Saturday 24 September 2011

கத்திரிக்காய் மசாலா


தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
அரைக்க: தேங்காய் - 4 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
செய்முறை
கத்திரிக்காயை நீளமாக வெட்டி வைக்க வேண்டும். அரைக்க வேண்டியதை நைசாக அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். இதில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விட வேண்டும். காய் வெந்ததும் திறந்து வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

No comments:

Post a Comment