தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1.5 லிட்டர்
வெல்லம் - 1000 கிராம்
திராட்சை - 75 கிராம்
கடலைப் பருப்பு - 200 கிராம்
முந்திரி பருப்பு - 250 கிராம்
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 15
நெய் - அரைக் கிலோ
பயத்தம் பருப்பு - அரைக் கிலோ
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே எடுத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அதேபோல் முந்திரி பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சட்டியில் 6 லிட்டர் நீர் ஊற்றி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதித்தவுடன் அரிசி மற்றும் பருப்புகளை கலந்து போட வேண்டும். இவை நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். அவ்வாறு கிளறும்போது வறுத்த முந்திரிப் பருப்பையும், திராட்சைப் பழத்தையும் போட வேண்டும். நிதானமான சூட்டில் வேக விட வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதமானதும், அடுப்பில் வேகும் சாதத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறிவிட வேண்டும்.
பின்பு தேங்காய் துருவல், நெய் கியவற்றைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து, இறக்கி விடவும்.

No comments:
Post a Comment