Friday, 4 January 2013

நிலக்கடலையும் அதன் சத்துக்களும்



இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.சோயா மற்றும் கடுகு பயிருக்கு அடுத்தபடியாக நிலக்கடலை அதிக அளவில் பயிர்செய்யப்படுகிறது.உலக அளவில் 100 நாடுகளில் நிலக்கடலை பயிர் செய்யப்படுகிறது.
நிலக்கடலையும் அதன் சத்துகள் குறித்து வைகை அணை வேளாண்மை ஆராயச்சி மைய உதவி பேராசிரியர் எம்.மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தினந்தோறும் நம் உண்ணும் உணவில் மாவு பொருட்கள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் வெவ்வேறு வடிவில் அடங்கியுள்ளது.
நிலக்கடலை பருப்பில் சராசரியாக 48 சதவீதம் எண்ணெய் சத்தும்,26 சதவீதம் புரத சத்தும்,17.1 சதவீதம் மாவு சத்தும்,2 சதவீதம் நார்சத்தும்,2 சதவீதம் சாம்பல் சத்தும், 1 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக வைட்டமின்கள்.தாதுப்பொருட்கள் உள்ளது. மற்றவை ஈரப்பதமாகும்.
உலக சுகாதார அமைப்புகள் நாள் ஒன்றுக்கு,ஒரு அவுன்ஸ்(28.3கிராம்)பருப்பு வகைகளை உட்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் வேளாண்துறை(VDSA) சான்றுபடி ஒரு அவுன்ஸ் நிலக்கடலை பருப்பில் கீழ்கண்ட சத்துகளை கொண்டுள்ளது.
1,புரதம் 7.3 கிராம்:
குறைந்த விலையில் அதிக புரதசத்து.
2,மொத்த மாவு பொருட்கள்-4.6 கிராம்:
குறைந்த கிளாமிக் இன்டெக்ஸ்(CI) மதிப்பால்,சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மாவு பொருட்களாகும்.
3,நார் பொருள்-2.4 கிராம்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் கொழுப்பு சத்தை குறைக்கவும் நார்ப்பொருள் பயன்படுகிறது.
4,மொத்த கொழுப்பு பொருட்கள்-14.0 கிராம்:
மிகுந்த செறிவூட்டப்படாத கொழுப்பு அமிலம்(PUFA)4.4 கிராமும் மற்றும் ஒற்றை நிறைவுரா கொழுப்பு அமிலம் 6.9 கிராம் உள்ளன.ஒரு அவுன்ஸ் கடலை பருப்பில் கெட்டகொழுப்பு சத்து 2.7 கிராம் உள்ளது.உணவு பொருட்களில் கெட்ட கொழுப்பு சத்து மொத்த சத்தில் 10 சதவீதத்துக்கு குறைவாக இருத்தல் அவசியம்.
5,வைட்டமின்கள்:
(அ) வைட்டமின் இ-2.4 மி.கி:
இது ஆக்ஸிகரண ஊக்கிகளால் சேதப்படாது. வைட்டமின் ஏ உருவாவதற்கு உதவுகிறது.நோய் எதிர்ப்பு சக்திக்கும்.இருதயநோய் வராமல் பாதுகாப்பிற்கும் தேவைப்படுகிறது.
(ஆ) வைட்டமின் பி9-(போலிக் அமிலம்)68 மைக்ரோ கிராம்:
தினமும் 100 மைக்ரோ கிராம் தேவைபடுகிறது.ஒரு வகையான சோகை நோய் குறைபாட்டை குறைக்கும்.
(இ) வைட்டமின் பி3- (பேண்டதெனிக் அமிலம்) 3.26 மி.கிராம்:
சுகாதாரமன தோல், நரம்பு மண்டலம் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு  தேவைப்படுகிறது.உடலில் கொழுப்பு பொருள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
(ஈ) வைட்டமின் பி (தயமின்)0.18 மி.கிராம்:
பசியை தூண்டுவதுடன் உணவு சீரணத்திற்கும் உதவிபுரியும்.இதனை நரம்புத்தளர்ச்சி தடுப்பு வைட்டமின் என்றும் கூறுவதுண்டு.
(உ) வைட்டமின் பி6 0.10 கிராம்:
இச்சத்தினால் வாய்மூலைகளில் உண்டாகும் புண்,உதட்டுபுண் மற்றும் சில வகை சோகை நோய்கள் குணமாகின்றன.உணவில் தினந்தோறும் இச்சத்து 4 மி.கிராம் இருத்தல் நல்லது.
(ஊ)வைட்டமின் பி2 (ரைபோபிளேவின்) 0.04 மி.கிராம்:
தினமும் வயது வந்தவர்களுக்கு 1.5 மி.கிராமும்,கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 2.5 மி.கிராம் உணவில் தேவைப்படுகிறது.இதன் பற்றாக்குறையால் இமைகள் வீங்கி கண்ணில் எரிச்சலும்,நாக்கு சிவந்து பிளவுபட்டும்,வாய்மூலைகளில் வெடிப்பும் மற்றும் உதடு வெடிப்பும் ஏற்பட வாய்புண்டு.
(6) தாதுப்பொருட்கள்:
(அ)துத்த நாகம்-0.93 கிராம்:
புரதம் மற்றும் இரத்தம் உற்பத்தி,பசித்தல் மற்றும் உடல் வளரச்சிக்கு பெரிதும் தேவைப்படுகின்றது.
(ஆ)தாமிரம்-0.32 மி.கிராம்:
இரும்பு சத்து உடலில் பயன்படுவதற்கு பெரிதும் தேவைப்படுகிறது.
(இ)மெக்னீசியம்-48 மி.கிராம்:
எலும்பு மற்றும் பல் சுகாதாரம்,புரதம் உருவாக்குதல்,உடலின் வெப்பநிலையை கட்டுப்பாட்டுடன் வைத்தல்.ஒவ்வெருவருக்கும் நாள் தோறும் 250 மி.கிராம் மெக்னீசியம் தேவைப்படுகிறது.
(ஈ)பாஸ்பரஸ்-107 மி.கிராம்:
கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.கால்சியம் எலும்பிலோ அல்லது பல்லிலோ கால்சியம் பாஸ்பேட்டாக காணப்படுகிறது.தினந்தோறும் ஒரு கிராம் பாஸ்பரஸ் ஒருவருடைய உணவில் இருத்தல் அவசியம்.
(உ)பொட்டாசியம்-200 மி.கிராம்:
உடலின் நீர் தேவையை செம்மையாக பராமரிக்கவும்,புரதத்தை உருவாக்குவதில் இதன் பங்கு முக்கியமாகும்.நளொன்றுக்கு குறைந்தது 10 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது.
(ஊ)கால்சியம்-26 மி.கிராம்:
எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் தேவைப்படுகிறது.தினமும் ஆண்களுக்கு 0.7 கிராமும்,பெண்களுக்கு 1.0 கிராமும்.கருவுற்ற பெண்களுக்கு 1.5 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.
(எ)சோடியம்-5 மி.கிராம்:
நிலக்கடலை இயற்கையில் குறைந்த சோடியம் உள்ள உணவு பண்டமாகும்.உடல் ஆரோக்கியமான  நபருக்கு 10-15 சோடியம் குளோரைடு உப்பு ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
(ஏ)இரும்பு சத்து-1.3 மி.கிராம்:
ஹீமோகுளோபினில் 1.3 கிராம் உள்ளது.ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20-30 மி.கிராம் தேவைப்படுகிறது.

டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தவும், தடுக்கவும் சித்த மருந்துகளை பயன்படுத்துங்கள்



டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 
மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களுக்கு அன்றாடம் காய்ச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். காய்ச்சலின் அளவு மழைக் காலங்களில் 2 சதவீதமாக அதிகரிக்கக் கூடும். இவ்வாறு வரும் காய்ச்சல் அனைத்தையும் டெங்கு காய்ச்சல் என கருத முடியாது.
டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த காய்ச்சல்  வந்தால், கடுமையான உடல் வலியும், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைந்தும் காணப்படும்.
டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலை குறைப்பது, ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தின், பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே, இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சித்தமருந்துகளை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச் சாறு, நிலவேம்புக் குடிநீர் மூலம் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும். காய்ச்சலுக்கு மருத்துவர்கள் அளிக்கும் ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை தயாரித்து பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம். மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் விலையேதுமின்றி கிடைக்கிறது.
மூலிகைச்சாறு தயாரிக்கப்படும் முறைகள்:
பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிககட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேணேடும். பப்பாளி இலைச் சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செய்பட செய்கிறது.
பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும் முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பப்பாளி இலைச்சாறு வீட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்தாகும்.
மலைவேம்பு இலைச்சாறு: புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.
நிலவேம்புக் குடிநீர்: நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்துவிடும்.
மேற்கண்ட சாறுகளையும் குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகும் மேலும் இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.

உடல் எடையை குறைக்க சில எளிய வழிமுறைகள்


உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.
உடல் எடை குறைக்கும் உணவு பொருட்கள்: 
* வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.
* ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.
* மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே இதை தவிர்ப்பது நல்லது.
* ஒரு நாளைக்கு 10 டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.
* எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டும், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.
* பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
* பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 -10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.
* கீரைகளில் அதிகப்படியான வைட்டமீன், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.
* கீரின் டி உடல் எடையை குறைக்கும்.
* பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள் எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.
* தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
* காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா, ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
* சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.....

ஆறாத புண்ணை ஆற்ற...!



  • புகைப்படங்கள்
தசைநார்க் கசிவு, சிரைகள் எனும் ரத்தக் குழாய்கள் வெட்டுப்படுதல், புண் ஆழமாக இருத்தல், கிருமிகளால் உண்ணப்படுதல், எலும்பு முறிதல், அதிகமான அளவில் நெய் மற்றும் எண்ணெய்ப் பொருட்களைச் சாப்பிடுதல், புண் ஏற்பட்டுள்ள பகுதியில் உரோமம், ஆடை முதலியவை உராய்தல், குலுக்கலுடன் கூடிய பயணம், குடல் பகுதியை மலம் அதிகம் சேரும் அளவில் வளரவிட்டு, சுத்தம் செய்து கொள்ளாமல் மலச்சேர்க்கையை வளர்த்துக் கொள்ளுதல், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், அல்லது அதிகப் பட்டினியிலிருந்து உடலை இளைக்கச் செய்யும் முயற்சி, பகலில் தூங்குதல், இரவு கண் விழித்தல் ஆகியவை காரணமாக, ஆறக்கூடிய புண்ணாக இருந்தாலும், ஆறுவதில்லை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
பழைய அரிசியினால் தயாரிக்கப்பட்ட கஞ்சியை காலை உணவாக, இந்துப்புடன் வெதுவெதுப்பாகச் சாப்பிடுவது நலம். அதுபோல, பச்சைப் பயறு கஞ்சியைக் காலை உணவாகச் சாப்பிட்டால் புண் விரைவில் ஆறுவதற்கு உதவியாக இருக்கும். புது அரிசி, உளுந்து, எள்ளு, கடலை, கொள்ளு, வெல்லம், மாவுப் பண்டங்கள், பாயசம், தயிர், பால், புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றைக் குறைக்கவும். தலையைக் கிழக்கு நோக்கி வைத்து, இரவில் உறங்கினால், விரைவில் ஆறுவதற்கான ஒருவழியாகும் என்ற ஒரு விநோதக் குறிப்பை ஸூஸ்ருதர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
திரிபலை, கருங்காலிக் கட்டை, அதிமதுரம், வேப்பிலை, மரமஞ்சள், மயில்துத்தம் போன்றவை புண்களை ஆற்றுவதில் சிறந்தவை.
திரிபலை எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கருங்காலிக் கட்டையை வகைக்கு 5 கிராம் வீதம் சேர்த்து, அரைலிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, கால் லிட்டராக வற்றியதும் வடிகட்டி, புண் ஏற்பட்டுள்ள பகுதியை காலை, இரவு உணவுக்கு முன் அலம்பி
விடுவதால், அங்குள்ள கிருமித் தொற்று நீங்குவதுடன், புண் விரைவில் ஆறுவதற்கும் ஏற்ற சிகிச்சையாகும். அதன்பிறகு, அதிமதுரத் தூளை அந்த இடத்தில் தெளிப்பதும் நல்லதே.
துத்தம், வேப்பிலை, மஞ்சளைப்  புகைத்து புண் ஏற்பட்டுள்ள பகுதியில் இரவில் படுக்கும் முன் புகையைக் காண்பித்துவர, புண் விரைவில் ஆறும்.
இரண்டு திரிபலாகுக்குலு எனும் மாத்திரைகளைக் காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.
சுமார் 28-48 நாட்கள் வரை சாப்பிடலாம். மஞ்சிஷ்டாதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து,  காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் நல்லதே. சுமார் 3 -4 வாரங்கள் வரை சாப்பிடலாம். 

எந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?


பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான "பிரிட்ஜ்" என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர்.  எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.
பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் பற்றி தகவல்:
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் 
ஆப்பிள் - ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்
அன்னாசி - 1 வாரம்
காய்கறிகள்:
பிரோக்கோலி, காய்ந்த பட்டாணி  3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் - ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்
காளான்  1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:
சமைத்த மீன்  3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்