Wednesday, 14 December 2011

முல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….





டேம் 999 என்ற ஆங்கில திரைபடத்தை தமிழகத்தில் தடை செய்த உடனேயே நீரு பூத்த நெருப்பாக இருந்த வந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனை...
இன்று தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கின்றது..

இரண்டு பக்க எல்லையோரை மாநிலமக்களும் பதட்டத்தில் இருக்கின்றார்கள்...தமிழ்நாட்டை பொறுத்தவரை அணையால் பயண் பெரும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.. மற்ற மாவட்ட மக்களை பொறுத்தவரை அது ஒரு செய்தியாகவே பார்க்கபடுகின்றது...

இன்னும் பலருக்கு அணையின் உண்மைதன்மையும் அதன் அரசியலும் தெரிந்த இருக்க நியாயம் இல்லை....

அணையின் பலத்தை பற்றி கேரளா மீடியாக்கள் அவதூறு செய்திகளை தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வருகின்றது...யூடியூப் வீடியோக்களில் அணை  உடைவது போலான கிராப்பிக்ஸ் காட்சிகளை எல்லாம் கிரியேட் செய்து தங்களின் பொய்யான வாதத்துக்கு பலம் சேர்ந்துக்கொண்டு இருக்கின்றன...

 உச்சநீதிமன்றம்  ஆய்ந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று சொல்லியும் கூட கேரள அரசாங்கம் அதுக்கு செவிசாய்கவில்லை...இப்போது அவர்கள் அணையையே இடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள்... புதிய அணை கட்டி அவர்கள் கட்டுப்பாட்டில் நீர் இருக்கும் பட்சத்தில், நாம் வௌக்கெண்ணையும் கையுமாகத்தான் அலைய நேரிட வேண்டும்... 

என்பதை நான் கீழே இணைத்து இருக்கும் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்...

இடுக்கி அணையில் மின் உற்பத்திக்கு பெரும் இடைஞ்சலாக இந்த அணை இருப்பதாலேயே  பெரியார் அணை பற்றிய பொய் பரப்புரைகளை தொடர்ந்து கேரளாவும் அதன் அரசியல் கட்சிகளும் போங்கு அரசியல் செய்து வருகின்றன..அங்கு இருக்கும் மக்களையும் மூளை சலவை செய்து வருகின்றார்கள்..

இன்னும் நம் தமிழகத்தில் இருக்கும் பலருக்கு 100ஆண்டுக்கு மேல் இருக்கும் அணை எப்பபடி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்ற கேள்விகளை  வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இருந்தே பல கேள்விகள் முன் வைக்க படுகின்றன..

அவர்களுக்கு கீழே இருக்கும் இந்த வீடியோக்கள் பதில் சொல்லும்....மிக தெளிவான வாதத்தை முன் வைக்கும் இந்த வீடியோவை தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது...நீங்களும் நண்பர்களுக்கு பார்க்க  சொல்லி அறிவுறுத்துங்கள்.. இந்த வீடியோவை முடிந்தால் ரீஷேர் செய்யுங்கள்..





ஆங்கில  சப் டைட்டிலுடன்  முதல்பாகம்.....




ஆங்கில சப் ட்டிலுடன் இரண்டாம் பாகம்..




 இந்த வீடியோவை சரியான தரவுகளுடன் வரிசைபடுத்திய தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினருக்கும் என் நன்றிகள்..






இன்னும் பெரியாறு அணை   பற்றி விரிவாய் சில பதிவுகள்.. விரைவில்...

நன்றி ஜாக்கிசேகர்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

மறக்கப்பட்ட மாமனிதர் கர்னல் ஜான் பென்னிகுக்.....




இந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...
ஆனால் தன் சொத்துக்களை  விற்று ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் பென்னிகுக் பெயர்.. இந்தியாவில் யாருக்கும் தெரியாது...முக்கியமாக தமிழகத்தில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...

இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் 1700 களில் வேலூரில் தோன்றிய முதல் புரட்சி வரலாற்று பக்கங்களில் மறைக்கபட்டது.. காரணம் அது தமிழ்நாட்டில் நடந்தது என்ற ஒரே காரணம்தான்..அதுவே பஞ்சாப்பில் நடந்து இருந்தால் அது இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடித்து இருக்கும்..இன்று போல அன்று தொலைத்தொடர்பு இல்லை என்பதால், அந்த 17ம்நூற்றாண்டில் ஆங்கில அரசுக்கு எதிரான வேலூரில் நடந்த புரட்சி, நீருபூத்த நெருப்பாக இருந்து 1858ல் சிப்பாய்கலகமாக மாறியது என்பதே வரலாறு....

பென்னிகுக் யார் என்று  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கேட்டு பாருங்கள்... யாருக்கும் தெரியாது...எனக்கே அவரை பற்றிய எந்த செய்தியும் தெரியாது....எஸ்ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்துக்கொண்டு இருந்த போது, இந்த பென்னிகுக் பெயரை பார்த்ததும் ,அவரை பற்றி முழு விபரமும் அறிந்ததும் அன்றுதான்...இதுதான் தமிழகத்தின் தலை எழுத்து...தமிழகத்தின் சாபம் என்று சுட சொல்லலாம்....

துணையெழுத்து புத்தகத்தில் நீரில் மிதக்கும் நினைவுகள் என்ற கட்டுரையை எப்போது வாசித்தாலும் என் கண்கள் ஈரமாகிவிடுகின்றது.. ஒரு நெகிழ்ச்சியான ,வீரமான,அதிகமான ஆட்டிடுயூட்  உள்ள மனிதர்களாகத்தான் லோகன்துரையையும் பென்னிகுக்கையும் நான் பார்க்கின்றேன்..

முல்லை பெரியாறு அணைக்காரனமாக பாசனவசதி பெரும் ஐந்து மாவட்டங்களான
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட்மக்கள் இன்றும் பென்னிகுக்கை கொண்டாடி வருகின்றார்கள்..வீட்டில் அப்பா அம்மா இறந்து போனால் அந்த படத்தை எப்படி வைத்து பூஜிப்போமே அது போல அப்பகுதிமக்கள் பென்னிகுக்கிற்கு மரியாதை செய்கின்றார்கள்..அவர் பயெரில் உணவு விடுதிகள் இருக்கின்றன..கடவுள் சிலைபோல அவரையும் வழிபடுகின்றார்கள்..இது இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த வெள்ளைக்காரனுக்கும் கிடைக்காத பேரு....

அவர் மேல்  உள்ள அளப்பறியா அன்பு காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அவரின் பெயரையும் லோகன்துரை பெயரையும் வைத்து நன்றி விசுவாசத்தை இன்னமும் செலுத்திவருகின்றார்கள்..

ஆனால் மதுரைக்கு இந்த பக்கம் வடதமிழ்நாட்டில் அவரை பற்றி யாருக்காவது தெரியுமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில்  எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லை பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்.. அதன் அகலம் நீளம் என்ன?? எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள்..இப்போது அந்த அணையை எப்படி பலப்படுத்தினார்கள்//அது என்ன மாதிரி கண்ஸ்ட்க்ஷ்ன் என்பதை எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கேட்டு பாருங்கள்.. எவனுக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சன உண்மை.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் விளையும், அரிசியும், காய்கனிகளும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமா? உண்டு பசி தீர்க்கின்றார்கள்.. ?? சென்னை கோயம்பேடு மார்க்கெட் மண்டி வரை அந்த ஐந்து மாவட்டத்தில் விளைந்த விளைபொருட்களைதான் நாமும் உண்ணுகின்றோம்...இவ்வளவு ஏன் அணையை உடைப்போம் என்று சொல்லும் கேரள சேட்டன்களுக்கும் நாம் விளைவிக்கும் உணவு பொருட்களை பெறுகின்றாகள்..

பென்னிகுக் நினைத்து இருந்தால்  நாள் முழுவதும் குடித்து விட்டு  சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான தமிழ் பெண்களை அனுபவித்து இருக்கலாம். கோடை விடுமுறையில் ஊட்டியில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 18ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த பஞ்சமும் அதன் பால் பாதிக்கபட்ட மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்..

1800 களில் இருந்தே பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி அதனை தமிழக பக்கம் திருப்பி விட பலர் முற்சித்து  தோல்வியில் போய் முடிந்தாலும்,அன்றைய தமிழ்நாட்டின் பஞ்சத்தை போக்க இது மட்டுமே சிறந்த வழி  நிரந்தர வழி என்று முடிவு எடுத்த பென்னிகுக், ஆங்கிலேய அரசிடம் அனுமதி வாங்குகின்றார்...

18ம் நூற்றாண்டின் இறுதியில் முல்லை ஆறு, பெரியாறு இரண்டும் சேரும் மலைக்காட்டுப்பகுதியில் ஒரு அணைகட்டுவது என்பது  சாதாரணகாரியமா??? சற்றே உங்கள் கற்பனை எண்ணிப்பாருங்கள்..இங்கிலாந்தில் இருந்து அப்போதைய நவீன இயந்திரங்களை இறக்கி அதனை மலைமேல் ஏற்றி 18 டன் சுண்ணாம்பு மற்றும் கற்களோடு இந்த அணை கட்டி முடிக்கபட்டாலும் பென்னிகுக் சந்தித்த பிரச்சனைகள் சொல்லி மாளாது...

அணைகட்டிக்கொண்டு இருக்கும் போதே காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துக்கொண்டு சென்று விட.. மேற்க்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கைவிரிக்க, பென்னி இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையும் மனைவி  சொத்துக்களை எல்லாம் விற்று, ஒரு லட்சம்ரூபாய் பணம் கொண்டு வந்து ,காட்டு மிருகங்களின் தாக்குதல்,காலரா,வயற்றுப்போக்கு, விஷக்காய்சல், என அணைகட்டும் போது நடந்த விபத்துகள் என்று ,உயிர் விட்டவர்கள் ...ஒருவர் அல்ல இரண்டு பேர் அல்ல தமிழக மகாஜனங்களே 422  பேர் உயிரை கொடுத்து கட்டிய அணை அது...பலரது உடல்கள் மலையில் இருந்து கீழே எடுத்து வரமுடியாத காரணத்தால் மலையிலேயே புதைத்து விட்டார்கள்...அந்த சமாதிகள் இன்றும் வழக்கம் போல கவனிப்பாரற்று கிடைக்கின்றன...


தென் மாவட்டத்தின் பஞ்சம் போக்கிய வள்ளல் அவன்... அதனால்தான் அவன் மொழி இனம் கடந்து இன்றும் சிலைகளாகவும் பெயர்களாகவும், பேருந்தின் பின்புறம் பெரிய பெரிய உருவங்களாகவும் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்..

ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன?,

அன்றைய மதிப்பீட்டில் ஒரு லட்சரூபாய் இன்று அதே சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடி....அதை தமிழக மக்களுக்கு தாரைவார்த்த வள்ளல் அவன்..

வரலாற்று பக்கங்களில் டல்ஹௌசி பிரபு,டயர்,மவுன்பேட்டன், வாரன்ஹோஸ்ட்டிங் என்று பல பிரபுக்களை படித்து இருக்கின்றோம்..ஆனால் உண்மையான பிரபு பென்னிகுக் பற்றி இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த யாரும் வரலாற்றில் பதிக்கவேயில்லை...வளரும் தலைமுறை யாருக்கும் வடமாவட்டத்தில் இருக்கும் எந்த பிள்ளைகளுக்கும் அவரை பற்றி தெரியாது அவர் தியாகம் தெரியாது.. மதுரையிலும் தேனியிலும் சிலை வைத்து விட்டால் போதும் என்ற நினைத்து விட்டர்கள் போலும்..

இவ்வளவு ஏன் எ பிலிம் பை பாராதிராஜா என்று பேசும் பாராதிராஜா கூட அவரின் எந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக  கூட பென்னிகுக் பெயரை பதிவு செய்யவில்லை...அவர் நினைத்து இருந்தால் பென்னிகுக் பாத்திரத்தை இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்...நாடோடி தென்றல் படத்தில் பென்னிகுக் பற்றி சொல்லி இருக்கலாம்.. சொல்லாதது தப்பு இல்லை..ஆனால் பென்னிகுக் தியாகத்தினால் பலன் பெற்ற மாவட்டத்துக்காரர்.. அதனால் அந்த எதிர்பார்ப்பு......

வெகுநாட்களுக்கு பின்  நேற்று ஒரு சினிமா விளம்பரத்தில் வள்ளல் பென்னிகுக் ஆசியுடன் ஒண்டிப்புலி என்று ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா அறிவிப்பு என் கவனத்தை கவர்ந்தது..டெக்னிஷீயன்கள் பெயரை பார்த்தால் அதில் நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா மேனாக பணிபுரிகின்றார்.. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்...முதல் முறையாக தமிழ்சினிமா ஊடகத்தில் பென்னிகுக் பெயர் இடம் பெற்று இருக்கின்றது..அதுவே பெரிய சந்தோஷம்..பென்னிகுக்கால் பலன் பெற்ற தேனி மாவட்டத்துக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்யாத விஷயத்தை செய்த திரைப்படகுழுவுக்கு எனது  நன்றிகள்...


பென்னிகுக் பற்றி நிறைய தேடி தேடி படிக்கின்றேன்..அவரை பற்றி இன்னும் சிலாகித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் அணைக்கட்ட தேர்ந்து எடுத்த இடத்த்தை இன்றளவும் பொறியாளர்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.... என்னால் அவரை பற்றி சினிமா எடுக்க முடியாவிட்டாலும், பென்னிகுக் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கி அது தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த தியாக செம்மலின் வரலாற்றை வளரும் இளைய சமுதாயத்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது..உடல் உழைப்பை தர நான்தயார்..பொருளுதவி கிடைத்தால் வெகுவிரைவில் இந்த ஆவணபட வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றேன்...


பென்னிகுக் யார் என்று கேட்டால் அவரை பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும்...அவரின் உழைப்பையும் தியாகத்தையும் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போற்றவேண்டும்..அவரால் நேரடியாக பயண்பெரும் மாவட்டத்தினரும் மறைமுகமாக பயண்பெரும் மாவட்ட மக்களும் அவர் தியாகத்தை போற்ற வேண்டும்...

உபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை  விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மக்க்ள் மட்டுமே பென்னிகுக்கை கொணடாடி வருகின்றனர்..ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்..அதுவே என் ஆசை..

இனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....


நான் நிறைய முறை சொன்னதுதான்... நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு... ஜெனரல் டயர் போல பென்னிகுக் இந்திய வரலாற்றில் இடம் பிடித்து இருக்கலாம்..ஆனால் பென்னி நல்லது செய்து விட்டார்... என்ன செய்வது...????இதுதான் உலகம்..

கேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............

கண் எதிரில் அணையை உடைத்தே தீருவோம் என்று சூளுரைக்கும் சேட்டன்களை புத்தியை நினைத்து பார்த்து இருந்தால் இவ்வளவு உழைப்பையும் 422 பேர் உயிரையும் கொடுத்து, பென்னிகுக் அணையை அந்த இடத்தில் கட்டி இருக்கமாட்டார்....


உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது காக்கா,நரி கதைகளோடு பென்னிகுக் போன்ற தியாக கதைகளையும் சேர்த்து சொல்லுங்கள்..

பயண் துக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது...

(பயணை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப்பெரியதாகும்...)

தேனி, கம்பம், மக்கள்  கர்னல் பென்னிகுக் படத்தை வைத்து இருக்கின்றார்கள் அந்த படத்தின் கீழே இருக்கும் வாசகம் என்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.... அந்த வாசகம் கீழே...

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

Saturday, 3 December 2011

இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே !




நாம் வாழும் இந்தப் பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில் வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்) ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக் கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக் கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ??? பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் ! 

நன்றி மானிடன்

பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை



தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதைவிட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.

நன்றி bbc

முல்லைப் பெரியாறு பிரச்னை: கேரள கட்சிகள் கையிலெடுக்கும் பின்னணி என்ன?




கேரளாவில் ஆளும் காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் "திரவம்' தொகுதி இடைத்தேர்தலுக்காக, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை, கேரள கட்சிகள் கையில் எடுத்துள்ளன என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. மேலும், அணை தொடர்பான வலுவை ஆராய குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்குள், முல்லைப் பெரியாறு அணையால், கேரள மாநிலத்தின் நான்கு மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. எனவே, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள கட்சிகள், பார்லிமென்டில் பிரச்னையைக் கிளப்பி வருகின்றன.

இதற்கெல்லாம், விரைவில் நடக்க உள்ள "திரவம்' தொகுதி இடைத் தேர்தல் தான் காரணம் என்று கூறுகின்றனர். திரவம் தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்த ஜேக்கப், கடந்த அக்டோபர் மாதம் இறந்துவிட்டார். இவர், கேரள காங்கிரஸ் (ஜே) கட்சியின் தலைவராக இருந்தவர். இவர் இறந்ததால் ஏற்பட்ட காலியிடத்துக்கு நடக்கும் இடைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே, சட்டசபையில் மெஜாரிட்டிக்குத் தேவையான, 71 எம்.எல்.ஏ.,களை பெறமுடியும்.

திரவம் தொகுதி, முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது.
இதனால், தேர்தல் பிரசாரத்தில், பிரதான இடத்தை முல்லைப் பெரியாறு பிரச்னையை, கேரள கட்சிகள் முன்நிறுத்துகின்றன என, குற்றம் சாட்டுகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில், ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை வழக்கில் ஏற்பட்ட தோல்வி மீண்டும் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் கேரள அரசுக்கு ஒருபுறம் இருக்கிறது. இதற்காக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மக்களை திரட்டும் வேலை நடந்தாலும், அரசியல் ரீதியாக அதில் ஆதாயமடைய கேரள கட்சிகள் போட்டிபோடுகின்றன என்ற குற்றம்சாட்டு எழுந்துள்ளது. அதன் வெளிப்பாடாகத் தான், "திரவம்' தொகுதி இடைத் தேர்தலை, கேரள கட்சிகள் அணுகுகின்றன என கூறுகின்றனர்.

எனவே, தேர்தல் முடியும் வரை முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள கட்சிகள் முன்னிறுத்தும் எனவும் கூறுகின்றனர்.

உப்பு, புளி, மிளகா விற்கவும் வெளிநாட்டுக்காரனாம்!நாம இதுல நோஞ்சானாம்!



சிறுவணிகத் துறையில் அதாவது மளிகைப் பொருட்களை விற்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இந்த அனுமதியை அளித்துள்ள மத்திய ஆட்சியாளர்களின் செயலைப் பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், தமது ஓட்டு சீட்டு அரசியலுக்கு ஏற்ப பல வண்ண கருத்துகளை தெரிவித்துள்ளன. இதன் மூலம் மத்திய அரசு எந்த கொள்கையின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்துள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.

”காங்கிரசு ஆட்சியாளர்கள் என்பதனால்தான் இந்த அனுமதியை அளித்துள்ளனர். நாங்கள் ஆட்சி ஆண்டால் இப்படி ஒரு அனுமதியை வழங்கியிருக்க மாட்டோம்”, என்பதை போன்று நமது காதில் பூ சுற்றுகின்றனர். தாங்கள்தான் மக்கள் நலனிலும், நாட்டின் நலனிலும் அக்கறை உள்ளவர்களைப் போன்று நாடகமாடுகின்றனர்.

அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதில் காங்கிரசு கட்சிக்கும், ஏனைய கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரசு அரசின் இந்த முடிவை எதிர்ப்பதாக கூறும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆளும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டுக் கம்பெனிகளின் வாசலில் தவமிருக்கிறார். மேற்குவங்கத்தை ஆண்ட போலிகம்யூனிஸ்டு முதல்வர் அமெரிக்காவிற்கே சென்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுந்துவிட்டு வந்தார்.

தமிழக முதல்வர் ஜெயா மக்களுக்கே மின்சாரம் இல்லாவிட்டாலும், பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இலவசமாக, தடையில்லாமல் மின்சாரம் தந்து தனது விசுவாசத்தைக் காட்டி வருகிறார். இவரைப் போன்றவர்தான் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி. ஆனால் இவர்களோ சில்லரைவணிகத்துறையில் தங்களது மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்!

எந்த உலகமயமாக்களின்படி சிறப்பு பொருளாதாரமண்டலங்களை கொள்கை ரீதியாக இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அந்தக் கொள்கையின் இன்னொரு பகுதிதான் சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதுமாகும்.

மளிகைக்கடை வைக்க அன்னிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை, மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்கிறார் மத்திய மந்திரி மாமா நாராயணசாமி. மாமாவின் இந்த பேச்சு மத்திய அரசின் ஜனநாயகத் தன்மையை காட்டுவதாக தவறாக நினைத்துவிடாதீர்கள்! இந்த அறிவிப்பு நயவஞ்சகம் நிறைந்தாகும். மத்திய அரசின் இந்த நயவஞ்சகத்தைப் பற்றியும், சில்லரை வணிகத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பற்றியும் இனி பார்ப்போம்.


அ.பல நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை விற்கும் கடைகள் என்றால் அன்னிய நிறுவனங்கள் 51 சதவீதம் முதலீடு செய்யலாம்.

ஆ.ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மட்டும் விற்பதாக இருந்தால் 100 சதவீதம் முதலீடு செய்யலாம்...

என்று மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்தியவணிகத்துறை அமைச்சர் மாமா ஆனந்த் சர்மா, சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், ஏற்படப் போகும் நன்மைகள் என்று சிலவற்றை பட்டியலிட்டார்.அதே நேரத்தில்பன்னாட்டு நிறுவனங்களை கட்டுபடுத்தும் விதிமுறைகளையும் வகுத்துள்ளதாகவும் கூறினார்!

அ. பத்துலட்சம் மக்கள் தொகைக்கும்  மேற்பட்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

ஆ.ரூபாய் 300/- கோடி முதலீடு செய்ய தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இ.பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு விவசாயிகளிடம்தான் பொருட்களை கொள்முதல் செய்யவேண்டும். போன்ற நிபந்தனைகளை நமது மாமாக்கள் விதித்துள்ளார்களாம்!

*”10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் மளிகை கடை வைக்க அனுமதிப்போம்”, என்பது முதற்கட்ட நடவடிக்கைதான்.அன்னிய நிறுவனங்களை முதலில் பெரிய நகரங்களில் அனுமதித்த பின்னர்,அந்த நகரங்களில் உள்ள சிறுவியாபாரிகளை விட சிறிது குறைவான விலைக்கு பொருட்களை அவர்கள் விற்பார்கள்.இதனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அந்நகரங்களில் சிறுவணிகர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விடுவார்கள்.

பெரு நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளில் குறைவான விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அறிந்துகொள்ளும் ஏனைய நகரங்களில் உள்ள  மக்களும், பன்னாட்டு நிறுவனங்கள் போட்டுள்ள தூண்டிலில் சிக்கிக்கொள்வார்கள்.இதன் பிறகு அனைத்து இடங்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்துவிடும்.சிறிது காலத்தில் இங்கே உள்ள சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள்.இதன் பிறகு உலகில் உள்ள மாபெரும் நிறுவனங்களாக உள்ள ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே சில்லரை வணிகத்தில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துவார்கள்.

சில்லரை வணிகத்தில் உள்ள கோடிக்கணக்கான வணிகர்கள் மட்டுமல்ல,அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்துள்ள பரந்து, விரிந்த வலைப்பின்னலும் முற்றாக அறுத்தெரியப்பட்டுவிடும்.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும், இந்த வலைப்பின்னலைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.சிறுவணிகர்கள் ஒழித்துக்கட்டப் படுவதை விட, இந்த வலைப்பின்னலை அறுத்தெறிவதுதான் மிகவும் அபாயகரமானதாகும்.இந்த வலைப்பின்னலில் நான்கு கோடி சிறு வணிகர்கள்,அக்கடைகளில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,80 கோடி விவசாயிகள்,லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள்,லாரி ஓட்டுனர்கள்,சுமை தூக்கும் தொழிலாளார்கள்,சிறு தொழில் துறையில் உள்ள கோடிக்கணக்கானோர்,நெசவாளர்கள் என்று நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்த வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் அனைவரின் வாழ்க்கையையும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு சூறையாடிவிடும்.

* இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்வதால்,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,இதனால் மக்களுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் மாமா ஆனந்த் சர்மா நமக்கு பொறி வைக்கிறார்.

மாமாவின்  இந்த வாதம் முழு பொய்யுமல்ல,முழு உண்மையும் அல்ல.அரை உண்மையாகும்.முழு பொய்யை விட அரை உண்மை ஆபத்தானது.

பன்னாட்டு நிறுவனங்களை சில்லரை வணிகத்துறைகளில் அனுமதிப்பதன் மூலம் சிறு வணிகர்கள் முற்றாக ஒழிக்கப் படும் வரை, ஒப்பீட்டளவில் இவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள் சிறிது விலை குறைவாக மக்களுக்கு கிடைக்கும்.விவசாயிகளுக்கும் இதே போன்று சிறிது கூடுதல் விலை கிடைக்கும்.

சிறு வணிகத்துறை மூலம் பிணைக்கப்பட்டுள்ள வலைப்பின்னல் அறுத்தெரியப் பட்ட பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் அனைத்து அம்சங்களிலும் ஏகபோக ஆதிக்கம் பெற்று விடுவார்கள்.இதனால் இப்போது இருப்பதைவிட பன்மடங்கு பொருட்களின் விலையை அதிகரித்து விடுவார்கள்.விவசாயிகளின் விளை பொருட்களின் விலையையும்,தங்களின் விருப்பத்திற்கும், கொள்ளை லாபத்திற்கும் ஏற்ப குறைத்து விடுவார்கள்.

நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும்,தமது பிடிக்குள் கொண்டுவந்து அவர்கள் விரும்புகிற படிதான் உற்பத்தி செய்ய ஆட்டுவிப்பார்கள்.இவர்களின் நிபந்தனைகளை நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் பெரும்பான்மையாக உள்ள சிறு விவசாயிகள் ஏற்க முடியாமல் ஒன்று விவசாயத்தில் இருந்தே விரட்டி அடிக்கப்படுவார்கள்.அல்லது தமது நிலங்களிலேயே பன்னாட்டு 
நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுவிடுவார்கள்.

இதன் பிறகு ஆட்சியாளர்களே நினைத்தாலும் இவர்களைகட்டுப்படுத்த முடியாது.ஏனேன்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சில்லரை வணிகத்திற்கும்,விவசாயம் மற்றும் ஏனைய துறைகளுக்குமான வலைப்பின்னல் அறுத்தெறியப்பட்டு, இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்.இந்த சூழலில் ஆட்சியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால்,தாங்கள் உருவாக்கிய வலைப்பின்னலை அவர்கள் சிறிது சிக்கலுக்கு உள்ளாக்கினாலும், நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும்.இதை தவிர்ப்பதற்கு மீண்டும் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதும் உடனடி சாத்தியம் இல்லை.ஏனென்றால் உள்நாட்டு வலைப்பின்னலை உருவாக்குவதற்கான மூலதனம் உட்பட அனைத்து ஆற்றலையுமே  அப்போது நாம் நாம் இழந்து போயிருப்போம்.

எனவே பன்னாட்டு நிறுவனங்கள்தான் நாட்டின் சமூகம்,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும்,கட்டுப்படுத்தும் சக்திகளாக உருவெடுத்திருப்பார்கள்.
நாட்டின் தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவானதுதான்.தொழிற்துறையில் சில கோடி தொழிலாளர்கள்தான் பாதிக்கபடுவார்கள்.தொழிற்துறையின் வலைப்பின்னல் எப்போதுமே ஏகாதிபத்தியங்களோடுதான் பிணைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தொழிற்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் ஒட்டுமொத்த நாட்டையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கு அது வலிமையானது அல்ல.    

ஆனால்,சில்லரை வணிகத்தின் வலைப்பின்னலோடு ஏறத்தாழ நூறுகோடி மக்களும் பிணைக்கப்பட்டுள்ளதால், நாடே அன்னிய சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும், அதிகாரத்திற்குள்ளும் சென்றுவிடும்.ஆகவே சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்பது நாட்டை மீண்டும் காலணியாக்கும் உச்சகட்ட செயலாகும்.1947-க்கு முந்தைய காலணி ஆதிக்கத்தை விட இப்போதைய இந்த வடிவிலான காலணி ஆதிக்கம் கோரமானதும்,அழிவை மட்டுமே உள்ளடக்கியதுமான செயலாகும்.

எனவே மத்திய அரசின் இந்த துரோகத்திற்கு எதிராக இந்த நிமிடமே மக்களை   அமைப்பாக அணிதிரட்டி போராடுவது அவசர,அவசிய தேவையாகும்.   

http://suraavali.blogspot.com