Tuesday, 13 September 2011

தமிழ் உலகம் வடிவேலுவை தவிர்ப்பது நியாயம்தானா...?



எழுதியவர் சௌந்தர் 

என்ராசாவின் மனசுல படத்தில் சாதாரண ஒரு கிராமத்துப் பையன்போல் எலும்பும் தோலுமாய் கருப்பு நிறத்தில் ஏதோ ஒரு துணைநடிகர்போன்று காட்சிஅளித்து... சினிமாவுக்கு வேண்டிய எந்த தகுதியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து தன்னுடைய இயல்பான நகைச்சுவையாலும், தன்னுடைய நடிப்பாற்றலாலும் தன்னுடைய உடல் அசைவுகளாலும் இந்த தமிழினத்தையே சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.

உதைத்து... உதைத்து.... (கவுண்டர்மணி-செந்தில்) நகைச்சுவை செய்துக்கொண்டிருந்த காலத்தில் உதைவாங்கி இவர் செய்த நகைச்சுவைகள் மக்கள் மனதில் பசையென ஒட்டிக்கொண்டது.

2000-ங்களுக்கு பிறகு தனக்கென தனிபாணியை வைத்துக் கொண்டு 10 ஆண்டிகளில் நகைச்சுவையின் உச்சத்திற்க்கு சென்றுவிட்டார். படத்திற்க்கு படம் வித்தியாசமான உருவம், தலைமுடி, மீசை, நடை, உடை, பாவனைகள் மாற்றி 6 வயது குழந்தை முதல் 60 வயது பெரியவர் வரை அத்தனைப்பேரையும் சிரிக்க வைத்தவர் நமது வடிவேலு.



மதுரையில் புறப்பட்டு சென்னையில் மையம் கொண்ட இந்த வைகை புயல் தற்ப்போது என்ன செய்வதென்று தெரியாமல் புயலுக்குபின் தோன்றும் ஒரு அமைதியில் இருக்கிறது.

விஜயகாந்த்துக்கும் வடிவேலுக்கும் வண்டிநிறுத்துவதில் ஏற்ப்பட்ட மனஸ்தாபம், மற்றும் சிங்கமுத்துவிடம் நில வாங்கி ஏமாந்த போது உதவாத கேப்டன் மீது ஏற்ப்பட்டு வருத்தமும், கேப்டன் பற்றி விமர்சிப்பதா என்று தேமுதிக தொண்டர்கள் வடிவேலுமீது ஏற்படுத்திய சில கசப்பான சம்பவங்கள் மட்டுமே இவரை விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது.



ஒரு அரசியல் பிரச்சாரம் அதுவும் தன்னை அவமானப்படுத்தியர் மீது தான் கொண்டுள்ள கோவத்தை தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக்கொண்டார். அரசியலில் நடந்த அந்த கசப்பான நிகழ்வுகளை மக்களே மறந்த நிலையில் தற்போதைக்கு எந்த பட தயாரிப்பாளர்களும் வடிவேலுவை பயன்படுத்தாதது மிகவும் தவறான வழிமுறையாகும் மற்றும் வருத்தப்படக்கூடிய விஷயமாகும்.

இதே விஜயகாந்த் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் மோதிக் கொண்டார். அவர் குடித்துவிட்டு வருகிறார் என்று ஜெ சொல்ல ஆமாம் எனக்கு அவர்தான் ஊற்றிக் கொடுத்தார் என்று கேப்டன் சொன்னார் அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதை மறக்கும்போது இதெல்லாம் சாதாரண விஷயம்தான்.

விஜயகாந்த், விஜய், சரத்குமார், கார்த்திக், விஜய ராஜேந்திரன், குஷ்பூ, ராதிகா, இன்னும் என்னற்ற நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுப்பட்டு அந்த பாதிப்பு ஏதும் இல்லாமல் தன்னுடைய கலைஉலகில் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் வடிவேலுவை மட்டும் விலக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்.

இன்று ஆதித்யா சிரிப்‌பொளி போன்ற நகைச்சுவை சேனல்கள் அனைத்திலும் ஆக்கிரமித்துள்ளது வடிவேலுவின் நகைச்சுவைதான் அவரின் திறமைகளை தமிழகம் இ‌ழக்க தயாராகி விட்டதா..?



புல்லட் பாண்டி, செட்டப் செல்லப்பா, அலார்ட்டு ஆறுமுகம், படித்துரைப்பாண்டி, நாய் சேகர், கைப்புள்ள, 23வது புலிகேசி, ஜாக்கி, என்று படத்திற்க்கு படம் வித்தியாசமான முறையில் தன்னுடைய நகைச்சுவையை அர்பணித்து இந்த தமிழ் நெஞ்சஞ்சங்களை ஆக்கிரமித்த ஒரு நகைச்சுவையாளனுக்கு நாம் அளித்திருக்கும் தண்டனை கொஞ்சம் அதிகம்தான்...

தமிழ் திரையுலகில் மீண்டும் வடிவேலுவின் ஆதிக்கம் தொடர வேண்டும். அவருடைய நகைச்சுவையில் இந்த தமிழ் நெஞ்சங்கள் நிறைய வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த பகுதி விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை....



தற்போதைக்கு ராணாவில் வடிவேலுவை பயன்படுத்திக் கொள்ளுமாறு இயக்குனர் ரவிக்குமாரிடம் ரஜினி சொல்லியிருப்பதாக கேள்வி. தமிழ் உலகமே...! தமிழ் திரைஉலகில் நல்ல வரவேற்ப்பு பெற்றிருக்கும் வடிவேலுவை இன்னும் பயன்படுத்திக் ‌கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறேன்.

தமிழ் திரைப்படங்களில் என்னற்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடியிருக்கிறது. இதை யாரும் மறுத்துவிட முடியாது இதை தமிழ் உலகம் மறந்துவிடக்கூடாது...  ஒரு ஒப்பற்ற கலைஞனை நாம் இழக்க கூடாது. வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ‌நகைச்சுவை ரசிகர்களின் ஆசை....

எழுதியவர் சௌந்தர்

No comments:

Post a Comment