Saturday, 17 December 2011

குழந்தைகட்கான நல்லுணவு


ஒரு முறை ஒரு உணவு விடுதியில் குடும்பத்துடன் சாப்பிடப் போயிருந்த சமயம். ஒரு பிரபலம் குடும்பத்துடன் சாப்பிட வந்திருந்தார்கள். கூடவே 3 பணிப்பெண்கள். அட! பரவாயில்லையே! வீட்டுப் பணிப்பெண்களை ஒன்றாய் அழைத்து வந்து சாப்பிடும் சமதர்ம சமுதாயத்திற்கு வித்திடுகிறதே அந்தப் பிரபல குடும்பம் என நினைத்தேன்..ஓரிரு நிமிடம் போயிருக்கும். உணவுகள் பரிமாற ஆரம்பித்ததும், மூன்று பணிப்பெண்களும் அவ்வீட்டுக் குழந்தைகளை ஆளுக்கொன்றாய் அழைத்துக் கொண்டு ஓட்டல் வாசலில் இருந்த விளையாட்டு அறையில் வைத்து பிஸ்கட், சிப்ஸ், கூல்டிரிங்க்ஸ் என பொட்டலத்தை பிரித்து கொடுக்க ஆரம்பித்தனர். ஒருபக்கம் பிரபலமும் மற்றொரு பக்கம் அவர்கள் வீட்டு பரிதாபங்களும் ஆரவாரமாய் சாப்பிட ஆரம்பித்தனர்..இன்று இது பிரபல பணக்கார வீட்டில் மட்டுமல்ல.. நகர்ப்புற மக்களில் பலர் வீட்டில் நடக்கும் விஷயம் தான். இப்போது வேகமாக உருவாகிவரும், “நேரமில்லை ஜாதி”குடும்பங்களில் இதற்கு கற்பிக்கப்படும் நியாயம் ரொம்ப அதிகம். 
நல்ல ஆரோக்கியமான குழந்தைப்பருவம் என்பது, வாழ்நாள் எல்லாம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை. உங்கள் வீட்டு குழந்தைச் செல்வம் சரியான வேளையில் சரியான உணவை விரும்பிச் சாப்பிட வைத்து விட்டீர்கள் என்றால் பெற்றோராய் வாழ்வில் பெரும் பொறுப்பை செய்து முடித்ததாக அர்த்தம். “எனக்கு வேணாம்; பிடிக்கவேயில்லை;” என்ற வார்த்தைகளைக் கேட்டு கேட்டு, கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி கடைசியில் மன நோயாளியாகவே மாறிவிடும் சில அம்மாக்களை எனக்குத் தெரியும். கூடவே “என் குழந்தை அவங்க அப்பா..அவங்க ஃபேமிலி மாதிரி கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி சார்!” என தன் ஏழாம் அறிவில் சுருதி சேர்க்கும், அம்மாவும்,  “உனக்கு பொறுமையில்லை..பிள்ளைய சாப்பிட வைக்கிறத விட உனக்கு வேற என்ன வேலை?; உனக்கு அக்கறையில்லை..”-என ஏதோ எக்ஸிபிசனில் குழந்தையை வாங்கி வந்து மாதிரி தனக்கு சம்பந்தமில்லாதது போல் பேசும் மேல்ஷாவனிஸ அப்பாவும்  நிறையவே உள்ள படித்த ஊர் இது. குழந்தைய சாப்பிட வைப்பதில் அப்பா அம்மா இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்க வேணாம்.
குழந்தைக்கு உணவூட்டுவது என்பது அறிவியல் இல்லை. ஒரு கலை. 

வாழைப்பழத்தில பொட்டாசியம் இருக்கிறதென்று அக்குழந்தைக்கு தெரியாது..கார்ட்டூனில் பார்த்த பழம் சாப்பிடும் யானையும், தொலியில் வழுக்கி விழுந்த தாத்தாவும் மட்டுமே தெரியும். அந்த தாத்தா-யானையில் துவங்கி, பொட்டாசியத்தில் வந்து சேர்க்கும் வித்தையைச் செய்ய வேண்டியது பெற்றோர் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக எந்த பட்டப்படிப்பும் தொலைதூரப்படிப்பாக இந்த வித்தையை நடத்துவதும் இல்லை. தேவையெல்லாம் நிறைய அக்கறை; நிறைய பொறுமை; கொஞ்சம் மெனக்கெடல்.

குழந்தை என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அறிவை இணையத்தில் தேடும் முன்பு, வீட்டு நல்இதயத்தில் தேடுங்கள். மருத்துவரிடம் கேட்கும் முன்பு அம்மாவிடம், மாமியாரிடம், பாட்டியிடம் கேளுங்கள். நல்ல புத்தகங்களிடம் தேடுங்கள்.  அதே வயசு குழந்தையை வளர்த்துவரும் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பேசுங்கள். 80% சூத்திரங்கள் இதில் கிடைத்துவிடும். நீங்கள் இதல்லாம் எளிதில் கிட்டாத சென்னை மாதிரி ஆர்டிக் அண்டார்டிகா கண்டத்தில் ஐயோ பாவமாக வசித்து வருபவராக இருந்தால், உங்களுக்கு இந்தக் கட்டுரை கொஞ்சம் உதவும்.
ஒன்று முதல் ஒன்றரை வயது மட்டும் தாய்ப்பால் மறுக்காமல், மறக்காமல் கொடுப்பது முதல் கடமை. 5 - 6 மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் மட்டும் போதாத போது கூடுதலாக உணவுத் தேடல் துவங்கும் போதுதான் ஒவ்வொன்றாய் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

அரிசி-பாசிபருப்பு-கஞ்சி, நேந்திரபழக் கஞ்சி என துவங்கி 7-8 மாதங்களில் கீரை கடைந்த சாதம், என தொடரவும். ஒருநாள் அரிசி; மறுநாள் கேழ்வரகு; ஒருநாள் தினை என குழந்தைக்கு கஞ்சியாகவோ அல்லது குழைந்த சாதமாகவோ அறிமுகப்படுத்துங்கள். காய்கறி சூப் (நார்களை நீக்கி) 1-வயது குழந்தைக்கு கொடுத்துவாருங்கள். கொடுக்கும் போதே அந்த காய்கறி குறித்த கர்னபரம்பரைக்கதையோ, கார்ட்டூனோ சொல்லுங்கள். முடிந்தால் அந்த காய்கறி வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுங்கள். மனது ஒட்டினால், வாய் திறக்கும். ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கிறான்; ஒரு டம்ளர் பாலாவது குடி; என பால் ஊற்றி வளர்ப்பது கெடுதி என்கிறது தற்போதைய உணவு அறிவியல். கொஞ்சம் கூடுதல் அக்கறையிலோ அல்லது சின்ன புள்ளதானே சாப்பிட்டு போறான் என சோம்பேறிகள் ரெகமன்டேஷனிலோ பிள்ளை, பிள்ளையார் மாதிரி உருண்டு திரண்டு உருவாக ஆரம்பித்தால் பாலையும் தயிரையும் கண்ணில் காட்டாதீர்கள். மழலை உடற்பருமனுக்கு தயிர்சாதமும் பாலும் உருளைகிழங்கு சிப்ஸும் சாக்லேட்டும் தான் பெருவாரியான காரணம்.

இனிப்பு உடலை வளர்க்கும் ஒரு சுவை. வளரும் குழந்தைக்கு குறைந்த அளவில் அது நல்லதே. வெள்ளைச் சீனியாக இல்லாமல். பனை வெல்லத்தில், நாட்டு வெல்லத்தில் செய்யும் அடை பிரதமன், நேந்திரம்பழ ஜாம், அதிரசம் –போன்ற உணவுகள் அவ்வப்போது தரலாம். மில்க் சாக்லேட் அதிகம் வேண்டாம். 10வயதிற்குள்ளாக வயதுக்கு வரும் பெண்குழந்தைக்கு மில்க் சாக்லேட் காரணமாக இருக்கலாம்
முருங்கைக் கீரை, சிறு கீரை, அரை கீரை-ஆகியன குழந்தைகட்கான கீரைத் தேர்வில் முக்கியமானவை. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் கண்ணுக்கு தேவையான கரோட்டின் சத்து அதிகம். உருளை, சேனைக்கிழங்கு(elephant yam) உடல் எடை தேறாத குழந்தைக்கு மிக நல்லது. வாரம் இருமுறை கொஞ்சம் இஞ்சி, மிளகுத்தூள்சேர்த்து கொடுக்கவும். பழங்களில் நேந்திரம்பழம், மலைவாழை, கூழாஞ்செண்டு, மட்டி, கோழிக்கூடு –வகை வாழைப்பழங்கள் ரொம்பவே நல்லது. மாதுளை, சமீபத்தில் தேசிய உணவியல் கழகத்தால் உலக பழ தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ள, நம்ம ஊர் கொய்யா( நல்ல வேளை வழக்கம் போல் நியூசிலாந்தின் கிவி, ஸ்காண்டினேவியன் ஸ்ட்ராபெர்ரி தான் சிறப்பு என புத்திசாலி விஞ்ஞானிகள் சொல்லவில்லை), ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை 2-3 வயதிற்குள் பழக்கிவிடுவது ரொம்ப அவசியம்.

ஒருமுறை பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன் சுளையை தன் சுத்தமான கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7 மாத கைக்குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல், பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும் அந்த தாயின் வித்தை ஒரு கவிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது. தேவையெல்லாம் அக்கறை மட்டுமே; கலோரி கணக்கு பார்த்து, கடைசியில் தோற்றுப்போவதல்ல.

கொழுப்பு பயம் கூடியுள்ள காலம் இது. பொய்யுக்கு பயப்படுவதை விட நெய்யுக்குப் பலருக்கும் பயம். ஆனால் குழந்தைக்கு பசு நெய்யும், தேங்காய் எண்ணெயும் ரொம்ப அவசியம். பருப்பு சாதத்தில், பாயாசத்தில் என இதனை சிறிதளவு சேர்ப்பது முக்கியம்.  invisible fat- கொழுப்பானது நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு தானியம் மூலமாக வந்து சேரும். அது போதாது. Poly unsaturated, mono saturated  மற்றும் saturated கொழுப்பு வகைகள் சேர்ந்த கொழுப்பு கொஞ்சம் அளவில் குழந்தைக்கு கண்டிப்பாக தேவை. இதில் இருந்து பெறப்படும் essential fatty acids  மூலமாகத் தான் fat soluble vitamins வகைகளை, (கண்ணைக் காக்கும் vitamin A அதில் அடக்கம்) கரைக்கும் கொழுப்பு அமிலத்தை, prostaglandins எனும் உடலுள் ஏற்படும் காயங்கள் ஆற்றுவது முதல் கான்சர் வரை வராது காக்கும் பொருளை, உருவாக்குவதும் சாத்தியம். அதனால் இரத்தக் கொழுப்பைக் கண்டு அஞ்சி, எண்ணெயின் மீது அவதூறு பரப்பவேண்டாம். அளவோடு சாப்பிட மறக்க வேண்டாம். Pre mature baby –என்றால் கண்டிப்பாக பருப்புசாதத்தில் சிறுதுளி தேங்காய் எண்ணெய் விட்டு கொடுங்கள்.

ஆடியோ பாடியோ அல்லது  “டாக்டர் மாமகிட்ட சொல்லி முருங்கைக்காய் ஊசி போடச்சொல்லவா? அல்லது செல்லமாய் நான் முருங்கைக்காய் ஊட்டவா?”,என அழகாய் பயமுறுத்தியோ, சாப்பிட வையுங்கள். எதிர்காலத் தலைமுறை எதிர்கொள்ள வேண்டிய  நோய்க்கூட்ட சவால்கள் ஏராளம்.
”புஜ்ஜுகண்ணா..இதுதான் கடைசி வாய்..வாங்கிக்கோடா!” என நீங்கள் ஊட்டும் உணவுருண்டை மட்டும் தான் அந்த சவால்களைச் சமாளிக்கக் கூடும்!.....

மூட்டுவலி போக உணவும் சித்தமருத்துவமும்


சாயந்திர வேளை வீட்டுத் திண்ணையில் வழக்கமாக மணக்கும் நாகர்கோயில் ஆசான் தைலவாசனை, வயலில் இருந்து தாத்தா வந்துவிட்டதை அறிவிக்கும். ”ஏன் தாத்தா உங்க கால் இப்படி வளைஞ்சு இருக்கு?””’’ என்ற எங்கள் கேள்விக்கு உழைத்து இறுகி வறண்டு இருக்கும் மூட்டும் அதன் கீழ் வளைந்து இருக்கும் முழங்காலும் தைல மினுமினுப்புடன் வாசனையுடன் உழைப்பின் கதை சொல்லும். ”பட்டணத்துக்காரா! என்னடா..கால்ல பலம் வச்சிருக்கே! கொஞ்சம் அழுத்தி மிதிடா!” என்ற அவரது செல்லக் கோபம், ”அழுத்தினா வலி வரணுமே! வலி போகும் நல்லா அழுத்தி அமுக்கச் சொல்கிறாரே1” என்பது புரியாமல் அழுத்திவிட திண்ணையில் தலைக்குத் துண்டைமட்டும் தலையணையாய் வைத்து லேசாய் தாத்தா கண் அயர்வார்.

இன்று ”ஏன் இப்படி கிழவியாட்டம் எப்ப பார்த்தாலும் இடுப்பில் வலிக்கிறது; மூட்டு நோகிரதுன்னு புலம்பிறே? அப்படி என்ன வேல செய்து கிழிச்சிட்ட?,” என வரும் எகத்தாள வார்த்தைகள் கூடுலாய் எரிச்சலையும் கோபத்தையும் கொட்டும்.

வயசானா வரும் வலி மூட்டுவலி என்ற கதை ரொம்பவே மாறிப் போய், துள்ளிக் குதிக்க வேண்டிய இளம்பருவத்தில் இடுப்பில் வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலியோ..அப்படியே பரவி பின்பக்க தோள், முன்கை, முழங்கை என வலி..என இளமையில் விரட்டும் மூட்டு வலி இன்று ஏராளம். என்ன ஆச்சு இந்த மூட்டுகளுக்கு? பாட்டி தாத்தா சொத்தாக இருந்தது ஏன் இப்போது அவசரமாய் அனைவரையும் படுத்துகிறது?
நிறைய வாழ்வியல் மாற்றங்கள், மாடர்ன் கிச்சன் மறந்துபோன பாரம்பரியம், கூடிவிட்ட சொகுசுக் கலாச்சாரம், இவை தான் பொருத்துக்களை (JOINTS) இளமையிலேயே வலுவிழக்க செய்திருக்கிறது..அவற்றின் வலு கூட்டி, நம் வாழ்வையும் உற்சாகமாய் நகர்த்த(மன்னிக்க..ஓடவைக்க) என்ன செய்யலாம்?..இனி பார்க்கலாம்!

ஒரு மாருதி காரை தாங்கும் வலு உண்டு நம் ஒவ்வொரு கால் மூட்டுக்கும்...ஆனால் அதற்கான உணவும் உழைப்பும் சீராக இருந்திருக்க வேண்டும். அது மாறும் போது நம் நோஞ்சான் உடலைக் கூட தூக்க சேட்டை செய்யத் துவங்கும். இளம் வயது முதல் உணவில், சரியான அளவில் கால்சியம், இரும்பு, துணை கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகள் அன்றாடம் சேர்ப்பது தான் மூட்டுப் பாதுகாப்பில் பிள்ளையார் சுழி.

1 முதல் ஒன்றரை வயது வரை கட்டாயமாகத் தாய்ப்பால், அதன் பின் 6-8 வயது வரை கண்டிப்பாய்த் தினசரி நவதானியக் கஞ்சி, கீரை சாதம், அடிக்கடி தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவு, மோர், பீன்ஸ், அவரை, டபுள் பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் என காய்கறி கலந்த மதிய உணவு மிக மிக அவசியம். எனக்கு ஆசை தான்..சாப்பிடவே மாட்டேங்கிறான்..அவனோட மல்லாட எங்க எனக்கு நேரம்! லேட்டா போனா மானேஜர் முறைக்கிறார் என்ற சாக்கு போக்கு சொல்லாமல், என்ன வித்தை செய்தாவது சாப்பிட வையுங்கள். நாளைய உங்கள் சுமையையும் சேர்த்து சுமக்க, புன்னகையுடன் உங்கள் குழந்தை தயாராகும். கண்டிப்பாய்த் தினசரி 2 மணி நேரம் வியர்க்க விளையாட விடுங்கள். கம்ப்யூட்டரில் விளையாடும் ”ஸபாக் கேம்” அல்ல; கில்லியோ, கிரிக்கட்டோ நல்லா ஓடி வியர்க்க விளையாடும் விளையாட்டை ஊக்குவியுங்கள்; ”கால் வலித்தால் பைரன்னர்; தாக மெடுத்தால் கூல் டிரிங்கஸ்,” என மொக்கையாக இருக்கும் சொகுசு கிரிக்கட்டைக் காட்டிலும், வியர்க்க வியர்க்க ஓடி ஒடி விளையாடும் எந்த விளையாட்டும் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும். குறிப்பாய் மூட்டுக்களை உறுதிப்படுத்தும்.

அதை விடுத்து பிள்ளையார் குளோனிங்காய் உடம்பை வளர்த்து, ”நான் வருவேன் பின்னே; என் செல்லத் தொப்பை வரும் முன்னே,” என பருத்த உடலுடன் பிள்ளை இருக்கின்றான் என்றால், “ அதல்லாம் வளர்ர பிள்ளை; நீங்களே கண்ணு வைக்காதீங்க,” என எவராவது சொன்னால் அதை நம்பி ஏமாந்து விடாமல், அவன் சரியான் எடையில் இருக்கிறானா? ஊளை சதை உள்ளதா என்பதை உங்கள் குடும்ப மருத்துவரிடம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அதிக உடல் எடை தான் பெரும்பாலான மூட்டுவலிக்கு முக்கியக் காரணம். ஓடி ஆடி வள்ர்வது தான், ஆரோகியத்திற்கு குழந்தை போடும் முதல் மூலதனம்.

“புளி துவர் விஞ்சின் வாதம்”, என்கிறது சித்த மருத்துவம். அதிக புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளி அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டு முனங்கும் நபர்கள் விலக்குவது நல்லது. ”வாயுவெலாது வாதம் வராது” என்றும் சித்த மருத்துவப் பாடல்கள் கூறும். ”மண் பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்” என்று வாயுவை விலக்கி நோய் அணுகாது இருக்கவும் வழி சொல்கிறது சித்த மருத்துவம். ஆதலால் ஃப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் பொரியல் என கேஸ் மெனுக்களை மூட்டுவலிக்கார்ர்கள், உடல் எடை குறைய விரும்புபவர்கள் விலக்குவது முக்கியம்.




வலி நிவாரணிகள் பக்கம் அதிகம் போகாமல் இருப்பது மிக மிக முக்கியம். ”நேரே மருந்துகடைக்கு போய் ரொம்ப வலிக்கிறது எனக் கூறி ஸ்ட்ராங்கா ஒரு மாத்திரை தாப்பா” என மிரட்டி, தினசரி வலிக்கு விடுதலை தேடுவது மோசமான பழக்கம். பல வலி நிவாரணிகள் கண்டபடி நெடுநாள் பயன்படுத்தினால் நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
வலி நீங்க சித்தமருத்துவத் தைலங்களை உங்கள் அருகமையில் உள்ள சித்தமருத்துவமனைகளில் பெற்று பயன்படுத்துவது நல்லது.

எண்ணைய் மசாஜ் எனும் பிழிச்சல் சிகிச்சை மூட்டுவலிகளுக்கு மிகச் சிறந்த ஒன்று. வலிஉள்ள மூட்டு தசைப்பகுதியில் நிறைந்து இருக்கும் நிண நீரை (lymphatic drainage) வெளியேற்ற அந்த சிகிச்சை சிறந்த ஒன்று. முக்கியமான விஷயம் சரியான திறமையான சிகிச்சை அளிப்பவரைத் தேர்ந்து எடுப்பது. 

”ஸ்பாண்டிலோசிஸ்” எனும் கழுத்து-முதுகு பக்க முதுகுதண்டுவட எலும்பின் மூட்டுக்கிடையிலான தட்டுகள் விலகலோ(disc prolapse), நகர்வோ இருப்பின் சரியான நோய்க் கணிப்பும், சிகிச்சையுடன் கூடிய உடற்பயிற்சி, இயன்முறை மருத்துவம் (physiotherapy), பிழிச்சல் சிகிச்சையும்(medicated oil massage) மிக அவசியம். அலட்சியமாய்.. ”ஏ..ராசா..கொஞ்சம் முதுகில் மிதிச்சு விடு,” என பேரனை மிதிக்க சொல்வது தட்டுக்களை(disc) தடாலடியாக விலக்க வைத்து நிரந்தரமாய் படுக்க வைத்தும் விடக் கூடும்.


தினசரி 40 நிமிட நடை.பின் 15 நிமிட ஓய்வு. அதைத் தொடர்ந்து 30 நிமிடம் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரியவணக்கத்துடன் முதலான 4-5 யோகாசன்ங்கள், கால்சியம்-கீரை நிறைந்த, புளி வாயுப் பொருட்கள் குறைந்த உணவு இவற்றுடன் கண்டிப்பாய் ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டுகள், 30-45 நிமிட மாலை நடை அல்லது விளையாட்டு இருக்குமா உங்களிடம்..மூட்டுவலி அதிகம் உங்களை அணுகாது.

மருந்தும் விருந்தும்


மருந்தும் விருந்தும் ஓரிரு நாள் இருந்தால் மட்டுமே சிறப்பு என்று வழக்குமொழி ஒன்று உண்டு. ஆனால் இந்நாட்களில் இரண்டுமே அளவுக்கு அதிகமாக பெருகிவருகிறது. ’மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்,’ என்ற வள்ளுவன் மொழியில், உணவு தேவையில்லாமல் விருந்தாகி, தேவைக்கதிகமாகச் செல்லும் போது தான் மருந்தின் அவசியம் துவங்குவதை உணர்த்தியிருப்பார்.


இரவு நேரக் களியாட்டங்கள் மட்டுமல்ல, அவரவர் வசதி வாய்ப்பைக் காட்ட திருமணம் போன்ற நிகழ்வுகளில், ஏராளமான, திக்குமுக்காட வைக்கும் உணவைக் கொட்டிவைப்பது கலாச்சாரமாகி வருகிறது. பகட்டும், படோபமும் முன் நிறுத்தப்படும் இவ்விருந்துகளில் அவசியமும் ஆரோக்கியமும் புறந்தள்ளப்படுவது தான் வேதனை. ‘இன்றைக்கு ஒருநாள் தானே’- என்ற சமாளிப்புடன் அடிக்கடி அரங்கேறும் விருந்துகள் தரும் உடல் நலக்கேடுகள் ஏராளம். அதே சமயத்தில் அன்பின்பால் கொடுக்கப்படும் விருந்தை முகம் மலரச் சாப்பிட்டு, விருந்தளிப்பவரை மகிழ்விப்பதும் நம் தமிழர் கலாச்சாரம். எப்படி விருந்தளிக்கலாம்? எப்படி விருந்தெடுக்கலாம்?

குடும்பத்துடன் இரவு உணவிற்காக நண்பர் ஒருவர் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றிருந்தோம். எங்களை விருந்திற்கு அழைத்த அந்த முதிய தம்பதியினர் சமைத்து வைத்திருந்த ஏராளமான உணவு வகைகளைப் பார்த்ததும் உண்மையில் திகைத்துப் போய் விட்டோம். கேரளத்தவர்களான அவர்கள் தங்கள் மாநிலத்து பாரம்பரிய சிறப்பு உணவு வகைகளை அவர்களே சமைத்துப் பரிவுடன் பரிமாறிய விதம் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். அந்த 65 வயது அம்மா, விருந்தின் அத்தனை உணவையும் நேர்த்தியாக சமைத்தது மட்டுமல்லாமல், குழந்தைகட்கு, பெரியவர்க்கு என தேர்ந்தெடுத்து அன்புடன் பரிமாறியது விருந்தின் கூடுதல் சுவை. விருந்தில் மிகச்சிறப்பான விஷயம், அதை நாமே தயாரிப்பது. அதை மகிழ்வுடன் அக்கறையுடன் பரிமாறுவது. கடையில் விதவிதமாக வாங்கிப் பரிமாறுவதில் அன்பும் ஆரோக்கியமும் இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிடும்.

முதலில் குழந்தைகளை விருந்தில் ’எதையும் வீணடிக்கக் கூடாது’ என்ற விஷயத்தை வலியுறுத்திப் பழக்க வேண்டும். அது வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் சேவை. இன்றளவில், 3 கோடி விலையுள்ள ’லம்போகினி’ காரும், 30,000 ரூபாய் விலையுள்ள, ’மோண்ட் பிளான்க்’ பேனாவும் விற்கும் நம் தேசத்தில் தான், 50% மான குழந்தைகட்கு அன்றாட சராசரி உணவியல் தேவை (RECOMMENDED DIETARY ALLOWANCE) கிடைப்பது இல்லை. அந்த வறுமை குறித்து குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டும். தேவையானவற்றை மட்டும் வாங்கி தட்டை முழுமையாக காலி செய்யும் பழக்கத்தை குழந்தைகட்கு புகட்டுவது முக்கியம். அதிக எண்ணெய்ச் சத்துள்ள பொரித்த உணவுகள், செயற்கை வண்ணம் நிறைந்த உணவுகள், பயண வழிச்சாலையில் விற்கப்படும் புலால் உணவுகள் ஆகியற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.
விருந்து என்ற பெயரில் புதிய மேற்கத்திய துரித உணவுகளான, பிட்சா, பர்கர் மற்றும் குளிர்பானங்களை கூடியவரை குழந்தைகளிடம் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.

சுவையூட்டிகள், விரைந்து கெட்டுப் போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் கெமிக்கல்ஸ், சில நேரங்களில் தொடர்ந்து சாப்பிடத் தூண்ட வைக்கும் பொருட்கள் என பல புது வேதிகள் அதில் பெரும்பாலும் சேர்க்கப்படுவதால் அவற்றைத் தவிர்ப்பது அவசியம். இப்போது பல இடங்களில் பாரம்பரிய உணவு அங்காடிகள் புதுப் பொலிவுடன் வரத் துவங்கியுள்ளன. அங்கே கிடைக்கும் வெற்றிலை சாதம், பால் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, வாழைப்பூ வடை, இளநீர் பாயாசம் எனும் புதிய பாரம்பரிய உணவை விருந்தாக உங்கள் குழந்தைக்கு அறிமுகம் செய்யுங்கள்.
’பஃபே’ விருந்துகள் இன்று பெருகி வருகிறது. ஓட்டலானாலும் சரி..திருமணங்களானாலும் சரி.. பஃபே உணவுகளுக்கு வரவேற்பு கூடுதல். ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்க்கு பஃபே சரியான தேர்வு அல்ல. ஆறு சுவையில் வகைக்கு மூன்றாக வைப்பது தான் ’எங்க’ ஸ்டேட்டஸ் என இறுமாப்பில் வைக்கும் விருந்தில், “போதும் போதும்” என்று சொன்னாலும் துளி துளியாய் உள்ளே சென்று கிளைமாக்ஸில் கலோரி கணக்கு பார்த்தால், மிரட்டும். ஆதலால், உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர், சமர்த்தாய் ஓரிரு அயிட்டங்களோடு ஆசுவாசப்படுத்திக் கொள்வது சிறப்பு.

சர்க்கரை நோயாளிகள் விருந்துக்கு தானே என பரவசத்துடன் பாயாசத்தை பருகுவதும், சில ரோட்டோர கடைகள் சாலையை கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்ரமிப்பது போல, ஒரத்திலிருந்து இனிப்பை சின்ன சின்னதாய் பிய்த்து பிய்த்து கடைசியில் மொத்ததையும் முடிப்பது சாதாரணமாக விருந்தில் நடக்கும் வைபோகம். நடுஇரவில நெஞ்சுவலி வரும் போதோ அல்லது அடுத்த நாள் காலையில் அலற வைக்கும் இரத்த சர்க்கரை அளவைப் பார்க்கும் போதோ, ரொம்ப நல்ல பிள்ளையாய் ”இதுக்குத் தான் சொன்னேன் நான் விருந்துக்கு ஓட்டலுக்கு எல்லாம் வரலை,”-ன்னு வசனம் பேசுவதில் பிரயோசனம் இல்லை. ஒரு மாத கிடுக்கிப்பிடி கட்டுப்பாட்டை ஒரு துண்டு ’மைசூர்பா’ கபளீகரம் செய்துவிடும். இது தவிர, இன்றைக்கு ஒரு நாள் தானே என சாப்பிடும் இனிப்பில், அந்த 2-3 நேரம் சர்க்கரை இரத்ததில் போடும் ஆட்டத்தில் இதய நாளங்கள், சிறு நீரகத்திற்கு வரும் இழப்பு தவிர்க்க முடியாதது தான். ”இவ்வளவு நாள் கட்டுப்பாட்டில் தானே இருந்தேன்..இந்த ஒரு தடவையிலா?” என வசனம் பேசவே முடியாது!
வேகவைக்க வேண்டியதை பொரிப்பதும், அப்படியே சாப்பிட வேண்டியதை பொரித்து வருத்து சாப்பிடுவதற்குப் பெயர் விருந்தல்ல. புதுசு புதுசாய் தினுசு தினுசாய் இருந்தால் தால் விருந்திற்கு போன மாதிரி இருக்கும் என்ற மனோபாவம் தான், உணவு வணிகர்களை இது போன்ற உத்திக்கு அழைக்கிறது. ’வாழைப்பழ பஜ்ஜி, வெண்டைக்காய் ஊறுகாய், பூசணிக்காய் ஃப்ரை’ என சம்பந்தமில்லாமல் சமைப்பது அந்த காய்கனிகளின் இயல்பானச் சத்தை முழுமையாய் இழக்க வைக்கும். ஒருவேளை அந்த சுவை உங்கள் நாக்கிற்குப் பிடித்தும் போய் விட்டால், தொடரும் அந்த ’மாயாஜால’ மெனுக்கள் வீட்டிலும் அரங்கேறும் ஆபத்து அதிகரிக்கும்.வித விதமான பழங்கள், வேறு வேறு கலாசார, சமூக பழக்கங்களில் உள்ள உணவுகள்-ஐ நம் உடலுக்கு நல்லதா என யோசித்து சுவைப்பதில் தவறேயில்லை. பெல்ஜியத்தில் சிறுதானியத்தில் செய்த ஆப்பமும், ஜிம்பாவே நாட்டில் கிழங்கு மாவில் செய்த தோசையும் ருசியுங்கள். அதன் சுவையில் பண்பாடு ஒளிந்திருக்கும். வணிக உத்தி மறைந்திருக்காது.

7ம் அறிவு-விமரிசனம்


இது சித்தவைத்தியனின் பெருமை பேசும் திரைப்படம்!

”போதிதர்மர், நோக்குவர்மம்” என காதில் விழுந்த டிரைய்லர் சொற்களால் ஈர்க்கப்பட்டு  ‘அட இது நம்ம படம் போல இருக்கே!’ என்ற ஆர்வத்தில் திரைக்கு வந்த இன்றே பார்த்துவிட வேண்டும் என்று, இன்னொரு தமிழார்வ நண்பரையும் இணைத்துக் கொண்டு, “தீபாவளியும் அதுவுமா..வீட்ல இருக்காம?” என்ற மனைவியையும் முறைத்துக் கொண்டு, 7ம் அறிவைப் பார்த்தோம்.

அழிந்து போன தமிழருக்காகவும் அழியாத தமிழுக்காகவும் அர்ப்பணித்து ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவை வைத்து எடுத்துள்ள மாபெரும் திரைப்படம் ஏழாம் அறிவு.

தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவரின் புதல்வியாய் சுருதி, தற்போதைய ஜெனிடிக் எஞ்சினியரிங் மூலம், மூத்த தமிழன் போதிவர்மனின்(சூர்யா) ஆற்றலை மீட்டெடுத்து, நம் மூலிகை மருந்துகளால் நாட்டு மக்களையும், நம் வர்ம-களரிக் கலையால் நாட்டையும் காக்கும் படம் 7ம் அறிவு.
தமிழனின் தன்னிகரற்ற அறிவை, ஆற்றலை இவ்வளவு தெளிவாகச் சொன்னமைக்கு முதலில் கை கொடுங்கள் முருகதாஸ்!

மகேந்திரவர்ம பல்லவனின் புதல்வனால் இங்கிருந்த களரியும் வர்ம்மும் சீனத்துக்குப் போய் குங்ஃபூவாகவும் கராத்தேயாகவும் ஆனது என்று திரையுலகில் முதலில் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.

இங்கிருந்த தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் சீனத்து மருத்துவத்துடன் சேர்ந்து செறிவூட்டப்பட்டது. சீன மருத்துவத்திற்கு மேலான, இணையான மருத்துவ அறிவு தமிழனிடம் இருந்தது என்பதை எடுத்துச் சொன்னமைக்கு தமிழனாய் சித்த மருத்துவனாய் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஈழத்தில் வீழ்த்தப்பட்ட்து தமிழனின் வீரம் தாழ்ந்ததால் அல்ல. 9 நாடுகளின் கூட்டணித் துரோகம் தான் என்பதைச் சொன்னமைக்கும், தமிழ் பேசுவதை தவிர்க்கும்/எதிர்க்கும் மயிர் நரைத்த உள்னாட்டு வெள்ளையரை தோலுரித்தமைக்கும், கூடுதல் நன்றியும் வணக்கமும்.
போதிவர்மனின் டி என்.ஏ-ஐ, ஜெனிடிக் எஞ்சினீயரிங் செய்து தான் தமிழனின் ஆற்றலை வெளிக் கொணர வேண்டும் என்றல்ல, உள்ளடங்கியிருக்கும் அந்த அறிவுச் சுரங்கத்தை முயற்சி எனும் ஆயுதத்தால் கூட கொண்டுவரமுடியும் என கருத்துச் சொன்னமைக்கும், மஞ்சளையும் வேப்பிலையும் சாமியாகச் சொல்லாமல் சயன்ஸாக சொல்லுங்கள் 6ம் அறிவை அடையாளம் காட்டியமைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

இவ்வளவு செய்த நீங்கள், கொஞ்சம் அவசரப்பட்டு ஏன் இட ஒதுக்கீடை சாடுகிறீர்கள்? அந்த ஒதுக்கீடு கிடைக்காமல் போனால் இன்னமும் உண்மைத் தமிழனாகிய நீங்களும் நானும் என்ன இப்போது செய்திட முடியும்? கொஞ்சம் மனசாட்சியை மறந்து விட்டீர்களே
போதிவர்மர் காலத்தில் சொன்னப்பட்ட நூலாக, அவசரப்பட்டு சரகசம்ஹிதையைச் சொல்லிவிட்டீர்களே.. அதற்கு முன்பே தமிழனின் மருத்துவ நூலான தொல்காப்பியம் முதலான பல சித்தமருத்துவ தமிழ் நூல்களை அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும்? கொஞ்சம் தமிழறிஞர்களை ஆய்வறிஞர்களை சித்த மருத்துவர்களை கலந்தாய்வு செய்திருக்கலாமே!.. நியாமாகப் பட்டால் இப்போது கூட அந்த வரிகளை  நீக்க இயலுமா என யோசியுங்கள்! வரலாற்றுப் பதிவுப் பிழைகளும், முரண்களும் தான், இத்தனைகாலம் தன் வரலாறு தெரியாமல் தமிழனை கொண்டு சென்றிருப்பதை மறுக்க மாட்டீர்கள் என கருதுகிறேன்.

சிவப்புத்தோல் சுருதியின் நவீன தமிழும், நோக்குவர்மத்தால் நோகாமல் நொங்கு எடுக்கும் வில்லத்தனமும் கதையின் ஓட்டத்திற்கு கொஞ்சம் ஒட்டமறுப்பதும்  மேற்சொன்ன ஒரு சில பிழைகள் தவிர்த்துப் பார்த்தால், 7ம் அறிவு தமிழனின் திரையுலகப் பதிவில் மைல்கல்.

Thursday, 15 December 2011

பார்ப்பான் வீசிய எச்சில் இலை ‘புனிதமாம்’


பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு வீசி எறியும் எச்சில் இலைகள் மீது உருண்டு புரண்டால் தோல் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் இதைச் செய்து வருகிறார்கள். கருநாடக மாநில அரசு கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில், அம்மாநில அறநிலையத் துறையே இந்த சடங்குகளை அனுமதித்து வருவதுதான் கொடுமை. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பார்ப்பான் எச்சில் இலையில் புரளும் இந்த மதச் சடங்கு மங்களூர் அருகே தட்சிண கன்னட மாவட்டத்திலுள்ள “குக்கே” சுப்பிரமணிய சாமி கோயிலில் மூன்று நாட்கள் நடக்கின்றன.
இந்த மூன்று நாட்களிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் கோவில் செலவில் பெரும் விருந்து போடப்படுகிறது. ‘ஓசி’யில் மூன்று நாட்களும் தின்று கொழுக்கும் பார்ப்பனர்கள், ‘மிச்சம் மீதி’ களை எச்சில் இலையில் வைப்பார்கள்; அதற்காகவே காத்திருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயில் வளாகங்களில் இந்த எச்சில் இலைகளை அப்படியே எடுத்து வந்து அடுக்கி வைத்து, அதில் உருண்டு புரளுவதை பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள். இதனால் “தோல் வியாதிகள்” குணமாகிவிடும் என்றும், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் பார்ப்பனர்கள் நம்ப வைத்துள்ளனர்.
இந்த மடமை – பார்ப்பன சடங்குக்கு ‘மடே ஸ்நானா’ என்று பெயர் சூட்டப்பட்டு, 400 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறதாம். கடந்த ஆண்டு முதல் மனித மாண்புக்கே எதிரான இந்த காட்டுமிராண்டி சடங்குக்கு முற்போக்கு சிந்தனை யாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களிலேயே இதை அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். உள்ளூர் நிர்வாகம் இதை நிறுத்திவிட முடிவு செய்தாலும், பார்ப் பனர்கள், அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு நிறுத்தக் கூடாது என்று எதிர்ப்புகளை தூண்டி விடுகின்றனர்.
தமிழ்நாட்டைப்போல இந்த அவலங்களைக் கண்டித்து மக்களை சிந்திக்க வைக்கும் பெரியார் இயக்கங்கள் கருநாடகத்தில் இல்லை என்பதால், ஒடுக்கப்பட்ட மக்களும் ‘விட்டில்பூச்சி’களாக பார்ப்பன சதியில் விழுந்து கிடக்கிறார்கள்.
இந்த மனிதவிரோத பார்ப்பனியத்தை தடை செய்யக்கோரி கருநாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மாநிலத் தலைவர் கே.எஸ்.சிவராமு, கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து போடுவதை நிறுத்த வேண்டும் என்றும், மதம், நம்பிக்கை என்ற போர்வையில் இத்தகைய அறிவியலுக்கு எதிரான நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறினார்.
காவல்துறை பாதுகாப்பு இருந்தும், கும்பல் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியது. தப்பித்து ஓட முயன்ற அவரை வன்முறைக் கும்பல் துரத்திச் சென்று தாக்கியது. அதற்குப் பிறகே காவல்துறை தலையிட்டு, மருத்துவமனையில் அவரைச் சேர்த்தது. அறிக்கை ஒன்றை தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாகவும், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் சிவராமு தெரிவித்தார். தன் மீது தாக்குதல் நடத்திய பிற்படுத்தப் பட்ட மக்கள் அப்பாவிகள் என்றும், கோயில் அர்ச்சகப் பார்ப்பனரின் தூண்டுதலில் அடியாள் களாக மாறி தாக்கினர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோயிலில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு அதிகம் என்று கூறப்படு கிறது. இதே மாவட்டத்திலிருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வித் துறை அமைச்சராக இருக்கும் வி.எஸ். ஆச்சாரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், “இது மக்களின் நம்பிக்கை; அதில் தலையிட்டு தடை செய்தால், மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்” என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் இந்தப் பார்ப்பன அமைச்சர் ஒரு மருத்துவர். வழக்கறிஞரும், மாநில பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் முன்னாள் தலை வருமான டாக்டர் சி.எஸ். துவாரகாந்த் கூறுகையில், மீண்டும் பார்ப்பன மேலாதிக் கத்தை நிலைநிறுத்த விரும்பும் ஆர்.எஸ். எஸ்.சின் செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார். இப்படி மனித நாகரிகத்துக்கு எதிரான சடங்குகளை நடத்தும் இந்தக் கோயிலை நோக்கித்தான், பெரும் அரசியல் தலைவர்களும், சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் “நட்சத் திரங்களும்”, ரவி சாஸ்திரி போன்ற பார்பபன கலைஞர்களும் அண்மைக்காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மதச்சார்பற்ற கட்சிகளாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளும், பா.ஜ.க.வைப் போலவே தங்களது ஓட்டு வங்கியை மட்டுமே குறி வைத்து இந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்க்காமல் மறைமுகமாக ஆதரித்தே வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதேகோயிலில் ‘அஜலு’ என்ற பெயரில் ஒரு சடங்கு நடந்து வந்தது. பார்ப்பனர்கள் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையில் மிச்சமிருப்பதோடு, தங்கள் தலைமுடியையும் நகத்தையும் வெட்டிப் போட்டு பிச்சையாகக் கொடுப்பார்களாம். ‘கொரகா’ என்ற பழங்குடி மக்கள் அதைப் பிச்சையாகப் பெற்று பயபக்தியுடன் சாப்பிடுவார்களாம். இந்த பார்ப்பன சடங்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தடை செய்யப்பட்டது.
மாநில அறநிலையத் துறை அமைச்சராக உள்ள ஏ. நாராயணசாமி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர். இதைத் தடை செய்யவே தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டிலும் பார்ப்பானின் எச்சில் இலையை புனிதமாகக் கருதும் சடங்குகள் மதம், கடவுள், பெயரால் தொடருவதும், அதை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், அமைச்சர்கள் நியாயப்படுத்துவதும், பார்ப்பன வல்லாதிக்கமே நாட்டை ஆள்கிறது என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.
அறிவுத் துறையின் அஞ்சாமை பெரியார்; ஆயுத வழியின் கம்பீரம் பிரபாகரன்
தந்தை பெரியார் – தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், ஒத்த சிந்தனைகளைத் தொகுத்து ‘தந்தையும் தம்பியும்’ என்ற நூலை நாளந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் வெளியீட்டு விழா 2.12.2011 மாலை சர். பி.டி. தியாகராயர் அரங்கில் நடந்தது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் வை.கோ. நூலை வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர். இயக்குநர் தமிரா அனைவரையும் வரவேற்றார். பதிப்பாசிரியர் பொ.தங்கபாண்டியன் நன்றி கூறினார். அவர் நூலின் அணிந்துரையில் எழுதியுள்ளதன் ஒரு பகுதி:
“சென்னை ராஜதானியின் முதலமைச்சராக நீங்கள்தான் அமர வேண்டும் என்று இரண்டு முறை பெரியாருக்கு ஆசை வார்த்தைக் காட்டினார் ராஜாஜி. “பார்ப்பானும் சூத்திரனும் இல்லாமல் ஒழிந்த காலத்தில் வேண்டுமானால் பதவியைப் பற்றி நாம் யோசிப்போம்” என்று மறுதலித்தார் பெரியார். டெல்லி அசோகா விடுதியின் தனி அறையில் பிரதமர் ராஜீவின் தூதுவர்களாக வந்தவர்கள். ‘வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக உங்களை ஆக்குகிறோம். நீங்க இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொன்னபோது, “இந்த முதலமைச்சர் பதவிக்காக இத்தனை உயிர்களை நாங்கள் பலியிடவில்லை. தமிழரின் பூர்வீக தாயகத்தை தனி நாடாக ஆக்கினால் மட்டுமே ஏற்பேன்” என்று நிராகரித்தவர் பிரபாகரன். “எல்லாப் பதவிகளும் நாம் துப்பிப் போட்ட தாம்பூலங்கள்” என்றவர் பெரியார். “தமிழீழம் கிடைத்தால் அப்போது சமூக சேவகனாக குழந்தைகள் காப்பகத்தை நடத்திக் கொண்டிருப்பேன்” என்றவர் பிரபாகரன்! ‘தந்தையும் தம்பியும்’ என்ற புத்தகத்தை உருவாக்க இதைவிட என்ன பொருத்தம் வேண்டும்?
“ஜனநாயக” நாட்டில் பெரியார். ஜனநாயகம் முழுமையாக செத்துப் போன நாட்டில் பிரபாகரன். இரண்டு பேருமே வீட்டைவிட்டு ஓடிப் போனவர்கள். சொந்த நாட்டு அரசாங்கத்தால் உதாசீனப்படுத்தப்பட்டவர்கள். பெரியாரை, எடுத்ததற்கெல்லாம் கைது செய்தது இங்குள்ள அரசு. பிரபாகரனை அந்த நாட்டு அரசு பிடிக்கவே முடியவில்லை. ‘நான்சென்ஸ்’ என்று பெரியாரை விமர்சித்தார் பிரதமர் நேரு. ‘டெரரிஸ்ட்’ என்று பிரபாகரனை உருவகப்படுத்தினார் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா. எல்லாவிதமான போராட்டங்களையும் நடத்தினார் பெரியார். எல்லா விதமான படைகளையும் வைத்திருந்தார்பிரபாகரன். யாராலும் இவர்கள் இருவரையும் வீழ்த்த முடியவில்லை. இருவருமே கட்சியை, அமைப்பை நடத்துவதில் ‘சர்வாதிகாரிகள்’ என்று சொல்லப்பட்டனர். ஆனால், கறார் மனிதர்களாக மட்டுமே இருந்தனர். பொது வாழ்க்கையில் நாணயக் குறைவாக மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் அப்பழுக்கற்ற மனிதனாக வலம் வந்தார் பெரியார். பிரபாகரனுக்கு ஆன்டன் பாலசிங்கத்தின் மனைவி கொடுத்த சான்றிதழ் ஒன்று போதும். அது இந்தப் புத்தகத்தில் இருக்கிறது!
உலகத்தின் அத்தனை சீர்திருத்தவாதிகளும், “நான் சொல்வதுதான் சரியானது” என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெரியார் மட்டும்தான், “நான் சொல்வது என் அறிவுக்கு மட்டுமே சரியானது. தவறாக இருந்தால் என்னிடம் வாதம் செய்யுங்கள். தவறு என்றால் என்னிடம் எதிர்த்து நில்லுங்கள்” என்று சொன்ன வார்த்தைப் புரட்சிக்காரன்! உலகத்தின் எத்தனையோ போராளித் தலைவர்கள், “என்னுடைய லட்சியத்தில் இறுதி வரை உறுதியாக இருப்பேன். மரணத்தைக்கூட வெல்வேன்” என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பிரபாகரன் மட்டும் தான், “தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் விலகினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்” என்று தீர்ப்பளிக்கும் உரிமையை தனக்குப் பக்கத்தில் இருப்பவனிடமே கொடுத்த மாவீரன்!
அறிவுத் துறையின் அஞ்சாமை பெரியார் என்றால், ஆயுத வழியின் கம்பீரம் பிரபாகரன். இரண்டையும் இணைக்கும் அறிவாயுதமே இந்தப் புத்தகம்! காலம் தனக்குத் தேவையானதை இதில் இருந்து தேர்வு செய்யட்டும்! – என்று அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த அணுமின் விபத்துகள்


அணுமின் நிலையங்களில் நேர்ந்த விபத்துகளைப் பட்டியலிட்டு ‘தினமணி’ நாளேட்டில் ஆர்.எஸ். நாராயணன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: இந்திய அணுமின் நிலையத் தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறும்போது, “எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட அணு உலைகள் அனைத்தும் எப்படிப்பட்ட பூகம்பத்தையும் எப்படிப்பட்ட சுனாமியையும் தாங்கும் சக்தி படைத்தது” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் எப்படி அணு உலைகள் பத்திரமாக இயங்கி வரும் இலட்சணத்தை அறிவது நன்று. மொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே வழங்கும் அணுசக்தித் துறை விஞ்ஞானிகளின் அலட்டலுக்கு ஒரு குறையுமில்லை. தாராப்பூரில் மட்டும் 1980 களில் தொடங்கி இன்று வரை சுமார் 400 தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியிலிருந்து 200 கி.மீ. தூரத்திலுள்ள நாரோராவில் தீ விபத்து ஏற்பட்டு அணு உலை கட்டடம் வரை தீ பரவியது. அப்போது அமைக்கப்பட்டிருந்த அவசரநிலை ஏற்பாடுகள் எதுவும் வேலை செய்யவில்லை. நல்லவேiயாக தீ தானாகவே அணைந்துவிட்டதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கைகாவில் சோதனையின்போது தவறான வடிவமைப்பால், கட்டுமானம் சரிந்தது. நல்லவேளையாக அப்போது அணுஉலை வேலை செய்யாததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சுக் கழிவுகள் 1995 இல் ஏரியில் விடப்பட்டதை மூன்று மாதம் கடந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2003 இல் கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர். இந்திய அணுசக்தி வரலாற்றில் பணியாளர்கள் நேரிடையான கதிர்வீச்சுக்கு ஆளானது அனுமதிக்கப்படும் அளவுக்கு மேல் தாக்கப்பட்டதில் மோசமான ஒன்று.
கைகா அணுமின் நிலையத்தில் தொழிலாளர்களின் சிறுநீர்ப் பரிசோதனையின் போது கூடுதல் அளவில் ட்ரைட்டியம் இருப்பது புலனானதைத் தொடர்ந்து 2009 இல் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. விசாரணையின்போது தெரியவந்த விவரம் குடிதண்ணீர்த் தொட்டியில் ட்ரைட்டியம் கலந்துள்ளதும் புலனாயிற்று. ட்ரைட்டியம் குருதியில் கலந்தால் புற்றுநோய் ஏற்படும்.
1962 இல் இயற்றப்பட்ட அணு மின்சாரச் சட்டம், அணுசக்தித் துறைக்கு அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மையை மறைக்கும் அதிகாரம் – “நமது அணுசக்தி பலம் பாகிஸ்தானுக்கோ – சீனாவுக்கோ தெரிய வேண்டாம்” என்பது சரி. ஆனால், இயந்திரக் கோளாறு – அவசரகால பாதுகாப்பு கோளாறு – கட்டுப்படுததப்படாத கதிர்வீச்சுக் கழிவு…. பற்றிய செய்திகளை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படியோ 2 ஜி ஊழல்போல் கசிந்து விடுகிறது.
யுரேனியம் தோண்டி எடுப்பதிலிருந்து அணுஉலை செயல்படும் வரை நிகழ்த்தப்படும் அணு எரிசுழற்சியில் – ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சுக் கழிவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மண்ணில் சேரும் இக்கழிவின் கதிர்வீச்சு சக்தியின் ஆபத்து ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அணுமின் கழிவு பற்றிய ஆபத்தைப் பற்றி அணுமின் துறை ஒப்புக் கொள்ளவே மறுக்கிறது.
வங்காள விரிகுடாவில் எந்தவிதமான சுனாமியும் ஏற்படாது என்றோ – கடல் நீர் பெருக்கெடுத்து கடற்கரை நகரை அழிக்காது என்றோ என்ன உத்தரவாதம் உள்ளது? பாண்டியர் துறைமுகம் கொற்கை அழிந்தது. சோழர் துறைமுகம் பூம்புகார் அழிந்தது. பல்லவர் துறைமுகம் மாமல்லபுரமும் அழிந்தது. அப்படி இருக்கும்போது, கல்பாக்கமும், கூடங்குளமும் அழிக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிரா என்ன? ஒருக்கால் அப்படி அழியுமானால்… மக்களோ, மரமோ, பயிரோ எஞ்சினால் நமது வாய்ப்பு தான்! இவ்வளவு மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கூடங்குளம் அணுமின் உலைகள் நிறுவப்படுமானால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்கு மட்டும் கிடைத்தாலே போதும்; கூடங்குளம் தேவை இல்லை கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ள கருத்துகளை முழுமையாக மறுத்து பழ.நெடுமாறன், அப்துல்கலாமுக்கு திறந்த மடல் ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் மக்கள் தேவைக்கு தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரமே போதுமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப் படுவதால் தான் இந்த நெருக்கடி என்றும் விளக்கியுள்ளார். பழ. நெடுமாறன் கட்டுரை யிலிருந்து ஒரு பகுதி:
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப் பெரிய செய்தியாகும்.
கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி நீங்கள் செய்திருக் கிறீர்கள்.
உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?
ஏற்கனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங் களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய் வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.
தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக் குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும், பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப் படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்த மாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும் – என்று பழ.நெடுமாறன் எழுதியுள்ளார்.

Wednesday, 14 December 2011

உங்கள் மகளுக்கு 14 வயதா? எச்சரிக்கை...அவசியம்...


உங்கள் பெண்ணுக்கு 12 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே... நீங்கள் அவளை கண்கானிப்பது நல்லது என்றே கருதுகின்றேன்... அவளோடு அன்பு பாராட்டுங்கள்...மிகச்சீக்கரமாக அவள் மனதை கெடுக்கும் விதமாக பல விஷயங்கள் நம் சமுகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது...

கலாச்சாரத்தில் போ் போனவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் நம் இந்தியாவில் பஞ்சாப்பில், திருமணத்துக்கு முன் சோதனையிடப்பட்ட பெண்களில் 16 பேர் கர்பம் என்று தெரியவந்துள்ளது....நீங்கள் கலாச்சார முகமூடி வேண்டுமானல் போட்டுக்கொள்ளுங்கள்... அவர்களை இரண்டும் கெட்டானாக வளர்க்காதீர்கள்....

வலைதளத்தில் இரண்டு வீடியோக்கள் பார்த்தேன் ஒன்று ...

14 அல்லது 15 வயது மதிக்கத்க்க பெண் பிள்ளை. அது யுனிபார்முடன் இருக்கின்றது அவன் அந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, மெல்ல எல்லா உடைகளையும் களைகின்றாள் மார்பு கச்சையை தவிர, அதன் பிறகு அந்த பெண்ணை அவன் இச்சைக்கு பயண்படுத்திகொள்கின்றான்...அதன் பிறகு அந்த பெண்ணை அவள் வேண்டாம் என்று சொல்லியும் முழு நிர்வானமாக்கி ,காம போதையில் அந்த பெண்ணை திளைக்க செய்து அதை வீடியோ படம் எடுத்து வைத்து, அது இப்போது வலையுலகில் உலா வருகின்றது....

வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதுவும் இப்போது தெரியாது... ஏன் சம்மந்தபட்ட அந்த பெண்ணுக்கே அது பற்றி தெரிய வாய்பில்லை.. அவள் அப்பார்ட்மென்டடில் குடி இருக்கும் யாராவது வலையில் பார்த்து விட்டால்? அந்த வீடியோவை வைத்து மிரட்டியே அந்த பெண்ணைமனசாட்சி இல்லாதவர்கள் சாப்பிட்டு விடுவார்கள்...

சரி இதெல்லாம் மெல்தட்டு மக்களிடம் மட்டும்தான் நடக்கும் இது கீழ் தட்டு மக்களை ஏதும் செய்யாது என்று தயவு செய்து நினைக்காதீர்கள்... இந்த இரண்டாவது வீடியோ அந்த நினைப்பை தவிடு பொடியாக்கியது....

அது ஒரு அரசு பள்ளியின் மாடிபடிகட்டு. அதில் அந்த பெண் படிக்கட்டில் உட்கார்ந்து இருக்கின்றான்...அந்த பெண் பள்ளியின் சீருடை அணிந்து இருக்கின்றாள்...15 வயதுக்கு மேல் சொல்ல முடியாது... அந்த சின்ன பெண்ணை ஓரல் செக்சுக்கு அவன் உட்படுத்துகின்றான்... அவள் முதலில் மறுக்கின்றாள் பின்பு ஒத்துக்கொள்கின்றாள்..“அதன்” மேல் இருக்கும் நாற்றத்தில் அவளுக்கு வாந்தியே வந்து விடுகின்றது, அவன் கேமரா செல்போனை அவன் பக்கம் திருப்பி, தன் பராக்கிரமத்தை பறைசாற்றி ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்கின்றான்...


அந்த பெண் அனுபவித்தது காமம் அல்ல நரக வேதனை... இந்த செயல் மலம் அள்ளி அந்த பெண்ணை தின்ன செய்வதற்க்கு சமம்... இதில் கொடுமை என்னவென்றால் இனி அந்த வீடியோவை காட்டியே அந்த பெண் மிரட்ட படலாம்.... அவன் நண்பர்களுக்கு அவள் விருந்து வைக்கபடலாம்....

வலைதளத்தில் மட்டும்தானே இதனை பார்க்க முடியும் என்ன ஒரு 25 சதவீதப்பேர்தானே, என்று அலட்சியம் காட்டாதீர்கள்... இது போன்ற வீடியோக்கள் வலைதளம் மூலம் டவுன்ட்லோட் செய்யபட்டு தென் மாவாட்டங்களில் சிடியாகவும் விற்பனை ஆகின்றது.... பட்டி தொட்டி, எல்லாம் விஷக்காய்சல் போல் வெகு விரைவாய் பரவுகின்றது...


இன்னும் இது பற்றிய விழிப்புனர்வு நம்மவர்கள் மத்தியில் அதுவும் பெண்கள் மத்தியில் சுத்தமாக இல்லை...சில வாரங்களுக்கு முன் இது போன்ற கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டது....இன்னும் இது வெகுஜனமக்களுக்கு போய் சேர வேண்டுமாயின், தற்போதைக்கு தொலைக்காட்சி தொடர்களில் இது போன்ற கதை அமைப்பை வைக்கலாம்....

என் கல்லூரி பெண்களிடமும், எனக்கு தெரிந்த பெண்களிடமும் பேசிய போது அப்படியா? இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று முகத்தில் ஆச்சர்யம் காட்டுகின்றார்கள்... என்னை பொறுத்தவரை நமக்கு தெரிந்த பெண்களிடம், உறவு பெண்களிடத்தில் முதலில் விழிப்புனர்வு ஏற்படுத்துவோம்.....

எங்கோ, எப்படியோ, எதோ ஒரு தருணத்தில் அவள் தன்னை மறந்து ஈடுபட்ட காரியம்.... இப்போது அந்த செயல் வரலாற்று பதிவாக வலைவுலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது... அந்த பெண்ணின்தகப்பனையும் அந்த பெண்ணின் அம்மாவையும் சற்றே எண்ணிபாருங்கள்... எவ்வளவு பெரிய அவமானம் இது... வெளியில் தலைகாட்ட முடியாது....காதலித்து ஓடிப்போதலையே இன்னும் தேவிடியா தனத்துக்கு ஒப்பாக பேசி வரும் நம் சமுகம்....இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை பார்வையால் பார்த்தே சாகடித்து விடுவார்கள்...

என்னதான் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும்...கேமரா செல்போனை பற்றியும் உங்கள் வயதுக்கு வந்த பெண்ணுக்கும், வயதுக்கு வரபோகின்ற பெண்ணுக்கும் புரியவையுங்கள்....சின்ன பெண்கள்தான்... ஆர்வகோளாறு என்று நீங்கள் சொன்னாலும் 40 வயதை கடந்த பெண்களும் இதில் மாட்டிக்கொள்வதுதான் வேதனை... அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்....

குறிப்பு... உடைகளையும் முன் யோசியுகள் பெண்களே கட்டுரைக்கு சில விமர்சனங்கள் முன் வைக்கபட்டன...விரிவான விவரனை என்பதாக குற்றச்சாட்டு வைக்கபட்டது... அது உங்கள் கருத்து... எதை எப்படி, எழுதவேண்டும் ,எதோடு நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும்... இங்கு யாரும் எனக்கு பயிற்ச்சி எடுக்க வர வேண்டாம்....மிக முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த தளத்திற்க்கு அனுமதி இல்லை.... அதே போல் நான் நல்லவன் என்று ஒரு போதும் சொன்னது இல்லை... அந்த முகமூடி எனக்கு கனக்கச்சிதமாக பொறுந்துவதும் இல்லை....நான் கடைசிவரை நல்லவனாக முயற்ச்சிக்கின்றேன் அவ்வளவே...

கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை...



நீங்கள் சென்னையில்   வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு.... 




எங்க வீட்டு பசங்க..நான் கிழித்த கோட்டை தாண்டுவதே இல்லை... அவளுக்கு நான் என்றால் உசிர் என்று நீங்கள் உங்கள் பெண்ணை விட்டுகொடுக்காமல் இருந்தால்... சந்தோஷம்....ஆனால் நாடடில் நடப்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை உங்கள் பெண் அப்பாவியாக இருந்தால் இந்த செய்தியை கதை போல் சொல்லி  அவளுக்கு விஷயத்தின் தீவிரத்தை புரிய வைப்பது நலம்....


நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள  லாட்ஜிகளில் நடந்த ரெய்டில்...25 காதலர்கள் பிடிபட்டு இருக்கின்றார்கள்...இதில் கள்ளகாதல்களும் அடக்கம்... போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு.....


உங்க மேல  விபச்சார வழக்கு போட போறேன்... நீங்க இரண்டு பேரும்  விபச்சாரம் செஞ்சிங்கனன்னு  உங்க மேல கேஸ்போட போறேன் என்று  ஒரு வார்த்தை சொன்னாலே.. போதும்  நிச்சயம் அடித்து பிடித்து பணத்தை ரெடி செய்து சொன்ன தொகையை கட்டி விட்டுதான்  அந்த ஜோடிகள் வந்து இருக்க முடியும்.... அல்லது நேர்மையாக  எச்சரித்து அனுப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது...ஆது போல் நடக்க 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு... 





5 வருடத்துக்கு முன் காதலர்கள் அதிகம் நாடுவது சென்னை பீச்...மற்றும் பெசன்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா  போன்றவைதான்..  சென்னையில் வாகன பெருக்கம் அதிகமானதால் காதலர்களும் இட்ம் மாற தொடங்கினர்.... இங்கு இருந்து 60 கீலோமீட்டர்... தெரிந்தவர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.. அதனால் மகாபலிபுரம் காதலர்களின்  வேடந்தாங்கல் ஆகி வெகு நாட்கள் ஆகின்றது....


இதில் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும்  போது தனிமையான சவுக்கு தோப்புகளில் இவர்கள் வாகனத்தை நிறுத்தி ரிப்பிரஷ் செய்து கொள்ள  தொப்பின் உள்ளே போகும் போது.. அதை பல ஜோடிகண்கள் நோட்டம இடுகின்றன....பல கடற்கரையோர கிராமத்து  வெட்டி இளைஞர்களின் காம பசிக்கு காதலன்  கண் முன்னே பல காதலிகள் இரையாவது தொடந்து நடந்து கொண்டு இருக்கும் ஆப் த ரெக்கார்ட் கொடுமை... 


ஒரு காதலன் இரண்டு மாதங்கள் மந்திரித்து விட்டது போல் இருக்க... அவனுக்கு புல்லாக தண்ணி ஏற்றி விட்டு விஷயத்தை கேட்க அழுதுக்கொண்டே தன் காதலி தன் கண்முன் கடற்கரை  ஓர சவுக்கு தோப்பில் நான்கு பேரால் வன்கொடுமைக்கு அவனது காதலி  உள்ளாக்கபட்டு இருக்கின்றார்...யோசித்து பாருங்கள்  அது எவ்வளவு கொடுமை என்று....இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால்... அந்த   பெண்ணை சின்னா பின்ன படுத்தி விட்டு கடற்கரை மணலை அள்ளி அந்த பெண்ணின் பெண்உறுப்பில் கொட்டி விட்டு போயிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கரம் நிறைந்தவர்கள் என்று யோசித்து பாருங்கள்.... அதுமட்டும் அல்ல அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பிடிங்கிகொண்டு அனுப்பி இருக்கின்றார்கள்...



இந்த சம்பவங்கள்  காவல் துறை கவனத்துக்கு வரவேயில்லை.... காதலி வீட்டில் வழிப்பறியில் நகைகள் விட்டதாக சொன்னாலும்... இன்னும் இவன் முகத்தில் அவள் விழிக்க மறுக்கின்றாளாம்... இது போல் கவுரவம் கருதி  வெளி வராத விஷயங்கள் நிறைய... அதுதான் அவர்கள் திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்கின்றது... தெரியத்துக்கு வழி கோலுகின்றது..




தனியாக ஒருவனிடம்  ஒரு பெண்  மாட்டினால் கூட சேதம் குறைவாக இருக்கும்... அதுவே  நான்கு பேர் எனும் போது... அது உச்சகட்டத்தை அடைந்து விடும்..அவனை விட நான் ஏதாவது  புதுமை செய்கின்றேன் பார். என்று கும்பலில்.... தன்னை முன்னிலை படுத்த எதையும் செய்வார்கள்.. அவர்கள் குடி போதையில் இருந்து விட்டால்..... கேட்கவே வேண்டாம்...வக்ரம் எல்லை மீறும்....


நானும் என் மனைவியும் பாண்டிசேரிக்கு மாலை 5 மணிக்கு கிளம்பினோம்.. மயாஜாலை  எங்கள் வாகனம் கடக்கும் போது  மணி 5,45... அதிலிருந்து ஒரு 20 கிலோமீட்டரில் இது பக்கம் ஒரு சின்ன ஓய்வு இடத்தை சின்ன பார்க் போல செய்து வைத்து இருப்பார்கள்... அங்கிருந்து பார்க்கும் போது மிக ஆழகாக கடல் இருக்கும்.....


மகாபலிபுரம் அல்லது பாண்டிக்கு போகும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இளைப்பாறி விட்டு, ஒரு டீ குடித்து விட்டு இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு செல்ல ஒரு அற்புதமான இடம்.... அதன் எதிரில் சுனாமி அலை தாக்காம்ல் இருக்க சவுக்கு நட்டு இருந்தார்கள்... அது  ஆளுயரத்துக்கு வளர்ந்து இருந்தது...6 மணி ஆகி இருட்டும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அங்கொன்றும் ,இங்கொன்றும் ஆக மனித தலைகள் தெரிய... சொன்னால் நம்ம மாட்டிர்கள்... ஒரு 50 ஜோடிகள் மேட்டை நோக்கி டிராய் படத்தில் வரும் கப்பல்கள் போல்  நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்....

காதலர்களாக பைக்கில் பறந்து... போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டு... அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேக்க.... அழுதுக்கொண்டும், கதறிகொண்டும் இருக்கும்  பலரை அந்த பக்கம் கல்லூரிக்கு போகும் போது  பார்த்து இருக்கின்றேன்...


இவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது...நாம் ஒன்று பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம்  வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்....


உங்கள்  வீடோ அல்லது எதிர் வீடோ யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும்... ஒரு செய்தியை சொல்வது போல் சொல்லி கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது....