Tuesday, 19 July 2011

சீமானும், விமர்சனங்களும்..

இன்று அரசியல் விமர்சகர்களாலும், அரசியலாலர்களாலும், வெட்டி வீராப்பு பேசுபவர்களாலும் கண்கொத்தி பாம்பாக கவனிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்  சீமான். இணையத்தளங்களில் சீமான் பற்றிய விமர்சனம் படு சூடாக நடந்துகொண்டிருக்கிறது.சமீபத்தில முகநூலில்  சீமான் பற்றிய விமர்சனம் நடந்துகொண்டிருந்தது.(வழமையாக அந்த நபருக்கு இது தான் வேலை)எனினும்  வழமைக்கு மாறாக சீமான் பற்றி  கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள் சிலர் .இதென்னடா இப்படி எல்லாம் விமர்சிக்கிராங்களே, யார் இவங்க என்று நினைத்து  விமர்சனம் முன்வச்ச  சிலரின்  முகநூலுக்கு சென்று பார்த்தேன். அப்ப தான் தெரிந்தது அநேகமானோர்  தங்கள் அபிமான கட்சி ( தி மு க  ) சார்பாக ஒரு நோக்கத்தோடு தான்  இந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்று.





பொதுவாக இப்பொழுது சீமான் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.
1. அ தி மு க வுக்குதேர்தலிலே ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.(முக்கியமானது)
2. சீமானுடைய பேச்சுக்களும் நடத்தைகளும் சினிமா தனமாக இருக்குதே             ஒழிய  ஆக்க பூர்வமாக இல்லை.
3.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார். 
4.பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பெரியார் கொள்கைகளுக்கு எதிராக         செயற்படுகிறார்(முக்கியமாக தேவர் சிலைக்கு மாலையிட்டது).
5. பாஞ்சாலம் குறிச்சி(1997) படத்தில் தமிழரின்  பண்பாடுகளுக்கு  முரணாக     உதட்டோடு உதடு முத்தக்காட்சி வைத்தவர் சீமான்.(முட்டையில மயிர் பிடுங்கிறாங்க)
6. சீமான் என்பது தமிழ் பெயர் இல்லை (இப்பிடியும் சொல்லுறாங்க சிலர்)



இப்படியாக பல பல குற்றச்சாட்டுக்களை இணையங்களிலே அடுக்கிக்கொண்டே  போகிறார்கள். (ஆனால் இவ்வாறு விமர்சனம் முன் வைப்பவர்கள் பொது களத்தில் இறங்குகுகிரார்களா என்றால் நிச்சயமாக பதில்- இல்லை! )

  பேச்சு என்பதும் ஒரு ஆயுதம் தான். ஒருவர்  கூட்டத்தின் முன் வந்து  எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாது ஒரு கருத்தை சொல்லிவிட்டு போவதை விட, அதே விடயத்தை உணர்ச்சிகரமாக  சொல்லும்பொழுது அது மக்களிடையே விழிப்பை உண்டாக்கிறது. இதை சினிமாத்தனம் என்பது என்னை பொறுத்தவரை முட்டாள்தனம். அத்தோடு ஆக்ரோசமாக பேசுவது என்பது எல்லோராலும் முடியாத விடயம்.(நான் அறிந்த வரை மிகவும் மென்மையாக பேசி அது மக்களாலே உற்று கவனிக்கப்படும் பேச்சாக "தந்தை" செல்வாவின் பேச்சு  இருந்துவந்தது.)

சரி முதலாவது குற்றச்சாட்டுக்கு வருவோம்.தமிழகத்தை பொறுத்தவரை தி மு க, அ தி மு க  என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை தவிர்த்து இன்னொரு கட்சி ஆட்சியில் வருவது என்பது இன்றைய நிலைமையில் முயல் கொம்பு தான். தமிழர்களுக்கு குறிப்பாக தினந்தோறும் கொடுமைகளை அனுபவிக்கும், சுட்டு கொல்லப்படும் அந்த தமிழ் நாட்டு மீனவர்களுக்கும்,ஸ்பெக்ராம்  ஊழலில் கோடி கோடியாக  மக்களில் பணங்களை கொள்ளையடித்தும் ,மற்றும் முக்கியமாக  ஈழ தமிழர்களுக்கு   மிக பெரிய துரோகத்தை செய்த காங்கிரஸ், திமுக கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே தான் அ தி மு க வுக்கு ஆதரவு வழங்குவதாக தன்னிலை விளக்கம்  கொடுக்கிறார் சீமான்.



சீமான் சொல்வதிலும் நீயாயம் இல்லாமல் இல்லை.அதற்காக ஜெயலலிதாவை நியாயப்படுத்த வரவில்லை.ஊழலிலே கருணாநிதிக்கு சளைக்காதவர் அவர்.எனினும் இஸ்பெக்ராம் ஊழல், திமுகா மீண்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதன்  மூலம் புஸ்வானம் ஆக்கப்பட்டுவிடும் என்கிறார் ஜெயலலிதா.( இவவின் ஊழல்  இன்னமும் கிடப்பில்  கிடக்கிறதே என்ற கவலை போலும்)இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மிருகங்களை போல கடலிலே தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போதும்,தமிழின தலைவர் என்பவர்- தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போதும்  வெறும் காகிதங்களோடும் கண்டனங்களோடும்  தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும்  இல்லாதது போல காட்டிகொண்டிருக்கிறது தி மு க. காங்கிரசை பொறுத்தவரை தமிழ் நாடும் இந்தியாவுக்குள் தான் இருக்குறது  என்பதை மறந்து பல காலம்.  ஆக இந்த கூட்டணியால் தமிழனுக்கு விடிவு இல்லை என்பதை விட, கடுமையாக இருள் சூழ்ந்து வருகிறது என்பதுவே உண்மை.

ஆகவே தி மு க விற்கு மாற்றீடாக அ தி மு க வை கொண்டு வருவதை விட மாற்றீடு வேறு எதுவும் மக்களுக்கு இருக்கப்போவதில்லை, ஏனெனில் இவற்றுக்கு மாற்றீடாக வேறு  பலமான கட்சிகள் இல்லை .சீமானை பொறுத்தவரை தனித்து நின்று வெல்லும் அளவுக்கு தற்சமயம் அவர் கட்சி வளர்ந்துவிடவில்லை.தற்சமயம் அவ்வாறு தனித்து நின்றால் நிச்சயமாக வாக்குகள் சிதறடிக்கப்படும் அதன் மூலம் மீண்டும் தி மு க+ காங்கிரஸ் கூட்டணியே ஆட்சிக்கு வந்து, மீண்டும் பழைய பஞ்சாங்கமே. அதே போல தேர்தலில் பங்குபற்றாது வெறும் பார்வையாளராக சீமானின் கட்சி நின்றாலும்  நிச்சயமாக மேலே சொன்ன நிகழ்வு தான் நடக்கும்.

ஒரு தராசில்  ஒரு தட்டில் அ தி மு க வும் ,மற்றைய தட்டில் தி மு க +காங்கிரஸ் கூட்டணியும் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு எது கனமாக தெரிகிறதோ, உங்களுக்கு   எந்த தட்டில் உள்ளது அளவுக்கு அதிகமாக வேதனையையும், துரோகத்தையும்  கொடுத்ததோ அதை  அப்புறப்படுத்துவதே   இன்றைக்கு மக்களின் தேவை.............இதை தானே சீமானும் செய்கிறார். 


ஈழத்திலே உச்ச கட்ட யுத்தம் நடந்துகொண்டு இருந்த வேளை  ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை   கடுமையாக தாக்கி  பேசியதால்  "இறையாண்மைக்கு எதிரானது" என்று கூறி  சீமானும் இயக்குனர் அமீரும் தமிழக அரசால் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.சிறையில் இருந்து வெளி வந்த பின்னர்  அமீர் தன் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டார்.

ஒரு முறை இயக்குனர் அமீரிடம் இது பற்றி நிருபர் கேட்ட போது "தான் இந்த விடயங்களில் இருந்து  தற்போது ஒதுங்கி  இருப்பதாகவும், ஆனால் சீமான் சிறையில் தன்னோடு இருந்த போது கூட  எந்த வித மன மாற்றமும் இல்லாமல் உறுதியோடு இருந்தார்" என்று கூறினார்.அந்த சம்பவத்தின் பின்னரும் சீமான் அநியாய வழியில் (தேசிய பாதுகாப்பு சட்டம்)  சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இப்படி அநாதரவான தமிழினத்துக்கு  ஆதரவாககுரல் கொடுப்பதையே தேச விரோதமாக கருதிகிறது  இப்போதைய மத்திய மாநில அரசுகள்!

ஆகவே நாம் விமர்சனம் என்று கூறி தமிழனுக்காக  முன்னின்று குரல் கொடுக்கும் ஒரு சிலரையும் கடுமையாக தாக்கி விமர்சிக்கும் போது ,எதிர்காலத்தில் தன் இனத்துக்காக, மக்களுக்காக என்று எவனும் குரல் கொடுக்க வரமாட்டான்,   அவ்வாறு  குரல் கொடுக்க வந்தாலும் இந்த மக்கள் தன் மீது "துரோகி பட்டம்" "சுயலனவாதி பட்டம்" "ஓட்டுப்பொறுக்கி பட்டம்" என்று பல்வேறு விதமான பட்டங்களை தானே இறுதியில் வழங்குவார்கள்  என்று ஒதுங்கியே இருந்துவிடுவான்.

இருந்தாலும் எனக்கு ஒரு பயமும் தொற்றி கொள்கிறது.சில காலங்களுக்கு  முன்னர்  சீமானை போலவே தன் துணிவு மிக்க பேச்சாற்றலால் ஒரு மிகப்பெரும் கூட்டத்தை தன் பின்னால் கொண்ட வை.கோ,எதிர்காலத்தில் பலம் மிக்க அரசியல்வாதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணன் வை.கோ, பிற்காலத்தில் கருணாநிதியோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் கருணாநிதிக்கு எதிர்ப்பு அரசியல் செய்யும் பொருட்டு அ தி மு க வுடன் இணைந்து  இன்று  ஜெயலலிதா எந்த அறிக்கை விட்டாலும் எதிர்த்து கேள்வி கேட்க்க  முடியாது மொளனி ஆக்கப்பட்டது போல எதிர்காலத்தில் சீமானின் நிலை வந்தால்........."கருணாநிதி வந்தால் மட்டுமல்ல ஜெயலலிதா வந்தாலும் நான் இருக்கும் இடம் சிறைச்சாலை தான்" என்கிறார் சீமான்.  இன்றைய பொழுதில்  சீமானது நிலை கத்தில் மேல் நடப்பது போன்று. கடந்து முடிப்பார் என்று நான் இதுவரை நம்புகிறேன்.எதிர்கால சீமானின் அரசியல் இதற்க்கு விடையாக அமையும்.



என் மனசில் பட்டத்தை மட்டுமே இங்கே கொட்டியுள்ளேன்.  தவறுகள்  இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

சிரிக்க மட்டுமே சிந்திக்க தடை.

அரசியலுக்காக எப்படிப்பட்ட வேலையையும் செய்வார்கள் நம் அரசியல் வாதிகள் சில சமயங்களில் அதுவே காமெடி தனமாகவோ இல்லை பார்ப்பவர்களை  எரிச்சல் படுத்துவதாகவோ அமைந்துவிடும் அப்படிப்பட்ட சில போஸ்டர்கள.  (சிரிக்க மட்டுமே சிந்திக்க வேண்டாம்) 

"மதம்" கொண்டாச்சு! 



இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி கொடுத்த  கலைஞருக்கு  போடு ஓட்டு..!


கறுப்பு எம் ஜி ஆர் ;-)




பால் ஊத்தியாச்சு அடுத்து ..




                                                                                  ?




                                              தாயகம் தேசியம் தன்னாட்சி ?



                                                                 நானும் ரவுடி தான்.
 



 

இதை தான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்ல, மக்களுக்காக சாகிற வரை போராடிய ஒரு தலைவரை சம்மந்தமே இல்லாமல் ஒரு பார்ப்பன கும்பல் தம் அரசியலுக்காக பயன்படுத்துகிறதே! இந்த போஸ்டரை பாக்கிறவன் எல்லாம் முட்டாள் பயலுக என்றே முடிவு கட்டி அடிச்சு ஒட்டியது போல இருக்கு.

1 முதல் 6 வரை பள்ளிக்கூடமே வேண்டாம் .ப்ளிஸ் .



எழுதியவர் Rajasekaran

குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செலுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது ).2- லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன ,சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது . 

குழந்தைகள் 5 வயதிற்குப்பின் ,5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில்பயணித்து 12 வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து ,தொடர்ந்து ,பிறகு16 வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர்.அதுவரை அவர்கள் சுதந்திரமானவர்களாகவே உணர்கின்றனர் இதுவே ,குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது . 

எனவே ,இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள் . அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளரஆரம்பித்து விடுவார்கள் . குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் போன்ற அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள் .அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும் .குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள் . அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் .குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக்கொள்ளாதீர்கள் .நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள் .அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள் (நாமெல்லாம் அப்படி வளர்ந்தவர்கள் என்பதால் தான் செக்ஸ் விழிப்புணர்வு இல்லாமல் வளரஆரம்பித்து அச்சப்பட்டு, அவஸ்தைப்பட்டதை ஒவ்வொருவரின் கடந்த காலமும் கூறும்). 

அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள் . அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள் .தெரியவில்லையெனில் தெரியவில்லை என்று கூறுங்கள். அது அவர்களின் அவர்களே  தெரிந்துகொள்ளும் ஆவலை அதிகரிக்கும் .அதனால் அரைகுறைபதிலை கூறாதீர்கள் .அது அவர்களை முடமாக்கும் .உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்கு புகுத்தாதீர்.அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான் .விடைகளை அவிழ்த்து விடுவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை .கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல் .கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது . அது வீண். 

ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் . 
குழந்தைகள் பிறக்கும்பொழுதோ பலவிசயங்கள் அவர்களுக்கு ஆணையிடப்பட்டிருக்கின்றது . 
அது 

"சுவாசி உடல் இயங்கும் ". 

"உண் உடல் வளரும் ". 

"வளர உணவு தேவை ". 

இதுபோன்று ...பல... 

இதில் "வளர உணவு தேவை " என்பதுதான் தற்பொழுது நமது 
குழந்தைகளின் குறும்புகளுக்கும் ,சேட்டைகளுக்கும் காரணம் 
.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, 
கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான் .காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடு தான் குழந்தைகள் செய்யும் அனைத்தும் . 

அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் 
கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் 
விட்டுவிடுங்கள்.அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட 
கட்டளை  தீர்க்கப்பட்டு அவர்களை  அடுத்த நிலைக்கு தானே 
உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டே போவீர்கள் .குறும்பு செய்கின்றது என்பதற்காக  மழலையர் பள்ளி ,பிளே ஸ்கூல்  என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாட்டினால் உங்களிடம் அந்நியமாக  நடந்து கொள்வார்கள் .அதனால் அந்நியமாக போவார்கள்  . எனவே இதனால் பயனேதும் இல்லை . 

ஆதலால் ,குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள் 
.அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும் . 
நீங்கள் மீறினால் ,அவர்களும் மீறுவார்கள் .ஜாக்கிரதை . 
எனவே ,குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள் . 
அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள் . 
அவர்களை உற்று கவனியுங்கள் . 
அவர்களின் அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள். 
அதற்கு உதவுங்கள் . 
''சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள் . 
நாம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான் . 
அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள் . 


ஆதலால் ஆறு வயதை அடையும் வரை குழந்தைகளை குழந்தைகளாகவே வளரவிடுங்கள் தாயின் பராமரிப்பில் . இக்கால கட்டத்தில் மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் பள்ளி என சேர்த்து அவர்களை முதியோர் ஆக்காதீர்கள். 

அதனால்  1 முதல் 6  வரை பள்ளிக்கூடமே வேண்டாம் .ப்ளிஸ் .

Sunday, 26 June 2011

இவன் ஒரு வம்பன்..!





இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால்  பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ..
கல்லை தூக்கி எறிந்தோ..
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு..,

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..!

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை;
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!

சாய்பாபா மீண்டும் அவதரிப்பார் !


இறந்தவர்களை பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதென்பது  மனிதாபிமான ரீதியிலும் நம் மரபுகளின் ரீதியிலும் சரியான செயல் அல்ல. அது போல ஒருவரின் இறப்பிலே சந்தோசப்படுபவனும் மனிதன்  அல்ல. என்னை பொறுத்தவரை சாய் பாபா என்பவர் இந்த பூமியில் பிறந்து இயற்கையின்  நியதியால் இறந்து போன கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவரே.

நான் ஒன்றும் நாஸ்தீகன் அல்ல. உங்களுக்கு தெரியும் கிராம புறங்களிலே உள்ள மக்கள் ஒப்பீட்டளவில் கடவுள் நம்பிக்கை கூடியவர்கள். அதே கிராமப்புறம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்  நான். இது வரை நான் வாழ்ந்த சூழலிலே ஒரு நாஷ்தீகர்களை கூட கண்டதில்லை.



நான் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலே எனக்கு கற்ப்பித்த ஆசிரியர்கள் சிலர் பாபாவின் பக்தர்களாக இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் பாபாவின் அருமை பெருமைகள் அற்புதங்கள் என்று பல கதைகள் எமக்கும் சொல்வார்கள். அவற்றை எல்லாம் நம்பி நானும் அவரை கடவுளின் அவதாரமாகவே நம்பியிருந்தேன் என்பதை விட நம்பவைக்கப்பட்டேன் என்று சொல்வதே சரியானது.  அநேகரின் நிலைமையும் இவ்வாறுதான் ( நம்ப வைக்கப்பட்டார்கள்)  என் வீட்டு சாமி அறையையும்  சாய்பாபா அலங்கரித்தார். ஏன்  என் பாக்கற்றில் இருக்கும் பர்சிலும் சாய் பாபா குடிகொண்டிருந்தார். பள்ளி பருவத்திலே புத்தக பூச்சிகளாகவே அதிக தருணங்கள் இருந்ததால பாபாவுடைய   நியாய தன்மைகளை பற்றி சிந்திக்க தோன்றவில்லை. ஆனால் வெளி உலகுக்கு வந்த போது தான் அவ்வப்போது அறியும் செய்திகளால் எனக்குள்ளும் சில சந்தேகம் வந்தது.

1. கருணாநிதி சச்சின் டென்டுல்லகர் போன்ற முக்கிய தலைகள் புட்பபதிக்கு சென்றால் சென்ற அடுத்த நிமிடமே பாபாவை அருகில் சென்று சந்தித்து போஸ் கொடுக்க முடிகிறது. ஆனால் கடைக்கோடி பக்தன் சென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டும், ஏன் அவரின் தரிசனம் கிடைக்காமலே திரும்பியவர்களும் உள்ளார்கள்.  இது என்ன நியாயம். ஆக கடவுளை சந்திக்க பணபலமும் அதிகார பலமும் செல்வாக்கு செலுத்துகிறது என்று கொள்ளலாமா?

2 . இவர் வீபூதி கொடுக்கும் போது பார்த்தீர்கள் என்றால், அனைவருக்கும் கொடுப்பதில்லை. சூழ்ந்திருக்கும் கூட்டத்திலே சில பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து கொடுப்பார். "அதிஷ்டலாப  சீட்டு போல". இது என்ன நியாயம்? இங்கே வீபூதி கிடைக்காதவனது மனநிலை எவ்வாறு இருக்கும்.  "நான் எதோ குற்றம் செய்துவிட்டேன். அது தான் என்னை சாமி கண்டு கொள்வதில்லை" என்று தினமும் அவன் மனசாட்சி அவனை குழப்பாதா. (அப்புறம் தான் தெரிஞ்சுது சாமி எதற்கு விபூதியை சிக்கனமா கொடுக்கிறார் என்று)

3. அதோடு இவர் வீபூதி குங்குமம் லிங்கம் ஆகியவற்றை மட்டும் தான கொடுப்பார்.  இதை விட மனிதனுக்கு முக்கியமான தேவைகள் இல்லையா? ஏன் மும்பையிலே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன் தன் சக்தியால் அதை  தடுத்து நிறுத்த  முடியவில்லை?   இயற்க்கை அழிவுகளை தவிர்க்க முடியாது தான் ஆனால் அது பற்றி  முற்கூட்டிய எச்சரிக்கை விடலாமே சுவாமியார்!  இலங்கையில்  நடந்த யுத்தத்தை கூட தடுத்து நிறுத்த முடியவில்லை, ஏன் இலங்கையிலே இவருக்கு  பக்தர்கள் இல்லையா? ஈழத்திலே நான் கண்ட வரை பாபாவுக்கு அதிகளவான பக்தர்கள் உள்ளார்கள். பாபாவை பார்ப்பதற்கென்றே இந்தியாவுக்கு படை எடுத்தவர்களையும்  கண்டுள்ளேன்.



சரி இவையெல்லாம் கால நியதி என்றால் மனித ரூபத்திலே கடவுள் எதற்கு? வீபூதி  கொடுப்பதற்கும் லிங்கம் எடுப்பதற்குமா?

சிலர் சொல்கிறார்கள், அவர் சாமியார் என்பதற்கு மேலாக மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளாராம். ஆனால் இது எனக்கு நியாயமான கருத்தாக தெரியவில்லை. உதவிகள் முறையான வழிகளில் செய்தாரா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அதன் "மூலம்"!  தன் வீட்டு சொத்திலா செய்தார். அப்பாவி மக்களை ஆன்மீக வாதி என்ற போர்வைலே ஏமாற்றி அவர்களிடம் இருந்து பெற்ற பணத்திலே அரசியல்வாதிகளை சரிப்படுத்தி  சிறு பகுதியை மக்களுக்காக செலவழித்தார்.  இவர் கடவுளாக இருந்தால்.... தான் எப்போது இறப்பேன் என்று அறிந்திருப்பார். அவ்வாறு அறிந்து  அதற்க்கு முன்னரே தன்னிடம் உள்ள சொத்துக்களை மக்களுக்காக வழங்கியிருக்க வேண்டாமா?  இப்பொழுது பாருங்கள் இவர் பேரிலே தெக்கு நிற்கும் கோடிகணக்கான சொத்துக்காக வெட்டுக்குத்து, கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!

பாபா சொல்லிருக்கார், நான்  மீண்டும் அவதரிப்பேன், அவதரித்து  36 வயசு வரை இந்த பூமியிலே வாழ்வேன் என்று! இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான்........... காவி உடுத்தவனை கடவுளாக பார்க்கும் மக்கள் உள்ளவரை யுகங்கள் தோறும் பாபாக்கள் அவதரிப்பார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை!



தனக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் பாபாவும்  விஞ்ஞானத்தை தானே  நாடினார். இதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை  விட  விஞ்ஞானம்  தான் உயர்ந்தது என்று "கடவுள் பாபா" நிரூபித்துவிட்டதாக கூட வாதிடலாம்.  இந்த உலகிலே பிறந்த உயிரினங்கள் யாவும் ஒரு நாள் இறக்க தான் செய்யும்.  விஞ்ஞானத்தாலே  இறப்பை தள்ளிப்போடலாமே ஒழிய  ஒரு போதும் தவிர்க்க முடியாது. 


மீண்டும் சொல்கிறேன் மனிதன் கடவுளாக முடியாது. கடவுளும் மனித ரூபத்தில் வந்து நான் தான் அவதார புருஷன் என்று தன்னை விளம்பரப்படுத்த மாட்டார். அவ்வாறு வந்து எவனாவது சொன்னால் அவனை பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே தான் அனுமதிக்க வேண்டும். நான் பாபாவின் இறப்பை நினைத்து சந்தோஷபடவில்லை. அப்படி சந்தோஷ படுவதற்கும் ஏதுமில்லை. பாபாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Saturday, 25 June 2011

ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய


 கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்.

 ஆனால் நம் கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட  ஆன்டிவைரஸ் நிறுவ சில நிறுவனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நாம் ஒரே ஒரு ஆன்டிவைரஸ் மட்டுமே நம் கணினியில் நிறுவ முடிகிறது. ஆகையால் ஒரு ஆன்டிவைரசில் மட்டுமே நம் பைல்களை ஸ்கேன் செய்து வந்தோம்.                

                                                                                                                                                                                                                                                                                         
  •  குறிப்பாக நமக்கு இமெயில் வரும் பைல்கள் நம்பக தன்மை வாய்ந்ததா என்று இந்த     முறையில் அறிந்து கொள்ளலாம்.
  • இந்த குறையை போக்க நமக்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
     
  1. மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Choose file என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  2. உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்ய விரும்பும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  3. அடுத்து அதற்கு கீழே உள்ள Submit file என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வைரஸ் ஸ்கேன் ஆகி ஒவ்வொரு ஆன்டி வைரசிற்கு நேராக அதான் முடிவுகள் வரும். 

மேலே படத்தில் உள்ளதை போல அனைத்து ஆன்டிவைரசிலும் Found nothing என்று முடிவு வந்தால் உங்கள் பைல் 100% பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் இந்த பைலை தைரியமாக உபயோக படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் கிளிக் http://virusscan.jotti.org/enசெய்யவும்

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?.


உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க. இன்று கணணி , இணையம் இல்லை என்றால் வேலை எதுவும் ஓடாது என்பது போல நம் வாழ்வில் அவசியமான சாதனமாக மாறிவருகிறது.
 

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை  இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திரு...ந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி  delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?


அநேகமானோர் Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள்  மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும்.  எனினும் இக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழி உண்டு. முதலில் நீங்கள் megavideo வில் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் link ஐ  copy பண்ணி கொள்ளுங்கள்.அதன் பின்னர்  http://ezywatch.com/index.php   என்னும் ஒரு  தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
                             

அங்கே மேலே படத்தில் உள்ளது போல ஒரு தளம் வரும் . அதிலே  watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய              லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக  பார்க்கலாம். எப்புடி எல்லாம்
கண்டுபிடிக்கிரான்கையா.....

புகைப்படங்களை பெயர் கொடுத்து ஒழுங்கமைப்பது எப்படி ..?



 டிஜிட்டல் கேமராவிலிருந்து அல்லது கைபேசியில் இருந்தோ  படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை  விண்டோஸ் தருகிறது.

இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். 

படங்கள் உள்ள போல்டரைத் திறந்து பெயரை மாற்ற வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் பெயரை மாற்ற வேண்டிய படங்கள் அருகருகே இல்லாமல் வேவ்வேறு இடங்களில் இருக்குமாயின் Ctrl விசையை அழுத்தியவாறு படங்கள் மீது க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து File மெனுவில் அல்லது ரைட் க்ளிக் செய்து Rename தெரிவு செய்யுங்கள். பின்னர் அந்த பைலுக்குப் புதிய பெயரை டைப் செய்து Enter கீயை அழுத்துங்கள். நீங்கள் தெரிவு செய்த பைல்கள் அனைத்தும் வழங்கிய புதிய பெயரோடும் ஒரு தொடரிலக்கத்துடனும் மாறியிருக்கக் காண்லாம்.
உதாரணமாக முதல் பைலுக்கு beach (1 ) என வழங்கும்போது அடுத்த் பைல்கள் beach (2 ) என்றும் அடுத்தது beach ( 3 )என்றும் மாற்றமடையும்.

GOOGLE புதிய இசைக்கான சேவை

புதுமைகளை புகுத்துவதில் கூகுலுக்கு நிகர்  கூகுலே.இந்திய இசை ரசிகர்களுக்காகGOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும்Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.
      70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய எந்திரன் இந்தி பாடல்கள்வரை உள்ளது.இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை..மற்றும் தமிழ் பாடல்கள் குறைவாகவே உள்ளது.எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்ய படலாம் என்று எதிர்பார்க்கலாம்.  எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.
     இணையத்தள முகவரி 

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார்
செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது பெட்எக்ஸ், இபே , கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!

”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி/ தினமலர்  

புகை என்னும் பகை

இன்றைய காலத்தில் புகைத்தல் சர்வசாதாரணமாக சமூகத்தில் காணப்படும் ஒரு மிகவும் கொடிய அடிமை பழக்கம் ஆகிவிட்டது.  இந்த பழக்கம் வயது வந்தவர்களையும் கடந்து சிறுவர்களையும் ஆக்கிரமித்து நிற்கிறது.பெண்கள் கூட இதற்கும் விதிவிலக்கு அல்ல.   இதற்க்கு முக்கிய பங்கை சினிமா தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.சினிமாவில் அவனவன் ஸ்டைல் என்ற போர்வையில் வித விதமாக கையை வளைத்து வளைத்து  பிடிப்பதை பார்த்து  அதை நாகரிக மாக கருதி இன்றைய இளசுகளும் புகைத்தலை நாடி செல்கிறார்கள்.இது  பெண்களை கவருவதற்கு ஒரு நாகரிக  கருவியாக மாறிவிட்டது என்றால் மிகை அல்ல.



 சிகரெட்டை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை சந்தை படுத்தும் போது அதன் பெட்டியிலே "சிகரெட் உடல் நலத்துக்கு கேடு" என்று கண்ணுக்கு தெரியக்கூடியவாறு அச்சடிச்சே அதை சந்தை படுத்துகிறது.வாங்குபவனும் அதை வாசித்துவிட்டு வாங்குகிறார்.காசு கொடுத்து தன் ஆயுளை குறைத்துக்கொள்கிறான்.இது யாரின் தவறு.சிகரெட் உடல் நலத்தை கெடுக்கும் என்று தெரிந்தும் அதை உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கிற அரசின் தவறா?,இல்லை மக்களுக்கு அது பாதிப்பு என்று தெரிந்தும் தங்கள் வருமானத்திற்காக, வியாபரத்திற்காக உயிர்க்கொல்லி மருந்துக்கு நிகரான சிகரெட்டை உற்பத்தி செய்து வெளியிடும் நிறுவனங்களில் தவறா?,இல்லை சிகரெட்டால் உருவாகும் பின்விளைவுகளை தெரிந்தும் அதை வாங்கி பாவிக்கிறானே அந்த பாவனயாளனின் தவறா? 
  
   உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.  இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும்,  அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர்.புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%,  விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%,  மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. 
     
   இங்கே ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் பொழுது பாதிக்க படுவது அவர் மட்டும் அல்ல.இவர் விடும் புகையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சு தன்மை அருகில் உள்ளவரையும் பாதிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க பட்ட ஒன்று. ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் ஒரு வருடத்தில் தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.

உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.... புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.

  

    இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.புகைத்தலால் ஏற்ப்படும் நோய்களை தெரிந்துகொள்ள வேண்டும்.புகைத்தல் மூலம் செலவாகும் பணத்தை நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடைய புகைத்தல் பழக்கத்தால் தன் குடும்பமும் பாதிக்க படுவது இல்லாமல் தன் பிள்ளைகளும் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகரிக்கும் இதனால்அவர்களின் நல்ல எதிர்காலத்தை  எதிர்பார்த்து இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.


      புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை ஓரிரு நாட்க்களில் நிறுத்தி விட முடியாது.முதலில் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும்.தங்களுக்கு பிடித்த விடயங்களில் அதிகளவு நேரத்தை  செலவழிக்கலாம். புகை பழக்கத்துக்கு மாற்றீடாக தேநீர் மற்றும் குளிர் பான வகைகளில் நாட்டம் செலுத்தலாம். தினமும் தியானம், உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் மனதை கட்டுப்படுத்தலாம். இன்று புகை மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை சீர் திருத்தி எடுப்பதற்கும் எவ்வளவோ மறு வாழ்வு மையங்கள் உள்ளன அங்கே சென்று நீங்கள் சிகிச்சை எடுக்கலாம்.

 

  உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்  என்றால் மேற் சொன்னவற்றை கடை பிடித்து உங்கள் வாழ்வை அழிக்கும் உயிர் கொல்லி பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிகரெட்டை பற்ற வைக்கும் போது எரிகிறது சிகரெட் மட்டும் அல்ல உங்கள் உடலும் தான்.


 
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான்.
Click to get cool Animations for your MySpace profile