Friday 12 August 2011

நேர்மையில்லாத தங்க வியாபாரிகள், ஏமாறும் கோமாளி மக்கள்.......சிந்திக்குமா?


உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவு மோசடியும், கொள்ளையும், மொள்ளமாரிதனமும் நிறைந்தது இந்த தங்க வியாபாரம் என்றால் அது மிகையாகாது.





தங்கத்திற்கு இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையான விலை உண்டு, ஒன்று மூலபொருளுகான விலை, மற்றொன்று நாம் விரும்பும் வகையில் செய்வதற்கான கூலி. இந்த இரண்டு மட்டுமே இருந்தால் அது நியாயமானதுதான். ஐந்து பவுன் நகை வாங்கினால் அந்த தங்கத்திற்கும், அந்த நகை செய்ய தேவையான கூலியும் வாங்கினால் இதில் ஏதும் மோசடி இல்லை. ஆனால் இன்று என்ன நடக்கின்றது.........!!!!!!!!!!

ஐந்து பவுன் தங்கத்திற்கும், செய்வதற்கான கூலியையும் மேலும் அந்த நகை செய்யும் பொது ஏற்பட்ட சேதாரம் என்று கூறி அதையும் நம்மிடமே வாங்கிகொள்வார்கள்...........இதில் தான் மோசடி உள்ளது......எப்படி என்று பாப்போம்.

அதாவது மேற்கண்ட நகை செய்யும் பொது பத்து சதவிகிதம் சேதாரம் என்று கூறி அதற்க்கான தொகையையும் நம்மிடம் வசூலித்து விடுகின்றனர். அதாது ஐந்து பவூனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவூனுக்கும் சேர்த்து சேதாரம் என்ற பெயரில் பணம் வாங்கி கொள்கின்றார்கள். நகை செய்யும் போது சேதாரம் ஆகிவிட்டால் அதை நம்மிடம் வாங்கி கொள்வது முறையானதுதான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும்போதும், பட்டை தீட்டும் போதும் கீழே சிதறிவிழுகின்ற துகள்கள்   குப்பைக்கு ஒன்றும் போவது கிடையாது, அது எல்லாம் அடுத்த நகை செய்யும் போது பயன்படுத்தி கொள்ளுவார்கள். இதற்கெல்லாம் சேர்த்துதான் செய்கூலி என்று வாங்குவார்கள், மக்களுக்கு தெரியாத டெக்னிகல் வார்த்தைகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இப்படி செய்யாத வியாபாரிகளே  காணமுடியாது.

இரண்டாவது மோசடி என்னவென்றால், கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்:-
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்துகிராம் கண்ணாடி கற்களை பதித்த நகைக்கு விலை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்திற்கு தங்கத்தின் விலையும், பத்து கிராம் கண்ணாடி கல்லுக்கு கல்லின் விலையும் வைத்து விற்கவேண்டும், ஆனால் நாற்பது கிராம் தங்கத்திற்கு ஐம்பது கிராம் தங்கத்தின் விலையை நம்மிடம் வாங்கி விடுகிறார்கள். தங்கத்தின் விலையும், கல்லின் விலையும் சமமாவை அல்ல, இரண்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது........இன்னும் சிலபேர் நாற்பது கிராமிற்கு ஐம்பது கிராமின் பணத்தை வாங்கி கொண்டு கல்லிற்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கின்றனர்......அதே சமயம் நாம் பழைய நகையை விற்க சென்றால் கல்லை அகற்றி விட்டு நகைக்கு மட்டும் விலை போடுகிறார்கள், இதை விட ஒரு பெரிய மோசடி உலகத்தில் வேற உண்டா?

சொக்கத்தங்கம் என்ற தனிதங்கத்தில் நகை செய்யமுடியாது அதனுடன் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும்.
அதாவது 1000 கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகைதான் இன்று 22K என்றும், 916 KDM என்றும் அழைக்கபடுகின்றது.

அது போல பழைய நகையை விற்க சென்றால் செய்கூலி சேதாரம் எல்லாம் தரமாட்டார்கள் அது நியாயம்தான், ஆனால் அவர்கள் விற்கும் விலையை குடுக்க வேண்டும் என்று கூறவில்லை? வாங்கும் விலையாவது அப்படியே தரவேண்டும் அல்லவா? அவ்வாறு இல்லாமல், அதிலும் கால் வாசி குறைத்துதான் தருவார்கள்,.

இந்த மாதிரி தங்க வியாபாரத்தில் எந்தவித ஒரு நேர்மையும் இல்லை என்பதே உண்மை.

இதை ஏன் மக்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்று வரை கேட்க முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..............இனியாவது கேள்வி கேட்போமா ??????????

No comments:

Post a Comment