இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.சோயா மற்றும் கடுகு பயிருக்கு அடுத்தபடியாக நிலக்கடலை அதிக அளவில் பயிர்செய்யப்படுகிறது.உலக அளவில் 100 நாடுகளில் நிலக்கடலை பயிர் செய்யப்படுகிறது.
நிலக்கடலையும் அதன் சத்துகள் குறித்து வைகை அணை வேளாண்மை ஆராயச்சி மைய உதவி பேராசிரியர் எம்.மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தினந்தோறும் நம் உண்ணும் உணவில் மாவு பொருட்கள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் வெவ்வேறு வடிவில் அடங்கியுள்ளது.
நிலக்கடலை பருப்பில் சராசரியாக 48 சதவீதம் எண்ணெய் சத்தும்,26 சதவீதம் புரத சத்தும்,17.1 சதவீதம் மாவு சத்தும்,2 சதவீதம் நார்சத்தும்,2 சதவீதம் சாம்பல் சத்தும், 1 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக வைட்டமின்கள்.தாதுப்பொருட்கள் உள்ளது. மற்றவை ஈரப்பதமாகும்.
உலக சுகாதார அமைப்புகள் நாள் ஒன்றுக்கு,ஒரு அவுன்ஸ்(28.3கிராம்)பருப்பு வகைகளை உட்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் வேளாண்துறை(VDSA) சான்றுபடி ஒரு அவுன்ஸ் நிலக்கடலை பருப்பில் கீழ்கண்ட சத்துகளை கொண்டுள்ளது.
1,புரதம் 7.3 கிராம்:
குறைந்த விலையில் அதிக புரதசத்து.
2,மொத்த மாவு பொருட்கள்-4.6 கிராம்:
குறைந்த கிளாமிக் இன்டெக்ஸ்(CI) மதிப்பால்,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாவு பொருட்களாகும்.
3,நார் பொருள்-2.4 கிராம்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் கொழுப்பு சத்தை குறைக்கவும் நார்ப்பொருள் பயன்படுகிறது.
4,மொத்த கொழுப்பு பொருட்கள்-14.0 கிராம்:
மிகுந்த செறிவூட்டப்படாத கொழுப்பு அமிலம்(PUFA)4.4 கிராமும் மற்றும் ஒற்றை நிறைவுரா கொழுப்பு அமிலம் 6.9 கிராம் உள்ளன.ஒரு அவுன்ஸ் கடலை பருப்பில் கெட்டகொழுப்பு சத்து 2.7 கிராம் உள்ளது.உணவு பொருட்களில் கெட்ட கொழுப்பு சத்து மொத்த சத்தில் 10 சதவீதத்துக்கு குறைவாக இருத்தல் அவசியம்.
5,வைட்டமின்கள்:
(அ) வைட்டமின் இ-2.4 மி.கி:
இது ஆக்ஸிகரண ஊக்கிகளால் சேதப்படாது. வைட்டமின் ஏ உருவாவதற்கு உதவுகிறது.நோய் எதிர்ப்பு சக்திக்கும்.இருதயநோய் வராமல் பாதுகாப்பிற்கும் தேவைப்படுகிறது.
(ஆ) வைட்டமின் பி9-(போலிக் அமிலம்)68 மைக்ரோ கிராம்:
தினமும் 100 மைக்ரோ கிராம் தேவைபடுகிறது.ஒரு வகையான சோகை நோய் குறைபாட்டை குறைக்கும்.
(இ) வைட்டமின் பி3- (பேண்டதெனிக் அமிலம்) 3.26 மி.கிராம்:
சுகாதாரமன தோல், நரம்பு மண்டலம் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு தேவைப்படுகிறது.உடலில் கொழுப்பு பொருள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
(ஈ) வைட்டமின் பி (தயமின்)0.18 மி.கிராம்:
பசியை தூண்டுவதுடன் உணவு சீரணத்திற்கும் உதவிபுரியும்.இதனை நரம்புத்தளர்ச்சி தடுப்பு வைட்டமின் என்றும் கூறுவதுண்டு.
(உ) வைட்டமின் பி6 0.10 கிராம்:
இச்சத்தினால் வாய்மூலைகளில் உண்டாகும் புண்,உதட்டுபுண் மற்றும் சில வகை சோகை நோய்கள் குணமாகின்றன.உணவில் தினந்தோறும் இச்சத்து 4 மி.கிராம் இருத்தல் நல்லது.
(ஊ)வைட்டமின் பி2 (ரைபோபிளேவின்) 0.04 மி.கிராம்:
தினமும் வயது வந்தவர்களுக்கு 1.5 மி.கிராமும்,கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 2.5 மி.கிராம் உணவில் தேவைப்படுகிறது.இதன் பற்றாக்குறையால் இமைகள் வீங்கி கண்ணில் எரிச்சலும்,நாக்கு சிவந்து பிளவுபட்டும்,வாய்மூலைகளில் வெடிப்பும் மற்றும் உதடு வெடிப்பும் ஏற்பட வாய்புண்டு.
(6) தாதுப்பொருட்கள்:
(அ)துத்த நாகம்-0.93 கிராம்:
புரதம் மற்றும் இரத்தம் உற்பத்தி,பசித்தல் மற்றும் உடல் வளரச்சிக்கு பெரிதும் தேவைப்படுகின்றது.
(ஆ)தாமிரம்-0.32 மி.கிராம்:
இரும்பு சத்து உடலில் பயன்படுவதற்கு பெரிதும் தேவைப்படுகிறது.
(இ)மெக்னீசியம்-48 மி.கிராம்:
எலும்பு மற்றும் பல் சுகாதாரம்,புரதம் உருவாக்குதல்,உடலின் வெப்பநிலையை கட்டுப்பாட்டுடன் வைத்தல்.ஒவ்வெருவருக்கும் நாள் தோறும் 250 மி.கிராம் மெக்னீசியம் தேவைப்படுகிறது.
(ஈ)பாஸ்பரஸ்-107 மி.கிராம்:
கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.கால்சியம் எலும்பிலோ அல்லது பல்லிலோ கால்சியம் பாஸ்பேட்டாக காணப்படுகிறது.தினந்தோறும் ஒரு கிராம் பாஸ்பரஸ் ஒருவருடைய உணவில் இருத்தல் அவசியம்.
(உ)பொட்டாசியம்-200 மி.கிராம்:
உடலின் நீர் தேவையை செம்மையாக பராமரிக்கவும்,புரதத்தை உருவாக்குவதில் இதன் பங்கு முக்கியமாகும்.நளொன்றுக்கு குறைந்தது 10 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது.
(ஊ)கால்சியம்-26 மி.கிராம்:
எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் தேவைப்படுகிறது.தினமும் ஆண்களுக்கு 0.7 கிராமும்,பெண்களுக்கு 1.0 கிராமும்.கருவுற்ற பெண்களுக்கு 1.5 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.
(எ)சோடியம்-5 மி.கிராம்:
நிலக்கடலை இயற்கையில் குறைந்த சோடியம் உள்ள உணவு பண்டமாகும்.உடல் ஆரோக்கியமான நபருக்கு 10-15 சோடியம் குளோரைடு உப்பு ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
(ஏ)இரும்பு சத்து-1.3 மி.கிராம்:
ஹீமோகுளோபினில் 1.3 கிராம் உள்ளது.ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20-30 மி.கிராம் தேவைப்படுகிறது.
No comments:
Post a Comment