Saturday, 24 September 2011

தக்காளி குடைமிளகாய் சூப்

 தேவையான பொருட்கள்:

நன்கு பழுத்த தக்காளி - 7
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் – தேவையான அளவு
வேகவைத்த காய்கறிகளின் தண்ணீர் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் ஆகியவற்றை பெரிய பெரிய துண்டுகளாக அரிய வேண்டும். இஞ்சியை சிறிதாக அரிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு எல்லாவற்றையும் லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்த பின் ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வடிகெட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் உப்பு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்க வேண்டும். சூடான பின் மிளகுதூள் தூவி உடனே பரிமாற வேண்டும்.

No comments:

Post a Comment