விடுமுறை முடிந்து பிள்ளைகள், பேரன் பேத்திகள் எல்லாம் ஊருக்கு போய் விட்டார்கள்.. வெறிச்சோடிக் கிடந்த வீட்டு முற்றத்தில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் பாட்டி.
வீடு எப்போதும் அவளுக்கு கலகலவென்று இருக்க வேண்டும். ஆளரவமற்ற வீட்டின் அமைதி வெறுமை மிகுந்தது.
வீடு என்பது உறவுகளும், அவர்தம் உணவுர்களும் ததும்பி நிறையும் இடம். தனிமை என்னும் மிருகம் மனித வாழ்க்கையின் பல சந்தோஷங்களைத் தின்றுவிடக் கூடியது.
பாட்டிக்குத் தனிமை இப்போது பெருந்துயராக இருந்தது. எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ரத்த பந்தங்களின் அருகாமையை அவள் முதுமை வேண்டி நின்றது. அதற்காக அவள் மனம் ஏங்கியது. பேத்திகள், துள்ளித்திரிந்த அந்த தாழ்வாரங்களை கண்களாலும், நினைவுகளாலும் அசைபோட்ட படியே அமர்ந்திருந்தாள் பாட்டி.
என்ன பாட்டி.. பிள்ளைகள் ஊருக்கு போன உடனே வீடே வெறிச்சோடிக் கிடக்கு... என்றபடியே வந்து அமர்ந்த நாச்சம்மையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள் பாட்டி..
ம்... ஆமாடியம்மா.. அதுகளுக்கு பள்ளிக்கூடமெல்லாம் திறந்தாச்சுல்ல.. அதான் எல்லாம் புறப்பட்டுப் போயிருச்சுங்க.. என்ன பண்றது.. நாம என்னைக்கு இருந்தாலும் தனிக்கட்டை தானே.. பாட்டியின் வார்த்தைகளில் சோர்வும் வேதனையும் அதிகமாக இருந்தது.
நீ ஏன் பாட்டி தனிக்கட்டைங்கிறே.. உன்னச் சுத்தி ஊரே இருக்கு.. அப்படி எல்லாம் நினைக்காதே.. என்று ஆறுதலாகச் சொன்னாள் நாச்சம்மை..
அது கிடக்கட்டும்.. நீ என்ன இந்தப் பக்கமா வந்திருக்கே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்.. என்று அவளை விசாரித்தாள் பாட்டி..
ஒண்ணுமில்லை பாட்டி.. அக்குள்ள ஒரு கட்டி புறப்பட்டு இருக்கு.. என்னென்வோ மருந்து போட்டும் அது பழுக்கலே.. கத்தி வச்சிக் கீறலாம்னா அதுக்கும் பயமா இருக்கு.. என்ன பண்ணலாம்னு உட்கிட்ட கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தேன்..
நாச்சம்மை சொன்னதைக் கேட்டதும், அவளது அக்குளில் உள்ள கட்டியை காண்பிக்கச் சொல்லி பார்த்தாள்...
வெயில் தாங்காம வந்த கட்டிதாண்டியம்மா.. பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல..
வெயிலுக்கு குளிர்ச்சியா இளநீர், தர்பூசணி பழம்.. இன்னும் வெயிலுக்கு இதமான பழங்கள வாங்கிச் சாப்பிடனம். அப்பதான் சூடு தாக்காது.. அதுபோக. அக்குள சுத்தமா வச்சிக்கணும்... சிலர் குளிக்கும்போது மறைவான இடங்கள்ள சரியா அழுக்கு தேச்சிக் குளிக்கிறதில்ல.. குறிப்பா பெண்கள் இந்த விஷயத்துல கவனமா இருக்கணும்...
வெயில் காலமானாலும், எந்த காலமானாலும் சரி.. உடம்புல அந்தரங்கப் பகுதிகள்ள அழுக்கு படியாம சுத்தமா வச்சிக்கணும். இந்த மாதிரி கட்டி வர்றதுக்கு. சுகாதாரமில்லாததும் ஒரு முக்கிய காரணம்.. சரி இதல்லாம் கவனத்துல வச்சிக்க..
அதோட...
கடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரச்சி குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.
பாட்டியின் மருந்தைக் கேட்டுக்கொண்ட நாச்சம்மை, பாட்டிக்கு நன்றிகூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

No comments:
Post a Comment