Aadhavan Dheetchanya is one of the outstanding social thinkers reinforcing every initiative to empower the SC/ST fraternity through literary, media and community endeavors. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்.
In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது!
பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன!
An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!
Thanks Centre for Media and Public affairs (CMPA)Venkat Raj
.
No comments:
Post a Comment