Saturday 24 September 2011

மீன் கபாப்

தேவையான பொருட்கள்:

மீன்- 1 கிலோ
நெய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் 2
முட்டை 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் 1 கப்
உப்பு தேவையான அளவு


செய்முறை:

மீனை சில நிமிடங்கள் வேக வைத்துத் தண்ணீரை வடித்து ஆறவைக்க வேண்டும். பின்னர் தோல், எலும்புகளை நீக்கி நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்தவுடன், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அதனுடன் மீன் விழுதினைச் சேர்த்து வதக்க வேண்டும். ஈரம் வற்றிய பிறகு முட்டையை அடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு கலந்து நன்கு கிளறி இறக்க வேண்டும். கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வடை போல் தட்டிக் கொண்டு, ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment