இன்றைய காலத்தில் புகைத்தல் சர்வசாதாரணமாக சமூகத்தில் காணப்படும் ஒரு மிகவும் கொடிய அடிமை பழக்கம் ஆகிவிட்டது. இந்த பழக்கம் வயது வந்தவர்களையும் கடந்து சிறுவர்களையும் ஆக்கிரமித்து நிற்கிறது.பெண்கள் கூட இதற்கும் விதிவிலக்கு அல்ல. இதற்க்கு முக்கிய பங்கை சினிமா தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.சினிமாவில் அவனவன் ஸ்டைல் என்ற போர்வையில் வித விதமாக கையை வளைத்து வளைத்து பிடிப்பதை பார்த்து அதை நாகரிக மாக கருதி இன்றைய இளசுகளும் புகைத்தலை நாடி செல்கிறார்கள்.இது பெண்களை கவருவதற்கு ஒரு நாகரிக கருவியாக மாறிவிட்டது என்றால் மிகை அல்ல.
சிகரெட்டை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை சந்தை படுத்தும் போது அதன் பெட்டியிலே "சிகரெட் உடல் நலத்துக்கு கேடு" என்று கண்ணுக்கு தெரியக்கூடியவாறு அச்சடிச்சே அதை சந்தை படுத்துகிறது.வாங்குபவனும் அதை வாசித்துவிட்டு வாங்குகிறார்.காசு கொடுத்து தன் ஆயுளை குறைத்துக்கொள்கிறான்.இது யாரின் தவறு.சிகரெட் உடல் நலத்தை கெடுக்கும் என்று தெரிந்தும் அதை உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கிற அரசின் தவறா?,இல்லை மக்களுக்கு அது பாதிப்பு என்று தெரிந்தும் தங்கள் வருமானத்திற்காக, வியாபரத்திற்காக உயிர்க்கொல்லி மருந்துக்கு நிகரான சிகரெட்டை உற்பத்தி செய்து வெளியிடும் நிறுவனங்களில் தவறா?,இல்லை சிகரெட்டால் உருவாகும் பின்விளைவுகளை தெரிந்தும் அதை வாங்கி பாவிக்கிறானே அந்த பாவனயாளனின் தவறா?
உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.... புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.
இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.புகைத்தலால் ஏற்ப்படும் நோய்களை தெரிந்துகொள்ள வேண்டும்.புகைத்தல் மூலம் செலவாகும் பணத்தை நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடைய புகைத்தல் பழக்கத்தால் தன் குடும்பமும் பாதிக்க படுவது இல்லாமல் தன் பிள்ளைகளும் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகரிக்கும் இதனால்அவர்களின் நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை ஓரிரு நாட்க்களில் நிறுத்தி விட முடியாது.முதலில் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும்.தங்களுக்கு பிடித்த விடயங்களில் அதிகளவு நேரத்தை செலவழிக்கலாம். புகை பழக்கத்துக்கு மாற்றீடாக தேநீர் மற்றும் குளிர் பான வகைகளில் நாட்டம் செலுத்தலாம். தினமும் தியானம், உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் மனதை கட்டுப்படுத்தலாம். இன்று புகை மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை சீர் திருத்தி எடுப்பதற்கும் எவ்வளவோ மறு வாழ்வு மையங்கள் உள்ளன அங்கே சென்று நீங்கள் சிகிச்சை எடுக்கலாம்.
உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றால் மேற் சொன்னவற்றை கடை பிடித்து உங்கள் வாழ்வை அழிக்கும் உயிர் கொல்லி பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிகரெட்டை பற்ற வைக்கும் போது எரிகிறது சிகரெட் மட்டும் அல்ல உங்கள் உடலும் தான்.
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான்.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும், அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும், இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர்.புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%, விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%, மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
இங்கே ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் பொழுது பாதிக்க படுவது அவர் மட்டும் அல்ல.இவர் விடும் புகையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சு தன்மை அருகில் உள்ளவரையும் பாதிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க பட்ட ஒன்று. ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் ஒரு வருடத்தில் தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.
உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.... புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.
இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.புகைத்தலால் ஏற்ப்படும் நோய்களை தெரிந்துகொள்ள வேண்டும்.புகைத்தல் மூலம் செலவாகும் பணத்தை நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடைய புகைத்தல் பழக்கத்தால் தன் குடும்பமும் பாதிக்க படுவது இல்லாமல் தன் பிள்ளைகளும் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகரிக்கும் இதனால்அவர்களின் நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை ஓரிரு நாட்க்களில் நிறுத்தி விட முடியாது.முதலில் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும்.தங்களுக்கு பிடித்த விடயங்களில் அதிகளவு நேரத்தை செலவழிக்கலாம். புகை பழக்கத்துக்கு மாற்றீடாக தேநீர் மற்றும் குளிர் பான வகைகளில் நாட்டம் செலுத்தலாம். தினமும் தியானம், உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் மனதை கட்டுப்படுத்தலாம். இன்று புகை மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை சீர் திருத்தி எடுப்பதற்கும் எவ்வளவோ மறு வாழ்வு மையங்கள் உள்ளன அங்கே சென்று நீங்கள் சிகிச்சை எடுக்கலாம்.
உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றால் மேற் சொன்னவற்றை கடை பிடித்து உங்கள் வாழ்வை அழிக்கும் உயிர் கொல்லி பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிகரெட்டை பற்ற வைக்கும் போது எரிகிறது சிகரெட் மட்டும் அல்ல உங்கள் உடலும் தான்.
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான்.
No comments:
Post a Comment