Saturday 18 April 2015

MOTHER- A MESSAGE FOR YOU FROM ME IN YOUR WOMB!!!!


You felt me the day I formed in you, you felt me every time I moved in you, you felt me shape up in you, you felt my first heartbeat, my first touch, my first cry, my first yawn, my first blinking of my eyes. I have been troubling you ever since I came in you whether it’s that morning sickness, that nausea, that breathlessness every time you spoke or the constant needle pricks for those 9 months to make sure I am totally safe and doing well in you.

You felt me when even I couldn't feel my own self, you could sense every time I needed food, each time I wanted to play inside you ,you would just twist and turn throughout the night without complaining so that I could play my unknown games. I kicked you so hard so many times from inside and every time it used to hurt I know but u never said anything and you just smiled because it was me.

You changed everything about your existence for me. It started with you changing your eating habits, your like’s dislikes I know you loved having morning tea with daddy but I dint like tea so you stopped having it even before I came into this world, I loved having that health drink with milk and u hated it all your life but you had it only for me. Each meal of the day you had as per what I liked and till then I was not even a month old in you.

The next big change for you was when I started growing in you month by month and your body started deforming. Now you could no longer wear your favorite dresses but you still always smiled with a mere thought of my existence in you. I was getting bigger and your body was getting weaker now even the stretch marks were showing on your belly, your fingers and feat were swollen because your body couldn’t bear my weight but you dint care a bit about your skin, your beauty, your body or yourself at all, all you cared about is me, me and me.

I used to constantly see you and feel you from inside I used to talk to you in your thoughts, I used to love it when you danced alone in the room carefully thinking about me, I used to be so excited when you shopped for me just before my arrival I used to chose everything through your eyes, I used love papa when he used to hug both of us in the night. He is a nice man I like him because he takes care of you. And finally the day came when I was jumping up and down to come out and see this beautiful world with you. But even on that day I gave you so much of pain, you almost took a second birth for me momi so that I can start my new journey with you and papa. I wanted to come out as soon as possible so that I could reduce your suffering because I cannot see you in pain mother but it weren't too easy for me either. But now I am very happy because we both are fine and most importantly I am with you sleeping beside you. I would like to thank you mother for bringing me into this colorful, beautiful, challenging world stage. I promise to perform my best. And yes I promise you I will never leave you and will stay with you like a shadow. But you are my life, air, existence and I am incomplete without you.

Sunday 29 March 2015

**பன்னாட்டு நிறுவனங்களால் சிதைக்கப்படும் தமிழர் உணவு கலாச்சாரம் ****

பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் மிகுந்த ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடிய காலகட்டம் இது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இங்கு உள்ள மக்களுடைய அடிப்படையான வாழ்வியல் முறைகளை முழுமையாக மாற்றக்கூடிய அளவில் இவர்கள் பல்வெறு விடயங்களை இங்கு வந்து திணிக்கக்கூடிய ஒரு சூழல் இங்கு நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் நாம் பார்க்கும்போது மக்களிடையே பல ஆரோக்கியக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
நம்நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பல உணவுகளை உற்பத்தி செய்து உணவுப் பொருள்களில் தன்னிறைவாய் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான நாடே இந்தியா. அதில் தமிழர்களின் விவசாய முறைகள் என்பது தன்னிறைவாய் இருந்த சூழல்கள் உண்டு. ஆனால் இன்று விவசாயம் செய்வதற்கே பயப்படக்கூடிய அளவிற்கு தமிழர்கள் பின்வாங்கக்கூடிய ஒரு சூழலை, ஒரு காலகட்டத்தை இந்தப்பன்னாட்டு நிறுவனங்கள் நம்மீது திணிக்க ஆரம்பித்து விட்டன.
அரசு உதவியுடன் தொழில்துறையை மேம்படுத்துகிறேன் மேம்படுத்துகிறேன் எனக்கூறி இங்கு உள்ள விளைநிலங்கள் எல்லாவற்றையும் ரியல் எஸ்டேட்டுக்களாக மாற்றுவதற்கு மிகப்பெரிய ஒரு காரணி யார் என்றால் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தான். கார் தொழிற்சாலை வருகிறது, காய்கறிக்கடை வருகிறது, அது வருகிறது, இது வருகிறது என்று விவசாய நிலங்கள் எல்லாமே கட்டிடம் கட்டுவதற்கான நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு பெரும் பணத்தொகை கொடுத்து இவர்கள் மீண்டும் விவசாயம் பண்ணமுடியாத மனோநிலைக்குத் தள்ளி, விவசாய நிலங்களைப் பறிக்கக்கூடிய நிகழ்வுகள் இங்கு நிறைய நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பறிக்கும் செயல்பாடுகள் பல இங்கு நடக்கும் இந்தக் காலகட்டத்தில் விவசாயம் சார்ந்த, உணவுப் பொருள் சார்ந்த உற்பத்தியை முழுவதுமாக இழந்து நிற்கிறோம். இச்சூழலில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத சூழலை உருவாக்குவதில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் பல விடயங்களை நம்மீது திணித்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அந்தந்த நாடுகளில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களை நாகரீக மோகத்தை நம்மிடையே வளர்த்து அதன் அடிப்படையில் நம்மையும் அந்த உணவைச் சாப்பிடக்கூடிய கலாச்சாரத்தை இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்துகொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்றால் நம்முடைய பொருளாதார வளத்தை நமக்குத் தெரியாமலேயே உணவு என்ற போர்வையில் போர்த்திக் கொண்டு அவர்கள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பயன்படுத்தக்கூடிய பீட்சா, பர்க்கர் போன்று மேற்கத்திய கலாச்சார உணவுக் கலாச்சாரத்தை நம்மிடையே சில நிகழ்வுகளில் திணித்து, இதன் ருசியை நமக்குக்காட்டி அதையே பேக்கிங் உணவாகக் கொண்டுவரக்கூடிய சூழல் வந்துவிட்டது. அதனால் நாம் பாரம்பரியமாக எடுக்கக்கூடிய உணவுப் பொருட்களிலிருந்து நாம் விலகி ருசி அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யக்கூடிய பேக்கிங் உணவு, டின் பேக்கிங் உணவு, நூடுல்ஸ் போன்ற உணவுகள் போன்ற இது மாதிரியான உணவுகளுக்கு நாம் அடிமையாகக்கூடிய காலகட்டத்தை அவர்கள் உருவாக்கி விட்டனர். இதன் மூலம் அவர்கள் பெருத்த கொள்ளை லாபத்தை ஈட்டி வருகின்றனர். லாபம் என்பது சுரண்டப்பட்டு, சுரண்டப்பட்டு அவர்கள் நாட்டிற்கு நம் செல்வங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் உணவு உற்பத்தியில் நாம் கவனம் செலுத்தவிடாமல் செய்கிறது. இவர்கள் தயாரித்த இந்த உணவுப் பொருட்கள் தமிழகத்தில் பெரும்பாலானோர்க்கு ஒத்துக்கொள்வதே இல்லை.
இந்த மேற்கத்திய உணவுகளை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் வர இவ்வுணவு வழிவகுக்கிறது. புதிது புதிதான நோய்கள் இதன் மூலம் பரவி வருகின்றது. நம் தமிழ்நாட்டில் 60 வயது முதல் 80 வயது உள்ள நம் முன்னோர்கள் சிலர் கூறுவதை நாம் கிராமங்களில் இன்றும் கேட்டிருப்போம். “எனக்கு 60 வயது ஆகிறது இதுவரை நான் காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று மாத்திரை, ஊசி எடுத்துக்கொண்டதில்லை” என்று பெருமிதமாக நம்மிடையே கூறுவார்கள். இவ்வாறு கூறிய தமிழர்கள், இன்று சிறு குழந்தைக்குக்கூட விதவிதமான நோய்கள் வருவதால், விதவிதமான மருந்துகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சூழலில் இன்று தமிழகம் உள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களே இதற்குக் காரணம். தொலைக்காட்சி என்ற எமனை வீட்டிற்குள்ளேயே உட்கார வைத்துக்கொண்டு, இதில் காட்டக்கூடிய விளம்பரங்கள் அனைத்தையுமே நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்த உணவுப் பொருட்கள், இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துப் பொருள்கள் இதெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பரத்தைப் பார்த்து வளர்கின்ற குழந்தைகளிடம் கூட இவைகளை வாங்கி உபயோகிக்கக்கூடிய மனோநிலையை உருவாக்கி விடப்பட்டுள்ளனர். பசியுள்ள குழந்தைக்கு ஒரு உணவைத் தரவேண்டும் என்றால் கூட, அந்தக் குழந்தை அடம்பிடித்துக் கேட்கக்கூடிய உணவைத் தருகின்ற காலகட்டத்தை மறைமுகமாக இந்த நிறுவனங்கள் நம்மீது சுமத்தி வருகிறது.
அதுபோல் பல உணவுகளிலேயே உடல் நலம் அடைந்த பண்டைய தமிழர்கள் சமுதாயம் இன்று கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்படுகிறது. அன்றைய காலகட்டத்தைப் பார்த்தோம் என்றால், ஏதாவது சளி இருக்கிறது என்றால் கூட இதற்குத் தகுந்தாற்போல் கஞ்சி வழங்குவர்.
பண்டைய சித்தர்கள் “பஞ்சமுண்டிக் கஞ்சி” எனக்கூறுவார்கள். உடல் நிலை சரியில்லை, கபம் அதிகம் இருக்கிறது, சளி, இருமல் தொடர்ச்சியாக இருக்கிறது என்றால் இதற்கு மருந்தாக பச்சரிசி மற்றும் இப்பச்சரிசியில் நொய்யரிசி, கடலப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, சிறு பருப்பு இந்த ஐந்து பருப்பையும் போட்டு கஞ்சி போல் செய்து திரவ நிலையில் இருக்கும் போது உண்ணவேண்டும்.
இதை உண்பதால் ஏற்படும் பயன்கள்:
கை,கால் வலி, அசதி, சோர்வு, வாந்தி, பித்தம், தலைசுற்றல், மயக்கம், காய்ச்சல் இவை எல்லாமே முழுமையாகக் குணமாகும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
இதை உண்டவர்களும் நல்ல பலன்களை அடைந்தார்கள். ஆனால் இன்று வரும் பல நோய்களுக்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் தற்போது உண்ணும் உணவுப் பொருட்கள் இதற்குக் காரணமாகும்.
இந்த உணவால் வரக்கூடிய மந்தம், இந்த மந்தத்தால் வரக்கூடிய (Food Poison) உணவு நச்சு ஆகிய பல நோய்கள் வர வழி வகுக்கிறது.
அன்று வாழ்ந்த தமிழர்கள் வீட்டிற்கொரு திண்ணையைக் கட்டி அதில் விதவிதமான நாட்டுக்கோழிகளை வளர்த்து, தனக்கு வேணும் எனும் போதெல்லாம கோழியடித்துக் குழம்பு வைத்துச் சாப்பிட்ட தமிழர் சமுதாயம் இன்று காணாமல் போய்விட்டது. இதற்குப் பதிலாக இன்று (பிராய்லர்) கறிக்கோழிகளை நம்பக்கூடிய தன்மை உருவாகி விட்டது. இந்தக் கறிக்கோழியை நாம் பெரும்பாலும் சமைத்துச் சாப்பிடுவதில்லை. அவ்வாறே சமைத்தாலும் போதிய ருசி இதில் கிடைப்பதில்லை. அதனால் இதே கோழியை கே.எப்.சி க்குச் சென்று வாங்கி உண்டால் அது வேறுமாதிரியான ருசியாக இருக்கிறது. இந்தக் கடையில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாய் சென்று விழுவதால் தமிழர்களின் பெரும்பாலான பணம் பறிபோவதோடு, இதனால் வரக்கூடிய நோய்களையும் பெற்று வருகின்றனர். புதுவிதமான ருசி தேடித்திரியும் தமிழர்களுக்கு இறுதியில் புதுவிதமான நோய்களே பல்கிப் பெருகிவிட்டன.
இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் Food Subliment- என்ற போர்வையில் மல்டி லெவல் மார்கெட்டிங் (MLM) என்ற விசயத்தை நம்மீது தூவி, இதன் அடிப்படையில் நம் நாட்டுப் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சீரழிக்கப்பட்டு வருகிறது.
நம் தமிழர் பாரம்பரிய உணவான வெறும் ராகிக் கஞ்சியை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நம் உடல் எடை குறைந்துவிடும். வரகரிசி சோற்றை தொடர்ந்து 2 மாதம் சாப்பிட்டால் உடல் எடை குறைந்துவிடும். ஆனால் பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்றாக “ஹெர்பாலைஃப்”, Food Subliment என்ற போர்வையில் ஒரு 7500 ரூபாய்க்கு ஒரு உணவுப் பொருளை நம் நாட்டில் விற்பனை செய்கின்றனர். இந்த பெரும் தொகையில் பல கோடி தமிழர்களின் பணம் பன்னாட்டு கம்பெனிகளின் கல்லாவிற்குச் செல்கிறது.
இதுபோல தமிழ்நாட்டில் உலவி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களான பியர்லஸ், குவாண்டம், ஆம்வே, ஹெர்பாலைஃப் போன்ற நிறுவனங்கள் எல்லாமுமே, உணவுப் பொருட்களின் மூலம் சுயவேலை வாய்ப்பு என்ற காரணத்தைக் காட்டி ஒருவர் பின் ஒருவராகத் தொடர்சங்கிலி போல் உறுப்பினர்களைச் சேர்த்து பலபேரை ஏமாற்றக்கூடிய சூழல் நிலவுகிறது. இந்த வியாபாரத்தில் பலரை ஏமாற்றி ஒருவன் பணக்காரன் ஆகிறான். எல்லாரையும் ஏமாற்றி பன்னாட்டுக் கம்பெனிகள் பல கோடிகளைப் பெறுகிறது. இதனால் பல ஆயிரம் கோடி தமிழர்களின் பணமானது பிற நாட்டினர் உணவுச் சுரண்டலின் பெயரில் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் இங்கு விழிப்புணர்வு இல்லாத, சோம்பல் தன்மை கொடுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி நம்மிடையே உள்ள பெரும் பொருளாதார வளத்தை கொள்ளையடிப்பதிலேயே இப்பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. அதனால் தமிழர்கள் இதன் மூலம் விழிப்புணர்வான பாதையை நோக்கிப் பயணப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்த மேற்கத்திய மோக அடிப்படையில், நாகரீக மோகம் என்ற அடிப்படையில் விதவிதமான பார்ட்டிகளையும், டிஸ்கோத்தேகளையும் சமூகத்தைச் கேவலப்படுத்தக்கூடிய, சீரழிக்கக்கூடிய விடயங்களையே செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இன்று தமிழ்நாட்டில், ஒருவர் பிறந்த நாளிற்காக பல ஆயிரம் ரூபாயைச் செலவிடக்கூடிய தமிழ்ச்சமூகத்தைக் கூட பன்னாட்டு மோக அடிப்படையில் நமக்கு நாமே இதை வளர்த்துக் கொண்டோம். பிறந்த நாளில் நர் மனப்பூர்வமாக வாழ்த்துக்கள் சொன்னால் கூட போதும். அவ்வளவு ஏன் சிறு இனிப்பு வழங்கினால் கூட போதும். இதை விடுத்து இன்று நம் பணபலத்தையும், நம் கௌரவத்தையும் வெளிக்காட்டக்கூடிய நிகழ்வாகக் கருதிக்கொண்டு பணத்தை வீணடிக்கின்றனர். இதுபோல் வீண் கௌரவத்திற்காக கொண்டாட்டங்களைக் கூட்டிக் கொண்டு அடிப்படை ஆரோக்கியத்தை நாம் தவறவிட்டுவிட்டோம். அதனால் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய உணவுகளை பின் நோக்கி நாம் சென்றால் போதும். நமக்கான ஆரோக்கியம் நம் முன்னோக்கி வரும்.
பன்னாட்டு நிறுவன குளிர்பானங்கள்:
பன்னாட்டு நிறுவன குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது அல்ல. இது நமக்கு நாமே விசம் வைத்துக் கொண்டதற்குச் சமமானதாகும். இந்த மாதிரி பல குளிர் பானங்களை மாதக்கணக்கில் ஒருவர் குடித்துக் கொண்டே வந்தால் அவர் முழு நோயாளி ஆகிறார் என அர்த்தம்.
தினசரி காலை வேலை உணவாக ஒருவர் இந்த பன்னாட்டு குளிர்பானத்தைக் குடித்தும் அதோடு பிரட்டையும் சேர்த்து ஒரு மாதம் உண்டு வந்தார் என்றால் நிச்சயம் அவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு உள்ளது. இதுபோல் பல மனிதர்களை நான் சந்தித்திருக்கின்றேன்.
குளிர்பானம் என்ற போர்வையில் இனிப்பான விசத்தை பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. வரி கிடைக்கிறது என்பதற்காக இவர்களுக்கு பல்வேறு சலுகைகளைக் கொடுப்பதற்கு நம் அரசுகளும் தயாராக இருக்கிறது. இறுதியில் நம் ஆரோக்கியம் தான் தீ வைத்துக் கொழுத்தப்படுகிறது. சில நேரங்களில் நம் வீட்டுக் கழிப்பறைக்கு பீனாயில் இல்லை என்றால் இந்த பன்னாட்டு குளிர்பானத்தை ஊற்றிக் கழுவிப் பாருங்கள் கழிவறையில் ஒரு கிருமி கூட இருக்காது.
அதனால் இந்த கழிவறையில் ஊற்றக் கூடிய விசத்தை இனிப்பாகக் கொடுப்பதால் நாம் குடித்து விடுவதா? யோசிக்க வேண்டும். இதற்கு மாற்றாக ஆப்பிள், மாதுளை, திராட்சை, சப்போட்டா, சீத்தாப்பழம், பப்பாளி, அத்திப்பழம், பேரீச்சம்பழம் இது போல் பழங்களைப் பழச்சாறுகளாக அருந்துகிறபொழுது உடல் வழுப்பெறும். நற்சிந்தனை உண்டாகும்.
மாறாக பன்னாட்டுக் குளிர்பானம் குடிப்பதால் நம் குடல்தான் அழிந்துபோகும், குடல் சுருங்கி விடும். இதனால் வரும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏராளம். ஆதனால் தமிழ்ச் சமூக இளைஞர்கள் பாட்டிலும் கையுமாய் அலைவதைத் தவிர்த்து நம் பாரம்பரிய குளிர்பானத்தோடு வரவேண்டும்.
தமிழருக்கு இனி பிறநாட்டு உணவு சார்ந்த அடிமைத்தனம் இருக்கவே கூடாது. இந்த அடிமைத்தனம் இருந்தது என்றால் நாம் சுதந்திரம் அமைந்திருந்தால் கூட பணம், பலம் படைத்தவன் நம்மை மறைமுகமாக ஆள்வான். நாம் தொடர்ச்சியாக வீழ்ந்துகொண்டே போவோம். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.
நம் நாட்டில் விளையக்கூடிய தாவரங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள், கிழங்குகள் எல்லாவற்றையும் சம விகிதத்தில் இந்த உணவுகளை எடுக்க வேண்டும். கால்சியம், புரதம், விட்டமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துப் பொருட்களை முழுமையாக எடுக்கும்போது தான் அற்புதமான பலன் கிடைக்கும். மேற்கத்திய மோகத்தில் ஆங்கில மருத்துவத்தையே கதியாக நம்பி கிடப்பது கூட மிகத் தவறான விடயமாகும். சில நேரங்களில் நோய்க்கு மருந்து எடுப்பதை விட, மருந்து எடுக்காமல் இருப்பதே நல்ல உடல் நலத்தை தரக்கூடிய நிலையும் உண்டு. ஆகவே மருந்து மருந்து என்று போகாமல் உணவையே மருந்தாக்கி நல்ல முறையில் சமூகத்தை வளர்க்கக்கூடிய தன்மையை தமிழர்களாகி நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் நாம் தான் எல்லோருக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும்.
உலகெங்கும் இருக்கும் எந்தத் தமிழர்களாக இருந்தாலும் மேற்கத்திய உணவு முறைகளையும் மேற்கத்திய வாழ்க்கை முறைகளையும், விடுத்து, குடி, கூத்து, கும்மாளம் என்று இருக்காமல் நல்ல தமிழ் குடிமகனாய் நாம் தரணி எங்கும் வலம் வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
மருத்துவர் அருண் சின்னயா.

Thursday 19 March 2015

தமிழ்ப் பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
  • அடியாத மாடு படியாது.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றும் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  • அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அற்ப அறிவு அல்லற் கிடம்.
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஆ

  • ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
  • ஆடையில்லாதவன் அரை மனிதன்.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ

  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  • இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  • இருவர் நட்பு ஒருவர் பொறை.
  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • இளங்கன்று பயமறியாது.
  • இளமையில் கல்.
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இறுகினால் களி , இளகினால் கூழ்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
  • இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - உ, ஊ

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
  • உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
  • உயிர் காப்பான் தோழன்.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
  • ஊருடன் ஒட்டி வாழ்.
  • ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - எ, ஏ

  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
  • எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  • எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
  • எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
  • எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  • எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
  • எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எறும்பு ஊர கல்லுந் தேயும்.
  • எறும்புந் தன் கையால் எண் சாண்.
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
  • ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
  • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
  • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - க

  • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கல்வி அழகே அழகு.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  • கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கா

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • காணி ஆசை கோடி கேடு.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கி, கீ, கு, கூ

  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குரைக்கிற நாய் கடிக்காது.
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கெ, கே

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கெட்டாலும் கெட்டி கெட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெட்டும் பட்டணம் சேர்.
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கேட்டதெல்லாம் நம்பாதே? நம்பியதெல்லாம் சொல்லாதே?
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கை

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
  • கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
  • கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • கையிலே காசு வாயிலே தோசை.
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கொ

  • கொடிக்கு காய் கனமா?
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கோ

  • கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
  • கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ச, சா

  • சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்.
  • சருகைக் கண்டு தணலஞ்சுமா?
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சித்திரமும் கைப்பழக்கம்.
  • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  • சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சு, சூ

  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை?
  • சுடினும் செம்பொன் தன்னொலி கெடாது.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - செ, சே, சை

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செய்வன திருந்தச் செய்.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.
  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - சொ, சோ

  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல் அம்போ வில் அம்போ?
  • சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
  • சோம்பித் திரியேல்.
  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - த

  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  • தந்தை தாய் பேண்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தருமம் தலைகாக்கும்.
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலை இருக்க வால் ஆடலாமா ?
  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
  • தனக்கு மிஞ்சித் தான் தருமம்
  • தனி மரம் தோப்பாகாது.
  • தன் கையே தனக்குதவி.
  • தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
  • தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
  • தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
  • தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.
  • தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும்.
  • தானாடா விட்டாலும் சதையாடும்.
  • தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  • துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
  • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
  • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ந

  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுவதா?
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா!
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்.
  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • நயத்திலாகிறது பயத்திலாகாது.
  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  • நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
  • நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
  • நன்மை கடைப்பிடி.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நா

  • நா அசைய நாடு அசையும்.
  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  • நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
  • நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
  • நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.
  • நாய் விற்ற காசு குரைக்குமா?
  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • நாள் செய்வது நல்லார் செய்யார்.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
  • நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நி, நீ

  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
  • நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

  • நுணலும் தன் வாயால் கெடும்.
  • நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கெடுத்தது குறுணி.
  • நெய் முந்தியோ திரி முந்தியோ.
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • நெருப்பில்லாமல் புகையாது.
  • நெருப்பு என்றால் வாய் வெந்து போமா?
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
  • நேற்று உள்ளார் இன்று இல்லை.
  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
  • நோய்க்கு இடம் கொடேல்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ப

  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
  • பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
  • பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • பருவத்தே பயிர் செய்.
  • பல துளி பெருவெள்ளம்.
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
  • பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
  • பாம்பின் கால் பாம்பு அறியும்.
  • பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
  • பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
  • பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
  • பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பு, பூ

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • புத்திமான் பலவான்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • புயலுக்குப் பின்னே அமைதி.
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • பூ விற்ற காசு மணக்குமா?
  • பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பெ, பே

  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  • பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
  • பேசப் பேச மாசு அறும்.
  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  • பேராசை பெருநட்டம்.
  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - பொ, போ

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ம

  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • மண்டையுள்ள வரை சளி போகாது.
  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  • மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
  • மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
  • மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  • மவுனம் கலக நாசம்.
  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  • மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
  • மனம் உண்டானால் வழி உண்டு.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • மனம் போல வாழ்வு.
  • மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.
  • மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மா

  • மாடம் இடிந்தால் கூடம்.
  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
  • மாதா ஊட்டாத சோறு, மாங்காய் ஊட்டும்.
  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  • மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  • மாரடித்த கூலி மடி மேலே.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • மாரி யல்லது காரியம் இல்லை.
  • மாவுக்குத் தக்க பணியாரம்.
  • மாற்றானுக்கு இடங் கொடேல்.
  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மி, மீ, மு, மூ

  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • மின்னுவது எல்லாம் பொன்னல்ல.
  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  • மீதூண் விரும்பேல்.
  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முள்ளை முள்ளால் எடு.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - மெ, மே, மொ, மோ,மெள

  • மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  • மெளனம் மலையைச் சாதிக்கும்.


Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - வ, வா, வி

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைகொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.
  • யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வரவு எட்டணா செலவு பத்தணா.
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • வருமுன் காப்பதறிவு.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • வாழு, வாழ விடு.
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  • விதி எப்படியோ மதி அப்படி.
  • வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.
  • வீட்டில் எலி வெளியில் புலி.
  • வெட்டு ஒன்று துண்டிரண்டு.
  • வெறுங்கை முழம் போடுமா?
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும்.

Tuesday 25 March 2014

LOW COST WATER FILTER AND SOLAR LIGHT TO THE RURAL PEOPLE AND URBAN PEOPLE

 Solar light 
Low cost waterfilter

Dear friends and well wishers of AHM NGO

We are selling low cost solar lantern and low cost water filter for business inquiries please call me 9443596715 


Wednesday 12 March 2014

“எங்கேயும் எப்போதும் நாம் கண்காணிக்கப்படுகிறோம்!”


எந்த நேரமும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது கண்காணிப்பு! நம் கண்ணுக்குத் தெரிபவை சி.சி. டி.வி. கேமராக்கள் மட்டும்தான். ஆனால், நமது அலைபேசி பேச்சுகள் முதல், மின்னஞ்சல் உரையாடல் வரை சகலமும் இடைவிடாமல் கண்காணிக்கப்படுகின்றன. எதுவும் இங்கே அந்தரங்கம் இல்லை; எதுவும் ரகசியம் இல்லை. இந்தக் கண்காணிப்பின் அபாயத்தை, அதற்குப் பின்னுள்ள அரசியலை உரக்கப் பேசுகிறார் எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் வழக்குரைஞருமான ச.பாலமுருகன்.

''கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு, 'கம்யூனிகேஷன் மானிட்டரிங் சிஸ்டம்’ (Communication Monitoring System-CMS) என்ற திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. 400 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டம், குடிமக்களின் அனைத்துவிதமான தகவல் தொடர்புகளையும் கண்காணிக்கிறது. செல்போன் பேச்சு, எஸ்.எம்.எஸ்., ஃபேக்ஸ், இ-மெயில்... ஆகிய அனைத்தையும் கண்காணித்து, தேவைப்படுவதை எடுத்துக்கொள்ளலாம். வழக்கமாக காவல் துறையினர், ஒரு குறிப்பிட்ட செல்போன் பேச்சை அல்லது இ-மெயிலைக் கண்காணிக்க வேண்டும் என்றால், அந்தச் சேவை வழங்குநரின் உதவியுடன் இடைமறிப்பார்கள். ஆனால், இந்தப் புதிய திட்டத்தின்படி எந்தவித இடையூறும் செய்யாமல் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். இது அமலுக்கு வந்து இப்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நொடிகூட, நம் அனைவரின் செல்போன் பேச்சுகளும், இ-மெயில் உரையாடல்களும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. யாருடையது, எப்போது தேவை என்று நினைக்கிறார்களோ, அப்போது எடுத்துக்கொள்வார்கள்.

ஓர் அரசு, தன் சொந்த நாட்டின் குடிமக்களை ஏன் வேவு பார்க்க வேண்டும்? அதிகரித்துவரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் இத்தகையக் கண்காணிப்பு அவசியம் என்று அரசு சொல்கிறது. 'தீவிரவாதிகள்தான் எங்கள் இலக்கு’ என்று அரசு வெளித்தோற்றத்தில் சொன்னாலும், அதன் உண்மையான இலக்கு வேறு. அரசியல்-மனித உரிமை இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும்தான் அவர்களின் உண்மையான இலக்கு. அரசின் கொள்கைகளை எதிர்த்து, மக்கள் விரோதத் திட்டங்களை அம்பலப்படுத்தி, கார்ப்பரேட் பயங்கரவாதத்தைக் கண்டித்து என்னவிதமான போராட்டங்களை நடத்தப்போகிறார்கள் என்று அரசு உளவு பார்க்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய நினைக்கிறது. இதற்காக பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்கிறார்கள். தனி மனித உரிமைகளில் வரம்பு மீறித் தலையிடும் அரசின் இந்தத் திட்டத்தை, எந்தப் பிரதான அரசியல் கட்சியும் பெயரளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இந்த மௌனம் மிக மிக ஆபத்தானது.''

''எனில், இத்தகைய கண்காணிப்பால் சாதாரணக் குடிமக்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?''

''அப்படிச் சொல்ல முடியாது. அரசு தன் சொந்தக் குடிமக்களை வேவு பார்க்கிறது என்றால், மக்கள் அனைவரையும் குற்றம் செய்ய சாத்தியம் உள்ள கிரிமினல்களாகக் கருதுகிறது என்று பொருள். அதனால்தான் வீட்டு உரிமையாளர்கள் அனைவரும், தங்கள் வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள். வட இந்தியர்கள், தங்கள் சொந்த ஊரின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை காவல் நிலையத்தில் பதிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். 'இதில் என்ன தவறு? நாளையே ஒரு குற்றம் நடந்தால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்குமே’ என்று தோன்றலாம். நடைமுறையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும் தலித்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பது இன்றும் கடும் சிக்கலானதே. அவர்கள் தங்கள் சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டுதான் குடியிருக்க வேண்டியிருக்கிறது. 'அடையாள அட்டையைக் கொடு’ என்றால், இனி இவர்களுக்கு வீடு கிடைப்பது இன்னும் சிக்கலாகும்.

ஏற்கெனவே ஏழைகளை கிரிமினல்களாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் வட இந்தியத் தொழிலாளர்கள், மூன்றாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். சம்பளம் முதல் சிவில் உரிமைகள் வரை சகலத்திலும் அவர்களை 'தனக்கும் கீழானவர்களாகவே’  மனம் கருதுகிறது. இத்தகையக் கண்காணிப்புகளின் மூலமாக, இதுபோன்று விளிம்பில் இருக்கும் மக்கள் மேலும், மேலும் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள். தங்கள் சொந்த விஷயங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்பது தெரிந்தால், சாதாரண மக்கள் சிந்தனை அளவிலேயே சுயதணிக்கை செய்துகொள்வார்கள். அதைத்தான் அரசும் விரும்புகிறது. அரசுக்கு எதிராகச் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டு வெறுமனே கேளிக்கைகளில் திளைத்திருப்பது அரசுக்கு ஆதாயம்தானே?''

''ஆதார் அட்டையையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடியுமா?''

''நிச்சயம்... ஆதார் அட்டையும் ஒரு கண்காணிப்புக் கருவிதான். ஆதார் அட்டைக்குச் சேகரிக்கப்படும் தகவல்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அரசின் எந்த ஒரு சேவையையும் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசோ, மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதார் அட்டையை இடைவிடாமல் சந்தைப்படுத்துகிறது. காரணம், மற்றவற்றைக் காட்டிலும் ஆதார் என்பது உளவு வேலையை எளிமையாக்குகிறது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவெனில், 'ஆதார்’ அட்டைக்கான மென்பொருள் சேவையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை, அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ-விடம் நிதியுதவி பெறும் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 'மேங்கோ டிபி’ (Mongo DB) என்பது அந்த நிறுவனத்தின் பெயர். இந்தியாவின் பல கோடி மக்களின் தரவுகள் அடங்கிய முக்கியத்துவம் வாய்ந்த பணியை, இத்தகையப் பின்னணி கொண்ட நிறுவனத்திடம் வழங்குவது எவ்வளவு மோசமான செயல்! இதைவிடப் பொறுப்பற்ற ஓர் அரசின் ஆளுகையின் கீழ் நாம் முன் எப்போதும் வாழ்ந்தது இல்லை!''

''ஒருவேளை, பலரும் சொல்வதைப் போல, மோடி பிரதமரானால் இந்தக் கண்காணிப்பு குறையுமா?''

''ராகுல் வருவாரா, மோடி வருவாரா எனும் இந்த மனநிலை, மூன்றாவது கருத்து ஒன்று இருப்பதையே நிராகரிக்கிறது. இதுதான் மெய்யான ஆபத்து. மற்றபடி மோடி பிரதமர் ஆவதால் எல்லாம் மாறிவிடும் என்பது, ஒரு மாயத்தோற்றம். கண்காணிப்பு என்ற அம்சத்தையே எடுத்துக்கொண்டாலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. பல வகைகளிலும் மக்களை, அரசியல் செயற்பாட்டாளர்களை வேவு பார்க்கிறது. ஆனால், மோடியின் செல்வாக்குக் குறித்து ஊதிப் பெருக்கப்பட்ட பொய்களும் அரை உண்மைகளும் இணையத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. அதை ஏன் இந்தக் காங்கிரஸ் அரசு தீர்மானகரமான வகையில் தடுத்து நிறுத்தவோ, அம்பலப்படுத்தவோ முயலவில்லை? மாட்டார்கள். ஏனெனில், இவர்களுக்கு இடையில் கட்சிக் கொடிகளின் வண்ணங்களில் மாற்றம் இருக்கலாம்; ஆனால், அவர்களின் எண்ணங்கள் ஒன்றுதான்!''

''இத்தகையக் கண்காணிப்பு தொடர்ந்தால் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?''

''இது போலீஸ் ஸ்டேட் ஆக மாறும். ஏற்கெனவே அப்படித்தான் மாறிக்கொண்டு இருக்கிறது. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் படிப்படியாக மறுக்கப்பட்டு வருகின்றன. ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அரங்கக் கூட்டம் நடத்தவுமே நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. குடிநீர்ப் பிரச்னைக்குப் போராடினாலும், கல்வி உரிமைக்காக மறியல் செய்தாலும் போலீஸ்தான் வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் ஒன்பது காவல் மாவட்டங்களின் போலீஸ் துணை கமிஷனர்களுக்கு 'நிர்வாக நடுவர்’ அதிகாரத்தை அளித்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் கையிலேயே இப்போது நீதிபதியின் அதிகாரமும் வந்துவிட்டது. நம் அனைவரின் தலைக்கு மேலும் ஒரு போலீஸ் லத்தி எந்த நேரமும் சுழன்றுகொண்டிருக்கிறது!''
Thanks AV

Sunday 23 February 2014

சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?

“பாதிக்கப்பட்டவர்கள் உங்களை நோக்கி ஓடிவர வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் உங்களை கண்டு ஓடிப்போக வேண்டும்”

என்கிற கூற்றின் அடையாளமாகத்தான் தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். நம்முடைய தேசம் சாதி, மதம், இனம், மொழி, தொழில், பிறப்பு போன்ற பல்வேறு பாகுபாடுகளால் அல்லல்பட்டு வருகிறது. இந்தியாவில் 200 மில்லியன் மக்கள் தீண்டாமை கொடுமைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கான சமஉரிமை, அரசியல் பங்கேற்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. வறுமை, குழந்தை தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிப்பு, காவல்துறை அத்துமீறல், சில்லரை வணிகத்தில் கூட அந்நிய முதலீடு, இயற்கை வளங்கள் பன்னாட்டு கம்பெனிக்கு விற்கப்படுதல், ஆதிவாசிகள் மீதான கொடூர தாக்குதல்கள் போன்ற பல்வேறு அத்துமீறல்களால் அடித்தட்டு மக்கள் நொறுக்கப்பட்டு வருகின்றனர். கல்வி, உணவு, வீடு, வேலை, மின்சாரம், நீர், மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதி கூட கிடைக்காத மக்களின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும்.

இப்படி நொறுக்கப்படுகிற மக்கள் மட்டுமல்லாமல் அடிப்படை தேவைகள் கூட மறுக்கப்படுகிற மக்களுக்கான உரிமைகளும், அதிகாரங்களும், வளங்களும் கிடைக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் அரசு உள்ளது. ஒரு ஜனநாயக அரசு என்று சொன்னால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும். எந்தவொரு செயல்பாட்டினையும் திறந்தமனதோடு மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்போடு செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நம்முடைய அரசாங்கம் பல்வேறு மீறல்களை கடைபிடித்து வருகிறது. அரசியல்வாதிகள் ஊழல் செய்வது மட்டுமல்லாமல் நம் தேசத்தையும் அந்நிய சந்தைகளுக்கு விற்று வருகின்றனர்.
அதிகார சக்திகளாலும் ஆட்சியாளர்களாலும் பாதிக்கப்படுகிற மக்களின் தோழனாக தொண்டு நிறுவனங்கள் இருக்க வேண்டும். சமூக ஈடுபாடு, நேர்மை, வெளிப்படைத் தன்மை, பதில் சொல்கிற கடமை, நிதி தணிக்கை, இறையாண்மையை மதித்தல், அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல், திட்டமிடல், மாற்றங்களை ஏற்படுத்துகிற நடவடிக்கைகள் போன்ற பல பண்புகளையும் நடவடிக்கைகளையும் தொண்டு நிறுவனங்களின் அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு தொண்டு நிறுவனங்கள் என்றாலே வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுபவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள், அபரிமிதமான சொத்துக்கள் உடையவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் என்றெல்லாம் பொது சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகிற பல தொண்டு நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில் தொண்டு நிறுவனங்களின் அபரிமிதமான பணிகளையும் எவரும் இங்கே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், சாதிய கொடுமைகளை சர்வதேசிய அளவிற்கு கொண்டு சென்றது, வாழ்வாதாரம், கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்பு, பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு, ராஜீவ்காந்தி வேலை உத்தரவாத திட்டம், இயற்கை வேளாண்மை, மாற்று ஊடகம், சுற்றுச்சூழல், காவல் அத்துமீறலுக்கான எதிர்ப்பு, ராணுவ அத்துமீறலுக்கான போராட்டம், ஆதிவாசி, மீனவர் உரிமைகள், கடல் வளங்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு ஆக்கப்பணிகளையும் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ளன. கையால் மலம் அள்ளும் முறையை ஒழிப்பதற்கும், கௌரவக் கொலைகள் தடுப்பு சம்பந்தமான சட்ட வரையறைகள் உருவாக்கப்படுவதற்கும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த தொண்டு நிறுவனங்களும் பல உள்ளன.

சமூக மாற்றத்திற்கான பணிகளை தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தும் பொது சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் என்றாலே மோசடிக்காரர்களாக பார்க்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? அந்நிய நாட்டு சக்தி, மாற்று அரசாங்கத்தை நடத்துபவர்கள், மதத்தை பரப்புபவர்கள், தீவரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அரசியல் ரீதியாகவும் தொண்டு நிறுவனங்கள் மீது பலமான தாக்குதல்கள் நடத்துவதற்கு காரணங்கள் என்ன? இவற்றில் எது உண்மை?

சர்வதேசிய சிவில் சமூகத்திடமும், அய்.நா. சபை போன்ற உலக அரங்குகளிலும் நம்முடைய அரசாங்கம் இந்தியாவில் சமத்துவம் உள்ளன. எவ்வித மீறலும் நடைபெறவில்லை என்று பொய்யான அறிக்கைகள் மூலமாக குரல் எழுப்பி வருகின்றன. இதற்கு மாற்றாக தொண்டு நிறுவனங்கள் இந்தியா அரசாங்கம் பொய் சொல்கின்றன, இந்தியாவில் பல்வேறு கொடுமைகளும் அத்துமீறல்களும் நடக்கின்றன. அரசாங்கதினுடைய இயந்திரங்கள் பாகுபாடோடு செயல்படுகின்றன என்றெல்லாம் மாற்று அறிக்கைகளும் எதிர்ப்பு குரல்களையும் எழுப்புகின்றனர். இதனால் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளான தொண்டு நிறுவனங்களும் இங்கு உள்ளன. இதன் உண்மைகள் பலருக்கு தெரியுமா?
அடிப்படையான உண்மை என்னவென்றால், மிகத் துணிச்சலுடன் நேர்மையுடனும் அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துக் கொண்டும் பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவே உள்ளன. இதுமட்டுமல்லாமல் மறுவாழ்வு, அடித்தட்டு மக்களின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி திட்டங்கள் போன்ற சமூக மேம்பாடுகளுக்காக பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களும் இங்கு உள்ளன. இவர்களையெல்லாம் கடந்து மோசடியில் ஈடுபடுகிற தொண்டு நிறுவனங்கள் தான் அதிகளவு உள்ளன. ஆகவே தான் தொண்டு நிறுவனங்கள் என்றாலோ எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்க்கப்படுகிற அவலம் ஏற்பட்டு விடுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தொண்டு நிறுவனங்கள் அந்நிய நாட்டின் சக்திகள். மோசடியில் ஈடுபடுபவர்கள், மதமாற்றம் செய்பவர்கள் என்றெல்லாம் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் பரப்புரை செய்து வருகிறார்கள். இங்குள்ள கொடுமைகளை சர்வதேசிய சமூகத்திற்கு தெரியப்படுத்துவதன் மூலம் உலக சந்தைகள் இந்தியாவின் உள்ளே வர தயக்கம் காட்டுகிறார்கள். இதற்கு தொண்டு நிறுவனங்கள் தான் காரணம். ஆகவே மோசடி தொண்டு நிறுவனங்களோடு மக்கள் பணி செய்கிற தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் மிகத் தந்திரமாக இணைத்து வெற்றி கண்டுள்ளது.

போபர்ஸ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் போன்ற பல ஊழல்களை அரசாங்கம் செய்வது போன்று காப்பக மோசடி, மறுவாழ்வு பணிகளில் மோசடி, கடன் கொடுப்பதில் மோசடி, வீடு கட்டிக் கொடுப்பதில் முறைகேடு, மருத்துவமனை, கல்விக்கூடங்கள் கட்டுவதில் முறைகேடு போன்ற பல மோசடிகளிலும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல தேசிய கட்சிகள் தங்களுடைய கட்சிகளை வளர்ப்பதற்காக பல தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றன. பண முதலைகளும் தொண்டு நிறுவனம் என்கிற பெயரில் கருப்பு பணத்தை மறைக்கின்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல தொண்டு நிறுவனங்கள் யோகா கலைக் கூடாரங்களாக உருவாக்கப்பட்டு மத பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பது என்ன? ஊழல் தொண்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா? கட்சிகள், மத நிறுவனங்கள் நடத்துகின்ற தொண்டு நிறுவனங்கள் மீது சட்டம் தன் கடமையை திறம்பட செய்கின்றனவா? இதெல்லாம் இங்கே கடைபிடிக்கப்படுவது இல்லை.
இறுதியாக ஊழல் தொண்டு நிறுவனங்களைப் போன்று ஊழல் அரசாங்கமும் விரட்டப்பட வேண்டும். அதே நேரத்தில் சமூக ஈடுபாடுடன் பணி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களை புறக்கணிப்பது ஏற்புடையதல்ல.

Thanks to Tholar Kadir

Tuesday 14 January 2014

நன்றி கூறும் பெருவிழா தைப்பொங்கல்


தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச் சிறந்து விளங்குவது தைப்பொங்கற்பண்டிகையாகும்பண்டிகைகள் ஒரு இனத்தின் கலாச்சார மேம்பாட்டைப்புலப்படுத்துவன.அவற்றைப் பேணிக் காப்பன என்றும் கூறலாம்அவற்றில் ஒரு சமுக நோக்குஇருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
பொங்கற் பண்டிகை உழவர் திருநாள் என்றும் போற்றப்படுகிறதுஅறுவடைத் திருநாள் என்றும்இதனைக் கூறுவர்உழைப்பின் உயர்வை எடுத்துக் bதிருநாளாகவும் இது விளங்குகிறதுதைமாதம்முதலாந்தேதி பொங்கற் பண்டிகை நாளாகும்
அறிவு மாத்திரம் மனித வாழ்வை நிறைவு செய்து விடாதுதேவைகள் 
யாவும் நிறைவு பெறவேண்டும்தேவைகளை நிறைவேற்ற உழைப்புத் தேவைஅவ்வுழைப்பின் உயர்வைஎடுத்துக்காட்டும் பண்டிகையாகவும் பொங்கற் பண்டிகை அமைகிறதுதேவைகளுள் அடிப்படையான
தேவைகள் – உணவு உடை உறைவிடம் என்பர்அவற்றில் எல்லாம் தலையாயதும் அதிஅத்தியாவசியமுமானதும் உணவுத் தேவையேயாகும்
அவ்வுணவை உற்பத்தி செய்யும் உழவர்திருநாளாக –உழைப்பின் திருநாளாக – இப்பண்டிகை போற்றப்படுவது மிகப் பொருத்தமேயாகும்.

நிலமும் விதையும் மாடும் மட்டும் இருந்துவிட்டால் விவசாயம் செய்து விட முடியுமாநீரும்வெயிலும் இன்றியமையாதன பயிர்வளர்சிக்குஅந்த நீரைத் தருவது மழைஆனால் அந்த மழையைத்தருவது யார்ஆறு குளம் கடல் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரை ஆவியாக்கி மேலேளச் செய்துஅங்கிருந்து மழையாகப் பெய்யச் செய்து வளம் தருபவன் சூரியனேஇதனை உணர்ந்த மக்கள் அச்சூரியதேவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நாளாகப் பொங்கலிட்டு வழிபாடு செய்யும் நாளாகஇப்பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.

நான்குநாள்திருவிழா

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.

1.போகி

போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்நாள் பழையவற்றையும் உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.

அன்றைய தினம் வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
2.தைப்பொங்கல்

தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை மாதம் தமிழ் முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

 பொங்கல் விழா மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

 3.மாட்டுப்பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

 அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல் ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

 உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர் பச்சைகளை வைத்தும் தேங்காய் பூ பழம் நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு காளை எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் பழம் கொடுப்பார்கள்.
‘நன்றிமறப்பதுநன்றன்று’ என்றும்இ
‘எந்நன்றிகொன்றார்க்குஉய்வுண்டாம்உய்வில்லைச்
செய்ந்நன்றிகொன்றமகற்கு’
என்றும் கூறும் வள்ளுவர் வாக்கைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித் தொழுகும் தமிழ் மக்கள் தமது உழவுத் தொழிலுக்கு உதவிபுரிவதோடு உரமும் உதவும் மாடுகளுக்கும் தைப்பொங்கலுக்கு மறுநாள் பொங்கலிட்டு வழிபட்டு மகிழ்வதைக் காண்கின்றோம். சூரியதேவனுக்கு முதலிடமும் மாடுகளுக்கு இரண்டாம் இடமும் கொடுத்து அடுத்துவரும் இருநாட்களில் தைப்பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுவது இப்பண்டிகைகள் நன்றிக்கடனாகவே கொண்டாடப்படுவதை மேலும் வலியுறுத்துகின்றன

4.காணும்பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார் உறவினர் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பட்டி மன்றம் வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

 இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

மக்கள் யாக்கை உணவின் பிண்டம்’ என்கிறது மணிமேகலை. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனவருமடியும் இங்கு நோக்கத்தக்கது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார் பாரதியார். இதனாலேயே ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி ஃ அச்சாணி’ என்கிறார் வள்ளுவர். 
வள்ளுவருக்கும் காலத்தால் முந்திய புற நானுற்றுப் புலவர் ஒருவர் அரசனுக்கு அறிவுரைகூறும்போது
‘பகடுபுறந்தருநர்பாரம்ஓம்பிக்
குடிபுறந்தருகுவைஆயின்நின்
அடிபுறந்தருவர்அடங்காதோரே’ என்கின்றார்.
பகடு  எருது. உழுகின்ற பகடுகளைக் கொண்ட உழவர் நலனில் கருத்தூன்று அவர்களது வசதிகளைப் பெருக்கு. நாட்டின் உணவு தன்னிறைவு கண்டால் உனது பகைவர்களும் உனக்கு மண்டியிடுவர் என்கின்றார். உழவுத் தொழிலின் உயர்வை இக் கூற்றுக்கள் எடுத்துரைக்கின்றன.

ஆடிப்பிறப்பு விதைப்புக்கால தொடக்க காலமாகவும் தைப்பொங்கல் அறுவடையின் இறுதிக்காலமாகவும் அமைவதை நாம் அவதானிக்கலாம். அதனால் அறுவடைசெய்து தாமடைந்த பயனை அப்பயனை அடைய உதவிய சூரியனுக்கும் மாடுகளுக்கும் முதலில் நன்றியாகச் செலுத்தி தாம் அனுபவிக்கத் தொடங்கும் பண்பையும் நாம் கண்டு களிக்கலாம்.
சூரியன் கடகக்கோட்டிலிருந்து மகரக் கோட்டுக்குச் செல்ல ஆறு மாதகாலம் எடுக்கின்றதுஇ இதனைத் தெற்கு நோக்கிச் செல்லும் காலமாதலின் தட்சண்ய புண்ணிய காலம் என்பர். பின்னர் மகரக்கோட்டிலி ருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதகாலத்தை உத்தராயண காலம் என்பர். இந்நிகழ்வு பூமி தனது அச்சில் இருந்து இருபத்துமூன்றரைப் பாகை சரிவாகச் சுற்றுவதால் ஏற்படுவதாகும் இவ்விரு காலங்களையும் அதாவது எமது ஒருவருட காலத்தை தேவர்க்குரிய ஒரு நாளாகக் கணிப்பர். அவ்வாறு கணிப்பின் இரவின் இறுதிச் சமமாகிய வைகறைக் காலம் மார்கழி மாதமாகும். அடுத்து வரும் தைமாதம் உத்தராயணப்பகலின் உதய காலமாகும். அதனாலேயே தைமாதப்பிறப்பு வழிபாட்டுற் குரியதென்பது சமயம் கூறும் கருத்தாகும்.
விளைந்த புது நெல்லைக் குத்தியெடுத்த புத்தரிசியைக் கொண்டே பொங்கலிடவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர்க்கு இது சாத்தியமான தொன்றல்ல. எனினும் யாவரும் பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். கரும்பு மஞ்சள் இஞ்சி போன்று தாம் பயிரிட்டவற்றையும் பிடுங்கி மண் கழுவித் தூய்மை செய்து கொத்தாக வைத்துப் படையலுடன் வழிபடுவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதை நாம் இப்பொழுது அவதானிக்கலாம். எனினும் பழவகைகளையும் கரும்புஇ இஞ்சி போன்றவற்றையும் தேடி வாங்கிப் படைக்கும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது.
பழவகைகளுடன் நின்றுவிடாது பல்வேறுவகையான பலகாரவகைகளையும் செய்து படைப்பதும் உண்டுமகிழ்வதும் உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதும்  வருவோருக்கு வழங்கி மகிழ்வதும் இப்பண்டிகையைச் சமூக உணர்வோடு கூடிய ஒரு பண்டிகையாக இனம் காண வழிவகுக்கின்றது.
சமையக் கிரிகைகளிலும் பண்டிகைகளிலும் சுகாதாரம் முக்கிய இடத்தைப்பெறுவதையும் நாம் மறந்துவிடலாகாது. வீடுகளுக்கு வெள்ளையடித்தல்   நிலங்களுக்குக் கழுவிப் பூச்சுக்களிடுதல்  வளவினைக் கூட்டித் துப்பரவு செய்தல் கூட்டிய குப்பையை எரித்தோ புதைத்தோ விடுதல்  தெரு ஒழுங்கை யாகியவற்றையும் கூட்டித் துப்பரவு செய்தல் வளவு வேலிகளைப் புதிதாக அடைத்தல் போன்றன யாவும் வெறும் அழகிற்காக ஆற்றும் பணிகள் அன்று. புறத் தூய்மையின் அவசியத்தைப் பண்டிகையுடன் இணைந்த முன்னோரின் ஆழ்ந்த அறிவுக்கு அவை எடுத்துக் காட்டுக்களெனலாம்.
இப்பண்டிகைகள் பல்வேறு கலைகளையும் பயின்று கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன. மெழுகுதல் கோலம் போடுதல்  தோரணங்கள் செய்தல் நாற்றுதல் போன்றனவும் பலகாரவகைகளைக் கலை நுணுக்கங்களுடன் செய்யும் பயிற்சிகள் போன்றனவும் குறிப்பிடத்தக்கனவாகும்.
பெரியோரைப் போற்றி வாழும் நற்பண்பும் இப் பண்டிகை மூலம் மக்கள் பெறும் சிறந்த பண்பாகும். சூரிய வழிபாட்டுடன் நின்று விடாது அயலிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடாற்றுவர். அதன்பின்னர் தனது மதிப்பிற்குரிய பெரியார்களுடைய இல்லங்களுக்குச் செல்வதும்இ செல்லும்போது சுவையான தின்பண்டங்கள் கொண்டு செல்வதும்இ வணக்கத்துக்குரிய பெரியோர்களை வழிபடுவதும் வழக்கம். தாய் தந்தையர்இ மாமன் மாமியர்இ அண்ணன் அக்கா போன்ற உறவுமுறையினர்.  தத்தா பாட்டி போன்ற முதியோர்  பலராலும் போற்றப்படும் பெரியோர்கள்  தமது ஆசிரியர்கள் போன்றோரை வழிபாடுவதும் ஆசிபெறுவதும் இப்பண்டிகை மூலம் நாம் பெறும் நற்பழக்கங்களாகும். இதனாற் பணிவுடையவர்களாக வாழும் பண்பை எம்மையறியாமலே நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம். எமது பிற்கால சந்ததியாருக்கும் நாம் கொடுக்கும் ஒரு நல்ல பழக்கவழக்கப் பயிற்சியாகவும் இது அமைந்து விடுகிறது.