Sunday, 10 June 2012

Miraculas Herbals - 15 - கரும்புச்சாறு

கரும்புகரும்புச்சாறுகரும்புச்சாறு

நமது நாட்டின் அரிசி, கோதுமை அடுத்து கரும்பு மிகவும் அதிகமாக உற்பத்தியாகிறது. வடநாடுகளில் கரும்புச்சாறை அதிகம் பருகுகின்றனர். தமிழ் நாட்டில் இதன் பயன்பாடு பெருக வேண்டும்.
இதிலிருந்து பெறப்படும் வெள்ளைச் சீனியால், பலவகை இனிப்புகளால் நீரிழிவு நோய்கள் பெருகிவிட்டன. எனவே அன்பர்கள் வெள்ளைச் சீனியைத் தவிர்த்து அதற்க்கு பதிலாக கரும்புச்சாறு, பேரீட்சை, தேன், நாட்டு வெல்லம் தாராளமாக பயன்படுத்தலாம்.
கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=90%
  2. மாவுப்பொருள்=9%
  3. புரோட்டின்=0.3%
  4. கொழுப்பு=0.2%
  5. கால்சியம்=6 யூனிட்
  6. இரும்புத் தாது=2 யூனிட்
  7. வைட்டமின் B1=0.02 யூனிட்
  8. வைட்டமின் B3=0.02 யூனிட்
  9. வைட்டமின் C=10 யூனிட்
  10. பாஸ்பரஸ்=10 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
  • உடலுக்கு தேவையான மாவுச்சத்து, இனிப்புக் கிடைக்கிறது. புத்துணர்வு தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது.
  • காமாலை வராமல் தடுக்கிறது.
  • சிறுநீரகப் பிணிகள் விலகி நலம் கிட்டும். மலச்சிக்கல் தீரும்.
  • அதிக வெப்பசக்தி தரவல்லது.
  • உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.
கச்சிதமான உடலுக்கு தினமும் கரும்புச்சாறு அருந்தலாம்.

Miraculas Herbals - 14சோம்பு

சோம்புசோம்புசோம்பு

மருத்துவக் குணங்கள்:
  1. பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.
  2. இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.
  3. இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
  4. எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.
  5. சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
  6. அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.
  7. கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.
  8. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
  9. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
  10. நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
  11. அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
  12. பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

Miraculas Herbals - 13தூதுவளை

தூதுவளைதூதுவளைதூதுவளை


மருத்துவக் குணங்கள்:

  1. தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
  2. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
  3. தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
  4. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
  5. வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
  6. தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
  7. தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
  8. காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.
  9. மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
  10. தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.
  11. தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.
  12. தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.
  13. தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.
  14. தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

Miraculas Herbals 12 - கீழாநெல்லி

கீழாநெல்லிகீழாநெல்லி

மருத்துவக் குணங்கள்:
  1. நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.
  2. கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
  3. ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.
  4. கீழாநெல்லி சமூலம் – கரிசலாங்கண்ணி, தும்பை – சீரகம் – பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.
  5. வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.
  6. கீழ்காய் நெல்லி சமூலம் – சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.
  7. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.
  8. கீழா நெல்லியும் – கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.
  9. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.
  10. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.
  11. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.
  12. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.
  13. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.
  14. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.
  15. தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

Miraculas Herbals - 11 - தேன்

தேன்தேன்தேன்


தேனில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=23%
  2. மாவுப்பொருள்=76%
  3. புரதம்=4%
  4. கால்சியம்=5%
  5. இரும்பு=0.4%
  6. வைட்டமின் B2=0.05 யூனிட்
  7. வைட்டமின் C=0.5 யூனிட்
  8. நியாசின்=0. 2 யூனிட்
மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் உள்ளன.
இவை அனைத்தும் 100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்
  • டிபி, சளி, இருமல் குணம் அடையும்.
  • உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர்.
  • நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
  • இதயம், ஈரல் பலம் பெறும்.
  • குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன.
குறிப்பு:
  • ஒரு கிலோ கிராம் தேன் ஐந்து லட்சம் மலர்களில் இருந்து பெறப்படுகிறது.
  • தேனும், நெய்யும் கலக்க கூடாது. கலந்தால் அது நஞ்சாகும்.
  • தேனும், முட்டையும் கலக்கக்கூடாது.
  • தேனும், சீனியும் கலக்கக்கூடாது.
  • தேன் சூடாகும் போது சத்துகளை இழந்துவிடும்.

Miraculas Herbals - 10 - திப்பிலி

திப்பிலிதிப்பிலிதிப்பிலி

திப்பிலி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன.
திப்பிலியில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 12.5 gm
  2. புரதம் = 13.2 gm
  3. கொழுப்பு = 4.7 gm
  4. கனிமங்கள் = 6.0 gm
  5. நார் பொருள் = 5.2 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 58.4 gm
  7. ஆற்ற்ல் சக்தி = 329kcal
  8. கால்சியம் = 460 mg
  9. பாஸ்பரஸ் = 325 mg
  10. இரும்பு = 13.5 mg
இவை அரிசி திப்பிலியில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

Miraculas Herbals - 9வேலிப்பருத்தி - உத்தாமணியும்

வேலிப்பருத்திவேலிப்பருத்திவேலிப்பருத்தி



மருத்துவக் குணங்கள்:

  1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.  இன்றைய காலகட்டத்தில் 20 வயது இளைஞன் கூட தலைமுடி நரைத்து, 40 வயதைத் தாண்டியவர்போல் காட்சியளிக்கிறான்.  இந் நிலைக்கு முக்கிய காரணம் உணவு முறை மாறுபாடும், போதிய உடல் உழைப்பும் இல்லாததுதான்.  இத்தகைய நிலை மாற சித்தர்கள் தங்களின் தவப்பயனால் மனிதன் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர். அதுதான் காயகற்பம்.  பழங் காலத்தில் இந்த காயகற்பத்தைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ்ந்தனர்.
  2. இப்போது நவீன நாகரீகத்தில் இம்முறை மாறி மேலைநாட்டு மோகத்தில் திளைத்ததன் விளைவுதான் 25 வயதிலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு என பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி அவதி யுறுகின்றனர்.   இதற்குக் காரணம் நம் முன்னோர்களும், சித்தர்களும் கூறிய அறிவுரைகளையும் மருத்துவ முறைகளையும் பின்பற்றாததே.  சித்தர்கள் மனிதன் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்.  அவற்றில் ஒன்றான கற்ப முறைகளை நாமும் பின்பற்றி நம் தலைமுறைகளும் பயன்படுத்துமாறு செய்ய முனைய வேண்டும்.   கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும்.  அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.
  3. உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும்.  வேலி ஓரங்களில்  கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர்.  இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும்.  இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
  4. உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.
  5. வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.  அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால்,  கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து  ரத்த அழுத்தம் குறையும்.  இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும்.  இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார்.  வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும்.  மேலும் உடல் அசதியைப் போக்கும்.  நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும்.  நெஞ்சுலி குறையும்.
  6. சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள்.  இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து  1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன்,  அருகம்புல் பொடி 1 ஸ்பூன்  சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.
  7. குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள்.  இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.  ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
  8. உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.
  9. உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.
  10. உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து  ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால்  வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.
  11. பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.
  12. சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு  முக்கிய பங்கு வகிக்கிறது.

Miraculas Herbals - 8 வெற்றிலை

வெற்றிலைவெற்றிலைவெற்றிலை

மருத்துவக் குணங்கள்:
  1. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
  2. இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.
  3. வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
  4. இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
  5. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
  6. அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

Miraculas Herbals - 6 கற்பூரவள்ளி

கற்பூரவள்ளிகற்பூரவள்ளி

மருத்துவக் குணங்கள்:
  1. காய கற்பம் என்பது காயம் என்னும் உடலை என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவும் மருந்தாகும்.
  2. சித்தர்கள் தங்களின் தவப் பயனால் கண்டறிந்த மருத்துவ முறைகளில் கற்ப முறைக்கு தனிச்சிறப்புண்டு.
  3. கற்ப முறையில் 1 மண்டலம் மூலிகைகளை சாப்பிட்டு வந்தால், நோய் என்னும் காலன் நம்மை நெருங்காமல் என்றும் புத்துணர்வுடனும், இளமையுடனும் வாழலாம்.
  4. நாம் ஒவ்வொரு இதழிலும் ஒரு கற்ப மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம்.
  5. இந்த இதழில், கற்பூர வள்ளியின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
  6. கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
  7. கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
  8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.
  9. இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
  10. கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.
  11. கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.
  12. குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.
  13. கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .
  14. கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
  15. கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.
  16. இதனை தொட்டிகளில் வளர்த்து அதன் முழுமையான பயன்களைப் பெற்று நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

Miraculas Herbals - 5 புதினா

புதினாபுதினாபுதினா

புதினாவில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=85%
  2. மாவுப்பொருள்=6%
  3. புரதம்=4%
  4. கொழுப்பு=0.5%
  5. தாது உப்புக்கள்=1.6%
  6. கால்சியம்=0.2%
  7. பாஸ்பரஸ்=0.08%
  8. இரும்புத் தாது=15.6 யூனிட்
  9. வைட்டமின் A=2700 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் புதினாச்சாறில்  உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.
  • உடல் தொப்பை, பருமன் குறைகிறது.
  • அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது.
  • சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
  • தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது.
  • மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

Saturday, 9 June 2012

Miraculas Herbals 4 - கிராம்பு

கிராம்புகிராம்புகிராம்பு

மருத்துவக் குணங்கள்:
  1. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
  2. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
  3. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
  4. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
  5. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
  6. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
  7. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
  8. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
  9. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
  10. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
  11. 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
  12. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
  13. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
  14. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
  15. சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Miraculas Medicine - 3 கசகசா

கசகசா

மருத்துவக் குணங்கள்:
  1. கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
  2. ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.
  3. 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.
  4. வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

Miraculas Herbals - 2 வேம்பு


வேம்பு
மருத்துவக் குணங்கள்:
  1. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
  2. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
  3. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  4. கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  5. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
  6. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது.
  7. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும்.
  8. கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Miraculas Herbals - துளசி


துளசி
மருத்துவக் குணங்கள்:
  1. தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

  1. இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  2. பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

  1. துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
  2. துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

Tuesday, 5 June 2012

”அத்தி முதல் கம்பு” வரை அனீமியா விரட்டும் அற்புத உணவுகள்!



கண்ணாடி முன்னால் நின்று அலங்கரிக்கும் போது, கொஞ்சம்  “வெள்ளை வெளேர்னு”- இருப்பது போல் தெரிகிறீர்களா?  ‘உணமையிலேயே அந்த ஐந்து நாளில் சிகப்பழகு தரும் கிரீம் வேலை செய்துடுத்தோ?’, என புருவம் உயர்த்தி ரொம்ப பெருமிதம் அடைய வேண்டாம். இரும்புச் சத்து குறைந்து போய் “அனீமியா”எனும் இரத்த சோகை ஏற்பட்டிருக்கக் கூடும். அனீமியாவிற்கு பல காரணமிருக்கிறது. இரும்புசத்து குறைவு, விட்டமின் பற்றாக்குறை, புரதங்கள் பற்றக்குறை, சிறுநீரகச்செயலிழப்பு என எவ்வளவோ இருந்தாலும், பெரும்பாலான வெளுப்பு நோய்(அனீமியா) வருவது இரும்பு இல்லாமல் தான்.

இரும்பை உணவில் எப்படி பெறலாம்.? 

இரயில் தண்டவாளத்தை பொரியல் செய்து சாம்பார்சாத்த்துக்கு தொட்டுச் சாப்பிட முடியாது. நேரடியாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்றுப்புண், மலச்சிக்கல், மூலம் முதலிய நோய்களை ஏற்படுத்தி விடும். உணவில் இரும்பை எடுப்பது தான் உத்தமம். 

நிறைய காய்கறி, பழங்களில் இரும்பு சத்து இருந்தாலும்,  “ திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி”, “ஐதராபாத் தம் பிரியாணி” –க்கு தவம் இருந்து சாப்பிடும் புலால் உணவுப் பிரியர்களுக்கு மகிழ்வான செய்தி.புலால் உணவு இரும்புதாம் சிறந்ததாம். சீக்கிரம் உடலில் சேர்ந்து சோகை சோகத்தை தடுக்கிறதாம். Heme iron மற்றும்  non-heme iron என்று இரு பெரும் பிரிவாக இரும்புச்சத்தை பிரிக்கும் உணவியலாளர்கள், உடலுக்கு உடனடியாக இரும்பை பரிமாறும் தன்மை, heam iron உள்ள புலால் உணவுக்கு இருப்பதால் அதற்கே 1ம் ரேங்க் கொடுக்கின்றனர்.ஆனால், இரும்பை கொடுக்கும் புலால் கூடுதலாய் அதிக கலோரியையும் தந்து விடுவதால், கொழுப்பு கூடி விடும் அபாயமும் உண்டு. இரும்புச்சத்து வேண்டும் என சிக்கன் லிவர் பீஸ், சல்மான் ஃபிஷ் ஃப்ரை என புலாலில் பொங்கி எழுந்தால் காலையும் மாலையும் ஓடி கொழுப்பை குறைக்க மறந்து விடக் கூடாது!

காய்கறி சாப்பிட்டு, பழம் சாப்பிட்டு இயற்கையோடு ஒட்டி வாழும் எங்களுக்கு இரும்பு கிடையாதா? என்று கோபப்பட வேணாம். பல கீரையில் இரும்பு நிறையவே உள்ளது. தினம் காலை சப்பாத்திக்கு பாலக் பன்னீர், மதியம் சாம்பாருக்கு முருங்கை கீரை பொரியல் என சாப்பிடுங்கள். இப்போது பிரபலமாகி வரும்  ‘டோஃபு‘ எனும் சோயாபால் கட்டியை கொஞ்சம் தக்காளி/ நெல்லிக்காய் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். பாலிஷ் போடாத கைக்குத்தலரிசியில் சாதம் வையுங்கள். மாலை கொண்டைக்கடலை சுண்டலும், இரவில் கம்பு ரொட்டியோ, ராகி தோசையோ சாப்பிடுங்கள். இரும்புச்சத்து சரியான அளவில் கிடைக்கும்.

பீட்ரூட் அவ்வளவாக வயதானோருக்கு நல்லதில்லை என்றாலும், அதன் கீரை இரும்பு சத்து அதிகமுள்ள கீரை. கீரைகளில் சிறு கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை எல்லாம் இரும்பு தரும்.பழங்களில் உலர்ந்த அத்தி, உலர் திராட்சை, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம் இவை எல்லாம் இரும்புச்சத்து நிறைந்தவை. தக்காளி, சிகப்பு கொய்யா, மாதுளையும் இரும்பை கொஞ்சமாய் தரும்.

வெள்ளை அரிசியை விட கைக்குத்தல் புழுங்கலில் இரும்புச்சத்து அதிகம். கம்பு தினை ராகியில், அரிசியை விட இரும்பு சத்து அதிகம். மல்லிப்பூ மாதிரி வெளுப்பாய் பொன்னி அரிசி வாங்கி சமைத்து அதே வெளுப்பில், இரத்த் சோகை வருவதை விட, வீட்டில் சிறுவயது முதல், வரகரிசி பொங்கல், தினையரிசி புளியோதரை, கம்பு ரொட்டியும் -பாலக் பன்னீரும், கேழ்வரகு தோசைக்கு நிலக்கடலை சட்னி என சாப்பிடுங்கள். இரும்பும் குறையாது. மாதச்செலவும் குறையும். நம்ம நாட்டின் ஏழை விவசாயிக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

இரும்புச்சத்து ஆணை விட பெண்ணுக்கு அதிகம் தேவை. சாதாரண பெண்ணை விட தாய்மை அடைந்த, பிரசவித்த, பாலூட்டும் பெண்ணுக்கு கொஞ்சம் கூடுதலாய்த் தேவை. மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு உள்ள இளம் பெண்ணுக்கு இன்னும் அதிகம் தேவை. பல நோய் நிலைகளில் இரும்புச்சத்து குறைந்திருப்பின் அந்த நோய் இன்னும் அதிகம் ஆட்டம் போடும். சர்க்கரை நோயாளிகள், அறுவை சிகிச்சையில் இருந்து வந்தவர்கள், மூல நோயினர், ஃபைப்ராய்டு கட்டியினால், பெரும்பாடு(அதி ரத்தப்போக்கு) உள்ள மகளிர் எல்லோரும் அவ்வப்போது தங்கள் இரும்புச்சத்து அளவை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

இரும்புச்சத்து உடலில் சரியாக உட்கிரகிக்கப்பட விட்டமின் சி சத்தும் ஃபோலிக் அமைலமும் அவசியம்.ஆதலால், அடிக்கடி நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் என சாப்பிடுவது நீங்கள் சாப்பிடும் இரும்பை உடலில் பத்திரமாய் சேர்க்க உதவிடும்.
வீட்டில் உங்கள் குழந்தை சுவரை பிராண்டி அந்த சுண்ணாம்பு காரையை சாப்பிட்டாலோ, அல்லது உங்க வீட்டு அம்மணி, கோயில் பிர்சாதமாஇ தந்த திரு நீரை அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிட்டாலோ,  ‘என்னே பக்தி!’ என மெச்ச வேண்டாம். டாக்டரிடம் கொண்டு போய் ”அனீமியா” இருக்கிறதான்னு பார்த்து விடுங்கள். PICA என அழைக்கப்படும் இரத்த சோகைக்கான அறிகுறி இது.  நெஞ்சுக்குள் குதிரை ஓடுவது போல் ஒருவித படபடப்பு, மூச்சிரைப்பு, இருந்து கொண்டே இருந்தாலும் இரும்புசத்தை தேடும் உடலின் நிலையாக இருக்கலாம்!

உடலுக்கு தேவையான முக்கிய சத்து இரும்பு. அதை காந்தமாய் உணவிலிருந்து கவர்ந்திழுக்க இளமை முதல் தவறிவிட வேண்டாம். மறுத்தாலோ, மறந்தாலோ, நோய் காந்தமாய் ஒட்டிக் கொள்ளும்!