Saturday 24 September 2011

கறிவேப்பிலை சாதம்


தேவையான பொருட்கள்
சாதம் - 1 கப்
கறிவேப்பிலை - 1கைப்பிடி
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு
தாளிக்க:-
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை
கறிவேப்பிலையை முதலில் வறுக்க வேண்டும். மொறு மொறுப்பானவுடன் இறக்கி விட்டு மற்ற பொருட்களை வறுத்து ஆற வைக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், நைசாக தூளாக்கி கொள்ள வேண்டும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இறக்கி சாதம், கறிவேப்பிலை பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி பறிமாற வேண்டும்.

No comments:

Post a Comment