Monday 26 September 2011

வலைப்பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ள.

வணக்கம் நண்பர்களே!
என்ன தான் நாம் பல காலமாக பிளாக்கரை பயன்படுத்தி வந்தாலும், அதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில வசதிகளை பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டோம். அந்த வகையில் அநேகர் அறிந்த, சிலர் அறியாத ஒரு சிறு தகவலை தரலாம் என்று நினைக்கிறேன். நிகழ்வுகள் தளத்தில் திருடியது

எவ்வளவோ கஸ்ரப்பட்டு, தேடல்களுடன்(என்னை சொல்லல) எழுதி எம் வலைத்தளத்தில் வெளியிட்ட வலைப்பதிவுகளை நாம் சேமித்து வைத்துக்கொள்ளவே  விரும்புவோம். காரணம்,  நம் பிளாக்கர் எதிர்காலத்தில் முடங்கினாலோ, இல்லை நாமாக  தவறுதலாக அழித்தலோ மீண்டும்  நம் பதிவுகளை  ஆரம்பத்தில்  இருந்தது போல் கொண்டுவர, இல்லை புதிதாக ஒரு தளம் ஆரம்பித்து அதிலே நம் முன்னைய பதிவுகளை தரவேற்றிக்கொள்ள   அது தான் ஒரே வழி. நிகழ்வுகள் தளத்தில் திருடியது

இவ்வாறு என் வலைப்பதிவுகளை சேமித்து கொள்வதற்கு blogger backup utility என்ற சிறிய ஒரு மென்பொருளை தான் நான் பாவித்து வந்தேன். ஆனால் அதை விட மிக எளிய வழி ஒன்று பிளாக்கர் தளத்திலே இருப்பது சிறிது நாட்களுக்கு முன்னர் தான் கண்டு கொண்டேன்.

செய்ய வேண்டியது- 
முதலில் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் (பின்னூட்டங்கள் உட்ப்பட) தரவிறக்கி கொள்ள- நிகழ்வுகள் தளத்தில் திருடியது
setting> basic> Export blog  அதன் பின் தோன்றும் ' download ' ஐ அழுத்துங்கள்.


நீங்கள் தரவிறக்கும் போது, அது நாள் வரை உங்கள் வலை தளத்தில் பப்பிளிஷ் பண்ணிய அத்தனை பதிவுகளும் (பின்னூட்டங்கள் உட்பட) ஒரேயடியாக  XML  கோப்பு வடிவில் உங்கள் கணனியில் தரவிறங்கிக்கொள்ளும். ஒவ்வொரு பதிவு எழுதி வெளியிட்ட பின்னும் இம்முறை மூலம் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் தரவிறக்கி கொள்வது நல்லது. நிகழ்வுகள் தளத்தில் திருடியது 

தரவிறக்கிய எம்பதிவுகளை மீண்டும்   தரவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின்-
setting> basic> import blog கீழே   உள்ள  படத்தில்  உள்ளவாறு ,ஏற்கனவே XML வடிவில் சேமித்து வைத்துள்ள கோப்பை கொடுங்கள்.


உங்கள் வலைத்தளத்தை முற்றாக செயல் இழக்க வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால்-
setting>basic>delete blog  (இதில் உள்ள அனுகூலம் 90 நாட்களுக்கு உள்ளே என்றால் அழித்த வலைப்பூவை மீட்டெடுக்க முடியும். கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ...,நிகழ்வுகள் தளத்தில் திருடியது


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;-)

No comments:

Post a Comment