Saturday, 30 July 2011

பாட்டி வைத்தியம்.-2

இளமையுடன் வாழ நெல்லிக்காய் மிக அருமையான மருந்து.  நெல்லிக்காயை கோட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.  நெல்லிக்காயை ஏதாவது ஒரு இலையுடன் சேர்த்து தினமும் கால் கரண்டி அளவில் சாப்பிடலாம்.  நெல்லிகையை இவ்வாறு சாப்பிட்டு வர இளமை நீடிக்கும்.  
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ
காய்ச்சல் குணமாக துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றத்தை அரைத்து வெயிலில் கைய வைத்து பத்திரப்படுத்தவும்.  காய்ச்சல் வரும்போது அரை கரண்டி காலையும் மாலையும் வெந்நீரில் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.  
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்
மூளை காய்ச்சல் வராமல் தடுக்க திருநீற்று பச்சிலை சாறு, தும்பை இலை சாறு, கற்பூரம் சிறிது சேர்த்து மூக்கில் உறிஞ்ச வர மூளை காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சலின் ஆரம்ப நிலையிலேயே இதனை உபயோகித்தால் முன்னதாகவே மூளை காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.


உடல் பருமன் குறைக்க பொன்னாவரை கீரையின் வதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் அதிக வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர், மலம், சிறுநீர் வழியாகவும் வெளிப்பட்டு உடல் பருமன் குறையும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு நமது ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  நம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தான் சர்க்கரை என அழைக்கப்படுகிறது. இந்த சர்க்கரையை நாம் செயல்படுவதற்கு ஏற்ற ஆற்றலாக மாற்றும் சக்தி இன்சுலினுக்கு உள்ளது.  உடலில் இன்சுலின் சுரக்கும் இடம் கணையம்.

கணையத்தில் கோளாறு ஏற்பட்டு போதுமான அளவுக்கு இன்சுலின் சுரக்காத நிலையில், குளுக்கோஸ் ஆற்றலாக மாறுவதில் பிரச்சனைகள் ஏற்படும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் விளைவு, சர்க்கரை நோய். கணையத்தில் இன்சுலின் அறவே சுரக்காமல் போகும் நிலையில், இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி நோய் தீவிரமாகும்.  இந்த வகை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுளினையே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.

ஆயுள் முழுவதும் தினமும் இன்சுலின் ஊசி மருந்தைப் போட்டுக் கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் இத்தகைய வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.  இந்த வகை நோய்க்கு 'முதல் வகை சர்க்கரை நோய்' (Type 1) அல்லது 'ஐ.டி.டி.எம்.' (இன்சுலின் தேபெண்டன்ட் டயாபடீஸ் மில்லட்டஸ் அல்லது இன்சுலின் ஊசி மருந்தை நம்பி இருத்தல்) என்று பெயர்.

கணையத்தில் முழுமையாக இல்லாமல் ஓரளவு இன்சுலின் சுரப்பு இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகத்தான் இருக்கும்.  எனவே இத்தகைய சர்க்கரை நோயாளிகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு இன்சுலின் ஊசி மருந்து தேவைப்படாது.  இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இவர்கள் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டியது இருக்கும்.

இந்த வகை நோய்க்கு 'இரண்டாம் வகை சர்க்கரை நோய்' அல்லது 'என்.ஐ.டி.டி.எம்.' (நான் இன்சுலின் தேபெண்டன்ட் டயாபடீஸ் மில்லட்டஸ் அல்லது இன்சுலின் ஊசி மருந்து தேவைப்படாத வகை) என்று பெயர்.

உடலில் எவ்வித விளைவுகளையும் வெளிப்படுத்தாமல் ஓசையின்றி இருக்கும் ஆற்றல் சர்க்கரை நோய்க்கு உண்டு.  பலத்த காயங்கள் ஏற்படும் போது அல்லது தலைச்சுற்றல் வரும் நிலையில் அல்லது கண்களைப் பரிசோதனை செய்யும் போது என இப்படி ஏதாவது ஒரு உடல் உபதைக்காக இரத்தப் பரிசோதனை செய்யும் நிலையில் தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தெரியவரும்.

உடலில் தலை முதல் கால் வரை அணைத்து உறுப்புகளையும் தாக்கும் ஆற்றல் சர்க்கரை நோய்க்கு உள்ளது.  குறிப்பாக கண்கள், இதயம், சிறுநீரகங்கள், கால் ஆகியவற்றை தாகும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு.  இன்சுளினையே நம்பியிருக்கும் முதல் வகை சர்க்கரை நோயாளிகள், ஐந்து அன்டுகல்லுகுள் விழித்திரையை சோதனை செய்து கொள்ள வேண்டும்.  குறிப்பாக இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோய் உள்ள குழந்தைகள், நோய் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விழித்திரையை சோதனை செய்து கொண்டால் போதும்.

ஆனால் இன்சுலின் நமியிராமல் மாத்திரை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பதிக்கப்படுவதர்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.  ஏனெனில் சர்க்கரை நோய் இருப்பதையே மிகவும் தாமதமாக ஒருவர் தெரிந்து கொள்ளும் நிலையில் விழித்திரையில் பாதிப்பு தொடங்கி இருக்கும்.  எனவே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகள் உடனடியாக விழித்திரையை சோதனை செய்து கொள்வது அவசியம்.

சிறுநீரகங்களை ஓசையின்றி தாக்கும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு.  இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே சிறுநீரக பாதிப்பு தெரியும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில் பெரும்பாலும் எவ்வித அறிகுறிகளும் இருக்காது.  எனினும் ஒரு சிலருக்கு நுனிப் பாதத்தில் குத்தல் அல்லது எரிச்சல், உணர்ச்சி இன்றி பஞ்சு மெத்தையில் நடப்பது போன்று இருத்தல் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.  கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்பு காரணமாக இத்தகைய அறிகுறிகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு.

உங்கள் பாதத்தின் அழுத்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, அவரவருக்கு ஏற்ற சிறப்புக் காலணிகளை (எம்.சி.ஆர்.) அணிவது நல்லது.  பாதத்தில் உள்ள அழுத்தப் புள்ளிகளுக்கு ஏற்ப காலணியை சர்க்கரை நோயாளிகள் அணியும் நிலையில், பாதத்தில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொண்டு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.  சர்க்கரை நோயாளிகள் வீட்டுக்குள் நடமாடும் போது வெறும் காலோடு நடக்கக்கூடாது.  காலணி அணிவது நல்லது.  ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ அல்லது எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.

காலில் ஆணையோ அல்லது தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்ட முயற்சிக்காதீர்கள், டாக்டரிடம் செல்லுங்கள்.  பாதங்களின் மேல் ஒத்தடம் கொடுக்க சுடுநீர் போட்டில்கலையோ அல்லது உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள்.  சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் சர்க்கரை நோயாளிகள் உஷாராக இருப்பது அவசியம்.  உத்தரமாக ஒருவருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மில்லி கிராம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.  அவர் ஒரு குலோப்ஜாமுன் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு 300 மில்லி கிராமாக அதிகரித்துவிடும்.  ஆக குலோப்ஜாமுன் சாப்பிடக்கூடாது.  குலோப்ஜாமூனுக்குப் பதிலாக கொண்டைக் கடலை சுண்டலை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு நூறு மில்லி கிராமாக இருக்கும் அல்லது மிகக்குறைவான அளவே அதிகரிக்கும். எனவே கொண்டைக்கடலை மிக நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒருவேளை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது.  சதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிப்ளவர், வாழைத்தண்டு, வாழைப்பூ, கீரைகளை அதிகம் சாப்பிடுவது மிக ன்று.  ஏனெனில் இவற்றில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தரக்கூடியது.  காய்களை அதிகமாகச் சாப்பிடும் நிலையில் அவற்றில் உள்ள நார்ச் சத்து இரத்தத்தில் உயரும் குளுக்கொசி உறிஞ்சி, சர்க்கரை அளவை சமச்சீராக வைத்திருக்க உதவுகிறது.  கேரட், பீட்ருட், உருளைகிழங்கு ஆகிய வேர்க்கய்கரிகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.  ஏனெனில் மற்ற காய்களை விட இவற்றில் மாவுச்சத்து அதிகம்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.  ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, தர்பூசணி பழங்களைச் சாப்பிடலாம்.  கொய்யாவைப் பழமாக சாப்பிடாமல் காயாக சாப்பிடலாம்.  அதில் உள்ள நார்ச்சத்து உதவும்.  குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது. மோர், உப்பு போட்ட எலுமிச்சைச்சாறு, சோடா, நீர்த்த நிலையில் உள்ள சூப்புகளை சாப்பிடலாம்.  அசைவ உணவில் ஆட்டு இறைச்சியை சாப்பிட கூடாது.  மீன், சிக்கன், முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடலாம்.  மீன், சிக்கனை எண்ணையில் பொறிக்காமல் முழம்பில் சமைத்து சாப்பிடலாம்.  சர்க்கரை நோய் பரம்பரை நோர், தாய்க்கோ அண்ட் தந்தைக்கோ சர்க்கரை நோய் இருந்தால் முப்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீர், இரத்த பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு :

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு :
எதுவும் சாப்பிடாமல் (வெறும்வயிற்றில்), 80-100 மில்லி கிராம்
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140  மில்லி கிராம்

கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு.
எதுவும் சாபிடாமல்... 120-140 மில்லி கிராம்
சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 160-180 மில்லி கிராம் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், சாப்பிட்டவுடன் வழக்கமான மாத்திரை அல்லது இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு தான் இரத்தத்தைப் பரிசொதனைக்குக் கொடுக்க வேண்டும்.

ஐந்து முக்கிய குறிப்புகள் :

1) நாள்தோறும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

2) நாள்தோறும் மொத்தமாக 500 கிராம் காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிடுங்கள்.

3) வாரத்தில் ஐந்து நாட்கள் வேகமான நடைப்பயிற்சியைச் செய்வது நல்லது. (தினமும் 30 நிமிடங்கள்)

4) நாள்தோறும் ஐந்து கிராமுக்கு குறைவான உப்பை சேர்த்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு நன்மை தரும்.

5) ஒரு மாதத்திற்கு 500 கிராமுக்கு குறைவான கொழுப்பையே உண்ணுதல் சாலச்சிறந்தது.  (எண்ணெய், நெய், வனஸ்பதி, மாமிசம் உள்பட)

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?

எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபடமுடியவில்லையா?

மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையானசத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம்.


காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோகெமிக்கல்கள் நிறைந் துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட்சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன்மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வுமுடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன்என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக்காரணம்

மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்புசத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்றகொழுப்பு அமிலமே தினமும் தேவை.

நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும்ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்திஎண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனைஉபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள்தேவை.

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ்என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ளஉணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரைஉதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்லமெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன்நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சிமற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.

மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்டநாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல்சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களைஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள்நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள்மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச்சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச்செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதைமட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைட்டமின்கள் குறையும் போதுதீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதனால்மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும்இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். 

பாட்டி வைத்தியம்.- 1

ச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
[Image: food_peas.jpg]
* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
[Image: food_peas.jpg]
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
[Image: ht817.jpg]
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.[Image: recvegbittergourd001-main.jpg]

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.


2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

தினமும் 75 கிராம் உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு 25 சதவீதம் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
[Image: apple89.jpg]
6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட அளவு உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்ததால் எல்.டி.எல் எனப்படும் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு 25 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

எல்.டி.எல் எனப்படும் கொழுப்பானது உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோயை உருவாக்கும். இத்தகைய கொழுப்பை கட்டுப்படுத்த ஆப்பிள் உதவுகிறது.

ஆப்பிள்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் பாதிப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. ஆப்பிளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் சாப்பிடும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.

இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமன், எடை குறைகிறது. இந்த புதிய ஆய்வை கண்டுபிடித்த ப்ளோரிடா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் டொக்டர் பக்ரம் அர்ஜ்மண்டி கூறுகையில்,"ஆப்பிள் சாப்பிடுவதால் கொழுப்பு பெருமளவு குறையும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று" என கூறினார்.



பித்த வெடிப்பு என்பது பெரும்பாலும் கால்களில் ஏற்படுவது.  கை கால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விள்ளகேண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து தடவ குணமாகும்.

பித்த வெடிப்பு என்பது நமது பித்தம் அதிகமானால் வரக்கூடிய ஒன்றாகும்.

உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை 
10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வயிற்று பூச்சி தொல்லைத்தடுக்க வாய்விடங்காய் 5 கிராம், கடுகு, ரோகினி 5 கிராம், அவுரி ஐந்து கிராம், வேப்பன்கொழுந்து ஐந்து கிராம், தும்பை இலை ஐந்து கிராம் சுடுகோடு வாய்விடங்காய் லேசாக வறுத்து இலைகளை தனியாக இடித்து இரண்டையும் சேர்த்து மெழுகு பதமானவுடன் மிளகு அளவு உருண்டையாக செய்து நிழலில் உலர்த்தவும் ஐந்து வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதிரியும், இரவு படுக்க போகும் முன் கொடுக்கவும்.  வாரம் ஒரு முறை அல்லது மூன்று வாரங்கள் கொடுக்க பேதி ஆகாது.  இம்மருந்து வயிற்றில் உள்ள பூசிகளை அடியோடு ஒழிக்கும்.  பெரியவர்களும் சாப்பிட பூச்சி தொல்லை அறவே ஒழியும்.

அல்சர் குணமாக கற்பூர வாழைக்காய் வாங்கி தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி காயவிடுங்கள்.  நன்றாக காய்ந்தவுடன் பவுடராக ஆக்குங்கள்.  ஏலக்காய் பொடி செய்து கொள்ளுங்கள்.  வாழைக்காய் பவுடர் 500 கிராம், பனங்கல் கண்டு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம் இந்த பௌடரை அரை கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

அதுமட்டுமல்லாமல் கற்பூரவாழை பழம் உடலழகுக்கு மிக நல்லது.
உன்னுடை
பொதுவாக பெண்களுக்கு வருகின்ற புற்று நோயில் மார்பகப் புற்று நோய் இரண்டாவது முக்கிய நோயாகும் (கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய் முதல் இடத்தில் இருக்கின்றது) 35 வயதிற்கு மேல் ஏற, ஏற இந்த நோய் தாக்கப் படுவதற்கான அபயம் அதிகரிக்கிறது.  மாதவிடாய் ஆகின்ற பெண்களை விட மாதவிடாய் நிதர பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.

மார்பக புற்று நோய் வருவதற்கான காரணங்கள் எவை?

1. முதல் குழந்தை பேறு 35  வயதிற்கு மேற்பட்டு உண்டானாலும் அல்லது குழந்தை பேறு இல்லாமல் இருந்தாலும் இந்த நோய் வருவதற்கு வேண்டிய அபாயங்கள் அதிகம்.  அதிகமான குறை பிரசவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்தாலும் அல்லது விரைவில் நிறுத்தினாலும் நோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

2. அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவை உண்பவர்களுக்கும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கும், உடல் பருமனாகக் கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

3. தொடர்ந்து கதிர் வீச்சுக்கு உட்படுபவற்குளுக்கும், மார்பக புற்றுநோய் வருவதற்கு வேண்டிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மரபு அணு வழியாக இந்த நோய் பரவுமா?

மரபு அணு வழியாக மார்பகப் புற்று நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  10% மார்பக புற்றுநோய் மரபு அணு வழியாக பரவுகிறது. முக்கியமான மரபு அணுக்கள் BRCA-1, BRCA-2.

30 வயதிற்கு உட்பட்டு மார்பக புற்றுநோய் வந்தாலோ, பரம்பரையில் மூன்று பேருக்கு மேற்பட்டு இந்த நோய் தாக்கப் பட்டு இருந்தாலோ ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் புற்றுநோய் வந்தாலோ, இரண்டு மார்பகத்திலும் புற்றுநோய் வந்தாலோ மரபணு வழியாகவர பயப்பு உள்ளது.

சாதாரண மார்பக கொழுப்பு கட்டி மார்பக புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

Jibroma போன்ற கட்டிகள் புற்றுநோயாக மாறவே மாறாது.  ஆனால் சாதாரண கட்டியில் ATYPI CAL இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது.

மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எவை?

மார்பகத்தில் கட்டி காணப்படுதல் அந்த காடியில் வலி ஏற்படுதல் மார்பக காம்பில் நீர் போன்ற திரவ வடிதல்

மார்பக புற்று நோயிற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

அறுவை சிகிச்சை முறை, நுண் கதிர் சிகிச்சை முறை, புற்றுநோய் மருந்து செலுத்துதல் முறை ஆகியவைகள் உள்ளன.

அறுவை சிகிச்சை முறையில் என்ன முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு பதில் இங்கே உள்ளது.  முன்பெல்லாம் முழு மார்பகத்தை எடுத்துதான் குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சை முறை இருந்தது.  ஆனால் இன்றோ கட்டி சிறியதாக இருந்தால் கட்டியை மட்டும் அகற்றி மார்பகத்தின் அழகும், அளவும் முற்றிலுமான குணப்படுத்த வேண்டிய முறை பின்படுத்தப்படுகிறது.

நோயை தடுக்கும் முறைகள் என்னென்ன?

குழந்தை பேற்றை இருபதில் இருந்து இருபத்தைந்து வரை வைத்துக் கொள்ளவேண்டும்.  தேவையற்ற கரு கலைப்ப்பைத் தவிர்க்க வேண்டும்.  குழந்தைகளுக்கு நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.  கொழுப்பு சாது நிறைந்த உணவை குறைக்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.  உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப நிலையில் கண்டறிய முடியுமா?

நிச்சயமாக முடியும்.  மோனோ கிராம் என்ற பரிசோதனையின் மூலம் மார்பகத்தில் கட்டி வருவதற்கு முன்பே மார்பக புற்று நோய் கண்டறிய முடியும். மார்பக புற்றுநோயின் மகள்களும், சகோதரிகளும் இந்த பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.  எல்லா பெண்களும் மார்பக புற்றுநோயை பற்றி முழுமையாக அறிந்திருக்கவேண்டும்.  புற்றுநோய் வருவதை தடுக்கும் முறைகளை அறிந்து அதற்கான முழு முயற்சிகாலையும் செய்யவேண்டும்.  நோய் வந்தவர்களும் வைத்திய முறையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பயத்தை தவிர்த்து தைர்யமாக இருக்கவேண்டும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

பாட்டி வைத்தியம்.

1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.

*


2. 35 வயதிற்குப் பிறகு மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல், 50 வயதில் 30 வயதுப் பெண்மணிப்போல் தோற்றம் அளிப்பீர்கள்.

*


3. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வாக்ஸிங் செய்வதால் முதலில் கை, கால்களில் உள்ள முடி குறைவாக வளரும். பின்பு நாளடைவில் வளர்வது நின்றுவிடும்.

*


4. தினமும் அரை மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தாட்சி.

*


5. ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் நீர் அருந்தினால், உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாகும், சருமம் மினுமினுக்கும்.

*


6. வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

*


7. கரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து, காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

*


8. உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

*


9. சிகைக்காய் அரைக்கும்போது, கொஞ்சம் பாசிப்பருப்பு, வெந்தயம், பூந்திக்கொட்டை, பச்சரிசி, காயவைத்த செம்பருத்தி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உபயோகித்தால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்; கருமையாகவும் வளரும்.

*


1. இரவு படுக்கப் போகுமுன் கண்களைச் சுற்றியும் உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெய் தடவிவந்தால், உடலின் சூடு குறைந்து கண்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரியும்.

***

இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.
[Image: iyal_viruthu_4a.jpg]
புதினா சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, அஜீரணம் உடனே குணமாகும்.

எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து, அந்த தண்­ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிய பின், சிறிதளவு பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து குடித்தால் வாயு கரைந்து தொல்லை நீங்கும்.

ஒரு டம்ளர் தண்­ணீரில் சிறிது கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, நினைவுத்திறன் அதிகரிக்கும்.

பருக்களால் கஷ்டப்படுவோர், தினமும் இளநீரில் மஞ்சள்தூளைக் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேப்பிலை, கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தால் சிலருக்கு வயிற்றுக்குள் ஏடாகூடமாக இருக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதற்கான அறிகுறிதான் அது. இதுபோன்று ஏற்படும் என்று நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால், சாப்பிட்டு முடித்ததும் சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி கடித்து சாறை விழுங்கவும். அந்த ஏடாகூட வயிற்றுப் பிரச்சினை பறந்தே போய்விடும்.

இதுபோல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தவும் சிறிய இஞ்சித் துண்டை சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடவும். அப்படி சாப்பிட்டால் எப்படிபட்ட குமட்டலும் உடனே அமைதியாகிவிடும்.

சமையல் செய்யும்போது கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாலும், அடுப்பில் சூடாக இருக்கும் பாத்திரத்தில் கையை வைத்து சூடு வாங்கிக்கொள்ள நேரிடும். அப்படி சூடு வாங்கிக்கொண்டால், உடனே அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அப்படிச் செய்வதால் சூடு பட்ட இடத்தில் கொப்புளம் போன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

விபத்தால் ஏற்படும் எலும்பு முறிவு உட்பட்ட காயங்களுக்கு பயிற்சி பெறாத வைத்தியர்களிடம் கட்டுப்போடுவதால் கைகளை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துக்களில் கை, கால்களில் ஏற்படும் லேசான ரத்தக்கட்டு, காயங்கள், எலும்பு முறிவுக்கு கிராமப்புறங்களில்
[Image: bone.jpg]
பலர் முறையாக பயிற்சி பெறாத நாட்டு வைத்தியர்களை நம்பிச் செல்கின்றனர்.

அவர்களின் முறையற்ற சிகிச்சையால் நாளடைவில் பலர் கைகளையே இழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படுவோரின் வருகை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் ப்ரியா (10). சில மாதங்களுக்கு முன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இடது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் பயிற்சி பெறாத வைத்தியர் ஒருவர், விளக்கெண்ணெய், துணி, மட்டை வைத்து கையை இருக கட்டினார்.

சில நாளில் ரத்த ஓட்டம் தடைபட்டு கை புண்ணானதுடன், மணிக்கட்டு விரல்கள் முன்னோக்கி வளைந்து, கை செயலிழந்துவிட்டது. இதே போல் உசிலம்பட்டிப் பகுதியை சேர்ந்த வீரன் மகன் நீதிமுத்து(12) ஆலமரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இடது கை பாதிக்கப்பட்டதால் பயிற்சி இல்லாத கிராமப்புற வைத்தியரிடம் கட்டினார். முட்டை பத்து, துணி, மூங்கில் வைத்து கட்டியதால் கை வளைந்து மோசமான நிலையில் உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள இவர்களுக்கு ஆபரேஷன் மூலம் கையை நிமிர்த்தும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் சந்திரபிரகாசம் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட வேண்டும். ஆனால் பயிற்சி பெறாத வைத்தியர்களிடம் செல்கின்றனர். அங்கு முட்டைபத்து, மூங்கில் தப்பை வைத்து இறுக்க கட்டுகின்றனர். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் பாதிப்பதுடன் தசை, தசைநார், நரம்புகள் அழுத்தம் பெறுகின்றன. அதனை உடனே சரிசெய்ய வேண்டும். ஆனால் அறியாமையால் கையில் கட்டுடன் பல நாட்கள் இருக்கின்றனர். இதனால் நாளடைவில் கை முழுவதும் செயலிழந்து போகிறது. இதனை சரிசெய்ய பலமுறை ஆபரேஷன் செய்ய வேண்டும். இதனால் முழுபயன் கிடைக்கும் என கூறமுடியாது.
எலும்பு முறிவு பிரிவின் தலைமை டாக்டர் பிரபாகரன் கூறுகையில், ‘கீழே விழுவதால் பாதிக்கப்படுவோரில் 90 சதவீதம் பேர் லேசான காயம், ரத்தக்கட்டு போன்றவற்றிற்காக செல்கின்றனர். அவர்களுக்கும் கையில் கட்டுபோட்டு இறுகக் கட்டிவிடுகின்றனர். எலும்பு முறிவு பகுதியில் முறையான சிகிச்சை அளித்தால் 3 முதல் 6 வாரங்களில் சரியாகிவிடும் தகுதியான டாக்டர்களிடம் உடனே ஆலோசனை பெற்றால் இந்த அவலத்தை தவிர்க்கலாம்’ என்றார்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்

ரத்த மூலத்திற்கு பிரண்டை:

பிரண்டை என்பது தற்போது பலருக்கும் மறந்து போயிருக்கும் ஒரு செடியாகும்.

பிரண்டை துவையல் செய்து சப்புக் கொட்டி சாப்பிட்ட காலம் மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பிரண்டை மறைந்து வருகிறது.

இந்த பிரண்டை ரத்த மூலத்திற்கு அருமருந்தாக உள்ளது.

இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு:

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சிலருக்கு குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சரியாக மாதவிடாய் ஆகாமல் தொடர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தும்.

அப்படி இருக்கும்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூப்பெய்திய பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ:

பிரசவ வலி வந்தும், குழந்தை வெளியில் வராமல் இருக்குபோது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பிணிகள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

அதிக வயதைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைவர்.

பல் வலியைத் தீர்க்க:

பற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல வகையான பற்பசைகளும், பற்பொடிகளும் வந்துவிட்டன. ஆனால் இயற்கை முறைக்கு முன்னாடி இவை எதுவும் நிற்க முடியாது.

அந்த காலத்தில் புங்கங் குச்சிகளைக் கொண்டு கிராமத்தினர் பல் துலக்கினர். அதில் இருக்கும் மருத்துவத் தன்மை அறிந்துதான் அப்படி செய்தார்கள்.
[Image: resize_20101008111754.jpg]
பல் வலிமையாக புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு காய்ச்சி பாதிகாய வற்ற வைக்க வேண்டும்.
[Image: Perandai24.jpg]
கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி, அது கொழகொழவென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
[Image: img2563zv9.jpg&t=1]
இதனைக் கொண்டு தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.

பல் சொத்தையாவதில் இருந்து தடுக்கவும், ஈறு உறுதியாகவும் உதவும்.

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:

1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:

மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.

பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும்.

இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:

வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.

காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்
தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

இருமலைக் குணப்படுத்த ஒரு சிட்டிகை மிளகுத்தூள், மஞ்சள்தூள், இரண்டு மேசைக்கரண்டி பனைகற்கண்டு இவை மூன்றையும் 200 மிலி சூடான பாலில் கலந்து இரவில் குடித்தால் இருமல் குணமாகும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை 


மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார்!

பல்வேறு பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய்களுக்கு தரப்படுவது ஆண்டிபயாடிக் மாத்திரைகள்.சாதாரண சளிக்கும் கூட அடுத்த கட்ட தொற்றை தவிர்க்க இம்மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.நம்மில் ஒவ்வொருவரும் இந்த மாத்திரைகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுங்காமல் இருந்த்தில்லை.தலைப்பில் உஷார் என்று இருப்பது நாம் உஷாராக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.அரசாங்கமும் செயலில் இறங்கிவிட்ட்து



போதுமான அளவு நமக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடாமல் போவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கிட்ட்த்தட்ட கத்தி மாதிரி.சரியாக பயன்படுத்தாவிட்டால் நம்மையும் பதம் பார்த்துவிடும்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இத்தனை நாட்கள்,அளவு என்று கணக்கிருக்கிறது.முழுமையான அளவு எடுக்காமல் போனால் குறிப்பிட்ட மாத்திரைகளுக்கு கிருமிகள் பழகிவிடுகின்றன.

                                    உதாரணமாக பாக்டீரியாவால் ஏற்படும் அல்சருக்கு பதினைந்து நாட்கள் அமாக்ஸிலின் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.நான்கு நாட்கள் சாப்பிட்டுவிட்டு நிறுத்திக்கொண்டால் அமாக்ஸிலினை எதிர்த்து கிருமிகள் வாழப்பழகிவிடும்.இதை drug resistance என்பார்கள்.இதுதான் இன்று இந்தியாவில் பெரும்பிரச்சினையாக மாறியிருக்கிறது.



குறிப்பிட்ட ஆண்டிபயாடிக் வேலை செய்யாமல் போனால் அதைவிட வீரியமான வேறொன்றுக்கு மாறவேண்டும்.தவறாக பயன்படுத்தினால் வீரிய மருந்துக்கும் இதேகதிதான்.இப்படியே போனால் பெரும் சிக்கல்.பழகிவிட்ட கிருமிகள் இன்னொருவருக்கு பரவினாலும் அவருக்கும் குறிப்பிட்ட மருந்து வேலை செய்யாது.

       காச நோய் பாக்டீரியாவால் பரவும் நோய்.ஆறுமாதம் மருந்து சாப்பிட வேண்டும்..கொஞ்சம் அறிகுறி குறைந்தவுடன் பலர் இடையில் நிறுத்தி விடுவதால் நோய் குணமாகாமல் மீண்டும் இருமல் ஆரம்பித்துவிடும்.முன்பு கொடுத்த மருந்தை திரும்ப ஆரம்பித்தால் மருந்து வேலை செய்யாமல் நோய் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இரண்டு வருடம் மாத்திரைகள் சாப்பிடவேண்டும்



  ஒரு காசநோயாளி பதினைந்து பேருக்கு பரப்பிவிடுகிறார்.வீரியமடைந்த கிருமிகளை பரப்பும்போது இனி காசநோய்க்கு ஆறுமாத ம்ருந்து என்பது இரண்டு வருடமாகிவிடும்.இதே போல பல நோய்களுக்கும் ஏற்பட்டால் மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகி விடும்.நமக்கு இந்த விஷயத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லை.விபரீதம் புரியாமல் மருந்துக்கடைகளும் நேரடியாக மாத்திரைகளை இஷ்ட்த்திற்கு விற்பனை செய்கின்றன.

   மத்திய அரசு இப்போது சட்ட்த்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.அதனபடி சில குறிப்ப்ட்ட மருந்துகள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.மருத்துவர்கள் இரண்டு வகை பரிந்துரை சீட்டுகளை கொடுப்பார்கள்.ஒன்றை மருந்துக் கடைகள் ஓராண்டுவரை பாதுகாக்க வேண்டும்.

     வழக்கம்போல மருந்துக்கடைகள் விற்பனை படுத்துவிடும் என்று அலறுகிறார்கள். விளைவுகளை விடவும் அவ்ர்கள் பணம் சம்பாதிப்பதே முக்கியம்.காலாவதியான மருந்தால் ஆபத்து என்றாலும் அவர்களுக்கு வருவாய் முக்கியம்.நமக்குத்தான் இவ்விஷயத்தில் விழிப்புணர்வு அவசியம். 

தமிழில் பெயர் : சினிமாக்காரர்களுக்கு ஆப்படித்த ஜெ.

கடந்த திமுக ஆட்சியில் நம்மை மிகவும் கொதிப்படைய வைத்த விஷயம் ’சினிமாப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு’ என்ற சட்டம். தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் ஸ்பானிஷில் பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் மாதச் சம்பளக்காரனிடம் வருமான வரியை கேட்காமலேயே உருவும் நாட்டில் தான் இந்த கோமாளிச் சட்டம் இயற்றப்பட்டது.




2006ல் ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் சினிமாக்காரர்களை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவும் ஆனது. ‘இது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடும் செயல்’ என இயக்குநர்களும் நடிகர்களும் பதிலுக்கு கூவிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நேரத்தில் தான் அந்தக் கால சாணக்கியரான கருணாநிதியின் மூளை வேலை செய்தது. ’தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு’ என்ற ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தினார்.

கூட்டணிக்கட்சிகளையும் சட்டம் ஒழுங்கையும் தனக்குத் தெரிந்த அசமஞ்ச வழியில் சரி பண்ணியாயிற்று.

சினிமாக்காரர்கள் ஐந்து வருடமும் கலைஞரின் காலடியிலேயே கிடந்தார்கள். ரொம்ப போரடித்தால் பாராட்டு விழாவும் அதில் நடிகைகளின் நடனமும் நினைத்த நேரத்தில் கிடைத்தது. வரி விலக்கு என்றவுடன் படைப்பாளியின் சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசிய அறிவுஜீவிகள் மூச்சு விடவில்லை. தயாரிப்பாளரிடம் ’ஆங்கிலத்தில் தான் பெயர் வைப்பேன்’ என்று ஒருத்தனும் போராடியாகச் செய்தியும் இல்லை.



தியேட்டர்காரர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை யாரும் சினிமாவால் கிடைத்த லாபத்திற்கு வரி கட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. தொடர்ந்து நிதிகளும் மாறன்களும் சினிமாத் தயாரிப்பில் இறங்கி ‘வரியில்லா வருமானத்தை’ அள்ளினர்.கூடவே கணக்கில் காட்ட முடியாதிருந்த கறுப்புக் பணத்தை வெள்ளையாக்கவும் இந்தச் சட்டம் மறைமுகமாக உதவி இருக்கலாம்.

பொதுவாக வரி விலக்கு என்பது அதை நுகர்வோரைச் சென்றடைவதே வழக்கம். முன்பு வரிவிலக்கு அளிக்கப்படும் நல்ல படங்கள்கூட குறைவான டிக்கெட் விலையில் திரையிடப்பட்டன. ஆனால் எங்கும் இல்லாத அதிசயமாக இந்த வரிவிலக்கு எந்த வித்த்திலும் சினிமா ரசிகர்களுக்கு பயனளிக்கவில்லை. டிக்கெட் விலை குறைப்பு பற்றி அரசு கண்டிப்பு காட்டவும் இல்லை.

வரி விலக்கில் காட்டப்பட்ட பாரபட்சம். மூத்த தமிழ்க்குடிகளின் குல தெய்வமான ’ஒச்சாயி’ பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது. ’சிவாஜி, வா குவார்ட்டர் கட்டிங்’ போன்ற ’செல்வாக்கு படைத்த ‘படங்களுக்கு தாராளமாக வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இதை விடவும் மோசமான விஷயம், நம் கவனத்திற்கு வராமல் போன விஷயம் இந்த கேளிக்கை வரி விலக்கால் மாநகராட்சி/நகராட்சிகளுக்கு ஏற்பட்ட வரி இழப்பு. பொதுவாக டிக்கெட்டில் குறிப்பிட்ட சத்வீதம் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு, அந்தந்த நகராட்சிகளின் வளர்ச்சிப்பணிக்கு அந்தப் பணம் செலவிடப்படும். ஆனால் இவர்களது சுயநலக் கூத்தில், நகராட்சிகள் நடுத்தெருவில் விடப்பட்டன.

அதற்கு நகராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த பின் வருடம் (தோராயமாக) 50,000 ரூபாய் நிதி ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒதுக்கப்பட்டது, பலவித நிபந்தனைகளுடன். அதைப் பெறுவதற்குள் நகராட்சிகள் விழி பிதுங்கின. ஆனால் இந்தச் சட்டம் இயற்றப்படும் முன் நகராட்சிகளுக்கு தோராயமாக கேளிக்கை வரி வசூலாக இரண்டு லட்சம் வரை மினிமம் கிடைத்துக் கொண்டிருந்தது. (கணக்கீடு ’சுமாரான டவுன்’ ஆன கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மூலம் பெறப்பட்டது. மற்ற நகராட்சிகள் பற்றி நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்)



இவ்வாறு எந்த வகையிலும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு இப்போது ஆப்பு வந்து சேர்ந்துள்ளது. வரி விலக்கு பெற வேண்டும் என்றால் கீழ்கண்ட நிபந்தனைகளை படங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது:

1. திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ”யூ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

இப்படி சுத்தி வளைத்துச் சொல்வதை விட ஜெ. நேரடியாகவே “வரி விலக்கு கிடையாது” என்று சொல்லி இருக்கலாம். அது நம் மக்களிடையே இன்னும் நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கும்.

இருப்பினும் வழக்கம்போல் ’இதுவாவது கிடைத்ததே’ என்று இப்போதைக்கு திருப்தி அடைவோம். இது தொடரும் என்ற நம்பிக்கையில் அம்மையாரைப் பாராட்டுவோம்!

விளையாட்டை அரசியலாக்கும் கேவலம்...... ஒரு விழிப்புணர்வு பார்வை....!



எழுதியவர் கூர்மதியன் 

அரசியலை விளையாட்டாய் ஆடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளையாட்டை அரசியலாய் மாற்றுவது எம்மாத்திரமாய் ஆகி விடப் போகிறது. 100 கோடிக்கும் மேல் மக்கள் வளம் கொண்ட ஒரு தேசத்தில் ஒலிம்பிக் விளையாட்டில் எத்தனை தங்கப் பதக்கங்கள் நம்மால் பெறப்படுகிறது? விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுக்காத அரசும், பணம் ஈட்டும் வழிகளில் மட்டும் கவனத்தை செலுத்தும் ஸ்பான்ஸர்களாலும், மிகைப்பட்ட பேர்கள் பொதுப்புத்தியில் ஊறிப் போன விளையாட்டாய் தலைமுறையாய் பார்த்து ரசிக்கா விட்டால் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று நாகரீகத்துக்காக விளையாட்டினை பார்க்கும், பேசும் எம் இளையர்களும் இருக்கும் வரை எல்லா விதமான விளையாட்டுக்களும் எங்கணம் வளரும்.

கிரிக்கெட் என்னும் அசுரனால நிறைய லாபம் பார்த்த இந்திய வியாபரிகள் அதைக் கட்டிக் கொண்டு அழுவதின் விளைவு மற்ற விளையாட்டுக்களை நசுக்கித்தான் விட்டது என்று கோபப் பார்வை பார்க்கும் இந்தக் கட்டுரை சற்றே உங்கள் புருவங்களை உயர்த்தி விழிப்புணர்வு பார்வை கொள்க என்ற வேண்டு கோளையும் வைக்கிறது.

விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார வகையிலும் பெருமைபடுத்தும் வகையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. எது எடுத்தாலும் மூக்கை நுழைக்கும் அரசியல்வாதிகள் இந்த விளையாட்டு துறையையும் விட்டுவைப்பதில்லை. இது நாம் எல்லோரும் அறிந்ததே.!




கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நம் நாட்டில் இதுவரை வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுத்ததில்லை. விடுமுறை நாட்கள் என்று வந்துவிட்டால் கையில் மட்டையை தூக்கிகொண்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கிரிக்கெட் விளையாட ஓடிவிடுவர். இதனால் பல கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட்டை சார்ந்த அரசியல்வாதிகளும் கிரிக்கெட்டை நமது தேசிய விளையாட்டாக மாற்ற முற்பட்டனர்.




இதுதான் ஒரு அரசியல்வாதியின் பாங்கா.!? இப்படிதான் நடந்துகொள்வதா.!? தூங்கிகொண்டிருப்பவனை உயர்த்துவது சிறப்பா அல்லது உயரத்தில் இருப்பவனை தூக்கி தலையில் வைத்து ஆடுவது என்பது சிறப்பா.!?




கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக மாற்ற வேண்டும் என்று பேச்சு நடந்த போது பிரபல ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை அவர்களை சந்தித்தேன்.‘’ஹாக்கியில் சாதிக்கவில்லை என்று சொல்லும் அரசு எங்களுக்கு சரியான ஊக்கத்தை தர மறந்திருப்பது தெரியாதா!? சாதாரண போட்டிக்காக கிரிக்கெட் வீரர்கள் சவேரா ஹோட்டலில் தங்கும் அதே நேரம் ஜன்னல் ஓரத்தில் சாக்கடைகள் ஓடும் மின் விசிறி கூட அற்ற ஒரு அரசாங்க பள்ளிகூடத்தில் கொசுக்கடியில் ஆசிய கோப்பைக்காக தங்கியிருந்தோம் நாங்கள். இது மனதளவில் ஒரு விளையாட்டு வீரனை பாதிக்காதா.!?’’ என்றார்.




உண்மைதானே.! ஒரு விளையாட்டில் முழுமையான ஈடுபாடு இல்லாமல் ஒரு வீரனால் எப்படி சாதிக்க முடியும்.!? அந்த ஈடுபாடை சீர்குலைக்கும்படி நடப்பது ஒரு அரசுக்கு சிறப்பா!?


பரப்பளவில் நம் தமிழகத்தின் அளவு கூட வரமுடியாத எத்தனையோ நாடுகள் ஒலிம்பிக்கில் சாதிக்கும் போது ஒற்றை தங்க பதக்கத்தை வைத்துகொண்டு உளமாற மகிழ்வது போல நடிப்பது தான் நாம் தேடுகின்ற பெருமையா.!?




எத்தனையோ திறமை வாய்ந்த வீரர்கள் ஸ்பான்சர்கள் இல்லாமலும், சிறப்பான வழிகாட்டுதல் இல்லாததாலும் எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து சராசரி மனிதனாக மாறிவிடுகின்றனர்.




எனது பள்ளி பருவத்திலே நான் ஹாக்கி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு என் பள்ளி ஹாக்கி அணியில் சேர்ந்தேன். சோனல், டிஸ்ட்ரிக்ட், டிவிசன் என எல்லாத்திலும் ஜெயித்து முத்திரை பதித்தது எங்கள் அணி. எங்கள் பள்ளியின் கிரிக்கெட் அணி சோனலின் பைனலில் தோற்றது. அவர்கள் படத்தை பெரிதாக போட்டு எங்கள் பள்ளி இதழில் ‘ரன்னர்ஸ் அப்’ என்று போட்டது மட்டுமல்லாது தினமணியில் படத்தோடு செய்தியும் வந்தது. இந்த இரண்டு அங்கீகாரமும் எங்கள் உழைப்புக்கு இல்லாமல் போனது. எங்கள் அணியில் இருந்த திறமையான வீரர்கள் பலரும் இப்போது மாற்றுத் துறையில் இருக்கின்றனர்.




இதுபோன்று தான் ஒவ்வொரு வீரனும் மழுகடிக்கப்படுகிறான். இரண்டு வருடம் முன்பு படித்த ஒரு செய்தியில் பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க விடாததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான் என்று இருந்தது. அதற்கு காரணம் என்ன என்று விசாரித்த போது மாணவன் தேர்வில் சரியான மதிப்பெண் பெறாததால் விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டதாக சொன்னர். என்ன இது.!? ஒழுங்காக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் அங்கீகாரம் தருவேன் என்று பள்ளிகள் இருப்பது சரியா.!?




பெரிதாக சாதிக்கும் மனிதரை தான் ஏத்துவோம்.! பெரிதாக சாதிக்கப்படும் விளையாட்டில் தான் கவனம் செலுத்துவோம் என்று மக்கள் அடம்பிடிப்பது சரியா.!? அப்படி இருந்தால் நம் ‘கபடி’ என்ன ஆனது. கபடி உலக கோப்பை தொடங்கிய முதல் இன்று வரை மூன்று முறை நாம் தானே கபடி சாம்பியன்ஸ். 1990ல் இருந்து இன்று வரை நாம் தானே ஆசிய சாம்பியன்ஸ். 1985லிருந்து(1993 தவிர்த்து) இன்று வரை நாம் தானே தெற்கு ஆசிய சாம்பியன். இதுவரை பங்கெடுத்த பெரிய போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு முறை தான் தோற்றிருக்கிறது. மத்தபடி 1985முதல் நாம் தான் கபடியில் முத்திரை பதிக்கிறோம். IPL என்று பணம் பறக்கும் போட்டி நாம் அறிவோம். KPL-அதாவது கபடி ப்ரமியர் லீக் என்று ஒன்று சமீபத்தில் ஜூன் 8 முதல் 16 வரை நடந்ததை யாராவது அறிவீர்களா.!? அசைக்க முடியாத வலிமையான அணி கபடியில் இந்தியா. அதன் வீரர்கள் இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கின்றனர்.




சமீபத்தில் இருங்காட்டுக்கோட்டையில் நடந்த ஒரு ரேஸ் நிகழ்ச்சியில் பிரபல பைக் ரேஸர் ரஜினியை சந்தித்தேன். அவர், ‘‘ நான் ஒரு சாதாரண மெக்கானிக். எனக்கு ரேஸில் கலந்துகொள்ள ஸ்பான்சர் கிடைக்க படாத பாடு பட்டேன். கிரிக்கெட் என்றால் ஓடும் பலர் ரேஸ் என்றால் வரவே மறுக்கின்றனர். அதுவும் தப்பி தவறி வரும் ஸ்பான்சர்களும் கார் பக்கமே போகின்றனர். பைக் ரேஸ் என்பதற்கு ஸ்பான்சர் கிடைப்பதற்குள் இறந்து மறுபிறவி எடுக்கவேண்டும்’’ என்றார். பணத்திற்காக ஸ்பான்சரிங் இல்லாமல் ஊக்குவிக்க ஸ்பான்சர் செய்யும் யாராவது ஒருவர் இங்கு இருக்கின்றனரா.!? இல்லை.




சமீபத்தில் பதிவுலகின் நண்பர் ஒருவர் கூறுகையில், ‘‘ எங்கள் கல்லூரி மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு அமைப்பு தொடங்க போறோம். அதன் மூலம் ஸ்பான்சர் இல்லாது தவிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உதவ போகிறோம்’’ என்றார்.




ஆம்..!! நாம் மற்றவர்களை குறை சொல்லும் நேரத்தில் இது போன்ற செய்கைகளில் ஈடுபட்டால் என்ன.!? அவர்களும் திருந்தமாட்டார்கள் நாமும் குறை சொல்வதை விடமாட்டோம் என்று இருந்தால் இனி நாம் குறைகளை மட்டுமே அடுக்கிகொண்டு போகவேண்டியது தான்.

அனைத்தையும் ரசிப்போம்.! அனைவரையும் ஊக்குவிப்போம்.!

மனச்சோர்வில் இந்தியர்களுக்குதான் முதலிடம்!!




நன்றி விடுதலை 

உலக சுகாதாரக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆய்வில், மனதளவில் பெரிய அளவில் சோர்வாக இருப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, சீனர்கள்தான் அதிக மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். தங்கள் வாழ்நாளில் மனச்சோர்வு நீடித்த வண்ணம் இருந்தது என்று 9 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மிகவும் கடுமையான மனச்சோர்வு கொண்ட காலத்தை அனுபவித்தோம் என்று 36 விழுக்காடு இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாதான் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 18 நாடுகளில் அதிக அளவு மனச்சோர்வு உடையதாக இருக்கிறது.

பி.எம்.சி. மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு விபரங்கள் வெளியாகியுள்
ளன. மொத்தம் 18 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதிக வருமானம் ஈட்டும் நாடுகள் என்ற பிரிவில் பத்து நாடுகள் உள்ளன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரேசில், கொலம்பியா, இந்தியா, சீனா, லெபனான், மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய எட்டு நாடுகள் உள்ளன. வளர்ச்சி குறித்து உலக வங்கி நிர்ணயித்திருக்கும் தரத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மனச்சோர்வு என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கும் காரணியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் சுமார் 12 கோடிப்பேர் மனச்சோர்வால் பாதிக்கப்பட் டுள்ளனர். குறிப்பாக, 15 வயது முதல் 44 வயது வரைஉள்ளவர்களுக்குதான் அதிக பாதிப்பாகும். மிகவும் கடு மையான மனச்சோர்வு பற் றிய ஆய்வு புருவத்தை உயர்த் தச் செய்யும் தகவல்களைத் தந்துள்ளது. பணக்கார நாடு கள், அதாவது வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய நாடுக ளில்தான் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நடுத்தர அளவில் வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில், எதிர்பார்த்ததைவிடக் குறை வானதாகவே இருக்கிறது.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பணக்கார நாடுகளில் தவறான கொள்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அச்சம், ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அமெரிக்க வேலையின்மை, அதனால் உருவான பிரச்சனையான வீடின்மை அந்நாட்டு மக்களிடம் வாழ்க்கை பற்றிய கவலையை உருவாக்கியுள்ளதை மனிதவள வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 அதற்கு மாறாக, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சீனா உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலையைச் செய்தது. அதனால்தான் அந்நாட் டில் மனச்சோர்வு குறைவு என்பது அந்த வல்லுநர்க ளின் கருத்தாகும்.



பெண்களுக்கு கூடுதல் பாதிப்புஅனைத்து நாடுகளிலுமே கூடுதல் நெருக்கடியைச் சந்திப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைவிட இரண்டு மடங்கு மனச்சோர்வு பெண்கள் மத்தியில் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கணவரை இழப்பது, விவாகரத்து மற்றும் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்து வாழ்வது ஆகிய பிரச்சனைகள் பெண்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன. சமூக அமைப்பில் பெண்களுக்கு தரப்படும் இடமே இத்தகைய பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கிட்டத்தட்டஅனைத்து நாடுகளிலுமே பெண்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதும்போக்கு உள்ளது.

கடுமையான மனச்சோர்வுஇந்தியாவில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கவலை, துக்கம், தவறு செய்துவிட்டதாகக் கருதுதல், தாழ்வு மனப்
பான்மை, தூக்கமின்மை, பெரும் கவனக்குறைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமான நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா என்ற வரிசையில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் மனச்சோர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைவிட சீனாவின் குடிமக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பது இந்த ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

மு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா? எது முக்கியம்? தீர்மானியுங்கள்.




எழுதியவர் r.selvakkumar 

சமச்சீர் கல்வி விவகாரத்தை இரு கழகங்களுக்கான சண்டை என்ற மனோபாவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் வக்காலத்து வாங்கி வீணாகப் போனது போதும். இது அரசியல் பிரச்சனை அல்ல. அடிப்படைக் கல்வி பிரச்சனை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அரசியல் வர்க்கத்தை நாம் சீற்றத்துடன் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமது அருமையான குழந்தைகளை இதைவிடக் கொடுமையாக கேவலப்படுத்த முடியாது. அவர்களுக்கு பள்ளி உண்டு. ஆனால் கல்வி இல்லை. வேறு எந்த நாட்டிலாவது இது போலக் குளறுபடி உண்டா?

நமது குழந்தைகள் பாடம் படித்து 2 மாதங்களாகிவிட்டன. உலக வரலாற்றிலேயே கல்வி விஷயத்தில் இந்த அளவுக்கு பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்ட அரசு எதுமே இல்லை.
எங்கள் குழந்தைகளுக்கு ஏன் கல்வியை மறுக்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை ஒரே குரலில் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும். நல்லதோர் வீணையாக இருக்கும் நம் குழந்தைகள் புழுதியில் எறியப்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும். 

அதிக தண்ணீர் குடிப்பது சரியா?

எழுதியவர் shanmugavel 

உயிரின்ங்கள் உயிர்வாழ அத்தியாவசியமான ஒன்று நீர்.உடலியக்கம் சீராக நடைபெற போதுமான அளவு நீர் குடிப்பது அவசியம்.கொழுப்பு நீங்கலாக உடலில் எழுபது சதவீதம் தண்ணீர்தான்.வைட்டமின்களில் பி,சி ஆகியவை தண்ணீரில் கறையும்.இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு மஞ்சளாக சிறுநீர் வெளியேறுவதை பார்க்கலாம்.எத்தனை கிராம் வைட்டமின் எடுத்துக்கொண்டாலும் உடல் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது.



எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம் என்று பொதுவாக சொல்வார்கள்.ஆனால் அவரவர் வாழ்க்கை முறைக்கு தக்கவாறு அளவு நிர்ணயிக்கப்படவேண்டும்.வெயிலில் கடுமையாக உழைப்பவருக்கும்,குளிர் சாதன அறையில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரே அளவு பொருந்தாது.மாத்திரைகள் உட்கொண்ட நேரம் தவிர சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் நீர் குறைவாக குடித்திருக்கிறீர்கள் என்று பொருள்.

  சர்வதேச அளவிலும் இரண்டு லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு போதுமானது என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.அதிகமாக தண்ணீர் குடித்தால் நல்லது என்று இஷ்ட்த்திற்கு குடித்துக்கொண்டிருந்தாலும் இதயம்,சிறுநீரகம் போன்றவை அதிக சுமைக்கு உள்ளாகும்.”அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு” என்பது நீருக்கும் பொருந்தும்.



தினமும் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால் பல நோய்கள் ஏற்படாது என்று எப்போதோ படித்த நினைவு.நிபுணர்களும் இது நன்மையைத்தரக்கூடும் என்றுதான் சொல்கிறார்கள்.குறைந்த பட்சம் மலச்சிக்கலை போக்கும்.மலச்சிக்கல் இல்லாவிட்டாலே பல நோய்கள் அண்டாது.ஒன்றரை லிட்டர் இல்லாவிட்டாலும் காலையில் தண்ணீர் குடிப்பது நல்லதுதான்.

          இன்று குடிநீர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்ட்து.பத்தாண்டுகளுக்கு முன்புகூட இதை எதிர்பார்க்கவில்லை.சிறு நகரங்களில் கூட பல வீடுகளில் இன்று கேன் வாங்குகிறார்கள்.பாக்கெட்களில் அடைக்கப்பட்ட குடி நீர் பரபரப்பாக விற்பனையாகிறது.இவற்றில் பெருமளவு தரமற்றவை என்றும் கண்டறிந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.



  சுமார் எண்பது சதவீத நோய்கள் குடிநீரால் பரவுகின்றன.முக்கியமானவை வயிற்றுப்போக்கு,டைபாய்டு,ஒருவகை மஞ்சள் காமலை போன்றவை.உலகில் அதிக குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றன.எப்போதும் கொதிக்க வைத்த நீரைத்தான் பயன்படுத்துகிறோம்.ஆனால் என் மகனுக்கு டைபாய்டு வந்துவிட்ட்து என்று ஒருவர் சொன்னார்.இதற்கெல்லாம் வெளியில் சாப்பிடும் பழரசங்கள்,ஜஸ்கிரீம்,நீர் கலக்கப்பட்ட சட்னி போன்ற உணவு வகைகள் காரணமாக இருக்கலாம்.

     தர்மபுரி போன்ற சில மாவட்டங்கள் ஃப்ளூரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்டிருக்கிறது.பற்கள் மஞ்சளாக இருக்கும்.எலும்பையும் பல்லையும் பாதிக்கும் இப்பிரச்சினைக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட்த்தை நம்பி இருக்கிறார்கள்.எப்போதோ வந்திருக்க வேண்டியது,பொக்ரான் அணுகுண்டு வெடிப்பால் தாமதமாகிவிட்ட்து.நிதியுதவி அளிப்பதை ஜப்பான் அப்போது ரத்து செய்து விட்ட்து.

  தேநீர்க்கடைகளில் தூசு விழுந்த நீரையும் சாதாரணமாக குடிப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.அவர்கள் அதிக உடல் உழைப்பு கொண்டவர்கள்.நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகம் இருக்கும்.ஆனாலும் இது அபாயமான பழக்கம்தான்.விழிப்புணர்வு இல்லாத நிலையே காரணம்.

அபாய கட்டத்தில் அஞ்சல் நிலையங்கள்!

நன்றி விகடன் 

கூரியர் நிறுவனங்களுக்கு அடிக்கிறது 'லக்'

இந்திய அஞ்சல் துறையின் 247 ஆண்டு வரலாற்றில், மிக மோசமான தருணம் இது. அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையை ஏற்கிறோம் என்ற பெயரில், தபால் நிலையங்களின் எண்ணிக்​கையை படிப்படியாகக் குறைத்து, அஞ்சல் துறையை ஒட்டுமொத்தமாக மூடும் பாதையைத் நோக்கிச் செல்கிறது, மத்திய அரசு.

இந்தியாவில் இப்போது 1,57,979 தபால் நிலையங்கள் இயங்குகின்றன. இவற்றில் கிராமங்களில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை மட்டும் 1,39,182. கிட்டத்தட்ட 4,75,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஒரு தபால் நிலையம் சராசரியாக 7,716 பேருக்கு சேவை செய்வதாகக் கூறுகிறது, இந்திய அஞ்சல் துறையின் ஆண்டு அறிக்கை!



கடந்த பல ஆண்டுகளாகவே, இந்திய அஞ்சல் துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது. ஆனால், போட்டியாளர்களான, தனியார் கூரியர் நிறுவனங்களோ வருவாயை வாரிக் குவிக்கின்றன. இத்தனைக்கும், அஞ்சல் துறையுடன் ஒப்பிட்டால், கூரியர் நிறுவனங்களின் கட்டமைப்பு சுண்டைக்காய்தான். உதாரணமாக, பெரிய கூரியர் நிறுவனங்களில் ஒன்றான 'டீடிடீசி’ மாதத்துக்கு 1 கோடி கடிதங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளுகிறது. 5,200 இடங்களில் மட்டுமே அதற்கு சேகரிப்பு மையங்கள் இருக்கின்றன. ஊழியர்கள் 13,000 பேர்தான்!

ஆனால், மிகவிரிவான கட்ட​மைப்புடன் இருக்கும் அஞ்சல் துறை தொடர் நஷ்டத்தில் இயங்கக் காரணம்... அஞ்சல் துறை நிர்வாகத்தின் கையாலாகாத்தனம். தகவல் தொழில் நுட்பம் விசுவரூபம் எடுத்திருக்கும் ஒரு யுகத்தில் விரைவான செயல்பாட்டின் முக்கியத்துவம் பற்றியோ... நிர்வாகச் சீர்கேடுகளின் அபாயம் பற்றியோ... கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை இந்திய அஞ்சல் துறை.



மிக சமீபத்திய உதாரணம் இது... புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் உரியவர்களிடம் விநியோகம் செய்யாமல் குப்பையில் வீசி எறியப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் உட்பட ஏறத்தாழ 10,000 தபால்களை பொதுமக்களே மீட்டு உள்ளனர். இதற்குக் காரணமான, அஞ்சல்துறை அலுவலர் பவானந்தம், தபால்காரர் மாணிக்கம் ஆகிய இருவர் மீதும், நீண்ட காலமாகப் புகார் சொல்லப்பட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் வேதனை. இப்போது கையும் களவு​மாகப் பிடிபட்டதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சம்பவங்கள் கூரியர் நிறுவனங்களில் சாத்தியமா?

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு ஒரு நாளுக்குள் தபால்களை விநியோகித்து விடும் கூரியர் நிறுவனங்கள், ஒப்புகைச் சான்றும் வழங்கி விடுகின்றன. ஆனால், அஞ்சல் துறையில் அனுப்பப்படும் சாதாரண தபால்கள், சென்று சேரும் என்பதற்கே உத்தரவாதம் கிடையாது. பதிவு அஞ்சல் என்பது கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில் இல்லை. விரைவு அஞ்சலில் அனுப்பும் தபால்கள் பக்கத்து மாவட்டங்களைச் சென்றடையவே இரண்டு நாட்கள் ஆகிறது!

கூரியர் நிறுவனங்களில், ஒரு மாநிலத்துக்குள் 250 கிராம் கொண்ட ஒரு தபாலை அனுப்ப

30 வசூலிக்கப்படுகிறது. வெளிமாநிலத்துக்கு 45. ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட தபால்களைக் கொடுப்பதாக இருந்தால், 30 சதவிகித கட்டணச் சலுகையும் உண்டு. அஞ்சல் துறையிலோ, இதே தபாலை பதிவுத் தபாலில் அனுப்ப 80 வசூலிக்கப்படுகிறது.

அடிப்படை வியாபாரக் கட்டமைப்பில் கொஞ்சம்கூட அக்கறை காட்டாத அஞ்சல் துறை, வருவாயைப் பெருக்கத் தங்கக் காசு தொடங்கி தீபாவளி பட்டாசு வரை விற்பனை செய்கிறது. உலகின் முன்னோடி நிறுவனம் என்ற பெருமையை மறந்து, அமெரிக்காவின் 'மெக்கின்ஸே’ நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கிறது இந்திய அஞ்சல் நிறுவனம்.

'மெக்கின்ஸே’ கொடுத்து இருக்கும் பரிந்துரைகளில் முக்கியமானவை இதுதான். நகர்ப் புறங்களில் உள்ள 9,797 அஞ்சலகங்களை மூடுவது. விரைவு அஞ்சல் மையங்களின் எண்ணிக்கையை 315-ல் இருந்து 89-ஆக குறைப்பது. அஞ்சலகச் சேவையின் முக்கிய ஆதாரமான ரயில்வே மெயில் சேவை மையங்கள் எண்ணிக்கையை 421-ல் இருந்து 84 ஆகக் குறைப்பது போன்றவைதான். இந்த செயல்பாடுகளைப் பார்த்தால், படிப்படியாக அஞ்சலகங்களை மூடி அஞ்சல் சேவையில் இருந்து அரசு விடுபட நினைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

இந்தப் பரிந்துரையை அமலாக்கக் கூடாது என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த அஞ்சல் துறை ஊழியர்கள் தயாராகி வருகின்றனர். ''எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் எங்கள் போராட்டத்துக்கு உண்டு. ஊழியர்கள் நலனுக்கான போராட்டம் அல்ல, எங்கள் துறையைக் காப்பாற்றும் உரிமைப் போராட்டம்!'' என்கிறார்கள் ஊழியர்கள்.

கூரியர் நிறுவனங்களிடம் இருந்து வெற்றி சூட்சுமத்தைக் கற்றுக்கொவதற்கு பதிலாக, கூரியர் நிறுவனங்களிடம் அஞ்சல் துறையை முழுமையாக ஒப்படைக்கும் வண்ணம், இந்தத் துறையில் இருந்தே அரசு வெளியேறுவதைப் பார்த்தால், என்னமோ நடக்குது... மர்மமாக இருக்குது! 

ஆப்பிள் பிரியரா நீங்கள்? இதைப் படியுங்கள்!





நன்றி தமிழ்ச்சுவை

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.


ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே. கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரிய பங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.



அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை.


நீங்கள் ஆப்பிள் பிரியர் என்றால் ஆப்பிளை வாங்குவதற்கு முன்பதாக அது பளபளவென்று இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். ஆப்பிளின் தோல் பளபளவென்று இருந்தால் அதன் மேல் பாகத்தில் மெழுகு பூசப்பட்டுள்ளது என்று அர்த்தம்.



நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.



அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல் தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.



ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகு ஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை மெழுகுகள்.



இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில் "நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கான முக்கிய காரணி ஆகும்.



நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும். அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.



நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.



பெரும்பாலும் குழந்தைகள் ஆப்பிளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு ஆபத்தாக முடியும். மெழுகு பூசிய ஆப்பிளைச் சாப்பிடும்பொழுது அந்த மெழுகு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் படிந்துவிடும். இதனால் குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வாயுத்தொந்தரவு, புற்றுநோய் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம்.



ஆகையால் நீங்கள் ஆப்பிள் பிரியராக இருந்தால் தோலை சீவிவிட்டு பழத்தை மட்டும் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இவர்களிடமிருந்து தப்ப முடியுமா?


  மது வாழ்க்கையில் எத்தனையோ அழையாத விருந்தாளிகளை கண்டிருக்கிறோம் நாம் யாருமே அத்தகைய விருந்தினரை விரும்புவது இல்லை

 வேளைகெட்ட வேளையில் வந்து வேலைகளை கெடுக்கிறார்களே என்று ரகசியமாக முனுமுனுப்போம் எரிச்சல் படுவோம்

 எப்படியாவது அவர்களை உடனடியாக மூட்டை முடிச்சுகளை கட்ட வைத்து வழியனுப்ப அவசரப் படுவோம்

  ஆனால் இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் இவர்களை நாம் விரும்புவது இல்லை ஆனாலும் இவர்கள் நம்மை விடுவது இல்லை 


  எப்படியாவது துரத்தி பிடித்து வந்து உட்கார்ந்து விடுவார்கள் அதன் பிறகு அவர்களோடு நாம் தான் போகவேண்டுமே தவிர அவர்கள் போக மாட்டார்கள்

 யாரந்த விருந்தாளிகள்? என்று நீங்கள் சிந்திக்கலாம் சற்று திரும்பி உங்கள் வாசலை பாருங்கள்

   அங்கே இரண்டு பேர் நிற்பார்கள் அதில் ஒருவன் பெயர் முதுமை இன்னொருவன் பெயர் மரணம்

   இவர்களை வெல்ல அல்லது இவர்களிடம் இருந்து தப்ப நம்மால் முடியுமா?

    நிச்சயம் முடியாது அதிலும் மரணம் என்ற விருந்தாளி இருக்கிறானே அவன் மிகவும் கொடியவன்

   தத்தி நடை பயிலும் சின்ன குழந்தையானாலும் வண்ண தொகை விரிக்கும் இளவயது மங்கையானாலும் அறிஞனோ அசடனோ யாரானாலும் ஈவு இறக்கம் இல்லாமல் கொத்தி தின்று விடுவான்


  கதற கதற இழுத்து போய் விடுவான்

  ஆனால் முதுமை அப்படி அல்ல காத்திருப்பான் நிதானமாக காத்திருப்பான்

  நாம் இயற்கையின் நெறிமுறையை தாண்டாத வரை நம்மை தொட தயங்குவான்

 சில நேரம் வயதுகள் பல கடந்தாலும் புத்தியை செப்பனிடுவானே தவிர உடம்பை தொடமாட்டான்

  நரம்பிலே முறுக்கிருந்து நாக்கிலே கட்டுப்பாடு இல்லாமல் துள்ளி குதித்தால் அள்ளி கூடையில் போட்டு கொள்வான்

  நேற்று வரை ஓடிய கால்கள் இன்று தள்ளாடும் கருக்கல்லையே பெயர்த்தெடுத்த கரங்கள் சோர்வாக தொங்கி விடும்

 இழுத்து விடும் மூச்சி கூட இரைப்பாய் மாறி விடும்

 அதானால் தான் முதுமையை விரும்பாத விருந்தாளி என வெறுத்து ஒதுக்குகிறோம்

 ஆனாலும் என்ன செய்வது! எப்படியும் ஒரு நாள் அவன் கையில் நாம் அகப்பட்டு தான் ஆக வேண்டும் 


  நான் கூப்பிடுகிறேன் என்னோடு சற்று நேரம் தெருவுக்கு வாருங்கள்...

 அதோ! அந்த வீட்டு திண்ணையில் கால்களை நீட்டிக் கொண்டு வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறாளே! காமாட்சி பாட்டி,

 இவள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்திருப்பாள்?

 இளமையும் யவனமும் எப்படி எல்லாம் இவளை தாலாட்டி இருக்கும்?

 தனது வயது முதிர்ந்த மாமியாரை அல்லது தாயாரை அவர்களின் தள்ளாமையால் எப்படி எல்லாம் வார்த்தை கொண்டு காயப் படுத்தியிருப்பாள்!

  எனக்கு யாரும் வேண்டாம் உற்றார் உறவினர் எல்லோருமே கொத்துகின்ற கழுகு கூட்டம் தான்

  இவர்களின் அறுகமையே தேவையில்லை என்று சொந்த பந்தங்களை துரத்தி இருப்பாள்


  இன்று கண் மங்கி போய் விட்டது கழிவறைக்கு போக வேண்டும் என்றால் கூட யாரவது ஒருவர் கைபிடித்து போக வேண்டும்

  இப்படி தான் ஒரு நாள் ஆவோம் என்று அவள் கற்பணை செய்திருப்பாளா?

  கிழட்டு ஜென்மங்கள் செத்து தொலைந்தால் என்ன என்று எத்தனை பேரை பேசியும் ஏசியும் இருப்பாள்

 இன்று யாரவது ஒருவர் அவளை அப்படி சொன்னால் அவள் மனது என்ன பாடுப்படும்...?

  காமாட்சியை பார்த்தது போதும் இதோ இந்த விளக்கு கம்பத்தின் கீழ் கைத்தடியை ஊன்றியப் படி நிற்கிறாரே பெரியவர் ராமசுப்ரமணியம்...

 இவர் ஒரு காலத்தில் காதல் மன்னராம் தெருவுக்கு ஒரு சட்டை போட்டுக் கொண்டு வலம் வருவாராம்

  இவர் தெரு முனையில் வரும்போதே வாசனை திரவியத்தின் வாசம் வீட்டுக்குள் இருக்கும் இளம் பெண்களை சுண்டி இழுக்குமாம்


 தினசரி சவரம் செய்த கன்னத்தின் பளபளப்பு வகிடு மாறாத தலைகேசத்தின் அலங்காரம் எல்லாமே ஒரு முறை பார்த்தவரை மறுமுறையும் பார்க்க வைக்குமாம்

   ஆனால் இப்பொது பாருங்கள்! பளபளத்த கன்னம் குழிவிழுந்து ஏறு பூட்டிய நிலம் போல கோடு விழுந்து அலங்கோலமாக தெரிகிறது

 வாசனை திரவியத்தில் குளித்த உடல் அழுக்கு சட்டையால் மூடப்பட்டு இருக்கிறது

 காதல் மொழி பேசிய வாய் வெற்றிலை எச்சில் வழிய குளறி கிடக்கிறது

  இவர்களை விடுங்கள் அதோ கைற்று கட்டிலில் வாய்திறந்து பிணம் போல கிடக்கிறாரே மாடசாமி

  அவர் அருகில் சாதத்தை பிசைந்து ஊட்ட முயற்சித்து கண்தெரியாமலும் கை நடுக்கத்தாலும் தடுமாருகிறாளே வள்ளியம்மை 



 இவள் மாடசாமி என்ற மிருக கணவனிடம் வாங்கிய அடி உதை என்ன? குடித்து விட்டு மைதானத்தில் பந்தை உதைப்பதை போல் எத்தனை முறை இவளை புரட்டி எடுத்திருப்பான்?

  இவள் மட்டும் என்ன சாமான்யமானவளா குடிகார கணவன் மதி மயங்கி கிடக்கும் போது எதிர்த்த வீட்டு இளவரசனுக்கு ஓலை அனுப்பிய உத்தமி அல்லவா!

 குடிக்கும் போது அவனோ சோரம் போகும் போது அவளோ என்றாவது ஒரு நாள் இளமை நம்மை விட்டு போய் விடும் முதுமை என்ற இரும்பு சட்டை நம்மை இறுக்க பூட்டிக் கொள்ளும் என்று சிந்தனை செய்திருப்பார்களா?

 இவர்களை கடந்து நமது நாட்டு முன்னாள் அமைச்சர் ஒருவர் தள்ளாடும் வயதில் மரண படுக்கையில் கிடக்கிறாராம் அவரை பார்ப்போம் வாருங்கள்

 அந்தோ பரிதாபம்!

   வெள்ளை வேட்டி சட்டையுமாய் காரில் பவனி வந்தவர் இன்று எட்டுக்கால் வாகனத்தில் ஊர்வலம் போக தயாராக கிடக்கிறார்

 ஒலி பெருக்கியின் முன்னால் இவர் பேசிய பேச்சுக்கள் எத்தனை!


 கடவுள் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவனை கொண்டு வந்து என் முன்னாள் நிறுத்து

 ஏற்ற தாழ்வுடைய சமூகத்தை ஏனடா படைத்தாய் என சாட்டையால் அடித்து தள்ளுகிறேன்

கண்ணுக்கே தெரியாத கடவுளை வணங்கி காலத்தை வீணடிக்கும் மூட ஜனங்களே!

 அவன் இல்லை! அவன் இல்லை!! அவன் இல்லவே இல்லை!!!

 என்று நாத்திகம் பேசிய வாய் இன்று சாரமற்ற தத்துவத்தை காலமெல்லாம் பேசி பாவங்களே செய்து விட்டேனோ ஒரு வேளை கடவுள் என்றொருவன் இருந்து அவனை நான் அவசரப் பட்டு அவமரியாதை செய்ததனால் தான் மரணம் என்னை மிரட்டுகிறதோ!

 ஐயோ கடவுளே ஒரு வேளை நீ உண்டு என்றால் மன்னித்து என்னை மனிதனாக வாழ விடு! என்று சத்தம் இல்லாமல் முனு முனுக்கிறதே அது உங்கள் காதில் விழுகிறதா?


ரத்தத்தில் கொழுப்பும் நரம்பில் முறுக்கும் இருக்கும் வரை மனிதன் என்னமா ஆடுகிறான்!

 ஆட்டம் முடிந்து அடங்கி விட்டால் வராத ஞானம் எல்லாம் தானாக வருகிறது பார் என வீட்டுக்கு வெளியே யாரோ பேசுவதும் நமது காதுகளில் விழுகிறது

 வயது இருக்கும் போது நாத்திகம் பேசுவதும் வயதான பிறகு ஆத்திகம் தேடுவது உலகில் இப்போது மட்டுமா நடக்கிறது...கால காலமாக அல்லவா நடக்கிறது

 பனித்துளியில் ஆயிரம் பகுதியில் ஒரு சிறு பகுதி தகப்பன் வழியில் அன்னை கருவில் புகுந்து

 கால் கை முளைத்து உருவமாகி பத்து திங்களில் குழந்தையாய் பூமியில் விழுந்து

 வாழ்வதற்கோ பிறந்தேன் என வாய் விட்டு அழுது

 புரண்டு படுத்து தவழ்ந்து எழுந்து நடை வண்டி ஓட்டி

தெருவில் ஆடி பள்ளியில் அடைப்பட்டு அறிவை தேடி

 மீசை முளைத்து ஆசை அரும்ப மோக குளத்தில் நிச்சல் பழகி


 இல்லறம் புகுந்து சொத்து சுகமும் போதாது போதாது என நாளும் தேடி

 பதுக்கி காத்து கலங்கி மயங்கி வாழும் மனிதன்

 ஒரு நாள்...!

 உடல் வனப்பு மாறி கண்கள் இருண்டு பற்கள் விழுந்து நரை திரை கூடி நோய்கள் எல்லாம் சேர்ந்து வந்து மனதைரியத்தை தாக்கி அழித்து

 நடந்து ஓடிய கால்கள் தள்ளாடி கோல் ஊன்றி பார்க்கும் இளசுகள் பரிகாசம் செய்ய

 கடந்த காலத்து கதைகளையே சளைக்காமல் பேசி வாய் தடுமாறி படுக்கையில் விழுந்து

மலஜலம் கழிவது கூட அறியாது மயங்கி

கால தேவன் இழுத்து சென்ற பிறகு உழுத்த சடலத்தை பிணம் என்று ஒதுக்கி

மயானத்தில் சுட்டோ புதைத்தோ விடப்போகிறார்கள்!

இது தான் அரசனுக்கும் ஆண்டிக்கும் நடக்க போகும் ஒரே கதை!

பாலும் தயிரும் நெய்யும் கொடுத்து வளர்த்த உடல் அத்தரும் ஜவ்வாதும் அள்ளி பூசி அலங்கரித்த உடல் மண்ணுக்கோ நெருப்புக்கோ தான் சொந்த மாக போகிறது

ஆனால் இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்து நடக்கிறோம்...


என் ஜாதி பெரியது என்கிறான் ஒருவன் என் மதம் உயர்ந்தது என்கிறான் மற்றவன் எல்லோரும் அடிமைகள் நான் மட்டுமே அரசன் ஆள பிறந்தவன் என ஆர்ப்பாட்டம் செய்கிறான் வேறொருவன்

 காலம் முழுவதும் கட்டழகு குறையாமல் பவனி வர போவதாக கர்வம் பேசுகிறாள் ஒருத்தி

 நிரந்தரமாக வாழ போவதாக தங்கமும் வைரமும் வாங்கி குவிக்கிறாள் மற்றொருத்தி

 யாருமே வாசலில் நிற்கும் வயோதிகத்தையும் மரணத்தையும் எண்ணி பார்க்கவே இல்லை

 அடுத்தவன் மனைவியை ஆசையாக பார்ப்பதற்கு முன்பு...

 கட்டுக் கட்டாக பணத்தை அடுக்குவதற்கு முன்பு ...

 கண்ணில் கண்ட நிலத்தை எல்லாம் தன் பெயரில் பட்டா போடுவதற்கு முன்பு...

 பதவிக்காக அதிகார போதைக்காக அடுத்தவனை கெடுப்பதற்கு முன்பு...

 இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்டால்

 மனிதன் என்ற நாம் பிணமாக மாறிவிட்டால்

 பிள்ளை வைக்கும் கொள்ளி நம்மை சுட்டு விட்ட பின்பு

 நம்மை அடையாளப் படுத்த நாம் இருந்ததை ஞாபகப் படுத்த எது இருக்க போகிறது?

 என்பதை எண்ணி பார்க்க வேண்டும்

 இதை ஒவ்வொரு மனிதனும் செய்ய துணிந்தால்...

நாட்டில் சண்டை ஏது? சச்சரவு ஏது? வம்பு வழக்குகள் தான் ஏது?

Tuesday, 19 July 2011

பயங்கரவாதிகளை உருவாக்குவோம்.....

இந்த உலகத்தின்  எந்த மூலையில்  பிறந்தவனும் அமைதியான   வாழ்க்கையே விரும்புவான்.  அடிப்படை சுதந்திரம்  மறுக்கப்பட்ட போதும்  அவன் அவ்வளவு சீக்கிரம்  வன்முறையின் பக்கம் நாடமாட்டான்.  அதையும் மீறி அவன் வன்முறையின்  பக்கம் செல்ல  என்னை பொறுத்த  வரை  இரண்டு காரணங்களை சொல்வேன் .

ஒன்று அவன்   மனநோயாளியாக   இருக்கவேண்டும், 
இரண்டு  அவனை வன்முறைக்கு தள்ளிய புறச்சூழல் காரணிகள்.

இதில் முதலாவதை  விடுவோம். உற்று நோக்கினால் அது மிக குறைந்த  பகுதி தான்.  ஆனால் இரண்டாவதை    உருவாக்குவதில்  பெரும் பங்கு வகிப்பது  அதிகார வர்க்கம் தான் என்பது மறுப்பதற்கில்லை.   எந்த ஒரு  வன்முறையாளனையும்  எடுத்துக்கொள்ளுங்கள் அவனை உருவாக்கியதற்கு பின்னால் எதோ ஒரு அதிகார வர்க்கம், அவர்களால் முடக்கப்பட்ட   நாட்டின் சட்டங்கள், மறுக்கப்பட்ட நீதி  போன்றவை  தான் பின்னணியாக  இருக்கும்.

இதில்  முக்கிய   பங்கு ஒரு நாட்டின் இராணும் போலீஸ் துறையை சாரும். அமெரிக்காவில் இருந்து  இலங்கை வரை யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது கணக்காய்  வேலியே (!) பயிரை  மேயும் சம்பவங்கள் நடந்துள்ளன /நடந்துகொண்டுள்ளன.



வாதாம் கொட்டை  பறிப்பதற்காக  இராணுவ விடுதிக்குள்  நுழைந்த பதின்மூன்றே வயசான சிறுவனை  இரக்கம்  சிறிதும்  இன்றி ஒரு இராணுவ அதிகாரி (நாட்டையும், மக்களையும் காப்பாற்றுபவர்களாம்)  குடி போதையில்(!) சுட்டு கொன்றுள்ளார்.  சரி, வெறியிலே  புத்தி பேதலிச்சு  சுட்டுவிட்டான் என்று வைப்போம்; ஆனால்  சுடப்பட்டு அந்த சிறுவன்  குற்றுயிராக கிடந்த போது அங்கே  நின்ற  ஏனைய இராணுவத்தினர் என்ன செய்திருக்க வேண்டும்...?

உயிருக்கு  போராடியவனை  உடனடியாக வைத்தியசாலை  கொண்டு செல்லும் நடவடிக்கையை கூட எடுக்காது,   எதோ "தெருநாயை சுட்ட  பின் ஈ எறும்பு மொய்க்குமே"  என்பது போல இலைகளாலே மூடி விட்டுள்ளார்கள்.

இது  கடந்த  ஞாற்று கிழமை  நடந்தது.  இன்னமும்  குற்றவாளி கைது செய்து நீதிமன்றத்திலே  நிறுத்தவில்லை.  இதுவே  ஒரு அரசியல்வாதியின் மகனுக்கோ  இல்லை அதிகாரங்களை சட்டை பையில்  கொண்டலைபவனின் மகனுக்கோ நடந்திருந்தால்  அரைமணி  நேரத்தில் குற்றம் செய்தவன் கைதுசெய்யப்பட்டு  இருப்பான்.   ஆனால் பாதிக்கப்பட்டது ......?,   எதோ அறுபதடி கிணற்றில் தூண்டில் போட்டு  மீன்  பிடிப்பது  போல  ஐந்து  நாட்களாக குற்றவாளியை தேடுகிறார்களாம்.   சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு "நியாயமான  தண்டனை"  வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே!

இன்று முகநூலில் ஒரு சிலர்  இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள். காரணம் அந்த சிறுவன்  குண்டு  வைக்க வந்திருப்பான்  என்று நினைத்து  இராணுவ வீரன் சுட்டது தவறில்லையாம்.  என்ன கொடுமை! , அப்படியெனில் மும்பையில் குண்டுவைத்து அப்பாவி  மக்களை  கொன்ற கசாப்பை  எதற்காக ராஜ மரியாதையோடு உள்ளே வைத்திருக்கிறார்கள்.  அவனையும் சுட்டுத் தள்ள வேண்டியது தானே.   இவர்கள் கதைப்பார்கள், காரணம் செத்தது  இவர்கள் பிள்ளையோ, உறவவோ  இல்லையே !  

இனி அந்த  மகனை  பெற்ற  தாய்க்கோ, குடும்பத்துக்கோ, சுற்றி உள்ளவர்களுக்கோ  இராணுவம்  என்றால் ஒரு காழ்புணர்ச்சி, குரோதம்  சாகும் வரை  தொடர்ந்து  இருக்க தான் செய்யும்.  இப்படியானவர்கள்  நாளை  நீதி கிடைக்காத போது  வன்முறையின் பக்கம் நாடினால் அதற்கு யார் பொறுப்பு!   இவ்வாறு  இவர்களே  ஒருவன்  வன்முறையாளனாக உருவாக காரணமாக இருந்துவிட்டு,  நாளை  அவனுக்கு "பயங்கரவாதி" என்று பெயரும் கொடுத்து  துப்பாக்கிகள்  சகிதம்  துரத்துவார்கள்.

"நாட்டை காக்க தன் உயிரையே பணயம்  வைக்கும்  இராணுவம்/பொலிஸ் துறை"  என்பது எவ்வளவு  புனிதமான தொழில்/கடமை.  நாட்டின் பாதுகாப்பிற்காக இல்லற வாழ்க்கை துறந்து  தன்னுயிரை கொடுத்த தன்னலமற்ற வீரர்கள் எத்தனை எத்தனை.  ஆனால் ஒரு சிலரால் /கூட்டத்தால்    நாட்டுக்கே  அவமானம் தேடித்தரவும்  இவர்களால்  மட்டுமே  முடியும். 


இது முதலாவது சம்பவம் இல்லை.  இதை போல இதற்கு முன்னரும்  பல சம்பவங்கள் நடந்துள்ளது;  இனியும்  நடக்காது  என்பதற்கு  எந்த வித உத்தரவாதமும்  இல்லை.  இந்த  உலகிலே மோசமான  இராணுவம்  என்றால் என் அனுபவத்தில்  இலங்கை  இராணும் என்று  தான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன்.   ஆனால்  இதே  கேள்வியை 87 களில்  ஈழத்தில்  இந்திய   இராணுவத்தின்  கட்டுப்பாட்டில்  வாழ்ந்த  தமிழ் மக்களை   கேட்டு பாருங்கள் ...!