Tuesday, 6 September 2011

குழந்தைகளைக் கொல்லும் உணவுகள்



எழுதியவர் thangavelmanickam

( இக்குழந்தைகளைப் போல பிறக்கப்போகும் உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் நோயைப் பரிசளிக்க விரும்புவீர்களா? )

ன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாகரீகம் என்ற பெயரில் மார்க்கெட்டுகளில் விற்றுக் கொண்டிருக்கும் உணவுகள் எந்தளவுக்கு மனிதர்களின் உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை உணர முடிந்தது. அதை மூலைக்கு மூலை இருக்கும் மருத்துவமனைகளே சாட்சியம் காட்டுகின்றன.

அந்தக் கட்டுரையில் தவறான உணவுப் பழக்கங்களால் இந்தியர்களளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகள் மெட்டபோலிக் சிண்ட்ரோம் என்றுச் சொல்லக்கூடிய இதய நோய்கள், வலி, சர்க்கரை வியாதி மற்றும் ஜெனடிக்ட் பிரச்சினைகளைப் பெறுவதாய் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒரு லட்சம் பிறந்த குழந்தைகளை ஆராய்ச்சி செய்த போது அதில் 1% குழந்தைகள் மேற்சொன்ன இன்பார்ன் மெட்டபோலிக் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர்.

இந்திய மக்களை மீடியா மூலம் மூளைச் சலவை செய்து, இறக்குமதி செய்யப்பட்ட மேலை நாட்டு நாகரீக உணவுப் பொருட்களால், இந்தியாவின் எதிர்கால சந்ததியினர் நோயுள்ளவர்களாய் ஆக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இந்திய மருந்துச் சந்தையில் பெரிய பெரிய மருந்துக் கம்பெனிகளை வெளி நாட்டு பகாசுரக் கம்பெனிகள் விலைக்கு வாங்குகின்றன.

நாகரீகத்தின் பெயரால் இந்திய மக்கள் தங்கள் சந்தோஷத்தை மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையும் நோயில் தள்ளிக் கொண்டிருக்கும் அவலத்தை என்னவென்றுச் சொல்வது.

பர்கர், பீட்சா, குளிர் பானங்கள், பாக்கெட் உணவுப் பொருட்கள் போன்றவையெல்லாம் இந்திய மக்களுக்கு நோயைத் தந்து கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் இந்திய மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து வருகின்றார்கள்.

பெரும்பாலும் கணிணித் துறையில் இருப்போரே மேலை நாட்டு உணவுப் பொருட்களை அதிகம் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவ்வுணவுகளால் ஜெனடிக்ட் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆரோக்கியமான உணவுகள், பெரும்பாலும் சைவை உணவுப் பொருட்களே உடலுக்கு உகந்தது. இஷ்டத்திற்குச் சாப்பிடுவது, மனதுக்குள் தோன்றும் போதெல்லாம் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவது போன்ற தீய பழக்கங்கள் எதிர்காலத்தைச் சூனியமாக்கி விடும்.

இந்திய மக்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் ஏற்படப் போகும் விளைவுகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கோயமுத்தூரில் ஒரு தடவை நண்பருடன் காஃபி சாப்பிடச் சென்றிருந்த போது, கேஷியருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

”ஞாயிறுகளில் வீட்டில் யாரும் சமைப்பதே இல்லை போல சார்,  கூட்டம் அள்ளுது, எங்களால் சமாளிக்கவே முடியவில்லை” என்றார்.

சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி ஹியர் ஹோட்டலில் உட்கார இடம் கிடைக்காமல் வரிசையில் நின்று கொண்டிருப்பதை அவ்வப்போது பார்ப்பது உண்டு.

குடும்பங்களின் சந்தோஷங்கள் இப்படியான ஹோட்டல்களில் நிறைவு பெறுவது வருங்கால சந்ததியினருக்கு நல்லதல்ல என்றுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன எழுத?


எழுதியவர் thangavelmanickam

No comments:

Post a Comment