Saturday 24 September 2011

யாதுமாகியவள்


ஏகாந்தத்தின்
கொடுமையையும்
நிசப்தத்தின்
எரிச்சலும்
அனுபவிக்கும் போது
நண்பர்களின்
உன்னதம் தெரிகிறது
கல்லூரிக் கட்டணம்
தாமதமானால்
மகன் மனம்
வருந்துமென
கடனையாவது
வாங்கிக் கொண்டு
முதல் பஸ்ஸைப் பிடித்து
ஓடிவரும் போது
அப்பா புனிதத்தின்
உச்சத்தைத் தொடுகிறார்
அவள் அப்பா
சொன்ன பணக்கார மாப்பிள்ளை
வேண்டாமென்று
ஓலைக் குடிசையானலும்
உன்னோடுதான் - என்று
சொல்லி என்னோடு வாழும்
காதலியாகிய மனைவி
கடவுளாகிறாள்
இவள்
என் மகள் என்று
சொல்லி பெருமைப்பட
வாழும்போது
மகள் தாய்க்கு நிகராகிறாள்
உடல் நிலை குறைந்து
தூக்கிக்கிடக்க
தலமாட்டில் விடிய விடிய
நெஞ்சைத் தடவிக் கொண்டு
பணிவிடை செய்து
கடவுளை வேண்டும் போது
யாதுமாகிறாள்
தாய்
- கணியன் செல்வராஜ்

No comments:

Post a Comment