோலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்ப்பதற்கு தற்போதைய ஆய்வு உதவும் என அவர் தெரிவித்தார்.

ஆரோக்கியமான பற்பொடி தயாரிப்பது எப்படி?



நன்றி அமானுஷ்யம் 


எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.

தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

கணவனிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்..



எழுதியவர் சங்கவி 

ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும்.

பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன

பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துகொண்டதாக நினைக்கின்றனர்.

பெண்களின் கோப, எதிர்மறைவான எல்லா உணர்வுகளும் அவர்களின் 3 நாள் பிரச்சனையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. அதற்காக கண்ணீர் விட்டு அழவேண்டியதில்லை. தோழமையின் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்த வரை தனிமையில் தொட்டு பேசுவது, மெல்ல அடித்து விளையாடுவது போன்றவற்றை மிக்க விரும்புவர் அதனால் அடிக்கடி பேச வேண்டும்

தனது கணவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தமக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புவர். இது பொதுவானது தான் ஆனால் எதிர்பார்க்காவண்ணம் சமைத்து அசத்த வேண்டும் இதை மிக ரசிப்பார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள் ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

தனது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புவர், பெண்களை விட்டு செல்லும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமாக வழியில் வெளிப்படுத்த வேண்டும்.

ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதை அதிகம் விரும்புவர்.

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அதிகமாக கணவனிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.

விடுமுறை நாளில் கூட இருக்கும் போது வேலையை பகிர்ந்து கொண்டு வெளியில் சென்று வரலாம் என்று அவர்களை அழைப்பதை மிக விரும்புகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் குடும்பமும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...

பாம்புகள் கடித்தால் எளிதான மருந்து இது.அரசு கவனிக்குமா ?




நன்றி பசுமை இந்தியா

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டால் பாம்புக்கடியும் அதிகமாகி விடுவதுண்டு. வயலுக்கு செல்லும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவது வழக்கம். பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அவசர சிகிச்சைக்கு உட்படுத்ததாத நிலையில் மரணம் நிச்சயம். பொதுவாக ஆங்கில மருத்துவம் எங்கும் தீவிரமாக வியாபித்து பரவியிருக்கும் நிலையில் அது தான் சிறந்த மருந்துகளை தரும் என்பதும் பரவலான நம்பிக்கை.

ஆனால் ஓமியோபதியில் ஏராளமான நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்துகள் இருக்கின்றன. மருந்து தயாரிப்பு மாபியாக்கள் இந்தியாவை பொறுத்தமட்டில் இது போன்ற குறைந்த செலவில் குணப்படுத்தும் மருத்துவத்தை எழுச்சி பெறவிடாமலே வைத்திருக்கின்றனர் என்பது சமூவியலாளர்களின் கருத்து. கடுமையான இதய நோய் பாதிப்பு, கடுமையான சர்க்கரை நோயாளர்கள் கூட ஓமியோபதியின் சிறப்பான மருந்துகளால் நலமாக இருப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா
 இது போல் பாம்புக்கடியால் மரணத்தை தழுவ இருப்பவர்களை ஓமியோபதி மருந்துகள் எளிதாக குணப்படுத்தக்கூடும். அரசு மருத்துவமனைகள் எங்கோ நகரத்தில் இருக்கும் போது, கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு முதலுதவி கிடைப்பது கடினம். இந்த நேரத்தில் ஓமியோபதி சிறந்த உயிர்காப்பானாக இருக்க முடியும். தமிழகத்தில் பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனை கருத்தில் கொண்டு ஓமியோபதி மருத்துவத்தை கிராமங்களுக்கு பரப்பினால் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படும்.

சிவன் கழுத்தில் பாம்பு எப்போதும் ஒரு சின்னம். இந்த பாம்புகள் மனிதனுக்கு மிகமிக உதவிகரமான ஒரு ஊர்வன இனம். இந்த பாம்புகள் மனிதனை ஒரு போதும் விரோதியாக பார்ப்பதில்லை. பதிலாக, மனிதன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களை அழிக்கும் எலிகளை கொன்று வாழ்கின்றன. வாழ்ந்து மடிவதற்குள் ஆயிரக்கணக்கில் குட்டிகளை போட்டு மனிதனின் பயிர்களை அழிக்கும் இந்த எலிகளை குறி வைத்து தான் பாம்புகள் வாழ்கின்றன. ஆனால் நண்பனாக இருக்கும் இந்த பாம்புகளை மனிதன் விரோதியாக நினைப்பது தான் வேதனை.

எலியை தேடி
பாம்புகளுக்கு தான் ஊர்ந்து போவது மனிதன் வகுத்த வாய்க்கால் வரப்பு என்றோ, அவன் உழைத்து உணவை உருவாக்கும் வயல் என்பதோ தெரிவதில்லை. அவை எலியை தேடி வயலுக்கு வருகின்றன. அவ்வளவு தான். அப்படி வரும் இடத்தில் மனிதன் அவற்றை எதிர்கொள்ளும் போது மனிதனுக்கும், பாம்புக்குமான போராட்டத்தில் பாம்பு மனிதனால் அடித்துக் கொல்லப்படுகிறது. அதிலும் தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இப்படி பாம்பால் கடிபடுபவர்களும், பாம்புகள் மனிதரால் அடித்துக் கொல்லப்படுவதும் தாராளமாக நடக்க தொடங்கும். நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டது போல் அனைத்து பாம்புகளும் விஷமுள்ளவை அல்ல.

அதைவிட வயல் என்றால் பாம்பு வரத்தான் செய்யும். நாம் தான் அதை கவனித்து நடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்க வேண்டும். பாம்புகளை அழித்தால் நாளடைவில் வயல்களில் எங்கு நோக்கினும் எலிகள் ஆயிரக்கணக்கில் நிறைந்து விடும். பிறகு விளைந்த நெல்மணிகளை எல்லாம் எலியின் வளைக்குள் தான் அறுவடை செய்ய வேண்டியதிருக்கும். எனவே, பாம்புகளை மட்டும் அடித்துக் கொல்லாதீர்கள். சிறிது கவனமெடுத்து அவற்றை விட்டு விலகி நில்லுங்கள். பாம்புகள் பொதுவாக தானே விலகிச் சென்றுவிடும் இயல்பு கொண்டவை.

நிச்சயம் மருந்து இருக்கிறது
 அதையும் மீறி பாம்புகள் கடித்தால் நிச்சயம் மருந்து இருக்கிறது. தற்போது நாம் எதற்கெடுத்தாலும் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்று தான் முடிவுக்கு வருவதுண்டு. ஆனால் பல்வேறு நோய்களை ஆங்கில மருத்துவம் முழுமையாக குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை. பாம்பு கடிக்கு உடனடி நடவடிக்கையாக கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் அதன் விஷத்தை முறிக்கும் எதிர் மருந்துகளை டாக்டர்கள் செலுத்தி கடிபட்டவரை முடிந்த வரை பிழைக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் இந்த மருந்துகளை விட ஓமியோபதி மருத்துவத்தில் மிக எளிதாக பாம்பு விஷத்தையும், பாம்பு தீண்டியதால் ஏற்படும் துயரத்தையும் விரைவாக குறைக்க முடியும் என்று தெரிகிறது.

நஞ்சுள்ள நாகம் தீண்டினால் மற்ற முறைகளை காட்டிலும் ஓமியோபதியில் சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க முடியும். முதலில் கடிவாய்க்கு இரண்டு அங்குலம் மேலே ஒரு கயிற்றால் இறுக்கமாக கட்ட வேண்டும். இந்த கட்டுக்கு மேல் மேலும் இரண்டு மூன்று கட்டுக்களை கட்டலாம். பிறகு கடிவாயில் கடிபட்டவரோ அல்லது உதவியாளரோ வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டும். அப்படி உறிஞ்சி எடுப்பவரின் வாயில், நாக்கில், உதட்டில் புண்கள் இருக்கக்கூடாது. இப்படி உறிஞ்சி எடுத்த பிறகு கடிவாயைக் கத்தியால் ஆழமாய் கீறி எடுத்து அந்த இடத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட்டினால் அரை மணி நேரத்திற்கு மேல் நன்றாக கழுவ வேண்டும். இதன் பிறகு அந்த கட்டுக்களை அவிழ்க்கலாம். ஆனால் கடிபட்டவரை தூங்க அனுமதிக்கக்கூடாது.
பிராந்தி, விஸ்கி
 மேலே கூறியபடி இறுக்கமான கட்டுக்களை கட்டி விஷத்தை உறிஞ்சிய பிறகு முடிந்தால் கடிபட்ட இடத்திற்கு மேல் சிறிது தூரத்தில் அனலைக்காட்ட வேண்டும். இதனுடன் கடிவாயில் எண்ணெய் அல்லது எச்சிலை தடவிக் கொண்டேயிருக்கவும். கடிபட்டவருக்கு விஷத்தின் விளைவுகள் குறையும் வரை அனலைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கலாம்.

இதைச் செய்யும் போதே, அடிக்கடி உப்புதண்ணீரை குடிக்க குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சமயத்தில் அபாயகரமான அறிகுறிகள் தோன்றினால் மூன்று டீஸ்பூன் ஆல்கஹாலை ( பிராந்தி, விஸ்கி) போன்றவற்றை மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை முன்னேற்றம் ஏற்படும் வரை கொடுத்துக் கொண்டேயிருக்கலாம். விஷத்தின் குறிகள் எப்போது ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பிராந்தியை தரலாம். இப்படி செய்து கொண்டே ஓமியோபதி மருந்துகளை பிரயோகிக்கலாம்.

அதாவது, கடிபட்டவர் விரைவாக சோர்வடைதல், குத்துவது போன்ற வலி அதிகமாகவும், இந்த வலி இதயத்தை நோக்கி செல்வது போலவும், வாந்தி, மயக்கம், தலை சுற்றல், கடிபட்ட இடத்தில் நீல நிறம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் 30 ஐ அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கடிபட்டவருக்கு தரவும். இது தவிர விஷம் பாய்ந்தவர், தூக்க கலக்கத்துடனும், ஆனால் தூங்க முடியாமலும், முகம் சிவந்தும், சூடாகவும், வீங்கியும் இருத்தல், தொண்டையில் வறட்சி, கண்மணிகள் அசையாமலும் விரிந்தும் இருத்தல், மூடப்பட்ட பகுதிகளில் வியர்த்தல் ஆகிய குறிகள் இருந்தால் பெல்லடோனா 30 என்ற மருந்தை தரவேண்டும்.

விஷங்களை முறிக்கும் மருந்து
மேலே கூறிய படி கடிவாய்க்கு மேல் கட்டுக்களை கட்டி விஷத்தினை உறிஞ்சிய பிறகும், ஒரு வேளை கடித்த நாகம் மிகுந்த விஷத்தன்மை உடையதாக இருந்தால் கடிபட்டவருக்கு வீரியப்படுத்தப்பட்ட நாக விஷங்களை முறிக்கும் மருந்துகளான லாக்கலிஸ், தூஜா, குரோடலஸ், எலாப்ஸ் போன்ற மருந்துகளின் 30 வது வீரியத்தை தரலாம். இவ்வாறு கொடுப்பதால் பாம்பு கடிபட்டு பல மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

நாக விஷ மருந்துகளை கொடுப்பதற்கு முன்னால் ஆர்னிகா 3 எக்ஸ், 30, 200 வீரியங்களில் ஏதாவது ஒன்றை தரலாம்.
எச்சினேசியாவின் தாய்த்திரவம் 10 சொட்டுக்களை திரும்ப திரும்ப அளித்தால் பாம்பு விஷத்தின் முறிவு மருந்தாக செயல்படும். விஷப்பூச்சிகளில் கடிகளுக்கும் இந்த மருந்தை தரலாம். பாம்பு விஷத்தினால் ஏற்படும் துயரக்குறிகளை போக்குவதில் செனேகா மிகச்சிறப்பாக செயல்படுகிறது. வெறிபிடித்த நிலையில் உள்ள விலங்குகளின் கடிகளுக்கும் இது முறிவு மருந்தாக பயன்படுகிறது. அரசு கவனிக்குமா ?
source:
The Homeopathic Prescriber, Dr.K.c.Bhanja.
Tamilil: The Homeo Nanban.

நேர்மையில்லாத தங்க வியாபாரிகள், ஏமாறும் கோமாளி மக்கள்.......சிந்திக்குமா?


உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவு மோசடியும், கொள்ளையும், மொள்ளமாரிதனமும் நிறைந்தது இந்த தங்க வியாபாரம் என்றால் அது மிகையாகாது.





தங்கத்திற்கு இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையான விலை உண்டு, ஒன்று மூலபொருளுகான விலை, மற்றொன்று நாம் விரும்பும் வகையில் செய்வதற்கான கூலி. இந்த இரண்டு மட்டுமே இருந்தால் அது நியாயமானதுதான். ஐந்து பவுன் நகை வாங்கினால் அந்த தங்கத்திற்கும், அந்த நகை செய்ய தேவையான கூலியும் வாங்கினால் இதில் ஏதும் மோசடி இல்லை. ஆனால் இன்று என்ன நடக்கின்றது.........!!!!!!!!!!

ஐந்து பவுன் தங்கத்திற்கும், செய்வதற்கான கூலியையும் மேலும் அந்த நகை செய்யும் பொது ஏற்பட்ட சேதாரம் என்று கூறி அதையும் நம்மிடமே வாங்கிகொள்வார்கள்...........இதில் தான் மோசடி உள்ளது......எப்படி என்று பாப்போம்.

அதாவது மேற்கண்ட நகை செய்யும் பொது பத்து சதவிகிதம் சேதாரம் என்று கூறி அதற்க்கான தொகையையும் நம்மிடம் வசூலித்து விடுகின்றனர். அதாது ஐந்து பவூனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவூனுக்கும் சேர்த்து சேதாரம் என்ற பெயரில் பணம் வாங்கி கொள்கின்றார்கள். நகை செய்யும் போது சேதாரம் ஆகிவிட்டால் அதை நம்மிடம் வாங்கி கொள்வது முறையானதுதான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும்போதும், பட்டை தீட்டும் போதும் கீழே சிதறிவிழுகின்ற துகள்கள்   குப்பைக்கு ஒன்றும் போவது கிடையாது, அது எல்லாம் அடுத்த நகை செய்யும் போது பயன்படுத்தி கொள்ளுவார்கள். இதற்கெல்லாம் சேர்த்துதான் செய்கூலி என்று வாங்குவார்கள், மக்களுக்கு தெரியாத டெக்னிகல் வார்த்தைகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இப்படி செய்யாத வியாபாரிகளே  காணமுடியாது.

இரண்டாவது மோசடி என்னவென்றால், கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்:-
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்துகிராம் கண்ணாடி கற்களை பதித்த நகைக்கு விலை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்திற்கு தங்கத்தின் விலையும், பத்து கிராம் கண்ணாடி கல்லுக்கு கல்லின் விலையும் வைத்து விற்கவேண்டும், ஆனால் நாற்பது கிராம் தங்கத்திற்கு ஐம்பது கிராம் தங்கத்தின் விலையை நம்மிடம் வாங்கி விடுகிறார்கள். தங்கத்தின் விலையும், கல்லின் விலையும் சமமாவை அல்ல, இரண்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது........இன்னும் சிலபேர் நாற்பது கிராமிற்கு ஐம்பது கிராமின் பணத்தை வாங்கி கொண்டு கல்லிற்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கின்றனர்......அதே சமயம் நாம் பழைய நகையை விற்க சென்றால் கல்லை அகற்றி விட்டு நகைக்கு மட்டும் விலை போடுகிறார்கள், இதை விட ஒரு பெரிய மோசடி உலகத்தில் வேற உண்டா?

சொக்கத்தங்கம் என்ற தனிதங்கத்தில் நகை செய்யமுடியாது அதனுடன் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும்.
அதாவது 1000 கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகைதான் இன்று 22K என்றும், 916 KDM என்றும் அழைக்கபடுகின்றது.

அது போல பழைய நகையை விற்க சென்றால் செய்கூலி சேதாரம் எல்லாம் தரமாட்டார்கள் அது நியாயம்தான், ஆனால் அவர்கள் விற்கும் விலையை குடுக்க வேண்டும் என்று கூறவில்லை? வாங்கும் விலையாவது அப்படியே தரவேண்டும் அல்லவா? அவ்வாறு இல்லாமல், அதிலும் கால் வாசி குறைத்துதான் தருவார்கள்,.

இந்த மாதிரி தங்க வியாபாரத்தில் எந்தவித ஒரு நேர்மையும் இல்லை என்பதே உண்மை.

இதை ஏன் மக்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்று வரை கேட்க முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..............இனியாவது கேள்வி கேட்போமா ??????????

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல்!


நன்றி: வெப்துனியா.

வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இரு‌க்‌கி‌ன்றன. ம‌ற்ற பழ‌ங்களை ‌விட பல ந‌ல்ல குண‌ங்களையு‌ம் வாழை‌ப் பழ‌ம் பெ‌ற்று‌ள்ளது.

அதும‌‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பல நோய்களை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது.

அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தையும் இணைத்து கொடுத்தனர்.

மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது வாழை‌ப்பழ‌ம். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும்.

புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவர்கள், வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.

பாரதியின் தலித் விரோதம்


‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 7
இரண்டாவது அத்தியாயம்
dalit_women.jpg

‘ஈனப் பார்ப்பனர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ’
-என்று எழுதியிருந்தால்,
“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்த்தமிருக்கும்.

‘ஈனப் பறையர்’ என்கிற இந்த மோசமான விளித்தலை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடுகிற இந்த ஜாதியக் குறியீட்டை, சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு `வீர உணர்ச்சி` ஊட்டுகிற பாடலிலும் பார்க்கலாம்.
‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி’
‘மிலேச்சர்’ என்பது இந்தப் பாடலில் நேரடியாக அவுரங்கசீப் தலைமையிலான முகலாயர்களைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னும் அதை பாரதியின் காலத்தில் பொருத்தி வெள்ளையர்களைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மிலேச்சர்க்ள் – வேதநூலைப் பழிப்பதால் வெகுண்டெழுகிறார் பாரதி. வேதநூலைப் பழித்தால் வெகுண்டெழுவது பாரதியின் பிறப்புரிமை! சரி.
‘ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்’
இப்படி குறிவைத்து ஆலயத்தையும்-பசுக்களையும் அழித்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவில் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கும், அசைவ ‘ஹை-டெக்’ பார்ப்பானுக்குக் கூட கோபம் வரும். பாரதிக்கு வராதா பின்னே, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறார்,
‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்’
பசு மாமிசம் உண்ணும் பழக்கமுடைய முகலாயர்களை, வெள்ளையர்களை இழிந்துக் கூறவந்த பாரதி, அதே உணவு முறைப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறியீடாகப் பயன்படுத்தி ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்களாக அல்லாத – ஜாதி இந்துக்கள், ஜாதி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் இப்படி யாரயினும் தங்களுக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசும்போது ‘பறைச்சி மாதிரி’ ‘பறையன் மாதிரி’ ‘போடா பறையா’ என்று திட்டிக் கொள்வது போல் – அதே பதத்தில், ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும் – அவர்
 எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘பேரசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?
பின் குறிப்பு; ‘புலையன்’ தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற இன்னொரு சொல். பெரிய புராணத்தில் ‘நந்தனை’ அவருடைய ஆண்டையான பார்ப்பனர், ‘மாடும் தின்னும் புலையா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளாவில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த சொல்லால்தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
-தொடரும்

பாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை ‘ஈனப் பறையர்’


 ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 6
இரண்டாவது அத்தியாயம்
fuga.jpg
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,
-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-
‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’
“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும்  அறிஞர்களின் கவனத்திற்கு,
‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ?”
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
எம்முடன் என்பது யாருடன்?
ஆரியர்களா?
அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?
அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் – இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான – பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,
‘ஈனப் பார்ப்பனர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’
-என்று எழுதியிருந்தால்,
“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்த்தமிருக்கும்.
-தொடரும்

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி



வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
-சுந்தரவடிவேலன். திருப்பூர்
வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.
இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.
ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.
பார்ப்பன ஜாதி உயர்வுக்கும். அதை பாதுக்காக்கிற சனாதன தர்மத்திற்கும் எதிரானவர்களாக ஆங்கிலேயர்களை தவறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கொலையும் தற்கொலையும் அது.
வெள்ளைக்காரர்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையை கடைபிடிக்காமல் ராணுவம், சமையல் (மாட்டுக்கறியும் சமைப்பது) போன்ற தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்தான், வாஞ்சிநாதன் போன்ற சனதனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கும், கோபத்திற்கும் காரணம்.
இதை நிரூபிப்பதுபோல், ஆஷை 17-6-1911  அன்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம், வாஞ்சியின் சனாதனத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
அதில்,
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். 
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. 
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”
‘கோ (பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு’ என்ற இந்த வரி, வாஞ்சிநாதனை சுதந்திர போராட்ட வீரனாக அல்ல, ஜாதி வெறியனாகத்தான் காட்டுகிறது.
வெள்ளைக்காரனை திட்டுவதற்குக்கூட, தாழ்த்தப்பட்டவரை (பஞ்சமன்) இழிவான குறியிடாக பயன்படுத்துகிற, புத்திக்குப் பேர்தான், விடுதலை உணர்வா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியர்கள் இல்லையா?
காந்தியை கோட்சே என்ன காரணத்திற்காக கொன்றானோ, அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் ஆஷை வாஞ்சிநாதன் கொன்றான்.