Tuesday, 20 December 2011

இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்



தமிழ்நாட்டில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தாலும் தமிழர்களால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாமல் போவதற்கு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் மலையாளிகள்தான் காரணம்.

முல்லைப் பெரியாறு அணை பலம் இழந்து விட்டதென பொய் திட்டங்களைத் தீட்டி, ரகசியமாக அமுல்படுத்துவதும் மலையாள அதிகாரிகள் குழுதான்.....

மத்திய அரசின் ஆதிக்க வர்க்கத்தில் இருக்கும் மலையாளிகளின் பட்டியல் இதோ....

1. என். பெர்னாண்ட்ஸ் - இந்திய ஜனாதிபதியின் செயலாளர்.
2. வி. கே. தாஸ் - இந்திய ஜனாதிபதியின் தனிச் செயலாளர்.
3. டி. கே. ஏ. நாயர் - இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர்.
4. என். நாராயணன் - இந்தியப் பிரதமரின் முக்கிய ஆலோசகர்.
5. பி. ஸ்ரீதரன் - இந்திய மக்களவைச் சபாநாயகரின் தனிச் செயலாளர்.
6. கே. எம். சந்திரசேகர் - இந்திய அமைசரவைச் செயலாளர். 
7. ருத்ர கங்காதரன் - இந்திய விவசாயத்துறைச் செயலாளர்.
8. மாதவன் நம்பியார் - இந்திய விமானப் போக்குவரத்துத்துறைச் செயலாளர்.
9. நிரூபமா மேனன் ராவ் - முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் & தூதர்
10. சத்திய நாராயண தாஸ் - இந்திய கனரகத் தொழிற்துறைச் செயலாளர்.
11. ஜி. கே. பிள்ளை - இந்திய உள்துறைச் செயலாளர்.
12. சுந்தரேசன் - இந்திய பெட்ரோலியத் துறைச் செயலாளர்.
13. கே. மோகன் தாஸ் - இந்தியக் கப்பல்துறைச் செயலாளர்.
14. பி. கே. தாமஸ் - மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் (தற்போது பதவியில் இல்லை...?)
15. சுதாபிள்ளை - இந்தியத் திட்டக்குழுவின் செயலாளர்
16. வி. கே. சங்கம்மா - இந்திய வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலர், செயலாளர்.
17. ஆர். கோபாலன் - இந்திய நிதிப்பணிகள் துறை இயக்குனர்.
18. கே. பி. வி. நாயர் - இந்திய செலவீனங்கள் துறைச் செயலாளர்.
19. கே. ஜோஸ் சிரியாக் - இந்திய வருவாய்த்துறைச் செயலாளர்.
20. ஆர். தாமஸ் - இந்திய வருமானவரித் துறைச் செயலாளர்.
21. வி. ஸ்ரீதர் - இந்திய சுங்கத்துறைச் செயலாளர்.
22. பி. கே. தாமஸ் - இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர்.
23. ஏ. சி. ஜோஸ் - இந்தியக் கதர் வாரியச் செயலாளர்.
24. சி. வி. வேணுகோபால் - இந்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகச் செயலாளர்.
25. ஸ்ரீ குமார் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய இயக்குநர்.
26. கோபாலகிருஷ்ணன் - இந்திய அரசின் மத்தியக் கண்காணிப்பு ஆணைய மூத்த அதிகாரி.
27. நந்தக் குமார் - இந்திய கூட்டுறவுத் துறைச் செயலாளர்
28. ரகுமேனன் - இந்திய செய்தி ஒலிபரப்புத்துறைச் செயலாளர்.
29. ராமச்சந்திரன் - இந்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்.
30. ரீட்டாமேனன் - இந்திய ஜவுளித்துறைச் செயலாளர்.
31. விசுவநாதன் - சட்டத்துறைச் செயலாளர்
32. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்

அமைச்சர்கள்

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 உறுப்பினர்களில் கேரளாவிலிருந்து 20 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் 15 உறுப்பினர்கள். இவர்களில் 5 நபர்கள் அமைச்சர்கள்.

1. ஏ. கே. அந்தோணி - இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்.
2. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர்.
3. கே. வி. தாமஸ் - இந்திய விவசாயத்துறை இணை அமைச்சர்.
4. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் - இந்திய இந்திய உள்துறை இணை அமைச்சர்.
5. அகமது - இந்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர்.

மிக முக்கியமானவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வீட்டில் அவரது கார் ஓட்டுநர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கனக்குட்டி, தோட்டக்காரர் தாமஸ் என்பவர்களுடன் அவருடைய வீட்டில் வேலை பார்க்கும் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாம். இதையெல்லாம் படித்த பிறகும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

(தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றிலிருந்து...)

Sunday, 18 December 2011

பள்ளி தேர்வுக்காலத்தில் அறிவைத் துலக்கும் உணவுகள்!



கல்வி மீதான அக்கறை கடுமையாகக் கூடி இருக்கும் காலம் இது. இந்த விஷயம் வரவேற்பிற்குரியது தான் என்றாலும், தற்போதைய கல்வித்திட்டம் எந்த அளவிற்கு ஒரு சிறந்த மனிதரை உருவாக்குகிறது என்பதில் சர்ச்சை இருக்கத் தான் செய்கிறது. மதிப்பெண் எடு
க்க, மனப்பாடம் செய்ய தரும் பயிற்சி, ஆளுமையை பெருக்க, சமூக அக்கறையை அதிகரிக்க தரப்படுவதில்லை. அந்த மதிப்பெண்ணும் மனப்பாடப் பயிற்சியுமே ஒரு மாணவனின் உயர்படிப்பிற்கான தகுதியாகக் கருதப்படுவதால், ஒண்றரை வயசிலேயே குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்பெற்றோர் ஏராளம்.
பார்த்து, ரசித்து, பழகி, புரிந்து நகரும் குழவிப்பருவத்தின் மூளையில், இங்கிலீஷ் பாட்டை திணித்து, அதில் மனம் களிக்கும் பெற்றோர் அதிகரித்து வருவது பெரும்
வேதனை. சூப்பர் மேனாகவும், சூப்பர் சிங்கராகவும், சூப்பர் ஸ்டாரகவும் தன் குழந்தையை கற்பனை செய்யும் பெற்றோர், அந்த குழந்தைக்கென ஒரு அற்புதமான மனது இருப்பதை மறக்கவும் மறுக்கவும் செய்வது தான் இன்றைய துரித, நவீன நாகரீக வாழ்வு தந்த பரிசு.
இன்னும் போதாக் குறைக்கு தொழிற்கல்வி மட்டுமே மிகச் சிறந்த விஷயம். அதற்கு, ’வீட்டில் இருந்து படித்தால் சரியாக இராது. விடுதியுடன் கூடிய பள்ளிச் சிறையில் தள்ளு’ என்ற மனோபாவமும் பெருகி விடுதிப்பள்ளிகள் பெருகி வருகிறது. படித்தவுடன் சில பல ஆயிரங்களுடன்/லகரங்களுடன் பன்னாட்டுக் கம்பெனியில் வேலை என்ற ’சு(ப)ய நல நோக்கு’

பெருகியிருப்பதுதான், இந்த அடிமைப் பயிற்சிப்பட்டறையின் அடித்தளம்.
பொதுவாக, பிறக்கும் குழந்தைகளுக்கு மொத்தம் ஒன்பதுவகை புத்திசாலித்தனம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கைபற்றிய அறிவு(Naturalist intelligence),இசை அறிவு( musical intelligence) கணித அறிவு (logical-mathematical intelligence), existential intelligence, ஆளுமை தரும் அறிவு (interpersonal intelligence), உடலை வில்லாக ஆடவைக்கும் அறிவு(Bodily kinesthetic intelligence),மொழி அறிவு(linguistic intelligence), தன்னை உணரும் ஞான அறிவு(intrapersonal intelligence), சிற்பம்-ஓவியம் அறிவு(spatial intelligence) – என்பன தான்
இந்த ஒன்பது வகை அறிவு. இதில் ஒன்று உங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக இருக்கும். அதை கண்டிபிடிப்பது பெற்றோர் கடமை. ”ஹாய்! ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் யுர் டே?,” என விருந்துக்கு வந்தவன் போல் பிள்ளகளை யதேச்சையாகச் சந்திக்கும் பிஸி பெற்றோரால் இதை
கண்டுபிடிக்க முடியவே முடியாது.
நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அதிகம் பேச வேண்டும். கொஞ்சி மகிழ வேண்டும். அவர்கள் அறியாமையை ரசிக்க வேண்டும். அவர்களுடன் படிக்க வேண்டும். கண்ணை விரித்து அவர்கள் ”ரவுலட் சட்டம் பற்றி எப்படிம்மா தெரியும் உனக்கு?” என கேட்டவுடன், பெருமையாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.
சரி..விஷயத்திற்கு வருவோம்..இந்த ’மார்க் மேனியா’ பெருகி இருப்பதில் கூடிவரும் இன்னொரு சிக்கல்..எதை சாப்பிட்டால் என் மகன் ’கணிதப்புலி’ஆவான்? எது குடித்தால் என் மகள் ’விஸ்வனாதன் ஆனந்த்’ ஆவாள்? என்ற தேடலில், ”ஹிஸ்டரி ஜாக்ரஃப்ரியில் 100 வாங்கணுமா - எங்க கம்பெனி எனர்ஜி ட்ரிங்க் சாப்பிடுங்க,”- எனும் விளம்பரங்கள்!. மாலையில் பள்ளி வாசலில் வீட்டுக் குழந்தைகளைக் கூப்பிடக் காத்திருக்கும் பெற்றோர் கூட்டம்”தெரியுமா.. உனக்கு? ராஜேஸ் அப்பா யூஎஸ்-ல இருந்து ஏதோ பிரய்ன் டானிக் வாங்கி வந்திருக்கார்...அவன் போன மாசம் மேக்ஸ்ல செண்ட்டம் வாங்கிருக்கான் தெரியுமா?” எனச் சொல்ல, அருகிலே இருக்கும் ஒரு சூப்பர் மம்மி, “ நோ! நோ!..அது.. இப்ப இந்தியாவிலேயே கிடைக்கிறது.. நான் அதான் என் பையனுக்குக் குடுக்கிறேன்” என புளங்காகிதமாய்க் கூற, கஷ்டப்பட்டு வீட்டை அடகு வைத்து ஸீட் வாங்கின குருவம்மாவும், கிருஷ்ணவேணியும்,வேக வேகமாக அட்ரஸ் வாங்கிக் கொண்டு அந்த சூப்பர் உணவு வாங்க பாதி சம்பளம் தொலைக்க தயாராகிறாகள்.
எது சூப்பர் உணவு? எல்லாமே நல் உணவுதான். வெண்டைக்காய் சாப்பிடால் கணக்கு வரும் என்பதெல்லாம், கொஞ்சம் குழகுழன்னு வரும் வெண்டைக்காயைச் சாப்பிட மறுக்கும் குழந்தையை சாப்பிட வைக்க சொன்ன குட்டிகதை.. வளரும் குழந்தைக்கு தேவையான அளவு கார்போஹைட்ரேட், புரதமும் நல்ல சிறு கனிமங்கள் நிறைந்த காய்கறிகளும், நிறைய பாலிஃபீனல்கள் உள்ள கனிவகைகளும் போதும். முட்டையும் மீனும் குழந்தைகளுக்கு சிறப்பான உணவு.
படிக்கும் குழந்தகட்கு மீன் உணவு ஒரு மிகச் சிறந்த உனவு என்கின்றது தற்

போதைய உணவு அறிவியல். அதிலுள்ள DHAசத்து மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மீன் எண்ணெயில் அந்த DHA சத்து கிடைப்பதால் மீன் எண்ணெய் சாப்பிடுவது நல்லது. மீனில் நேரடியாகக் கிடைக்கும் இந்த DHA, வெஜிடேரியனுக்கு, ஃப்ளாக்ஸ் விதை எண்ணெயில் அதிகம் கிடைக்கும். ஆனால் ஃப்ளாக்ஸ் விதை எண்ணெயில் - இருந்து அதிலுள்ள ஒமேகா சத்து EPA ஆக மாறி, பின் அதிலிருந்து DHA உற்பத்தியாகும். மீனோ, முட்டையோ, பாசிப்பயறு கூட்டோ எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். வெஜிடேரியனாக இருந்தால் கூடுதல் மூளை வளரும் என்பது கட்டுக்கதை. உலகின் நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவீதம் பேர் மீனும் மாட்டு இறைச்சியும் சாப்பிடுபவர் தான். அவரவர், உடலுழைப்பிற்கேற்றபடி, அருகாமையில்
கிடைக்கும் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
படிப்பில் கொஞ்சம் மந்தமான நிலை உள்ள குழந்தைக்கு வல்லாரை கீரையை சட்னியாகச் செய்து கொடுக்கலாம். அதனால் தான் அந்த கீரைக்கு ஞானவல்லி கீரை என்ற பெயருமுண்டு. நீர்ப்பிரமித் தண்டு எனும் மூலிகையை உணவில் சேர்க்க மூளையின் செயல்திறன் கூடுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
நல்ல புத்திசாலியாக இருக்க, குழந்தைக்கு நல்ல தூக்கமும், நல்ல உடல் உழைப்பும் அவசியம். குப்பை உணவுகளைச் சாப்பிட்டு உடலை வளர்க்கும் குழந்தையால் அறிவுத்திறனைப் பெருக்க இயலாது. தினசரி காலையில் காய்ந்த அத்தி, பேரிச்சையை சாப்பிடச் சொல்ல வேண்டும். மாலையில் 5-10 கிஸ்மிஸ் பழங்களைக் கொடுக்க வேண்டும். இனிப்பு அதிகம் சாப்பிட்டால், அது தூண்டும் இன்சுலின் அதிகப்பட்ட நிலையில் மூளையின் செயல்திறன் குறைவதை தற்போது கண்டறிந்துள்ளனர். இனிப்புகளை, வெள்ளை சர்க்கரையை முடிந்த அளவு குறைக்க வேண்டும். இனிப்பு தேவைப்படும் போது லோகிளைசிமிக் தன்மையுடைய தேனோ அல்லது பனங்கருப்பட்டியோ பயன்படுத்துவது நல்லது. சாக்லேட் இனிப்புகளின் மீதான பிடித்தத்தில் இருந்து பழங்களில் விருப்பத்தை அதிகரிக்க வைக்க

வேண்டும்.
வரகரிசிச் சோறும் வழுதுணங்காயும் (கத்தரிக்காயும்) சாப்பிட்ட ஒவ்வையாரை மிஞ்சிய புத்திசாலிப் பெண் யாருமில்லை. வறுமையில், சுட்ட மீனும் ஒரு துண்டு பன்னும் சாப்பிட்ட தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இணையான அறிஞர் இன்றளவில் இல்லை.
ஆதலால், மூளையை வளர்த்து புத்திசாலி ஆக்குவேன் என்று கூறி வரும்’வியாபார அமிர்தங்களைக்’ காட்டிலும், உங்கள் இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டு நிலவைக் காட்டி, பருப்பு சாதத்தை குழைத்து ஊட்டிப்பாருங்கள்! உங்கள் வீட்டுச் செல்லம் உலகை ஆளக் கூடும்!

முதுமையைக் கொண்டாட வைக்கும் உணவுகள்

அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலினை நன்கு அறிந்தவனாகவும் புரிந்தவனாகவும் இருப்பான் என்றார் மகாத்மா காந்தி.அதனால் தான் தன் ஆன்ம பலத்துக்கு ஆதாரமாக எளிய, தனக்கேற்ற உணவிலும் கடைசிவரை பிடிவாதமாகவும் இருந்தார் காந்தி.ஆனால் தற்போதைய உணவுக் கலாச்சாரம் மாறும் வேகம் பயமுறுத்துகிறது. 

சமீபத்தில் ஒருமுறை ஒரு உணவுக் கருத்தரங்கில் ஏராளமான உணவியல் மாணவ மாணவியர் இருக்கும் போது ஒரு பேராசிரியர் பேசும் போது தினசரி ’வைன்’ குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று பேசினார். எந்த அளவு என்பதில் மாணவரும் ஆசிரியரும் விவாதிக்கின்றனர். இன்னொரு முறை மருத்துவத்திற்கு வந்த ஒரு கல்லூரி மாணவியிடம் பத்தியப்பொருட்களாய் ”கத்தரிக்காய் வேண்டாம். பாகக்காய் வேண்டாம்; மஞ்சள் பூசணிக்காய் வேண்டாம்; என்று பட்டியலிட, “அது ஒகே அங்கிள்! வாரம் ஒருமுறை பீர் சாப்பிடலாமல்லவா?,” என்றார். கோட்ஸே குண்டுகளை விட பலமானவை அந்த நிகழ்வுகள். தமிழகத்தில் மதுபானத் தட்டுப்பாடு கோடையில் மிக அதிகமாக உள்ளதென கிட்டத்தட்ட 9 புது மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு லைசன்ஸுகள் வழங்கப்பட்டுள்ளதாம். குடி 300% பெருகி தமிழக அரசின் வருமானம் எக்குத்தப்பாய் ஏறியிருக்கிறதாம். எங்கே செல்கிறோம்? நவீனம் என்பது மேற்கத்தியம் அல்ல என்பதை என்று புரிய போகிறோம்? 

இப்போதல்லாம் ”அறிவியல்” சாயங்கள் அதிகம் பயன்படுவது சந்தையை பலப்படுத்துவதற்குத் தான். என்னையும் உங்களையும் பலப்படுத்த அல்ல என்பதை என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்? சட்டைப்பை முதல் சமையல்தட்டு வரை ஆக்ரமிக்கும் இந்த போலி நவீனம் நம்மை வீழ்த்திடாதிருக்க பாரம்பரிய அறிவு பலம். அதை அவசரத்திலோ அலட்சியத்திலோ தொலைத்துவிடாமல் ஒவ்வொரு மவுனமான சமயத்திலும், நிதானமாய்ப் புரிந்து நடைமுறைப்படுத்த எத்தனியுங்கள். ஏனென்றால், இப்போதே காலை நேர இட்லி தோசை இழுக்காகிப் போய், ஃப்ளேக்ஸும் ஓட்ஸும் ஒய்யாரத்திற்குப் போகிறது. சட்னி சாம்பார் இடத்திற்கு சாஸும் ஷ்க்குவாஷும் சண்டையிடுகின்றன. மதிய உணவு பர்கருக்கும் இரவு உணவு பிட்சாவிற்கும் இடம்பெயர்கின்றன. 

விரித்த விழிகளால் நகரத்தை ஓசி டிவியில் ஒரு வேலையும் இல்லாமல் பார்க்கும் கிராமத்து குடியானவன் ’இது தான் நவீனம் போலும்; நல்லது போலும்’, என்று மலைத்துப் போய் தன் இலவசங்களை மீண்டும் காசாக்கி, ”ஏ சாமி! இது நம்ம ஊர்ல எப்ப வரும் புள்ள..?”என அதை வாங்கத் தயாராய்க் காத்து நிற்கிறான்.அட! பெரிய பேச்செல்லாம் ரொம்ப வேணாம். முதியோருக்கான நல்லுணவு குறித்து மட்டும் பார்ப்போம். 

முதுமைப்பருவம் என்பது இரண்டாம் குழந்தைப்பருவம் என்ற வழக்குமொழி அறிந்ததே. வயசான காலம் என்பது வியாதிக் காலம் என்ற அவல நிலை அவசரமாக உருவாகியோ/உருவாக்கப் பட்டோ வரும் நிலைமை இப்போது. ரிடய்ரமண்ட் பென்ஷன் பலமோ இல்லையோ ரிடய்ர்மண்ட் காலத்தில் வியாதி இல்லாமல் இருப்பது மட்டும்தான் மிகப்பெரிய பலம். வரும் முன் காக்க வேண்டும் எனில் நடுவயதிலேயே நல அக்கறை மிக மிக அவசியம்.
நாற்பதைத் தொட்டுவிட்டால் முதுமையின் வாசற்கதவைத் தொடத் துவங்கி விட்டோம் என்று பொருள். முதலில் உணவில் புளிப்பு, உப்பு, இனிப்பைக் குறைக்க வேண்டும். கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு மட்டுமே அதிகம் சாப்பிட வேண்டும். நாளொன்றுக்கு 3-4 லிட்டர் தண்ணிர் சாப்பிட மறக்க கூடாது. மனச்சிக்கலையும் மலச்சிக்கலையும் நீர் நீக்கும். கவிதைவரி கதை வரி இல்லை.பாரம்பரிய மருத்துவ நெறி.

வயதாகும் போது மூட்டுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு புளிப்பைக் குறைக்க வேண்டும். (புளிக் குழம்பு, காரக் குழம்பு, வத்தக் குழம்பு இதையல்லாம் தவிர்க்க வேண்டும்).குளிர்பானங்கள் கூடியவரை கூடாது! வாரம் இரு முறை முடக்கறுத்தான் அடை,வாய்விடங்க கசாயம் என சாப்பிட வேண்டும். கால்சிய சத்து அதிக முள்ள மோர், கீரை கம்பு, ராகி உணவுகள் அடிக்கடி சாப்பிட வேண்டும். 

கொலஸ்டிரால் குறித்த அலாதி அக்கரை பெருகி உள்ளது. கொஞ்சம் வரவேற்கக் கூடியதனினும், அது முழுமையாய் புரிந்து கொள்ளாமல் கொலஸ்டிராலை விஷம் போல் பார்க்கும் சாமனியர் இன்று பலர். கொலஸ்டிரால், இரத்த குழாய்களின் உள்சுவர்களின் கீறல்களை ரிப்பேர் செய்யும் சிமெண்ட் போன்றது. அளவுக்கு அதிகமாகக் கூடாதே தவிர; ஒழித்துக்கட்டுவது சொந்த செலவில் சூன்யம் வைப்பது போன்றது. பல சர்க்கரையைக் குறைக்கும் நவீன மருந்துகள் கூட நல்ல கொலஸ்டிராலைக்(HDL) குறைக்கக் கூடியது. உடனே அதுக்கு ஒரு மாத்திரை, பின் அதற்கு சாப்பிடும் மாத்திரை ஈரலை கெடுக்காமல் இருக்க, வயிற்றுப்புண் வராமலிருக்க என பக்கம் பக்கமாய் எழுதிய மாத்திரை பொரியலை சாப்பிடாது உணவிலும் உடற்பயிற்சியிலும் அக்கறை காட்டுவது அவசியம். மீனிலும், ஃப்ளேக் விதையிலும் உள்ள ஒமேகா 3 அமில சத்து HDL-ஐ கூட்ட உதவும். வெந்தயமும், வெள்ளைப்பூண்டும் இரத்த ட்ரை கிளிசரைடு மற்றும் இரத்த கொலஸ்டிராலைக் குறைக்க உதவும். IGT (Impaired Glucose tolerance) எனும் இரத்தச் சர்க்கரை வருமா வராதா எனும் பார்டர் சர்க்கரைக்கும் வெந்தயம் வேலை செய்யும். முருங்கைக் கீரை ஆடாதொடைஇலை போட்டு தயாரிக்கப்படும் சூப்பில் இரத்தக் கொதிப்பும் குறையும். 

நல்ல தூக்கம் வயோதிகத்தின் வரப்பிரசாதம். அதற்கு இரவில் கொஞ்சம் சாதிக்காய்த் தூள் 1 சிட்டிகை இரவில் பாலில் சாப்பிட வேண்டும்.காலை எழுந்தவுடன் எவ்வித சிரமமும் இன்றி மலம் கழிய முதுமையில் முனகவும் முழுமையாய் வருந்தவ்ய்ம் செய்பவர்கள் இன்று ஏராளம். அதற்கு இரவில் கண்டிப்பாய் பழ உணவு ஒரு பகுதி இருக்க வேண்டும். கடுக்காய் தூள் (விதை நீக்கியது) 1டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.முதுமையில் கடுக்காய் மிடுக்காய் இருக்க உதவுவது உறுதி.

”நல்லா மலம் கழியும்;தூக்கம் நல்லா வரும்;துக்கம் மற்கக்கலாம்”-எறெல்லாம் சொல்லி, நடுத்தர வயதிலும், முதுமையிலும் மது அருந்தும் பழக்கம் தமிழகத்தில் பெருகி வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களில் இவ்வேதனையான விஷயம் தெரிய வந்துள்ளது. மருத்துவத் தொழில் கொழிக்க மூலதனமாய் இருப்பதை தவிர மதுவில் எவ்வித பயனும் இல்லை. இருதய நோய், சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்று நோய் என முதுமையில் வரும் பல வாழ்வியல் நோய்க்கும் மது முக்கிய காரணம். அது தெரியாமல், ’வைன் நல்லது; அதில் பாலிஃபீனால் இருக்கிறது,’ என்னும் வாதம் வயிற்றெரிச்சலைத் தருகிறது. அபினிலும் கஞ்சாவிலும் கூட மருத்துவக் கூறுகள் உள்ளது. அதற்காக...?

முன்பெல்லாம், ”என் கணவ்ர் மது அருந்துகிறார் என்பதை பெருத்த வேதனையுடன் பகிர்ந்து கொள்ளும் பெண்கள், இன்று ’அவ்ர் ஒரு சோஷியல் ட்ரிங்க்கர்..அளவோடு தான்” என நாகரீகமாக மருத்துவரிடம் பேசும் வாதம் வலி தருகிறது. நாளைய முதுமையை முழுமையாய் முடக்கப் போவது இந்த மது. மேற்கத்தியம் சொல்வது போல், வியாபாரிகள் விரும்புவது போல், அதனை கனவிலும் உணவாய் ஒத்துக் கொள்ள முயலக் கூடாது. அலட்சியப்பட்டால் முதுமையில் ஆரோக்கியத்திற்கு மிக விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

குண்டான உடம்பிளைக்க என்ன செய்யலாம்?


”என்னது?..உன் பையன் அண்ணா மைதானத்தில் போய் ஜிம் விளையாடுறானா? ஏன் அங்கெல்லாம் அனுப்புறே! படிப்பு வரலைன்னாலும் பரவாயில்லே இந்த மாதிரி வேலையெல்லாம் இனி வேண்டாம்!” 25 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் உடம்பை தேத்தலாம்னு பார் விளையாட மைதனத்திற்கு கிளம்பிய போது வீட்டில் கேட்ட வசனம் இன்னும் நினைவில் உள்ளது. காரணம் அந்தக் காலத்தில் ஜிம்-மிக்கு கதாநாயகர்கள் போவதில்லை. நம்பியாரும் அவர் கூடவே திரியும் ”பீட்டர், மொட்டை, கபாலி”-ன்னு ஒரு கண்ணில் கறுப்பு துணியெல்லாம் கட்டியிருக்கும் கூட்டம் மட்டும் தான் ஜிம்முக்கு போகும். விளைவு நல்ல தொப்பையும் தொந்தியுமா இருந்தாத்தான் சமத்து.! ஆனால் இன்றைய நிலைமை மாறியுள்ளது. ’போஷாக்கா இருக்கானே குழந்தே’, என கொஞ்சிய காலம் போய்..டாக்டர்! பையனோட பி.எம்.ஐ. கூடியிருக்குமோ என அக்கறையுடன் குழந்தையை தூக்கிவரும் பெற்றோர் அதிகரித்து உள்ளனர். தெருவிற்கு மூன்று ஜிம்னாசியம் தொடக்கப்பட்டு வருகின்றன.

காரணம்..கி.மு. கி.பி. என்ற நிலை மாறிப்போய், இந்திய அழகியல் வரலாற்றில் ஐ.மு .ஐ பி. என்ற நிலை உண்டாகி உள்ளது. அது என்ன ஐ.மு?.ஐ.பி என்கிறீர்களா? ஐஸ்வர்யாராய்க்கு முன் ஐஸ்வர்யா ராய்க்குப் பின் என்பதே அது. அழகு மீதான அக்கறை உலக அழகிப் பட்டம் அவர்கள் பெற்ற பின் பெருவாரியாக உயர்ந்திருப்பதைப் பல புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சிக்ஸ் பேக் கற்பனையும் ஷாம்பு, கண்டிஷனர் வகையராக்களும் முன்பு எப்போதயும் விட பலமடங்கு கூடியுள்ளது. பல வீட்டில் துணி காயப்போடவாவது டிரட் மில் (அதுதாங்க..வீட்லயே நடக்கிற/ஓடுற மெஷின்) ஓரமாய் உடகார்ந்திருப்பதை பார்க்கலாம். 

12-13 வய்திலேயே ஆணும் பெண்ணும் மெல்லிடைக்கும் சிக்ஸ் பேக்கிற்கும் மெனக்கிடத் துவங்கியுள்ளது ஒரு ஆரோக்கிய வளர்ச்சியே.! அழகும் ஆரோக்கியமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது. ஆரோக்கியமில்லாத அழகு அஸ்திவாரமில்லாத அரண்மணை மாதிரி. அழகும் ஆரோகியமும் இரண்டுமே சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினை உடல் பருமன். பல நாட்பட்ட நோய்களை அழைத்துவரும் விஷயம் அதிக உடல் எடை. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு,மூட்டுவலி, நரம்பு தளர்ச்சி என தொடரும், இந்த பட்டியலால் தான் மருத்துவ வீட்டுச் செலவும் நாட்டுச் செலவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


உடல் எடை என்பது தடாலடியாக அதிகரிப்பதில்லை. கொழுப்பு பற்றிய அறிவு ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் அவசியம். கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள வைத்திருக்கும் தேக்கம். பெண்ணுக்கு 20-25%ம், ஆணுக்கு 12-15%மும் உடல் கொழுப்பு இருக்கும். ஆணைக் காட்டிலும் பெண்களுக்குக் கொழுப்பு அதிகம் என்று சொன்னால் உடனே சண்டைகட்ட வேண்டாம். உடலுக்குத் தேவையான கொழுப்பு(essential fat) பெண்களுக்கு அவர்களது மகப்பேறு பணிக்குத் துணையாக மார்பகம், கூபகம், தொடைப் பகுதியில் 12% கூடுதலாக உள்ளது. இந்த கூடுதல் கொழுப்புச் சத்து குழந்தைப்பேறு பணியை திறப்பட செய்ய உதவுகிறது. ஆண்களுக்கு இது 3% மட்டுமே. உடல் எடை அதிகரிப்பு பிரச்னை இது இல்லாத தேக்கிவைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே. உடல் மற்றும் தோலுக்கு அடியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் இந்த கொழுப்பு தான் கூடுதல் தீனி, குறைந்த உடலுழைப்பு, சில நேரங்களில் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன் குறைவு/அதிகம் காரணங்களால் அதிகப்பட்டு உடற்பருமன் நோயை உருவாக்குகிறது. உடல் முற்றும் ஒட்டுமொத்தமாய் பருத்து இருப்பதை Ovoid அமைப்பு என்றும், பருத்த தொப்பையுடன் இருப்பதை ஆப்பிள் அமைப்பு என்றும், தொடை அடிவயிறு பிட்டம் மட்டும் பருத்து இருப்பதை(அதிகம் பெண்களுக்கு ஏற்படும்) gynoid அமைப்பு என்றும் என குண்டுகளை மருத்துவ அறிவியல் வகைப்படுத்தி பட்டியலிடுகிறது. இந்த வகையில் நீங்கள் எந்த பிரிவு எனபதைப் பொறுத்து உங்கள் சிகிச்சையும், உணவுக்கட்டுப்பாடும், உடல் பயிற்சியும் மாறுபடும்.

“நான் எப்படி குண்டு? ஏன் குண்டு என்பதல்லாம் நல்லா தெரியும் எதனாச்சும் மருந்து சாப்பாடு கொடுத்து உடம்பைக் குறைக்க வழி இருந்தா சொல்லுங்க”- என்கிறீர்களா? நாம் நினைப்பது போல குண்டானவர்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. ஒல்லிப்பிச்சானும் உடம்பு வளார்த்தவ்ரும் ஒரே அளவில் தான் இப்போது சாப்பிடுவார்கள். ஆனால், குண்டாவதற்கு முன்னால் வெளுத்துக் கட்டியதும், ஊட்டி வளர்த்ததும் தான் இந்த வித்தியாசத்திற்குக் காரணம்.

உடலைக் குறைக்க பட்டினி வழியில்லை. முதலில் அளவான சாப்பாடு. குறைந்த கலோரியில் நிறைந்த நார் பொருள் கொண்ட உணவு மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். கல்யாண வீட்டிற்கு போனால், மணமக்களை வாழ்த்திவிட்டு நைசாக நகர்ந்துவிட வேண்டும். ”அவங்க கோவிச்சுப்பாங்க”- ன்னு சொல்லி பாதாம் கீரில் இருந்து பாயாசம் வரைக்கு சப்புகொட்டி சாப்பிட்டு வருவது சரியல்ல. நம் நாக்கிற்கு ஒரு அலாதி குணம் உண்டு என்கிறது அறிவியல். ஒரு சுவையான உணவு சாப்பிடத் துவங்கியவுடன் அதன் பிரியம் அடங்குமாம். உடனே அடுத்த மெனுவிற்கு நா அலையுமாம். அதனால் விருந்து, பஃபே எல்லாம் உடல் இளைக்க விரும்புவர்கள் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும் சாம்பார் ரசம் மோர் மீண்டும் ரிவர்ஸ் கியரில் கொஞ்சமாய் புளிக்குழம்பு ஊற்றி ஒரு வாய் சாப்பிடுவது எல்லாம் நிறுத்த வேண்டும். ஒரு கப் சாதத்தை மூணு பங்காக பிரித்து கீரை காயுடன் பிசைந்து ஒரு பங்கு (அப்படி செய்வதால் அரிசியின் ஹை கிளைசிமிக் தன்மை குறைந்து லோ கிளைசிமிக் தன்மை ஆகும்-அதாவது அரிசியின் சர்க்கரைசத்து இரத்ததில் மெதுவாய்ச் சேரும்). அடுத்த பங்கு ரசம். கடைசிக் கவளம் மட்டும் மோர் என பிரித்து சாப்பிடுவது நல்லது. ரொம்ப முக்கியமான விஷயம் ஒரு கப் என்பது 150கிராம்தான். அடுக்கு டிபன் கேரியரின் கடைசி கப் என நினைக்க வேண்டாம்.

சில உணவுகள் உங்கள் உடல் எடைகுறைப்பு முயற்சியை ஊக்குவிக்கும். பூண்டு, வெந்தயம், இலவங்கப் பட்டை, நாருள்ள கீரை, லோகிளைசிமிக் உணவுகள் தினமும் உணவில் வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்தவை முழுமையாக் தவிர்க்கவும். அரிசிக்கு பதில் வாரம் 4 நாட்கள் சிறு தானியங்களான கம்பு, தினை, சிறுசோளம் சாப்பிடவும். கார்சீனியா எனும் குடம் புளி உடல் எடையை குறைப்பதை பல அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கோக்கம் புளி என்றும் கூறப்படும் இந்த மலபார் புளியில் சமைக்கலாம். இதன் சத்து இப்போது மருந்துகளாகவும் கிடைக்கிறது.
’இளைத்தவனுக்கு எள்ளு கொடு;கொழுத்தவ்னுக்கு கொள்ளு கொடு’ என்று பழமொழி உண்டு. உடல்எடை கூடியவர்கள் கொள்ளுரசம்-கொள்ளு சுண்டல் அடிக்கடி சாப்பிடலாம்.

முப்பது நாளில் இந்தி கற்பது சாத்தியம். முப்பது மாத்திரையில் உடல் மெலிவதோ இடுப்புச்சதையில் எண்ணெய் பூசி மெலிவதோ பெரும்பாலும் சாத்தியம் கிடையாது. ஆதலால் அக்கறையுடன் தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் யோகா, ஆரோக்கியமான உணவு, என நெறிப்படுத்தி வாழ்வதே உடல் எடையை குறைக்க ஒரே வழி!

Saturday, 17 December 2011

வாதம்-பித்தம் -கபம்

 
”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

இரத்த சோகை

”ஏல வெறும் வாயில பச்சரிசி திங்கிறியா? உங் கலயாணத்தில மழை பெய்யும் பாரு!,” என கூறும் வழக்கு மொழி கேட்டிருப்போம். சுவரோரமாய் உட்கார்ந்து கொண்டு சுவற்று காரையை உடைத்து ரசித்து சாப்பிடும் குழந்தையும், திருட்டுத் தனமாய் திருநீரை ரசித்து சாப்பிடும் மகளிரும் நம் வீட்டில் பார்த்திருப்போம். யார் இவர்கள்? என்ன ஆயிற்று இவர்கட்கு? ’இரும்புச் சேட்டை திருட்டு தங்கம்’, தான் அவர்கள். 

இரும்பு சத்து குறைந்து ஏற்படும் ரத்த சோகைதான் இந்த வேடிக்கை ருசிக்கு காரணம். கான்சர் முதல் வாய்க்குள் நுழையாத ’ஏதோ’ஃபீலியா வரை அச்சமும் அக்கரையும்படும் நாம் பல சமயம் அலட்சியமாக இருந்துவிடுவது இரத்த சோகை விஷயத்தில் தான்.

வெளுத்த முகம், வெளிறிய கண்கள், நா, நகம் மற்றும் உள்ளங்கை, அதைப்பான (குளுப்பையான) முகம், படபடப்புடன் இதயம் துடித்தல் (மருத்துவதுறையில் இதனை குதிரை ஓட்டம் போன்ற துடிப்பு என்பர்) என்ற குறிகளுடன், நடந்தால் மூச்சிழைப்பு, ஆயாசம், சோர்வு, ஒரு வேலையிலும் பிடிப்பில்லாமல் வெறுப்பு என இருக்கும் சோகையின் குணங்கள். ஆனால் இவை எல்லாமே இரத்ததில் இரும்புசத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பின்னர் தான் தெரிய வரும்., லேசான சோகையில் எந்த குணங்களும் பெரும்பாலும் இருப்பதில்லை.




ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு இரத்தசோகை தொந்தரவு அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. மாதம் தோறும் மாதவிடாயில் ஏற்படும் இழப்பு, குழந்தை உண்டாயிருக்கும் போது, பாலூட்டும் போது - என பெண்ணிற்கான பிரத்யோக பணியிலேயே அதிக இரும்புசத்து இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மாதவிடாயில் அதிக இரத்தப் போக்கு அல்லது மாதவிடாயில் இரத்தமே போகாது இருப்பது என இரண்டிற்குமே சோகை ஒரு காரணம். மாதவிடாய் கோளாறுகள் பலவற்றிற்கும் சோகை ஒரு முதல் காரணம். 
இவைதவிர சரியான உணவு அக்கரை இல்லாத ஊட்டசத்து குறைந்த உணவு இரத்த சோகைக்கு மிக முக்கிய காரணம். மூல நோயில் ஏற்படும் இரத்த இழப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், வயிற்றுப் பூச்சிகள், சில புற்று நோய்கள் என பிற நோய்களிலும் இரத்த சோகை ஏற்படக் கூடும்.

முதலில், இரத்த சோகை எனும் அனீமியா உள்ளதா என்பதை தெளிவாக மருத்துவர் உதவியுடன் அறிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய கடமை. சிவப்பணுக்களில் உள்ள இரும்பு சத்து தான் உடல் முற்றும் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்வது. சரியான இரும்பு இல்லை எனில் சோர்வும் சோம்பலும் என தொந்தரவுகள் ஓவ்வொன்றாய் தொடங்கிவிடும்.

பெரும்பாலான நேரத்தில் அனீமியாவை தேர்ந்தெடுத்த உணவின் மூலமே சரியாக்கிட முடியும். முதல் தேர்வு கீரை. சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என கிடைக்கும் எல்லா கீரைகளிலும் இரும்பு சத்து அதிகம் உண்டு. கீரையைப் பொறுத்தமட்டில் சங்கடப்பட வைக்கும் விஷயம் சந்தைக்கு வரும் கீரைகளில் தெளிக்கப்படும் கொடிய நச்சுத்தன்மையுள்ள பூச்சிக் கொல்லிகள். வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் சிறு சிறு தொட்டிகளில் கிச்சன் கார்டன் என கீரைகளை வீட்டில் வளர்த்து அன்றாடம் பறிப்பது மிக மிக நல்லது. வீட்டு கிச்சன் கழிவுகளும், இயற்கை உரங்களும் வேப்பெண்ணெய் தூவலும் பாதுகாப்பாக உங்கள் கீரைகளைக் கூடுதல் சத்துடன் உருவாக்கிடும்.
எள்ளும் பனைவெல்லமும் அடுப்பங்கரை இரும்புச் சுரங்கங்கள். இரண்டிலும் உள்ள இரும்பு நம் வீடு அரும்புகளுக்கு அவசியமானது. சிறு வயது முதலே எள்ளுருண்டை மீது பிடிப்பை உருவாக்கிடுங்கள். கருப்பாய் உருட்டி கண்ணாடி பாட்டிலில் இருப்பதால், கவர்ச்சி விளம்பரம் சொல்லும் கோகோ மிட்டய்களுக்கு உரிய வரவேற்பை எள்ளுருண்டைக்குக் குழந்தைகள் தருவதில்லை. “எள்ளுருண்டை சாப்பிடு! ஓங்கி அடிச்சா ஒண்ர டன் வெயிட்றா இது! என்று சூர்யா சிங்கம் போல் கர்ஜித்து நம்மூரில் நல்ல விஷயங்களை மார்க்கெட் செய்ய முடிவதில்லை. 

காணாக் குறைக்கு, பிரசவ உதவிக்கு டெக்ஸாஸ் போகும் நம்மூர் பாட்டியும், ”அது ஹைஜீனிக்கா? ஹைகலோரியோ?”, என அமெரிக்க அங்கலாய்ப்பை அருப்புக்கோட்டையிலும் துவக்க குளோபலைசேஷனில் அடுப்பங்கரை அந்நியப்பட்டுக் கொண்டே போகிறது.
அடுத்து கம்பஞ்சோறும் வரகரிசி சோறும். பாலிஷ் இனிஷியில் அரிசியின் சாம்ராஜியத்தில் நாம் இழந்த விஷ்யங்களில் ரொம்ப முக்கியமானவை இந்த இரண்டும். கம்பு, வரகு இரண்டும் இரும்பு சத்து ரொம்ப ரொம்ப அதிகமுள்ள பாரம்பரிய தானியங்கள்.இந்த இரு அரிசி ரகங்களின் சுவை சொன்னால் புரியாது சாப்பிட்டால் தான் தெரியும். சுவை மிக்க இந்த பாரம்பரிய தானியத்தில் புலவோ, பிரியாணியோ, கிச்சடியோ கஞ்சியோ எது வேண்டுமானாலும் செய்ய முடியும். உடம்பின் மீது அக்கரையுடன் கொஞ்சம் தேடி வாங்கிச் சாப்பிட்டால் வெளுப்பு வரவே வராது. வாரம் இரண்டு மூன்று நாளாவது இது போன்ற சிறு தானியங்கள் உணவில் சேரட்டும்.

பாசிப்பயறு, தொலிஉளுந்து, சிகப்பு கொண்டை கடலை, முளைகட்டிய தானியங்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களும் இரும்பைச் சீரணிக்க உதவிடும். பழங்களில் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி சோகை உள்ளவர்கள் தினசரி சேர்க்க வேண்டியன. பெரிய நெல்லிக்கனியின் விட்டமின் சி சத்து இரும்பை உடம்பு உள் வாங்க உதவிடும்.
இரும்பு சத்து மிக குறைவாக உள்ள பட்சத்தில் சத்து மாத்திரைகள் மிக அவசியமானது. உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான சத்து மாத்திரையை எடுப்பது அவசியம். கருவுற்ற மற்றும் பாலூட்டும் காலங்களில் இரும்பு சத்து மாத்திரைகள் அவசியமாகவேத் தேவைப்படுகிறது. சித்த மருந்துகளில் உடலின் பித்ததைச் சீராக்கி இரும்பு சத்தை அளித்திடும் மூலிகை மருந்துகள் நிறையவே உண்டு. 

சாதாரணமாக இரும்பு மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துவதுண்டு. இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு அவை மலத்தையும் எளிதாகக் கழிக்க வைத்து, குடல் புண்ணையும் ஆற்றக் கூடியது என்பதுதான்.

அனீமியா, மூலம், அதிக மாதவிடாய் இரத்த போக்கு போன்ற பிற நோயில் வந்திருந்தால் அதற்கான சிகிச்சை முக்கியம். வெறும் சத்து மாத்திரை போதாது. ஆறு மாதங்கட்கு ஒரு முறையேனும் ஒவ்வொருவரும் தம் இரத்த இரும்பு அளவு எப்படி உள்ளது என அறிந்து கொள்ளுங்கள். இனி அரிசி திங்கும் ஆவல் அதிகமானால், அட! கல்யாணத்தில் மழை பெய்யும் அவ்வளவு தானே! என இருக்க வேணாம். இரத்தம் ஏற்றும் அளவிற்கு சோகை சோகப்படுத்திவிடக் கூடும்.