Saturday 24 September 2011

எலுமிச்சம்பழ ஊறுகாய்


தேவையான பொருட்கள்:
எலுமிச்சம்பழம் - 20
காய்ந்த மிளகாய் - 20
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எலுமிச்சம்பழத்தை எடுத்து நன்றாகக் கழுவி, 4 துண்டுகளாக மேலிருந்து கீழாக கத்தியால் வெட்ட வேண்டும். பின்பு அதில் உப்பைத் தடவி, ஒரு ஜாடியில் ஒரு நாள் முழுக்க மூடி வைக்க வேண்டும். மறுநாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மாலையில் அதை எடுத்து மீண்டும் ஜாடியில் வைத்து மூடி விட வேண்டும். இதேபோல் 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் வைத்து மாலையில் மூடிவிட வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு மீதம் உள்ள எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுக்க வேண்டும்.
காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருஞ்சீரகத்தை தனித்தனியாக வறுத்து பொடி செய்ய வேண்டும். பிழிந்து வைத்துள்ள எலுமிச்சம்பழச் சாற்றில் பொடித்தவற்றையும், மஞ்சள் பொடியும், சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாகக் கலந்து உலர்ந்த எலுமிச்சம்பழத்தில் ஊற்றி கலந்து விட வேண்டும். 2 நாட்கள் மூடி அப்படியே வைக்க வேண்டும். இடை இடையே மரக்கரண்டியால் பிரட்டி விட வேண்டும். இப்போது சுவையான எலுமிச்சம்பழ ஊறுகாய் தயார்.

No comments:

Post a Comment