‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 6
இரண்டாவது அத்தியாயம்
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,
-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-
அது மட்டுமா-
‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’
“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும் அறிஞர்களின் கவனத்திற்கு,
‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ?”
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ?”
‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
எம்முடன் என்பது யாருடன்?
ஆரியர்களா?
அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?
அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் – இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான – பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,
‘ஈனப் பார்ப்பனர்களேனும் – அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’
-என்று எழுதியிருந்தால்,
“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்த்தமிருக்கும்.
-தொடரும்
No comments:
Post a Comment