Saturday 24 September 2011

வத்தக்குழம்பு


தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 16 பல்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சுண்டவற்றல் - சிறிதளவு
கருப்பு வெல்லம் - சிறிதளவு
நல்ல எண்ணைய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு வற்றல் - 12
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
செய்முறை:
மேற்கூறிய அனைத்தையும் வாணலியில் நல்லெண்ணைய் விட்டு நன்கு வறுத்து சிறிது பூண்டு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணைய் விட்டு வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டவற்றல் போட்டு வதக்க வேண்டும். பொன்நிறமானவுடன் புளிக்கரைச்சல்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சிறிது கெட்டியான பின் கருப்பு வெல்லம், நல்லெண்ணைய் சேர்க்க வேண்டும். நன்கு கெட்டியான பின் இறக்க வேண்டும்.

No comments:

Post a Comment