Wednesday 14 December 2011

மறக்கப்பட்ட மாமனிதர் கர்னல் ஜான் பென்னிகுக்.....




இந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...
ஆனால் தன் சொத்துக்களை  விற்று ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் பென்னிகுக் பெயர்.. இந்தியாவில் யாருக்கும் தெரியாது...முக்கியமாக தமிழகத்தில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...

இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் 1700 களில் வேலூரில் தோன்றிய முதல் புரட்சி வரலாற்று பக்கங்களில் மறைக்கபட்டது.. காரணம் அது தமிழ்நாட்டில் நடந்தது என்ற ஒரே காரணம்தான்..அதுவே பஞ்சாப்பில் நடந்து இருந்தால் அது இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடித்து இருக்கும்..இன்று போல அன்று தொலைத்தொடர்பு இல்லை என்பதால், அந்த 17ம்நூற்றாண்டில் ஆங்கில அரசுக்கு எதிரான வேலூரில் நடந்த புரட்சி, நீருபூத்த நெருப்பாக இருந்து 1858ல் சிப்பாய்கலகமாக மாறியது என்பதே வரலாறு....

பென்னிகுக் யார் என்று  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கேட்டு பாருங்கள்... யாருக்கும் தெரியாது...எனக்கே அவரை பற்றிய எந்த செய்தியும் தெரியாது....எஸ்ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்துக்கொண்டு இருந்த போது, இந்த பென்னிகுக் பெயரை பார்த்ததும் ,அவரை பற்றி முழு விபரமும் அறிந்ததும் அன்றுதான்...இதுதான் தமிழகத்தின் தலை எழுத்து...தமிழகத்தின் சாபம் என்று சுட சொல்லலாம்....

துணையெழுத்து புத்தகத்தில் நீரில் மிதக்கும் நினைவுகள் என்ற கட்டுரையை எப்போது வாசித்தாலும் என் கண்கள் ஈரமாகிவிடுகின்றது.. ஒரு நெகிழ்ச்சியான ,வீரமான,அதிகமான ஆட்டிடுயூட்  உள்ள மனிதர்களாகத்தான் லோகன்துரையையும் பென்னிகுக்கையும் நான் பார்க்கின்றேன்..

முல்லை பெரியாறு அணைக்காரனமாக பாசனவசதி பெரும் ஐந்து மாவட்டங்களான
தேனிமதுரைதிண்டுக்கல்சிவகங்கைராமனாதபுரம் மாவட்ட்மக்கள் இன்றும் பென்னிகுக்கை கொண்டாடி வருகின்றார்கள்..வீட்டில் அப்பா அம்மா இறந்து போனால் அந்த படத்தை எப்படி வைத்து பூஜிப்போமே அது போல அப்பகுதிமக்கள் பென்னிகுக்கிற்கு மரியாதை செய்கின்றார்கள்..அவர் பயெரில் உணவு விடுதிகள் இருக்கின்றன..கடவுள் சிலைபோல அவரையும் வழிபடுகின்றார்கள்..இது இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த வெள்ளைக்காரனுக்கும் கிடைக்காத பேரு....

அவர் மேல்  உள்ள அளப்பறியா அன்பு காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அவரின் பெயரையும் லோகன்துரை பெயரையும் வைத்து நன்றி விசுவாசத்தை இன்னமும் செலுத்திவருகின்றார்கள்..

ஆனால் மதுரைக்கு இந்த பக்கம் வடதமிழ்நாட்டில் அவரை பற்றி யாருக்காவது தெரியுமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில்  எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லை பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்.. அதன் அகலம் நீளம் என்ன?? எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள்..இப்போது அந்த அணையை எப்படி பலப்படுத்தினார்கள்//அது என்ன மாதிரி கண்ஸ்ட்க்ஷ்ன் என்பதை எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கேட்டு பாருங்கள்.. எவனுக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சன உண்மை.

தேனிமதுரைதிண்டுக்கல்சிவகங்கைராமனாதபுரம் மாவட்டங்களில் விளையும், அரிசியும், காய்கனிகளும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமா? உண்டு பசி தீர்க்கின்றார்கள்.. ?? சென்னை கோயம்பேடு மார்க்கெட் மண்டி வரை அந்த ஐந்து மாவட்டத்தில் விளைந்த விளைபொருட்களைதான் நாமும் உண்ணுகின்றோம்...இவ்வளவு ஏன் அணையை உடைப்போம் என்று சொல்லும் கேரள சேட்டன்களுக்கும் நாம் விளைவிக்கும் உணவு பொருட்களை பெறுகின்றாகள்..

பென்னிகுக் நினைத்து இருந்தால்  நாள் முழுவதும் குடித்து விட்டு  சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான தமிழ் பெண்களை அனுபவித்து இருக்கலாம். கோடை விடுமுறையில் ஊட்டியில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 18ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த பஞ்சமும் அதன் பால் பாதிக்கபட்ட மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்..

1800 களில் இருந்தே பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி அதனை தமிழக பக்கம் திருப்பி விட பலர் முற்சித்து  தோல்வியில் போய் முடிந்தாலும்,அன்றைய தமிழ்நாட்டின் பஞ்சத்தை போக்க இது மட்டுமே சிறந்த வழி  நிரந்தர வழி என்று முடிவு எடுத்த பென்னிகுக், ஆங்கிலேய அரசிடம் அனுமதி வாங்குகின்றார்...

18ம் நூற்றாண்டின் இறுதியில் முல்லை ஆறு, பெரியாறு இரண்டும் சேரும் மலைக்காட்டுப்பகுதியில் ஒரு அணைகட்டுவது என்பது  சாதாரணகாரியமா??? சற்றே உங்கள் கற்பனை எண்ணிப்பாருங்கள்..இங்கிலாந்தில் இருந்து அப்போதைய நவீன இயந்திரங்களை இறக்கி அதனை மலைமேல் ஏற்றி 18 டன் சுண்ணாம்பு மற்றும் கற்களோடு இந்த அணை கட்டி முடிக்கபட்டாலும் பென்னிகுக் சந்தித்த பிரச்சனைகள் சொல்லி மாளாது...

அணைகட்டிக்கொண்டு இருக்கும் போதே காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துக்கொண்டு சென்று விட.. மேற்க்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கைவிரிக்க, பென்னி இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையும் மனைவி  சொத்துக்களை எல்லாம் விற்று, ஒரு லட்சம்ரூபாய் பணம் கொண்டு வந்து ,காட்டு மிருகங்களின் தாக்குதல்,காலரா,வயற்றுப்போக்கு, விஷக்காய்சல், என அணைகட்டும் போது நடந்த விபத்துகள் என்று ,உயிர் விட்டவர்கள் ...ஒருவர் அல்ல இரண்டு பேர் அல்ல தமிழக மகாஜனங்களே 422  பேர் உயிரை கொடுத்து கட்டிய அணை அது...பலரது உடல்கள் மலையில் இருந்து கீழே எடுத்து வரமுடியாத காரணத்தால் மலையிலேயே புதைத்து விட்டார்கள்...அந்த சமாதிகள் இன்றும் வழக்கம் போல கவனிப்பாரற்று கிடைக்கின்றன...


தென் மாவட்டத்தின் பஞ்சம் போக்கிய வள்ளல் அவன்... அதனால்தான் அவன் மொழி இனம் கடந்து இன்றும் சிலைகளாகவும் பெயர்களாகவும், பேருந்தின் பின்புறம் பெரிய பெரிய உருவங்களாகவும் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்..

ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன?,

அன்றைய மதிப்பீட்டில் ஒரு லட்சரூபாய் இன்று அதே சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடி....அதை தமிழக மக்களுக்கு தாரைவார்த்த வள்ளல் அவன்..

வரலாற்று பக்கங்களில் டல்ஹௌசி பிரபு,டயர்,மவுன்பேட்டன், வாரன்ஹோஸ்ட்டிங் என்று பல பிரபுக்களை படித்து இருக்கின்றோம்..ஆனால் உண்மையான பிரபு பென்னிகுக் பற்றி இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த யாரும் வரலாற்றில் பதிக்கவேயில்லை...வளரும் தலைமுறை யாருக்கும் வடமாவட்டத்தில் இருக்கும் எந்த பிள்ளைகளுக்கும் அவரை பற்றி தெரியாது அவர் தியாகம் தெரியாது.. மதுரையிலும் தேனியிலும் சிலை வைத்து விட்டால் போதும் என்ற நினைத்து விட்டர்கள் போலும்..

இவ்வளவு ஏன் எ பிலிம் பை பாராதிராஜா என்று பேசும் பாராதிராஜா கூட அவரின் எந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக  கூட பென்னிகுக் பெயரை பதிவு செய்யவில்லை...அவர் நினைத்து இருந்தால் பென்னிகுக் பாத்திரத்தை இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்...நாடோடி தென்றல் படத்தில் பென்னிகுக் பற்றி சொல்லி இருக்கலாம்.. சொல்லாதது தப்பு இல்லை..ஆனால் பென்னிகுக் தியாகத்தினால் பலன் பெற்ற மாவட்டத்துக்காரர்.. அதனால் அந்த எதிர்பார்ப்பு......

வெகுநாட்களுக்கு பின்  நேற்று ஒரு சினிமா விளம்பரத்தில் வள்ளல் பென்னிகுக் ஆசியுடன் ஒண்டிப்புலி என்று ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா அறிவிப்பு என் கவனத்தை கவர்ந்தது..டெக்னிஷீயன்கள் பெயரை பார்த்தால் அதில் நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா மேனாக பணிபுரிகின்றார்.. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்...முதல் முறையாக தமிழ்சினிமா ஊடகத்தில் பென்னிகுக் பெயர் இடம் பெற்று இருக்கின்றது..அதுவே பெரிய சந்தோஷம்..பென்னிகுக்கால் பலன் பெற்ற தேனி மாவட்டத்துக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்யாத விஷயத்தை செய்த திரைப்படகுழுவுக்கு எனது  நன்றிகள்...


பென்னிகுக் பற்றி நிறைய தேடி தேடி படிக்கின்றேன்..அவரை பற்றி இன்னும் சிலாகித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் அணைக்கட்ட தேர்ந்து எடுத்த இடத்த்தை இன்றளவும் பொறியாளர்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.... என்னால் அவரை பற்றி சினிமா எடுக்க முடியாவிட்டாலும், பென்னிகுக் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கி அது தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த தியாக செம்மலின் வரலாற்றை வளரும் இளைய சமுதாயத்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது..உடல் உழைப்பை தர நான்தயார்..பொருளுதவி கிடைத்தால் வெகுவிரைவில் இந்த ஆவணபட வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றேன்...


பென்னிகுக் யார் என்று கேட்டால் அவரை பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும்...அவரின் உழைப்பையும் தியாகத்தையும் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போற்றவேண்டும்..அவரால் நேரடியாக பயண்பெரும் மாவட்டத்தினரும் மறைமுகமாக பயண்பெரும் மாவட்ட மக்களும் அவர் தியாகத்தை போற்ற வேண்டும்...

உபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை  விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...

தேனிமதுரைதிண்டுக்கல்சிவகங்கைராமனாதபுரம் மக்க்ள் மட்டுமே பென்னிகுக்கை கொணடாடி வருகின்றனர்..ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்..அதுவே என் ஆசை..

இனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....


நான் நிறைய முறை சொன்னதுதான்... நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு... ஜெனரல் டயர் போல பென்னிகுக் இந்திய வரலாற்றில் இடம் பிடித்து இருக்கலாம்..ஆனால் பென்னி நல்லது செய்து விட்டார்... என்ன செய்வது...????இதுதான் உலகம்..

கேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............

கண் எதிரில் அணையை உடைத்தே தீருவோம் என்று சூளுரைக்கும் சேட்டன்களை புத்தியை நினைத்து பார்த்து இருந்தால் இவ்வளவு உழைப்பையும் 422 பேர் உயிரையும் கொடுத்து, பென்னிகுக் அணையை அந்த இடத்தில் கட்டி இருக்கமாட்டார்....


உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது காக்கா,நரி கதைகளோடு பென்னிகுக் போன்ற தியாக கதைகளையும் சேர்த்து சொல்லுங்கள்..

பயண் துக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது...

(பயணை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப்பெரியதாகும்...)

தேனி, கம்பம், மக்கள்  கர்னல் பென்னிகுக் படத்தை வைத்து இருக்கின்றார்கள் அந்த படத்தின் கீழே இருக்கும் வாசகம் என்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.... அந்த வாசகம் கீழே...

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

No comments:

Post a Comment