Tuesday 27 September 2011

தரமான சிகிச்சை எப்போது?

எழுதியவர் ஆர்.ஹரிஹரன்

உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டு விஞ்ஞானிகள், தாமே தயாரித்த செயற்கை கோள்களைப் பறக்க விடுகிறார்கள். கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தபால் துறை, வங்கி போன்றவை உலக நாடுகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கின்றன. 88 கோடி இந்தியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக வியப்பான செய்தி தருகிறார்கள். ஆனால், மருத்துவத்தில் நம் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும், தலை சிறந்த மருத்துவர்களும், புதிய தொழில்நுட்பங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் திரைப்பட நட்சத்திரங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை உடல் சரியில்லை என்றால் உடனே அந்நிய தேசத்துக்குப் படை எடுக்கிறார்கள். இதைப் பார்த்தால் இந்தியா இன்னமும் மருத்துவத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி நம் நாட்டை வழி நடத்திச் செல்லும் சோனியா காந்தி வரை வெளிநாடுகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்கிறார்கள். இந்த ஏழை இந்திய நாட்டில் பிறந்த மற்ற குடிமக்கள் என்ன செய்வது?

உடல்நிலை சரியில்லாத அனைத்து இந்தியர்களையும் அரசு செலவிலேயே வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும், அது சாத்தியம் இல்லை என்றால் இங்கே தரமான சிகிச்சைக்கு உத்தரவாதம் தரவேண்டும்.


எழுதியவர் ஆர்.ஹரிஹரன்

No comments:

Post a Comment